இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
டிசம்பர் 2007 இதழ் 96  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

பெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்!

- விஜயேந்திரா -

திலகபாமாவின் கூந்தல் நதிக் கதைகள் ( அநாதி சொரூபக் கவிதை) நூல் வெளியீடு 19.8.07 பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி.
இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி எனக்குள் அரூபமாகியிருக்கிறது அதனை ரூபமாக்கி வெளிப்படுத்தும் விதமாக இக்கவிதைத் தொகுப்பை வழங்குகின்றேன் என திலகபாமா முதல் பிரதியை லட்சுமி அம்மாள் அவர்களுக்கும் பொன்னீலன் அமிர்தம் சூர்யா, பிரம்மராஜன் பா. வெங்கடேசன் , வே எழிலரசு, விஜயேந்திரா, உமா சங்கர் ஆகியோருக்கும் வழங்கினார்.

கூந்தல் நதிக் கதைகள் எனும் தலைப்பில் அமைந்த அநாதி சொரூபக் கவிதை அரங்கேற்றம் சரியாக 11. 20 தொடங்கி 12.55 மணிக்கு சிறிதும் இடைவெளியின்றி வாசித்தளித்தார் திலகபாமா. 1. மணி 35 நிமிடம் வரை வாசிக்கப் பட்ட இக்கவிதையின் 113 பக்கத்தில் 80 பக்க அளவில் கவிதையை பின் தொடர்ந்து செல்ல முடிந்தது தடையின்றி என பங்கேற்பாளர்கள் நிகழ்வு முடிந்த இடைவெளியில் சொல்லிக் கொண்டனர்.

வாசித்த அக்கவிதையின் மீது தன் அபிப்பிராயத்தை சொல்ல முதலில் வந்த அமிர்தம் சூர்யா இக்கவிதையின் அக புற கட்டுமானங்களை பற்றி பேசினார்.அதில் தொகுப்பின் உப தலைப்புகளில் நதிகளின் பெயரில் அமைந்திருக்கின்றது.முடியா நதியில் இக்கவிதை முடிவடைகின்றது.அந்தாதி அமைப்பில் கவிதை இருக்கின்றது என்றும்.கவிதையில் இரண்டு முக்கிய பெண்களுக்கும் , பாரதி பாஞ்சாலிக்கும் இடையில் கவிதை தந்து போயிருக்கின்ற ஒத்திசைவுகளையும். அந்த ஒத்திசைவான கதை பாணியில் நிகழ் காலமும் இறந்த காலமும் ஒன்றாக இருப்பதை சொல்லிப் போகின்றது என்றும், தனது உரையாடலில் பேசினார்

பொன்னீலன்: என் வாழ்வில் முதன் முறையாக இம்மாதிரியான கவிதை அரங்கேற்றத்தைக் காண்கின்றேன். முக்காலத்திலும் ஆண்கள் மேல் வைக்கும் முதல் குற்றச்சாட்டு என்று அமிர்தம் சூர்யா சொன்ன கருத்தில் எந்த ஆண் மேல் என்கின்ற கேள்வி எழும்புகின்றது காரணம் கணவனின் குரலுக்கும் தகப்பனின் குரலுக்கும் வேற்றுமையிருக்கிறது. இக்கவிதையில் நதிகளை படிமமாக ஆக்கியுள்ளார் மகாபாரதத்தை முழுமையாக உள்வாங்காமல் இத்தொகுப்பிற்குள் நுழைய் முடியாது . இந்திய தொன்மங்களீல் மீது விசாலமான தன் பார்வையை முன் வைக்கிறார் திலகபாமா பாஞ்சாலியின் கூந்தலின் இன்னும் ரத்த வாடை போகவில்லை . இம்முயற்சி புதுமையானது புதுமைப் பித்தனும் செய்த முயற்சி தான் . மேரியின் கணவான ஜோசப் பொன்ற ஆண் ஆதிக்கம் இல்லாத ஆண் வேண்டும். இப்படைப்பை தமிழ் சூழல் நிராகரிக்கிறது என்றால் நல்ல படைப்பை தமிழ் சூழல் இழக்கிறது என்றே சொல்வேன் என்றார்

பா.வெங்கடேசன்: இவ்வளவு உள்சிக்கல்களும் படிமங்கள் தொன்மங்கள், குறியீடுகள் கருத்துக்கள் கொண்ட சிக்கலான வடிவத்தை ஒரு ஒன்றரை மணி நேரம் கேட்கச் செய்வதே பெரிய சாதனையாகத்தான் நினைக்கின்றேன் அதற்கான பிரத்தேயகமான பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வது என் கடமையாகின்றது. படிம உருவங்களை கொண்ட நீள் கவிதை கவன வாசிப்புக்குட்படுத்த தேவைப்படுகின்றது. முதல் வாசிப்பில் கிடைக்காத சில விசயங்கள் இரண்டாவது வாசிப்பில் பாமா வாசிப்பில் பிடித்து விட்டதாக உணர்ந்தேன். ஒரு நீண்ட கால படிமத்தை இக்கவிதை உருவாக்குகின்றது கண்ணிமைப்பொழுதில் ஒரு நெடிய காலத்தின் வீச்சை உணர முடிகின்றது" பிணத்தோடு கூடியிருக்கும் நகரம்" , காலங்களை தாண்டி வீசும் ரத்த வாடை இது மாதிரியான படிமங்கள் அதிர்வை ஏற்படுத்துகின்றது . இந்த மாதிரியான விசய்ங்கள் தான் மூன்று வருடங்கள் எடுக்கச் சொல்லுகின்றது மூன்று வருடங்களுக்கான நியாயம் இக்கவிதையில் இருக்கின்றது இதன் உள்ளீடு இரண்டு பெண்கள் தங்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றியது . ஆனால் இப்பெண்களின் குரல்கள் இயக்கமற்றதாகவே இருக்கின்றது . தொன்மங்களிலும் பெண்ணிய அடிப்படைவாதம் பலவீனமாகத்தான் இருக்கிறது

வே எழிலரசு தன் உரையில் மிக அற்புதமான வாசிப்பு தொடர்ந்து மேடைகளில் பேசக் கூடிய வாய்ப்பு பெற்றவர்கள் கூட உச்சரிக்க முடியாத வார்த்தைகளை மிகத் தெளிவாக ஒரு இடமும் சிக்காது , தளர்வு இல்லாது வாசித்துப் போயிருக்கின்றார். கதைக்கான கரு சாமர்த்தியமான ஒன்று.கால நிலை மாறினாலும் கூட பெண்ணின் பிரச்சனை மாறவில்லை.அது மட்டுமல்ல அருச்சுனர்களின் பிரச்சனைகளும் மாறவில்லை உழைப்பு கடினமாக இருக்கிறது தொன்மங்கலின் மீது அறிதல் இல்லாமல் இருக்கின்றது என்ற குற்ற உணர்வு இருக்கின்றது ஆரம்ப வரியிலிருந்து இறுதி வரை எல்லா வரிகளிலும் பூடகத் தன்மை இருக்கின்றது பரவலாக சென்று சேர்வதற்கு தடையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பேராசிரியர் பொ. நா கமலா தன் கருத்துரையில் இது திறந்த அமைப்பை உடைய புதிய காவியம். மௌனங்களை வாசகன் தான் வெளிக் கொணரனும். நிறைய கதையாடல்கள் இருக்கின்றது. அத்தனை கதையாடல்களையும் ஆழ்ந்து படித்தாதான் இந்த நூல் புரியும் பல பனுவல்களின் தொகுப்பு இருக்கின்றது.

விஜயேந்திரா தனது உரையில் மகாபாரதத்தின் யுத்த அலறல்கள் இன்றும் ஒலித்து கொண்டேயிருக்கிறது . அதன் கதை மாந்தர்களின் மௌனத்தை மீண்டும் மீண்டும் தமிழ் இலக்கிய சூழலில் உடை பட்டுக் கொண்டேயிருக்கிறது எம். டி வாசுதேவனின் இரண்டாம் இடம் பீமனின் பார்வையில் மகாபாரதம் . முக்கிய பிரதியாகியுள்ளது கூந்தல் நதிக் கதைகள் கவிதையில் பாஞ்சாலியில் தொடங்கி சமகால பாரதி என்கிற பெண் வரையிலான உரையாடலில், சூதாட்ட நிகழ்விற்கு பிறகு பாஞ்சாலியை அரசவைக்கு பலவந்தமாக அழைத்து வர அங்கு அவளின் கேள்விகள் சதரண மாக்கப் பட்டுள்ளது வியாசனால் அதனை இக்கவிதை மறு விசாரணை செய்வதாகவேயிருந்தது. இக்கவிதைக்கு அரங்கேற்றம் பொருத்தமாக உள்ளது இத்தொகுப்பை இனி என்னால் வாசிக்க படும் போதெல்லாம் திலகபாமாவின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

இந்நிகழ்வு தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நன்றியுடன் விழா முடிவடைகின்றது.

mathibama@yahoo.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner