| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| நிகழ்வுகள் |  
| 
              
                'நிலாவின் இந்திய உலா' நூல் 
                வெளியீட்டு விழா!- உதயகுமாரி பரமலிங்கம் -
 
 
  சென்னையில் 
                உள்ள லீக் கிளப்பில்  ஆகஸ்ட் 29 ஞாயிறன்று காலை பத்து 
                மணியளவில் துவங்கியது நிலா எழுதிய 'நிலாவின் இந்திய உலா' நூல் 
                வெளியீட்டு விழா! பிரபல இலக்கியவாதிகள் திரு ஞாநி , திரு பிறைசூடன் 
                மற்றும் திரு யுகபாரதி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் திரு 
                வித்யாசாகர் அவர்களின் தாயார் குத்துவிளக்கேற்ற திருமதி பிரியா 
                ரமேஷ் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, இன்னுயிர் ஈந்த 
                ஈழத்தமிழர்க்கு இதய அஞ்சலி செலுத்தி இனிதே துவங்கியது விழா. 
 திரு இராசேந்திர உடையார் தொகுத்து வழங்க வந்திருந்த விருந்தினர்களை 
                இனிதே வரவேற்றார் சுபாஜினி. தொடர்ந்து திரு ஞானி அவர்கள் 'நிலாவின் 
                இந்திய உலா' நூலை வெளியிட திரு பிறைசூடன் மற்றும் திரு யுகபாரதி 
                ஆகியோர் பெற்றுகொண்டனர். தொடர்ந்து பேசிய 'ஆலயம்' அமைப்பின் 
                இயக்குனர் திரு இராஜவேல் நூலாசிரியர் சிறப்பு குறித்து பேசினார். 
                அதைத்தொடந்து பேசிய கவிஞர் யுகபாரதி நூலின் சிறப்புப் பற்றி 
                எடுத்துரைத்தார். கவிஞர் பிறைசூடன், பிறரை குறை 
                கூறிகொண்டிருப்பதைவிட அவர்களை எமக்கு சாதகமனவர்களாக ஆக்குவதே 
                சிறப்பு என்று குறிப்பிட்டார். மேலும் நூலாசிரியருக்கு 
                கவித்திறனும் சேரப்பெற்றுள்ளது என நூலின் பகுதிகளையும் 
                தொட்டுக்காட்டிப் பேசினார்.
 
                
                 எழுத்தாளர் ஞாநி, இயலாமையைப் 
                புறந்தள்ளி மிளிர்ந்து நிற்கும் நிலாவுக்கு கல்வி தான் மிகவும் 
                கைகொடுத்திருக்கிறது, அதன் மூலம் தன்கைகளை அகலவிரித்திருக்கிறார் 
                எனப் பாராட்டிப் பேசியதோடு நிலாவின் இணையத்து நண்பர்களையும் 
                வியந்து நன்றி கூறினார். இந்த விழாவின் சிறப்பே கைகால்கள் இயக்கம் 
                குன்றிய நிலாவின் இந்தியப்பயணத்தின் போது துணை நின்ற தன் இணையத்து 
                நண்பர்க்காய் அர்ப்பணித்த 'நிலாவின் இந்திய உலா' என்ற நூலின் 
                வெளியீட்டு விழாவதனை மேலும் பல நண்பர்கள் இணைந்து குடும்ப விழாவாக 
                நடாத்தி மகிழ்ந்தது தான். 
 இணையத்து நண்பர்கள் தம்திறன் தெரிவிக்கும் நிகழ்வுகளைத் துவங்க 
                மறுபுறம் வாழையிலையில் தமிழ்ப்பண்பாடு மணக்க உணவு பரிமாறலுடன் 
                இனிது நிறைவேறியது விழா.
 மேலும் சில 
                நிகழ்வுக் காட்சிகள் 
                 
                 
                 
                 
                 
 nilaaa2001@googlemail.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  ©©© 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |