இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2009 இதழ் 120  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

அட்லாண்டாவில் அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் 5ம் மாநாடு

- ஆல்பர்ட் (விஸ்கான்சின்,அமெரிக்கா
) -

அமெரிக்காவெங்கிலுமிருந்து தமிழ் மரபைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவ சார்பு தொழில்நிபுணர்களும், ஜார்ஜியாவிலுள்ள கில்டன் ஓட்டல் அட்லாண்டாவில் தங்கள் கலாசார, சமூக மற்றும் தொழில் விழுமியங்களை மேம்படுத்தவும், மனிதகுலத்திற்கு தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் 5ம் மாநாட்டில் கூடினர்.

அமெரிக்க தமிழ் மருத்துவச் சங்கத்தின் ஐந்தாவது கூடுதலுக்கு “தமிழ் குழந்தைகளின் உடல்நலம்: முன்னெப்போதையும் விட இப்போது” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. மாநாட்டின் தலைவர் மருத்துவர் ஆதிநாராயணன் மற்றும் உறுப்பினர்கள் ஜார்ஜியா காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர்.டாம் ப்ரைஸை வரவேற்றனர். டாம் ப்ரைஸ் உடல்நல பராமரிப்பு சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பெருந்திரளான கூட்டத்தில் உரையாற்றினார்.

கில்டன் ஓட்டலின் மாநாட்டு அறையானது யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு இடமாக காட்சியளித்தது. தொடக்கத்தில் சிறுவர்கள் மற்றும் இள வயதினரின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்சி நடைபெற்றது. இது தமிழ்நாட்டில் ஒரு இசையரங்கத்தில் இருப்பதை போன்ற எண்ணத்தை அனைவர் மனங்களிலும் ஏற்படுத்தியது.

அமெரிக்காவெங்கிலுமிருந்து தமிழ் மரபைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மருத்துவர்களும், மருத்துவ சார்பு தொழில்நிபுணர்களும், ஜார்ஜியாவிலுள்ள கில்டன் ஓட்டல் அட்லாண்டாவில் தங்கள் கலாசார, சமூக மற்றும் தொழில் விழுமியங்களை மேம்படுத்தவும், மனிதகுலத்திற்கு தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்தளிக்கும் வண்ணம் அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் 5ம் மாநாட்டில் கூடினர்.

துவ‌க்கத்தில் மருத்துவர் சுரேஷ் ராமலிங்கம் மற்றும் அவரது குழுவினரால் ‘தொடர் மருத்துவக் கல்வி’ அமர்வு மிகச் சிறப்பாக
நடத்தப்பட்டது. இந்த அமர்வில் பேசிய அனைவரும் கார்வார்ட் மற்றும் எமோரி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க தமிழ் மருத்துவர்களாவர். தொடர் மருத்துவக் கல்வி அமர்வில் சர்க்கரை நோய், இரத்தத்தில் உயர் கொலஸ்ட்ரால், மன அழுத்தம் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்றன விவாதிக்கப் பட்டன.

மாநாட்டின் மற்றைய நிகழ்சிகளை மருத்துவர் ஆதி நாராயணன் அவர்களது குழு வழி நடத்தியது. "தமிழ் பூர்விகத்துடன் நமக்குள்ள
(அ.த.ம.ச. சமூகம்) தொடர்புகள் அறுந்து விடாமல் ஏன் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று" விளக்கி மருத்துவர் ஆதி
உரையாற்றினார். ஒற்றுமை, தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மனப்பான்மை ஆகியவை பணிபுரிய தேவை என்றும், நமது மக்களை
கட்டமைத்து உதவி புரிய சமூக மேம்பாடு இன்றியமையாதது என்றும் மருத்துவர் ஆதி தனது உரையில் குறிப்பிட்டார்.

