மெய் சிலிர்க்கவைத்த இராமாயணம் நாட்டிய நாடகம்!
சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராசாவின் மாணவிகளின் சாதனை!
- கலாரசிகன் -
கடந்த
6.10.2007 மாலை ஆர்மேனியன் இளைஞர் கலையரங்கில் இடம்பெற்றது நாட்டியஷேஸ்திரத்தின்
ஆண்டுவிழா. இந்த ஆண்டுவிழா வெறுமனே நடன உருப்படிகளை மட்டுந்தருவதோடு நின்றுவிடாது.
முpகப்பாரிய முயற்சியாக சம்பூரண இராமாயணத்தை ஏறத்தாழ இரண்டே கால மணித்தியால
நிகழ்வாகத் தந்திருந்தனர் நடன ஆசிரியை சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராஜாவின் மாணவியர்.
இந்தியக் கலைஞர்களால் மட்டுந்தான் முடியும் என்பதனைப் பொய்ப்பித்து எங்களாலும்
முடியும் என்பதனைக் காட்டியிருந்தனர் அந்த மாணவியர். பெருந்தொகையான மாணவியர்
கலந்துகொண்ட இந்த நாட்டிய நாடகம். குடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர
பயிற்சியின் வெளிப்பாடே என நடன ஆசிரியை குறிப்பிட்டமை அவதானிக்கத்தக்கது.
அர்ப்பணிப்பு மனப்பான்மையும், ஒழுக்கமும், அடக்கமும் உள்ள மாணவர்களினாலேயே இத்தகைய
ஒரு கூட்டு முயற்சியை முன்வைகக் முடியும் என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்வு
அமர்ந்திருந்தது. வெறுமனே அண்டு விழாத்தானே என்று நினைந்திருந்தவர்களுக்கு இது ஒரு
வித்தியாசமான
நிலையைத் தோற்றுவித்தது மட்டுமன்றி அந்த நாட்டிய நாடகத்தை மறுதினமும்
மேடையேற்றவேண்டும் என பெற்றோர்களின் வற்புறுத்தல், வேண்டுதல், ஆதரவு
என்பனவற்றிற்கு மத்தியில் அதனை மேடை ஏற்றியிருந்தார் சிவாஜினி.
ஆண்டுவிழா 5.20க்கு ஆரம்பமாகி 11.20க்கு
முடிவுற்றது. இதில் ஆரம்பத்தில் சின்னஞ்சிறு மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள்
இடம்பெற்றன. இடைவேளைவரை இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகள் ஒன்பதில் இரண்டு பாடல்கள்
ஆசிரியர் சின்னையா சிவனேசன் அவர்களால் எழுதப்பட்டு பிரபல இசை ஆசிரியை காயத்திரி
சங்கரனால் இசையமைக்கபட்ட சிறுவர் பாடல்கள் இரண்டுக்கான நடனத்தையும் அமைத்துத்
தந்திருந்தார் சிவாஜினி
என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பாடல்களுக்கு மட்டும் நடனத்தைத் தராது புதிய
பாடல்களுக்கும் குறிப்பாக கனடிய மண்ணில் கனடிய சூழ்நிலைக்குத் தேவையான பாடல்களுக்கு
நடனத்தைத் தருவது பொருத்தமானது எனவும் அவர் அதனை மேற்கொண்டமை பாராட்டப்படவேண்டியதே.
