| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள் |  
| 
              
                கலைத் தாகம் மிகக் கொண்ட கலையரசின் 
                வாரிசு 'நிர்மலா' ரகுநாதன்
 - வி. ரி. இளங்கோவன் -
 
 
  ஆம். அன்று அப்படித் தான் இலங்கையில் அவரைக் கலை இலக்கியவாதிகள் 
                குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். இன்று அவர் பவள விழா நாயகர். 
                இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் முதன்முதலில் 
                நம்பிக்கையூட்டிய படமாக, சிறந்த முறையில் அமைந்ததென பலராலும் 
                போற்றப்பட்டது 'நிர்மலா" திரைப்படமாகும். என் கல்லூரி 
                நாட்களின்போது, நிர்மலா யாழ் ராஜா திரையரங்கில் வெளியானபோது அதனைப் 
                பார்த்தேன். இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் சிறப்பாக 
                வந்துள்ளதென நண்பர்களுக்குக் கூறினேன். பின்னர் நண்பர்களுடன் 
                இரண்டாவது தடவையும் அதனைப் பார்த்தது இன்றும் ஞாபகம். ஆயிரம் 
                தடவைகளுக்குமேல் மேடையேறிய, நடிப்பிசைக் கலாமணி வைரமுத்துவின் 
                'மயான காண்டம்" நாடகமும் நிர்மலாவில் இடம்பெற்றது ஞாபகம். 
 இலங்கை வானொலி வர்த்தக சேவை ஒலிபரப்பில், அன்று இந்தியத் 
                திரைப்பாடல்களையும் விஞ்சி, நேயர்களால் அதிகமாக 
                விரும்பிக்கேட்கப்பட்ட 
                இலங்கைத் திரைப்பாடலான 'கண்மணி ஆடவா... .." என்ற பாடல் 
                இடம்பெற்றதும் நிர்மலா படத்திலாகும். அப்பாடலை எழுதியவர் 'பல்கலை 
                வேந்தர்" 
                சில்லையூர் செல்வராசன்.
 
 இவ்வாறு நம்பிக்கையூட்டிய நிர்மலா திரைப்படத்தைத் தயாரித்தும், 
                அதில் நடித்தும் எம்மக்கள் மனதில் கலைஞனாக அழியாத இடத்தை ரகுநாதன்
                பெற்றுக்கொண்டார்;.
 
 மாணவப் பராயம் முதல் நாடக மேடையைக் கண்ட ரகுநாதன், கலையரசு 
                சொர்ணலிங்கம் அவர்களின் வாரிசாக, பல நாடகங்களை இயக்கியும், 
                நடித்தும் பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும், 'கடமையின் எல்லை" 
                திரைப்படத்தில் பங்குபற்றியிருந்தாலும் நிர்மலாவுக்குப்பின் தான் 
                அவர் 
                இலங்கையெங்கும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட புகழ்பெற்ற 
                கலைஞனாக மிளிர்ந்தார் என்று கூறலாம்.
 
 அவர் நடித்த வி. பி. கணேசனின் 'புதிய காற்று", சினிமாஸ்கோப் 
                திரைப்படமான 'தெய்வம் தந்த வீடு" ஆகியவற்றையும் யான் 
                பார்த்திருக்கிறேன்.
                இருப்பினும் 'நிர்மலா" தான் இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 
                அவர் பெயரைப் புகழுடன் சேர்த்துள்ளது எனலாம்.
 
 
  இலங்கையெங்கும் கலைஞர்களின் நட்பும் தொடர்புகளும் அவருக்கிருந்தது. 
                போட்டி, பொறாமை மிகுந்தது கலையுலகம் என்பர். அந்தத் துறையில்
                நீண்ட காலம் தன் புகழையும் பெருமையையும் காப்பாற்றிக்கொண்டு 
                காலூன்றி நிற்பது சிரமமானது. ஆனால் ரகுநாதன் இன்றுவரை இலங்கையில்
              
                மட்டுமல்ல, புலம்பெயர்ந்து உலகமெங்கம் பரந்துவாழும் எம்மக்கள் 
                மத்தியில் தன் அயரா உழைப்பினாலும் கலைப்பணியினாலும் போற்றத்தக்க
             
                முன்னோடிக் கலைஞனாக மதிக்கப்படுகிறார். 
 இலங்கையில் நாடக, சினிமாக் கலைஞர்களுடன் மட்டுமல்ல, சிறந்த 
                இலக்கியப் படைப்பாளிகளுடனும் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர்
              
                ஒரு படைப்பாளி. இலக்கிய நேசன்.
 
 மக்கள் எழுத்தாளர் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் 
                செல்வராசன் ஆகியோருடன் அவர் நட்புடன் பழகி வந்ததை யான் அறிவேன்.
 
