கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு!
'இலங்கைத் தமிழரின் படைப்புக்களும் மனித உரிமைகளும்''
 ஐரோப்பாவில் 
              வாழும் இலங்கைத்தமிழர்களின்; 33வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 
              செப்டம்பர் மாதம் 23,24ம் திகதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. 
              இலங்கையில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலைகளிருந்து தப்புவதற்காக 
              ஐரோப்பாவில் குடியேறிய தமிழ் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகை 
              ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்போரால் இவ்விடக்கியச் சந்திப்பு 
              தொடங்கப்பட்டது. இன,மொழி, சாதி,பால் வித்தியாசமின்றி இவ்விலக்கியச் 
              சந்திப்பு மூலம் தமிழ் சமூகத்திலுள்ள முற்போக்குவாதிகள் பலர் தங்கள் 
              படைப்புக்கள், பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஐரோப்பாவில் 
              வாழும் இலங்கைத்தமிழர்களின்; 33வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 
              செப்டம்பர் மாதம் 23,24ம் திகதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. 
              இலங்கையில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலைகளிருந்து தப்புவதற்காக 
              ஐரோப்பாவில் குடியேறிய தமிழ் இலக்கியவாதிகள், சிறுபத்திரிகை 
              ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என்போரால் இவ்விடக்கியச் சந்திப்பு 
              தொடங்கப்பட்டது. இன,மொழி, சாதி,பால் வித்தியாசமின்றி இவ்விலக்கியச் 
              சந்திப்பு மூலம் தமிழ் சமூகத்திலுள்ள முற்போக்குவாதிகள் பலர் தங்கள் 
              படைப்புக்கள், பங்களிப்புக்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.1988ம் ஆண்டடில் ஜேர்மனியிலுள்ள ஹேர்ண் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கிய சந்திப்பு இதுவரை 32 முறைகள் கனடா உட்பட பல மேற்கு நாடுகளின் முக்கிய நகரங்களில்; நடைபெற்றிருக்கின்றன. லண்டனில் 1994ல் இலக்கிய சந்திப்பு முதற்தரம் நடந்தபின் இவ்வருடம் இரண்டாம் முறையாக நடக்கவிருக்கிறது;.
இலங்கை , இந்தியா, கனடா,அவுஸ்திரேலியா, அமெரிக்காபோன்ற பல நாடுகளிலிருந்து மிகச்சிறந்த தமிழ் சிந்தனாவாதிகள், எழுத்தாளர்கள்,வரைபடக் கலைஞர்கள், திரைப்படஇயக்குனர், புகைப்படக்கலைஞர்கள்;, பெண்ணியவாதிகள், மனித உரிமைவாதிகள்,பத்திரிகையாளர்கள்,தலித்தியப் போராளிகள் போன்ற பலர் கடந்து சென்ற 32 இலக்கிய சந்திப்புக்களில் பங்கு பற்றியிருக்கிறார்கள்.
இனவாதத்தைத் தூண்டும் குறுகிய அரசியற் கருத்துக்கள், மனித உரிமைகளுக்கு, பெண்களின் சுதந்திரத்திற்கு, மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துக்கள் இலக்கிய சந்திப்புக்களில் தவிர்க்கப் படுகின்றன. அத்துடன் மேற்கண்ட கருத்துக்கள் மனித மேம்பாட்டுக்கு எதிரானவை என்பதால் இலக்கிய சந்திப்புக்களில் இக்கருத்துக்கள் மிகவும் பாரதூரமாக எதிர்க்கப்படுகினறன. அப்படியானவர்களின் பங்கீடுகள் தடைசெய்யப் படுகின்றன.
இந்தச் சந்திப்பு விளிம்பு நிலை மக்கள், பெண்கள், இளம்தலைமுறையினர், முஸ்லிம், மலையகப்; படைப்புக்ககளை முன்னேடுக்கும் சந்திப்பாகும்.
இவ்வருடம் லண்டனில் நடக்கவிருக்கும் இலக்கிய சந்திப்பில் முஸ்லிம், தமிழ் முற்போக்கு சிந்தனையாளர்களின் ஆக்கங்கள், பெண்கள், இளம் தலைமுறையினரின் ஆக்கங்கள், நாடகங்கள் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கிய சந்திப்புக்கு வரவிரும்புமவர்கள் லண்டனில் தங்கும் வசதி போன்ற விபரங்களுக்குத தயவு செய்து காலம் தாழ்த்தாமல் தொடர்பு கொள்ளவும்.
பேச்சாளர்கள்: ஐரோப்பாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல தமிழ், முஸ்லிம், மலையகப் பேச்சாளர்கள் பங்குபற்றுகிறார்கள்
இடம்: கிழக்கு லண்டன்; பல்கலைக்கழகம், ஸ்ரார்ட்வோர்ட் காம்பஸ்,ஸ்ரார்ட்வோர்ட், லண்டன் கிழக்கு 15
The Venue: University of East London, 
              Stratford Campus, Stratford, London E 15
              
              திகதிகளும் நேரமும்: 23,24 செப்டம்பர் மாதம் 2006:
              23.09.06: காலை 9.30 இருந்து 
              மாலை 10.00 மணிவரை
              24.09.06 காலை 9.30 இருந்து மாலை 8.30 மணிவரை
நிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ்.....உள்ளே
              
              
              
              மேலதிக விபரங்களுக்கு: இராஜேஸ் பாலா 0208 889 7827
              
              rajesbala@hotmail.com
கிருஷ்ணராஜா 0208 470 
              7883, 0795 490 694
              
              chanthippu33@aol.com
Nearest Station Tube/ 
              Railaways: Startford 
              Buses: 25,86
              
              தகவல்: rajesbala@hotmail.com



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




