இலங்கை: கவிதை நூல் வெளியீட்டு விழா!
நிந்தவூர் ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்'!
இலங்கை
தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக நீலாவணன் அரங்கில் கவிஞர்
நிந்தவூர் ஷிப்லி எழுதிய நிழல் தேடும் கால்கள் (கவிதை நூல்) இடம் :-கேட்போர்
கூடம். தென்கிழக்குப் பல்கலை ஒலுவில் இலங்கை காலம் :- 2008-04-23
புதன்கிழமை மதியம் 01.30 முதல். பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன்
இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை
அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது.
யாரிடம் போய்ச் சொல்லி அழ!
- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்குப்பல்கலை
இலங்கை -
யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?
கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை
உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்
புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்
நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....
காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா
அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...
அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா
யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?
http://www.shiblypoems.blogspot.com/
shibly591@yahoo.com |