நேசக்கரம்!
                வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது 
                குழந்தைகளும்!  - நேசக்கரம் -
                
                 இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் 
                எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற 
                ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக 
                இருக்கின்றனர்.
                பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான 
                உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது 
                நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் 
                என்கின்ற கிராமம்.

                இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , 
                விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 
                குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை 
                வேண்டியிருக்கிறார்கள். 
                இக்குடும்பங்களில் அதிகளவிலானோர் பெண்களாக உள்ளனர். குறிப்பாக 
                போரில் கணவர்களை இழந்தவர்கள் தடுப்பு முகாமில் இருக்கும் 
                கணவர்களின் மனைவிகள் மற்றும் கணவர்களால் கைவிடப்பட்டவர்களாகவும் 
                ஊனமடைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். 
                
                 இந்தப் பெண்களை நம்பிய இவர்களது குழந்தைகள் தமது கல்வியைத் 
                தொடரவோ நல்ல சத்துணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். 
                மணியன்குளம் குடியிருப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 
                பிள்ளைகளுக்கான ஒருவருடத்துக்கான கல்வியுதவியினையும் வழங்குவதற்கான 
                உதவிகளையும் வேண்டுகிறோம் உறவுகளே….!

                ஒரு குடும்பத்துக்கு இலங்கை ரூபா 15ஆயிரம்ரூபாவை அவர்களது 
                சுயதொழில் முயற்சிக்கும் ஒரு பிள்ளைக்கான கல்விக்காக மாதாந்தம் 
                ஆயிரம்ரூபாவை வழங்கவும் முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளோம். 
                இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் உறவுகள் இணையுமாறு 
                வேண்டுகிறோம். 
                
                ஒரு குடும்பத்துக்கு = 15000ரூபா
                40 குடும்பங்களுக்கும் = 15000 x 40 = 600000ரூபா (ஆறுலட்சம் 
                ரூபாய்)
                ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் = 1000 ரூபா
                ஒரு பிள்ளைக்கு ஒருவருடத்திற்கு = 1000 x 12 = 12000ரூபா 
                (பன்னிரண்டாயிரம் ரூபா)
                20 பிள்ளைகளுக்கும் மொத்தம் ஒருவருடத்துக்கான தேவை = 
                240000ரூபா(இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா)
                இத்திட்டத்திற்காக எதிர்பார்க்கும் உதவி மொத்தம் – 840000ரூபா 
                (எட்டுலட்சத்து நாற்பதாயிரம் ரூபா)
                
                 இவ்வுதவியை கட்டம் கட்டமாக செய்யவுள்ளோம். ஒவ்வொரு குடியிருப்பாக 
                உதவிகளைக் கொடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒவ்வொருவர் முன் வந்து 
                ஒவ்வொரு குடும்பத்திற்கான நேசக்கரத்தினை வழங்குவீர்கள் என்று 
                நம்புகிறோம். உங்கள் சிறுதுளி அவர்களின் வாழ்வில் பெருவெள்ளமாகும் 
                என்கின்ற நம்பிக்கையில் உங்கள் உதவிகளை வேண்டுகிறோம்.

                உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்:-
                Nesakkaram e.V.
                Hauptstrasse 210
                55743 Idar-Oberstein
                Germany
                
                Shanthy 0049 6781 70723 begin_of_the_skype_highlighting 0049 
                6781 70723 end_of_the_skype_highlighting
                Sri – 0033 611149470 begin_of_the_skype_highlighting 0033 
                611149470 end_of_the_skype_highlighting 
                
                Skype – Shanthyramesh
                Skype – Srigowripal
                nesakkaram@googlemail.com
                Let us help our brothers 
                and sisters
                www.nesakkaram.org