சனியன்று மாலையில் மருத்துவர் ரகுராஜ் மற்றும் செல்வி.பவித்ரா ஆகியோர் “சுனாமியால் தாக்குண்ட இலங்கையில், உடல்நல
பராமரிப்பு மற்றும் வளரும் உலகில் குழந்தைகள் உடநலம்” என்பது பற்றிய உரைகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. இந்த உரைகள்
உடல்நலப் பணிகள் மற்றும் தமிழ்நாட்டில் பராமரிப்பு கிடைக்காதவர்களுக்கிடையேயான இடைவெளியை நிரப்புவதற்கு தேவையான அர்ப்பணிப்பு மனப்பான்மை மற்றும் ஊக்கத்தை அ.த.ம.ச.வுக்கு வழங்கியதாக அதன் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பல்லாவரம்...
அ.த.ம.ச.வின் கடந்த கால முயற்சிகளின் விளைவாகவும் தொடர்ச்சியான நிதிவழங்குதலின் மூலமும் "பல்லாவரம் குழந்தைகள்
மருத்துவ மையம்" அ.த.ம.ச.வின் வைரமாக ஜொலிக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் அவர்தம் வாங்கும் சக்தியைப் பற்றி
கவலைப்படாமல் மருத்துவ சேவை வழங்குவதே இம்மையத்தின் நோக்கமாக இயங்குவதாகக் குறிப்பிட்டனர்..

மருத்துவர் ஆறுமுகமும் மருத்துவர் ஆதி நாராயணனும் அ.த.ம.ச.வை வலுப்படுத்துவதில் நிதியெழுப்புதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். சங்கத்தின் சேவைகள் மற்றும் திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு சமூகப்பங்களிப்பு தேவைப்படுவதையும் இருவரும் வலியுறுத்தினர்.

மருத்துவ உதவிகள்...
"நீ எந்த மாற்றத்தை உலகில் காண விரும்புகிறாயோ அந்த மாற்றமாக நீயே மாற வேண்டும்" என்றார் மகாத்மா காந்தி. அதற்கு எடுத்துக் காட்டாக விளங்கி அ.த.ம.ச. நாமக்கல் மாவட்டத்திலும், கூடலூர் ஆதிவாசி மருத்துவமனையிலும், வாவிபாளையம் ஊரக
மருத்துவமனை, சிறீலங்கா சுனாமி நிவாரணம், காத்ரினா சூறைக்காற்று நிவாரணம், பால்டிமோரில் வீடற்றவர்களுக்கு
உடல்நலப்பராமரிப்பு, ஆதரவற்ற பெண்களுக்கான ‘பனியான்’ திட்டம் முதலியவற்றை நடத்தியிருக்கிறது. எதிர்காலத்தில் மேலும்
திட்டங்களை செயல்படுத்தவும் நம்பிக்கை உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு....
சனி மற்றும் ஞாயிறு மதியத்தில் தலைமைத்துவ அமர்வும், பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்றது. அதில் 2009 – 10-ம் ஆண்டிற்கான எதிர்கால உத்திமுறைகளை உறுப்பினர்கள் விவாதித்தனர். சங்கச் சட்ட திட்டங்கள், புதிய உறுப்பினர்களை சேர்க்க தேர்தல்கள், அடுத்த ஆண்டிற்கான மாநாட்டு முன்னேற்பாடுகள் மற்றும் அ.த.ம.ச.வின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

பொதுக்குழு உறுப்பினர்கள் இவ்விடயங்களை விவாதித்துக் கொண்டிருக்கையில் அவர்களின் இல்லத்துணைவர்களும் இளையவர்களும் ‘கிம் ஆர்ம்ஸ்ட்ராங்கின் நடனம்’ மற்றும் மருத்துவர் சரவணன் சொக்கலிங்கத்தின் யோகா முதலிய நிகழ்சிகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

மாநாட்டு மலர்...விருதுகள்...
மருத்துவர்கள் ஜாபர், சொக்கலிங்கம், நெடுஞ்செழியன் ஆகியோர் மாநாட்டு மலரை வெளியிட்டனர். இது அ.த.ம.ச.வின் வெளியீடுகளின்
முன்னோடியாக அமைந்தது. விருது வழங்கும் அமர்வில் தங்கள் பணியில் சிறந்து விளங்கியமைக்காக நான்கு பேருக்கு அ.த.ம.சவின்
விருதுகள் வழங்கப்பட்டன. எமோரி பலகலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் வெங்கட் நாராயணன் ‘வாழ்நாள் சாதனை விருது’ பெற்றார்.

சர்கரை நோய் பகுப்பாய்வு மற்றும் சிகிட்சை பற்றி அவர் ஆற்றிய உரை வாயைப் பிளக்க வைத்தது. ‘இளம் ஆய்வாளருக்கான விருது’
மருத்துவர் மீனாவுக்கு வழங்கப்பட்டது. ‘சிறந்த பயிற்சி விருது’ மருத்துவர் அஷ்மிதா சிறீவாசனுக்கும், ‘பொதுச் சேவை விருது’
மருத்துவர் நசீரா தாவூத்துக்கும் வழங்கப்பட்டது.

இளம் ஆய்வாளருக்கான விருது’

மருத்துவர் ஆதிநாரயணன் முக்கிய குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறினார். மருத்துவர்கள் ஜெய்.ஜே.கோபால், வி.எஸ். பரிதிவேல்,
அப்துல் ஜப்பார், ராமச்சந்திரன், பாஸ்கரன், சேவியர் ரோச், செல்வராஜ், சுஜாதா ராஜாராமன், இந்திரன் இந்திர கிருட்டிணன், நடப்பு
ஆளுனர்கள் ஆகியோருக்கு 2008 – 09-ல் சங்கத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திச் சென்றதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

2009 ம் ஆண்டிற்கான சங்கத்தின் தலைமை பொறுப்பு மருத்துவர் நெடுஞ்செழியன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெடுஞ்செழியன்
தனது ஏற்புரையில் செனட்டர் டெட் கென்னடி சங்கத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துரைத்து, அவர் சமத்துவம், நீதி, மனித
உரிமை மற்றும் சிவில் உரிமை ஆகியவைகளுக்காக பாடுபட்டதனால் ஏற்பட்ட அத்தாக்கத்தை மனமுருக எடுத்தியம்பினார்.

சிகாகோ மாநாடு....
2009 –ம் ஆண்டு அ.த.ம.சவின் ஒட்டுமொத்த சுமையும் மருத்துவர் நெடுஞ்செழியனின் மீது சுமத்தப்பட்டது. அவரும் சிக்காகோ சாப்டர்
தலைவர் மருத்துவர் சேவியர் ரோச்சும், 2010-ல் சிகாகோ மாநாட்டை அட்லாண்டாவில் நடைபெற்ற அ.த.ம.ச.வின் ஐந்தாவது
மாநாட்டை விட ஒருபடி மேலாக நடத்துவர் என்ற நம்பிக்கையை எல்லோரும் வெளிப்படுத்தினர்.

2005-ம் ஆண்டு தமிழ் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஒன்றுகூடி ஒரு அறக்கட்டளை போன்ற அமைப்பின் தேவையை உறுதிப்படுத்தினர். அதற்கு ஓராண்டிற்கு பின் ‘அமெரிக்க தமிழ் மருத்துவச் சங்கம்’ நிறுவப்பட்டது. இன்று அதில் 600-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.த.ம.ச.வின் தலைவர்களும் பங்கேற்பாளர்களும் உள்ளூர் பிரிவினரின் குழுச்செயல்பாட்டிற்கும் இனிய வர‌வேற்பு மற்றும்
ஏற்பாடுகளுக்கும் உள்ளூர் பிரிவின் அமைப்பாளர் மருத்துவர் சுஜாதா ராஜாராமனுக்கு நன்றி தெரிவித்தனர்.

அறிவியலாளர்கள் கூறுவது போல, “உணவு நன்றாக மணம் வீசினால் அது உடலுக்கும் நல்லது” என்பதை நிரூபிக்கும் விதத்தில் உணவு
ஏற்பாடுகளைக் கவனித்த திருமதிகள் வசந்தி ராமன், சாந்தி நாராயண் ஆகிய உணவுக் குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

சின்னி ஜெயந்தின் நகைச்சுவை...

பார்வையாளர்களை மகிழ்சிக்கடலில் ஆழ்த்தியவற்றில் நடிகரும், நகைச்சுவையாளருமான சின்னி ஜெயந்தின் நகைச்சுவை சிறப்பாக அமைந்திருந்ததுபார்வையாளர்களை மகிழ்சிக்கடலில் ஆழ்த்தியவற்றில் நடிகரும், நகைச்சுவையாளருமான சின்னி ஜெயந்தின் நகைச்சுவை சிறப்பாக அமைந்திருந்தது. அனைவரும் அவரது நகைச்சுவையை ரசித்தனர். கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் இசை நிகழ்வு மாலையில் மணம் சேர்த்தது. அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கத்தின் 5வது மாநாடு எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக நடந்தேறியதாக் மருத்துவர் நசீரா தாவூத் தெரிவித்தார்.

மாநாட்டுக் காடசிகள் சில ...

albertgi@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2009  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்