| பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி! கானல் காடு கவிதைக் கருத்தரங்கு!
 - 
திலகபாமா (சிவகாசி) -
 
 _sanka_viza_oct2007_6.jpg) பொ. நா. கமலா( ஓய்வு பெற்ற பேராசிரியை) சிவகாசி, 
பாரதி இலக்கியச் சங்க நிறுவனர் கவிதாயினி திலகபாமா அக்டோபர் 6, 7 , 2007 இல் பட்டி 
வீரன் பட்டியிலிருந்து 35 கி. மீ தூரத்திலுள்ள குறிஞ்சி நிலமான கானல் காட்டில் 
நிகழ்த்திய கவிதைக் கருத்தரங்கு பசுமையாக என் நினைவினின்றும் நீங்காது என்றும் 
நிலைத்திருக்கும். 
_sanka_viza_oct2007_2a.jpg) அதன் காரணங்கள்:  1, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவரான 
பொன்னீலன் அவர்கள் முதல் தமிழ் நாட்டின் சிறந்த கவிஞர்களான பிரம்மராஜன் பழமலய் 
மற்றும் பல இளங்கவிஞர்கள் , நாவலாசிரியர்கள் , சிறுகதையாசிரியர்களான விழி. 
பா.இதயவேந்தன் மேலும் மார்க்சீயவாதியான தோதாத்ரி கல்லூரி ஆசிரியர்கள் , இளநிலை 
முதுநிலை ஆய்வுப் பட்ட மாணவர்கள் போன்றோரும் இதழாளர்களான வைகை செல்வி ஆகியோரும் 
இக்கவிதைக் கருத்தரங்கில் பங்கு பெற்றமை.
 
 
 _sanka_viza_oct2007_3a.jpg) 2,பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் சனிக்கிழமை 
காலைக் கூட்டத்தில் பட்டி வீரன் பட்டி சௌந்திரபாண்டியனார் அரங்கில் நிகழ்த்தி 
இவ்வாண்டின் சிறந்த கவிஞர்களான அம்சப்ரியா அமிர்தம் சூரியா ஆகியோருக்கு விருதும், 
ரூ 5000 பொற்கிழியும் திருமதி லட்சுமி அம்மாள் அவர்கள், பேராசிரியர் திரு. சி. 
கனகசபாபதி அவர்கள் நினைவாக வழங்கியமை மேலும் , வைகை செல்வியின் நூலினை , திருமதி 
பொ. நா. கமலா வெளியிட , திருமதி ரெங்க நாயகி அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு 
செய்தமைபரிசு பெற்ற கவிதைத் தொகுதிகள் பற்றித் , திரு முல்லை நடவரசும் , திருமதி 
பொ. நா. கமலா எதிர்காலத்தில் மாணவிகளும் கவிதை நூல்களைப் படைத்துப் பரிசு பெற 
வேண்டும் என ஊக்குவித்தமை. திருமதி நளினி மோகன் மற்றும் பள்ளி மாணவிகள் தன் 
கவிதைகளை வாசிக்குமாறு செய்தமை நூலாசிரியர்கள் ஏற்புரை வழங்கியமை மாணவிகளின் 
ஆர்வத்தீக்கு நெய்யாக இருந்தமை போன்றவற்றால் பட்டி வீரன் பட்டியில் இன்னும் பல 
கவிஞர்கள் உருவாவது உறுதி என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது (இது இருநாள் நிகழ்வின் காலை 
நிகழ்ச்சி மட்டுமே). 
_sanka_viza_oct2007_1a.jpg) mathibama@yahoo.com
 |