இந்தியாவில்
நடன ஆசிரியர்களான ஸ்ரீமதி சித்திரா திருவாளர் முரளிதரன் தம்பதியினரால்
தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்ட இராம காதையை அடியொற்றியதாக தனது மாணவிகளாலும் இது
முடியும் என்பதனை நிலைநாட்டும் பணியில் மிகவும் துணிந்து இறங்கிச் சாதனை
படைத்துள்ளார் சிவாஜினி. மனதை உருக்கத்தக்க வகையில் நடனத்தில் நடித்த நடனச்
செல்விகளில் சிலர் அரங்கங்கண்டு கைதேந்தவர்கள் மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்களில்
உயர்கல்வி கற்றுக்கொண்டும் இருக்கின்றார்கள். குறிப்பாக தசரதன், சடாயு,
மந்தரை, இராமன், இலக்குவன் போன்ற பாத்திரங்களோடு ஸ்ரீராம பக்த ஹனுமனாக நடித்த
மாணவியின் நடிப்பு அபாரமாக இருந்தது என்பதனை இரண்டாம் விழாவிற்கு வருகைதந்திருந்த
இந்திய நடனத்தின் மூலத்தைத் தயாரித்து இந்தியாவில் மேடையேற்றிய முரளிதரன்
தம்பதியினர் மிகவும் பாராட்டினர் என்றால் அந்த நடிப்புத் திறன் மிகவும்
கர்ச்சிகரமானதாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அனுமன் கடல்தாண்டும்
காட்சி உண்மையிலேயே மெய்சிலிர்க்கவைத்தது. அனுமன் தனது உருவத்தை ஆஞ்சநேயனாக
வளர்த்துக்கொள்ளும் காட்சி உண்மையிலேயே பார்த்தவர்களை வியக்கவைத்தது எனலாம்.
இதில் கலந்துகொண்டு நடித்த மாணவர்கள் தங்கள் நடிப்புத் திறனைக்காட்ட ஆசிரியை
சிவாஜினி ஸ்ரீஸ்கந்தராசா மூலகாரணமாக இருந்துள்ளார் என்பது உண்மை. அவ்விதமே
மாணவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், ஒத்துழைப்பு, குழுவாக இணைந்து செயற்பட்டமை என்பன
முக்;கியமானவையாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நாட்டிய நடனத்திற்கான
பின்னணி அனைத்தும் மூலமாகத்தயாரிக்கப்பட்ட ஒலித்தட்டில் இருந்து பெறப்பட்டது.
அதில் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலத்தில் விளக்கமளிக்கப்பட்டுத் தொடர்வது சிறிய
பாலகர்முதல் தமிழ் மொழி தெரியாத அனைவருமே உட்பொருளை விளங்கிக்கொள்ளத்தக்கதாக
அமைக்கப்ட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்;விற்கு தமிழில் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் மதியழகன் அவர்கள்
அற்புதமான விளக்கத்தை அளித்திருந்தது போன்றே இதில் சடாயுவாகவும், மந்தரையாகவும்
தோன்றி நடடித்த தாட்சாயினி ஆங்கிலத்தில் மிக அழகாகத் தொகுத்து வழங்கியிருந்தார்.
மதியழகன் இந்த நாட்டிய நாடகத்தைப்போல் நான் முன்பு பார்த்ததில்லை என வாய்விட்டுப்
பாராட்டிப் புகழ்ந்துரைத்தமை அதன் சிறப்பைக் காட்டுகின்றது. இந்த நாட்டிய
நாடகத்தைப் பார்த்தவர்கள் மிகத் திறமையான முயற்சி நல்லதொரு நாட்டிய நாடகம் என்று
பாராட்டிக் கொண்டு சென்றமையை அவதானிக்கமுடிந்தது. நடன ஆசிரியை இந்த நாட்டிய
நாடகத்தைப் பழக்கி முடிப்பதற்கு ஒரு வருட காலம் தேவைப்பட்டது. பிள்ளைகளுக்கு
நேரமின்மையும் அவர்கள் வௌ;வேறு துறைகளில் பல்கலைக்கழகங்களில் கற்றுவருவதனால்
அவர்களை ஒன்றுசேர்த்து பயிற்;சி அளிப்பது மிகவம் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது
என்று குறிப்பிட்ட தோடு பிள்ளைகளின் ஒத்துழைப்பiயும் பெற்றோரின் ஒத்துழைப்புமே இந்த
நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
thangarsivapal@yahoo.ca |