பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
அரசியல்! |
புத்தாண்டுப் பூவே வருக! வருக!
அமைதிப் பூவே நீ மலர்க! மலர்க!
ஈழத்தமிழர்கள் வாழ்வில் மிகவும் துயர் நிறைந்ததொரு ஆண்டாக 2009 அமைந்து விட்டது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை
அரசுக்குமிடையிலான உக்கிரமான போரில் ஈழத்தமிழர்கள் அடைந்த துன்பங்களைக்
கூறுவதற்கு வார்த்தைகளில்லை. மே 18, 2009 ஒரு
முடிவாகவும் அதுவே இன்னுமொரு தொடக்கமாகவும் அமைந்து விட்டது. இதுவரைகாலமும்
உள்நாட்டுப் பிரச்சினையாகப்
பெரும்பாலான உலக நாடுகளால் குறிப்பாக மேற்குலக நாடுகளால் கருதப்பட்ட
ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது சர்வதேசப்
பிரச்சினைகளிலொன்றாகக் குறிப்பாகத் தெற்காசியாவின், ஆசியாவின் முக்கியதொரு
பிரச்சினையாக உருவெடுத்ததும் மேற்படி போரின்
உக்கிரத்தாலும், ஈழத்தமிழர்களுக்கு அதுவேற்படுத்திய அழிவுகள்,
துயரங்களினாலும்தான். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த
புவி அமைப்பின் காரணமாக தெற்காசியாவினுள் காலடியெடுத்து வைக்க சீனாவுக்கு
உதவியதொரு போராகவும் மேற்படி யுத்தம்
அமைந்து விட்டது. சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற
பிராந்திய சர்வதேச சக்திகளின்
பகடைக்கள்மாகவும் இலங்கை உருவாவதற்கு மேற்படி யுத்தம் வழிகோலிவிட்டுள்ளது.
இத்தகையதொரு சூழலில் மேற்படி போரினைத்
தொடர்ந்து தமது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு
பல்வேறு வகையிலான துன்புறுத்தல்களுக்கும்
உள்ளாக்கப்பட்டு வந்தார்கள். விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் வாயிலாக
தென்னிலங்கையின் அரசியற் சக்திகள்
பிளவுண்ட நிலையில், மேற்குலக நாடுகளின் போர்க்குற்றங்கள் சம்பந்தமான
நெருக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மீண்டும்
தமிழர்களின் தயவை நாடவேண்டிய நிலைக்குத் தென்னிலங்கை அரசியற் சக்திகள்
தள்ளப்பட்டுள்ளன. அதன் காரண்மாக இதுவரை
காலமும் தமிழர்களை அடக்கி ஆளப் பயன்பட்ட அடக்குமுறைச் சட்டங்கள் சில
தளர்த்தப்பட்டுள்ளன; தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தித்
திட்டங்கள் சில தேர்தலையொட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தகையதொரு சூழலில் 2010
ஆண்டினுள் ஈழத்தமிழர்கள் அடியெடுத்து
வைக்கின்றார்கள்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இது போன்ற எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்து
விட்டார்கள். முன்னாள் இராணுவத் தளபதி
வென்றாலும் சரி, மகிந்த இராஜபக்ச வென்றாலும் சரி ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுதான்.
இதுவரை காலமும் அவர்கள் மண்ணில்
நிலவியது, இன்னும் நிலவிக்கொண்டிருப்பது இராணுவ ஆட்சிதான். சொந்த மண்ணிலேயே
தலைநிமிர்ந்து நடமாடிட முடியாத நிலை.
ஆட்கடத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், யுத்த மரபுகள் மீறப்பட்ட
உக்கிரமான போரில் அவர்கள அடைந்த துயரங்கள்...
இவையெல்லாவற்றையும் கடந்து அவர்கள் புத்தாண்டினுள் காலடியெடுத்து
வைக்கின்றார்கள்.
தகவல் தொழில் நுட்பம் கோலோச்சும் இன்றைய கணினி யுகத்தில் முன்னெப்போதையும் விட
இலங்கையில் வாழும் பெரும்பான்மையின் மக்கள் அதிக அளவில்
தமது சகோதரர்களான ஈழத்தின் தமிழ் மக்கள் அடைந்த , அனுபவிக்கும் துயர்களை அறிந்து
வைத்திருக்கின்றார்கள். அதனால்தான்
ஜனாதிபதிப் பதவிக்காகப் போராடும் வேட்பாளர்களே ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள்
பற்றிப் பேசுகின்றார்கள். ஆயினும் அவ்விதம்
பேசுவது ஒருவித முரண்நகை. எனினும் இத்தகைய மாற்றங்கள் வரவேற்கத்தக்க
மாற்றங்களாகக் கருதப்பட வேண்டியவை.
இவ்விதமானதொரு சூழலில் தமக்குள் பிளவுண்டு கிடக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டிட,
தமக்குள் பிளவுண்டு கிடக்கும் இலங்கையின்
பல்வேறினத்து மக்களிடையேயும் மேலும் புரிந்துணர்வேற்பட்டு ஒற்றுமை வளர்ந்திட,
நியாயமான தமிழ்மக்களின் அபிலாசைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்வொன்று எட்டிட இந்தப் புதிய ஆண்டாவது உதவட்டும். அதே
சமயம் அண்மைய யுத்தத்தில், யுத்தக் குற்றம்
புரிந்தவர்கள் யாராகவிருந்தாலும் நடுநிலைமையிலானதொரு சர்வதேச விசாரணக் குழுவொன்றின் மூலம் சரியாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு உரிய
தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட
அனைவருக்கும் முறையான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இதுவரைகாலமும் அரசியற்
காரணங்களுக்காக இலங்கையின் பல்வேறு
சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட
வேண்டும்.அனைவரும் தமது சொந்த
மண்ணில் விரைவில் மீளக்குடியேற்றப்படவேண்டும். தடுப்பு முகாம்களில் பெண்கள் மேல்
பாலியல் வல்லுறவு புரியப்பட்டதாக
எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், போராளிகள் மற்றும் இளைஞர்கள் மேற்படி முகாம்களில்
காணாமல் போதல் பற்றிய குற்றச்சாட்டுகள்
விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
இத்தகையதொரு சூழலில் மலரும் புத்தாண்டுப்
பூவே நீ வருக! வருக! அமைதிப் பூவாக நீ பிறந்திட வரவேற்கின்றோம்!
வாழ்த்துகின்றோம்! - குருவி - |
|
|
|
©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|