 
  1986 -ம் ஆண்டு தை மாதம் 30 -ம் திகதி, வைத்திய சிகிச்சையின் 
                பொருட்டும், இலக்கிய நண்பர்களைச் சந்திப்பதற்காகவும் மக்கள் 
                எழுத்தாளர் கே.
                டானியல் தமிழகம் சென்றிருந்தார். உடல்நலம் குன்றியிருந்த அவரை யான் 
                அழைத்துச்சென்றிருந்தேன். பேராசிரியர் அ. மார்க்ஸ் ஏற்பாட்டில் 
                தஞ்சாவூரிலும், மதுரையிலும் சிகிச்சை பெற்றபின் சென்னை வந்தபோது 
                'சங்கர் நேத்திராலயா" கண் மருத்துவமனையிலும் அவருக்கு பரிசோதனை 
                செய்யப்பட்டது. இலக்கிய, அரசியல் நண்பர்களைச் 
                சந்தித்துப்பேசுவதற்காகச் சென்னை எக்மோரில் ஒரு விடுதியில் 
                தங்கியிருந்தோம். அப்போது
                எழுத்தாளர்கள் செ. கணேசலிங்கன், செ. யோகநாதன் ஆகியோர் வந்து 
                டானியலைச் சந்தித்து உடல்நலம் குறித்து கவலையுடன் விசாரித்தனர்.
              
                ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் திடீரென இருவர் 
                உள்ளே வந்தனர்;. கலைஞர் ரகுநாதன், 'மக்கள் குரல்" புனிதலிங்கம் 
                ஆகியோரே
                வந்தனர். 
 டானியலின் உடல்நலம் பாதிக்கப்பட்டமை குறித்து, தமிழகத்தில் 
                தங்கியிருந்த ரகுநாதன் எப்படியோ அறிந்து புனிதலிங்கத்தையும் 
                அழைத்துக்கொண்டு 
                அங்கு வந்திருந்தார். கவலை மிகுந்தவராக, உடல்நலத்தில் கவனம் 
                செலுத்துமாறும் மற்றும் இலக்கிய முயற்சிகள் குறித்தும் டானியலுடன் 
                அவர் 
                நீண்ட நேரம் நட்புரிமையுடன் உரையாடிக்கொண்டிருந்தமை இன்றும் எனக்கு 
                ஞாபகம். எழுத்தாளர்கள், நண்பர்கள் மீது ரகுநாதன் கொண்டிருந்த 
                நேசம்,
                பாசம், மனிதாபிமானத்தை என்னால் உணர முடிந்தது.
 
 
  அவர் சென்றபின் டானியலிடம் ரகுநாதனின் சினிமா முயற்சிபற்றிக் 
                கேட்டேன். டானியல் சொன்னார்... 'இலங்கையில நாடகம், சினிமா, கலையென
              
                தாகம்கொண்டு தன்ர வாழ்க்கையையே அர்ப்பணிச்சுக்கொண்டு திரிஞ்ச 
                மனுசன்... .. இங்கையும் அந்த அலுவல் தான் பார்த்துக்கொண்டு 
                நிற்கிறார்
                போல... .. ஆனால் இங்க சுத்துமாத்து நிறைஞ்ச இந்தச் சினிமாப் 
                பெரும்சமுத்திரத்தில உண்மையா கலைத்தாகம் கொண்டவனால 
                நிண்டுபிடிக்கிறது 
                கஸ்ரம்... ரகுநாதன் என்ன செய்யப்போறாரோ தெரியாது... .." கவலையோடு 
                தான் சொன்னார். தமிழக சினிமா அப்படிப்பட்டது தான் என ரகுநாதன்
                உணர்ந்துகொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். 
 ரகுநாதன் புலம்பெயர்ந்து இங்கு வந்த ஆண்டில் தான் நானும் பாரிஸ் 
                வந்திருந்தேன். அன்று அவரை நண்பர் எஸ். கே. ராஜென் வீட்டில் பலமுறை
               
                சந்தித்துக் கலை இலக்கிய முயற்சிகள் குறித்து உரையாட முடிந்தது. 
                அவரது சுறுசுறுப்பும் திடகாத்திரமான நிமிர்ந்த நடையும் பேச்சும் 
                கலை இலக்கிய
                நேசிப்பும் எனக்கு வியப்பளிப்பன.
 
 1991 -ம் ஆண்டு நடைபெற்ற எனது 'கரும்பனைகள்" கவிதைத் தொகுதி 
                வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்கவிதையும் தந்து 
                சென்றார்.
                பின்னரும் எனது நூல்வெளியீட்டு வைபவங்களிலும் சரி, வேறு கலை 
                இலக்கியக் கூட்டங்களிலும் சரி அவர் கலந்துகொண்டு ஊக்கமளித்துச் 
                சிறப்பித்து வருவது மனங்கொள்ளத்தக்கது.
 
 இன்றுவரை தளராத ஊக்கமுடன் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கலைஞர்கள் 
                பலரோடும் உறவுகளைப்பேணி, சின்னத்திரைக்கான படங்களைத் 
                தயாரித்தும் இயக்கியும் நடித்தும் வருவதோடு, தனது அனுபவங்கள் மூலம் 
                பெற்றதை இளந்தலைமுறைக் கலைஞர்களுடன் பகிர்ந்துகொண்டு,
                நெறிப்படுத்தியும் ஊக்கமளித்தும் வருகின்றமை போற்றுதற்குரியது.
 
 பவள விழாக் காணும் மூத்த கலைஞனை, முன்னோடியை, கலைத்தாகம் 
                மிகக்கொண்ட கலை இலக்கிய நேசனைப் பல்லாண்டு வாழ்கவென 
                வாழ்த்துவோமாக..!
 vtelangovan@yahoo.fr |  
| 
 |  
|  |  
|   |  
|  ©©© 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |