இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

பதிவுகள் இணைய இதழ்; ஆசிரியர்: வ.ந.கிரிதரன். கி.பி.2000இலிருந்து.pathivukal.gif (1975 bytes)            Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
”காதல் கடிதம்”!
இசைத்தொகுப்பு வெளியீடு!

VNMusicdreams” நிறுவனத்தின் முதல்ப் படைப்பாக ”காதல் கடிதம்” எனும் இசைத்தொகுப்பு 02.08.2003 அன்று ஒஸ்லோ, நோர்வேயில் வெளிவந்து உலகெங்கும் வாழும் தமிழ் உள்ளங்களை இசையால் வசமாக்கியது. கவிதை வரிகளுக்கு இசைத்துளிகள் எழுதிய ”காதல் கடிதம்” ஓர் காத்திரமான கலைப் படைப்பாக அமைந்தது.  நானும், திரு.வி.எஸ்.உதயா அண்ணன் அவர்களும் இணைந்து உருவாக்கிய இவ்வெற்றிப் படைப்பு தமிழர்களின் வீடுகளில் எல்லாம் இரவும் பகலும், இனிய மலரும் நினைவுகளைத் தட்டியெழுப்பும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. நகரங்களில், கிராமங்களில், வீதிகளில், சந்திகளில், கோயில்களில், குளக்கரைகளில், தொழிலசார் நிறுவனங்களில், பாடசாலைகளில், கலைவிழாக்கள் என்று எங்குமே காற்றலைகளில் தவழ்ந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது காதல் கடிதம் இசைத் தொகுப்பு.

நாங்கள் கலைவானில் துணிந்து சிறகசைக்க எங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய வானத்தையே வழங்கியிருக்கிறீர்கள். அந்த வகையில் எங்களுடைய சிறகடிப்பு காதல் கடிதம் இசைத் தொகுப்போடு மட்டும் நின்றுவிடவில்லை. அதன் எல்லைகள் விரிந்து இப்பொழுது காதல் கடிதம் என்ற பெயரிலேயே திரைப்படமாகவும்
Water Falls Movie Makers நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எங்கள் முதல் முயற்சிப் படியில் ஆணித்தரமாக நின்றுகொண்டு, இரண்டாவது படியில் எங்கள் காலத்தடத்தைப் பதிவுசெய்யத் தயாராகிவிட்டோம். இந்த விண்ணப்பக் கட்டுரையின் நோக்கம் உங்கள் இதயபூர்வமான ஆதரவை எதிர்பர்த்து நிற்பதே ஆகும்.

எங்களுடைய காதல் கடிதம் இசைத் தொகுப்பு புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் சென்றடையவில்i என்கின்ற முறைப்பாடுகூட இன்னும் எங்கள் காதுகளுக்கு எட்டிக்கொண்டிருக்கிறது. உங்கள் உள்மன ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய நாங்கள் எடுக்கின்ற ஒரு புதிய முயற்சி இதுவாகும். இந்த விடயத்தை நன்றாகவே உள்வாங்கி தீர்க்கமாக என்ன செய்யலாம் என்று யோசித்த போது இப்படி ஒரு யோசனை எனக்குத் தோன்றியது. இதோ அந்த யோசனையை உங்கள்முன் கொண்டுவருகிறேன்.

காதல் கடிதம் இசைத் தொகுப்பு இன்னும்கூட இலங்கை, இலண்டன், சுவிஸ், கனடா, பிரான்ஸ் மற்றும் நோர்வே தவிர்ந்த நாடுகளில் நேரடியாக விநியோகிக்கப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த கவலையைத் தருகின்றது. அதற்குக் காரணம் தகுந்த விநியோகஸ்தர்கள் எமக்கு கிடைக்காமல் போனமையே ஆகும். ஒரு கலைஞன் படைப்பாளனாக மாறி நல்ல படைப்பை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிட்டால் அவன் படைப்பு ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தங்கிவிடும். இதை நன்கு உணர்ந்து எம்மால் இயன்றவரை முயன்று நான் மேற்குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமே எங்கள் படைப்பை வெளியிட முடிந்தது. இதற்கு எங்கள் மத்தியில் நிலவுகின்ற கலைசார்ந்த தொடர்பாடல் முறைகளில் உள்ள குறைபாடும், பிற்போக்கான சில எண்ணங்களே காரணமாகும்;.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே எங்களின் இரண்டாவது இசைத்தொகுப்பான ”காதல் மொழி” எனும் இறுவட்டை இன்னும் ஒர் இரு மாதங்களில் உலகெங்கிலும் வெளியீடு செய்யலாம் என எண்ணியுள்ளேன். ”காதல் கடிதம்” விநியோகம் செய்வதில் நாங்கள் செய்த தவறை இந்த இசைத் தொகுப்பின் மூலமும் செய்யவிரும்பவில்லை.

ஆகவேதான் என் இனிய தமிழ் உறவுகளே உங்களிடம் ஓர் அன்பான கோரிக்கையை இக்கட்டுரையின் மூலம் முன்வைக்கின்றேன். உலகெல்லாம் சிதறுண்டு வாழ்கின்ற எம் தமிழ் உறவுகளே உங்கள் வாழ்க்கையில் சிந்திவிழுகின்ற சில மணித்துளிகளைச் சேமித்து,  எங்கள் கலைத்துறையை கட்டியெழுப்ப நீங்கள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பீர்கள்.

கலையில் ஆர்வம் உள்ள நீங்கள் உங்கள் முதற்ப் சுவடை எப்படி பதிப்பது என்று கூட எண்ணிக் கொண்டு ஓர் எதிலியாகக்கூட இருக்கலாம். நீங்கள் எங்கள் கலைத்துறையை வளர்க்க அல்லது எங்கள் கலைச்சொத்துக்களை ஆவணப்படுத்தும் எண்ணம் உள்ளவராக இருப்பீர்கள். இந்தக் கலைத்துறைக்குள் நுழைவதற்கு நீங்கள் விரும்பின் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

ஆகவே சுத்தி வளைக்காமல் காதல் மொழி இறுவட்டு விநியோகம் தொடர்பான விடயத்திற்கு வருகிறேன். ”
VNMusicdreams” நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாக வெளிவரவிருக்கும் காதல் மொழி இறுவட்டினை நீங்கள் வாழுகின்ற நாடுகளில் விநியோகம் செய்வதற்கு ஒரு தனிநபராகவோ, ஒரு குடும்பமாகவோ, ஒரு தமிழ் ஊடகமாகவோ, தொலைக்காட்சி நிறுவனமாகவோ, தமிழ்ச்சங்கமாகவோ, கலைபண்பாட்டு நிறுவனங்களாகவோ உதவிட முன்வாருங்கள் அப்போதுதான் எங்களுடைய ”காதல் மொழி” என்னும் இறுவட்டை எல்லாத் தமிழர் வீடுகளிலும் ஒலிக்கச் செய்யலாம்.

ஒரு தனிமனிதனாக, என் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடக நண்பர்களின் இதயபூர்வமான முழுமையான ஒத்துழைப்புடன்தான் ஓரளவுக்காவது ”காதல் கடிதம்” இசைத் தொகுப்பை எம்மால் புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையில் இசையமைப்பாளர் திரு வி.எஸ்.உதயா அண்ணனின் உதவியுடனும் ,
CD-City உரிமையாளர் சாந்தகுமார் அவர்களின் உதவியுடனும் வெளிக்கொணர முடிந்தது.

இதில் விசேஷமாக இலங்கையில் உள்ள சக்தி எப்.எம் வானொலி எங்கள் குடும்பவானொலி போலவே முழுமனதோடு எங்கள் பாடல்களை காற்றலைகளில் ஏத்தி பிரபல்யப் படுத்தினார்கள். இதே போலத்தான் இங்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள ஐபிசி வானொhலி, கனேடியத்தமிழ் வானொலி, கனேடிய பல்கலாச்சார வானொலி, ஒலிஎப்.எம் வானொலி என அனைத்து வானொலிகளுமே எங்கள் பாடல்களை இங்கு பிரபல்யப்படுத்தின. எமக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தனர். அதற்காக எனது நிறுவனமும், இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா அண்ணா அவர்களும் என்றுமே நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்.

புலம்பெயர் வாழ்வில் உங்களைப் போலவே எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் கலையாகப் படைக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அகரமுதல் எழுத்து உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொரு வீடுகளிலும் உங்கள் காதல் கதைகள், கனவுகள், கற்பனைகள், நம்பிக்கைகள், சுகங்கள், துக்கங்கள், கண்ணீர் கலந்த கோபங்கள், தாபங்களை, போராடும் வாழ்வை சொல்லப்போகும் இனிய படைப்பாக ”காதல் மொழி” அமையும். ஏங்கள் படைப்பின் மேல் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் கைகளில் எங்கள் இரண்டாவது இசைக் குழந்தையாக தவழவேண்டும் என்பது எமது விருப்பம்.

இதனால் எங்களுக்கு என்ன இலாபம் என்று நீங்கள் எண்ணுவதுகூட என் காதுகளுக்கு கேட்கிறது. ஒரு இளம் படைப்பாளனாக உங்கள் இதயக் குரலை என்னால் உணரமுடிகிறது. என்ன பலன் கிடைக்குமென்று நினைத்துக்கொண்டிராமல் இந்தக் கட்டுரையை படித்த மறுகணமே என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். ”காதல் மொழி” இறுவட்டை உங்கள் நாடுகளில் எப்படி, வெளியீடு செய்யலாம் என்பதைச் சொல்ல, உங்களோடு கலந்துரையாடி, நீங்கள் வசிக்கின்ற நாட்டிற்கான ”காதல் மொழி” உரிமத்தை அதிகாரபூர்வமாக வழங்க உங்களுக்காக காத்திருக்கிறேன்.

உங்கள் குரலை எதிர்பார்த்து


வசீகரன்: 'காதல் கடிதம்' தயாரிப்பாளர்.
இதயமுடன்
இளங் கலைத்தயாரிப்பாளன்
வசீகரன்

vnmusicdreams@gmail.com
www.vnmusicdreams.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner