இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2007 இதழ் 87 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
கனடா: மே மாதம் 31- ஜூன் 2, 2007!
ரண்டாவது தமிழியல் மாநாடு: "இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்"!

தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுதொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் 2ம் திகதி வரை மாநாடு இடம்பெறவுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் நகரங்களில் ஒன்றாகத் தற்போது தொறொன்ரோ விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழியல் கற்கைகளுக்கான ஓரு முக்கிய நகராகவும் தொறொன்ரோவை உருவாக்கி வருகிறது.

இந்த ஆண்டின் மாநாட்டுக் கட்டுரைகள், தமிழ் வழங்கும் இடங்களது வரலாற்றின் ஒட்டுமொத்த அடையாளம், சமூகத் தொடர்பு, அகழ்வாராய்ச்சி ஆய்வுகள், பண்டை இலக்கியங்கள், இடைக்கால சமய வழமைகள், “தேசியமும்” இக்காலப் புரிதல்களும் எழுச்சியும் போன்றவற்றை தற்கால தென்னிந்தியா, ஈழத்தின் சமூக மற்றும் பண்பாட்டு அடையாள மாற்றங்கள் வழியாக ஆய்வு செய்கின்றன. அத்துடன் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் வளர்ச்சியையும் பண்பாட்டு வழமைகளையும் கட்டுரைகள் ஆராய்கின்றன.

அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, மலேசியா, நியூசிலாந்து, இலங்கை, அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இந்த மாநாட்டில் கட்டுரைகள் படைக்கின்றனர். மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது சுகாதாரம், சமயம், சமூகவியல், அரங்கக் கல்வி ஆகிய துறைகளைச் சேர்ந்த பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய இணையத்தளம்:
www.chass.utoronto.ca/~tamils
இந்த இணையத்தளத்தில் மாநாடு, பங்கேற்கும் பேராளர்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மேல் விவரங்களுக்குத் தொடர்புகொள்க:
tamils@chass.utoronto.ca

அமைப்புக்குழு:
பேராசிரியர் செல்வா கனகநாயகம் (தொறொன்ரோ பல்கலைக்கழகம்)
பேராசிரியர் சேரன் (வின்சர் பல்கலைக்கழகம்)
கலாநிதி தர்ஷன் அம்பலவாணர்

தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தகவல்: சத்யா தில்லைநாதன் sathyatk@hotmail.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner