-சாம்பவி-
வருடாவருடம்
இலக்கியபணி செய்து வரும் எழுத்தாளர் திரு. முல்லைஅமுதன் அவர்கள்
இவ்வாண்டும் 29.07.2006 அன்று கிழக்கு இலண்டனில் ஈழத்து நூல்களின்
கண்காட்சியை உள்ளடக்கிய இலக்கியவிழாவினை வெற்றிகரமாக
நடாத்திமுடித்திருக்கிறார். திரு.ஸ்ரீரங்கன் (ஒலிபரப்பாளர்)
அவர்களின் தலைமையில் திரு.பற்றிமாகரன் (ஊடகவியலாளர்)
சுதுமலைக்கவிஞர். திரு. க.இராஜமனோகரன் இளங்கவிஞர் க.ஈஸ்வரகுமார்.
ஆகியோர்களின் சிறப்புரைகளும் சங்கீத பூஷணம் திருமதி. கமலா
தனபாலசிங்கம் அவர்களின் மாணவிகளின் இன்னிசை கச்சேரியும் நல்லைக் கவி
திரு. சிவானந்தன் அவர்களின் தலைமையில் கவிஅரங்கமும் சிறப்பாக
இடம்பெற்றன.
சிறப்பு
நிகழ்ச்சியாக ஈழத்து சிறுசஞ்சிகைகள் உள்ளிட்ட ஈழத்து
நூல்கண்காட்சியுடன் அமரத்துவமான எண்பதுவரையான ஈழத்துப்
படைப்பாளிகளின் உருவப்படங்கள் பாகுபாடற்றமுறையில் சட்டமிடப்பட்டு
பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மாலை 10.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வில்
மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொண்டமை முல்லை அமுதனின்
முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். வாழ்க தமிழ்!. வளர்க அவர்தம்
தமிழ்பணி!!
மேலும் சில விழாக் காட்சிகள்....
mullaiamuthan_03@hotmail.co.uk