| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம்! |  
| லண்டனில் காந்தி மக்கின்ரயர்! 
 - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
 
 
  ஈழத்தில் 
  ஆங்கில நாடக வரலாற்றில் மட்டுமே அறிமுகப்பட்டிருந்த நாடகக் கலைஞரான காந்தி 
  மக்கின்ரயரை தமிழ் நாடக மேடையில் தரிசிக்க முடிந்தது பெரும் பாக்கியம் என்றே 
  கூறவேண்டும். விம்பம் அமைப்பின் நான்காவது ஆண்டு நிகழ்வில் லண்டனில் பிறன்ற் நகர 
  மண்டபத்தில் சென்றமாத இறுதியில் காந்தி மக்கின்ரயரின் ‘சாரத்தின் மகிமை’, 
  ‘வாத்தியார்’ ஆகிய இரு நாடகங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்த நாடகம் 
  என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. பேராதனை,  கொழும்பு ஆகிய நாடக அரங்கில் 
  தனிப்பெரும் ஆளுமையாகக் கருதப்படும் ஏனர்ஸ்ட் மக்கின்ரயரின் சகோதரரான காந்தி 
  மக்கின்ரயர் நாடகத்தையே தன் உயிர் மூச்சாகக் கருதும் கலைஞர் ஆவார். 
 ஹொலிவூட் திரைப்படத்தில்
 கொழும்பு மெதடிஸ்ற் (Methodist) நாடக சங்கத்தில் இருந்து உருவாகி டுLionel Wendt 
  அரங்கில் வளர்ந்துஇ லண்டன் Drama Studio வில்
 புலமைப் பரிசில் பெற்றுஇ நாடகக் கலையைக் கற்றுத்தேர்ந்த நாடகக் கலைஞர் ஆவார். 
  அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்ததின் பின்
 தன் வாழ்விற்கான ஆதாரமாக நாடகத்தையே வரித்துக்கொண்ட துணிச்சல்காரர். இருபதுக்கும் 
  மேற்பட்ட ஆங்கில ஹொலிவூட்
 திரைப்படங்களிலும்,  தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்த அனுபவம் மிகுந்தவர் 
  காந்தி மக்கின்ரயர். இன்றும் அவுஸ்திரேலியாவில் மேடையேறும் ஆங்கில நாடகங்களில் 
  காந்தி மக்கின்ரயரின் அழுத்தமான நடிப்பாற்றலைக் காணமுடிகின்றது.
 
 தனிநபர் அரங்கு
 காந்தி மக்கின்ரயரின் நாடகங்களை லண்டனில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய விமர்சகர் 
  மு. நித்தியானந்தன் ஈழத்துத் தமிழ் நாடக
 அரங்கில் தனிநபர் நாடக அரங்கு புதியது அல்ல என்றும் ‘அண்ணை றைற்’ போன்ற நகைச்சுவை 
  நாடகம் மூலம் கே.எஸ். பாலச்சந்திரன்
 தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு அடித்தளமிட்டவராகத் திகழ்கின்றார் என்றும் 
  குறிப்பிட்டார். இன்று தமிழர்களின் புலம்பெயர்
 வாழ்வில் காந்தி மக்கின்ரயர் அறிமுகப்படுத்தும் தனிநபர் நாடக அரங்கு நமது 
  சூழலுக்கு மிக மிகப் பொருத்தமானது என்றும் அவர்
 மேலும் தெரிவித்தார்.
 
 மகரந்தச்சிதறல்
 லண்டன் தமிழ் வானொலியில் ‘மகரந்தச்சிதறல்’ நேர்காணல் நிகழ்ச்சியில் நான் நடத்திய 
  பேட்டியின்போதுஇ தனிநபர் நாடக வடிவத்தின் முக்கியத்துவத்தை காந்தி மக்கின்ரயர் 
  வலியுறுத்தியிருந்தார். மாதக் கணக்கான நாடக ஒத்திகைகள்இ பல்வேறு நடிகர்களை 
  ஒன்றுசேர்த்தல்இ காட்சிகளுக்கும் ஆடை அணிகலன்களுக்கும் ஏற்பாடு செய்தல்இ வௌ;வேறு 
  இடங்களில் மேடை ஏற்றுதல் போன்ற பல்வேறு நாடகக் கஷ்டங்களை தனிநபர் நாடக அரங்கு 
  நிவர்த்தி செய்கிறது என்று காந்தி மக்கின்ரயர் எனது வானொலி நேர்காணலில் 
  தெளிவுபடுத்தியிருந்தார். நேரமின்றி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் புலம் பெயர் 
  சூழலுக்கு காந்தி மக்கின்ரயர் முன்வைக்கும் தனிநபர் நாடக அரங்கு முக்கியத்துவம் 
  வாய்ந்தது என்பதில் ஐயமில்லை.
 
 சாரத்தின் மகிமை
 காந்தி மைக்கின்ரயரின் ‘சாரத்தின் மகிமை’ என்ற நாடகம் Stand up comedy என்ற 
  நகைச்சுவை நாடக வகையைச் சேர்ந்ததாகும்.
 ஆற்றல் மிகுந்த ஒரு நகைச்சுவை நடிகர் தொடர்ச்சியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை 
  உருவாக்கியும்இ பேசியும் நடித்தும்இ தொய்வு விழுந்து விடாமல் ரசிகர்களை சிரிப்பு 
  வெள்ளத்தில் ஆழ்த்துகின்ற ஒரு நாடக வடிவமாகும். கைதேர்ந்த நடிப்பும் லாவகமும் 
  கருத்துச்செறிவும் துரிதகதியும் இத்தகைய தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு 
  முக்கிய அம்சங்களாகும்.
 
 சாரத்தின் மகிமை நகைச்சுவை நாடகத்தில் காந்தி மக்கின்ரயர் அழகிய சதுர கட்டம் 
  கொண்ட சாரத்தோடும்இ வெள்ளை பெனியனோடும் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க 
  வைக்கிறார். இலங்கையில் ஆண்கள் சாதாரணமாக அணிகின்ற சாரத்தை மையமாக வைத்து அவர் 
  வெளிப்படுத்திய நகைச்சுவை நடிப்புகள் மிகச் சிறப்பாக இருந்தன. சாரத்தை லாவகமாக 
  தோளுக்குக் குறுக்காக அணிந்து யூலியஸ் சீஸர் நாடகத்தின் மார்க் அன்ரனியின் 
  பாத்திரத்தை அவர் நடித்துக் காட்டிய பாங்கு அவரது நடிப்பின் நேர்த்தியினை 
  வெளிப்படுத்தியது.
 
 கடன் கேட்டு வரும் நபரிடம் இருந்து தப்புவதற்காக வெங்காய மூட்டைகளுடன் சரத்தை 
  உயர்த்தி தலையை முற்றாக மூடி ஒரு
 மூட்டையாகவே மாறி ஒளிந்துகொள்ளக்கூடிய சாமர்த்தியத்தை காந்தி மக்கின்ரயர் மிக 
  அநாயாசமாகச் செய்து காட்டினார்.
 
 காலநிலை மாற்றங்களை விளக்குவதற்கு குறிப்பாக வெய்யிலையும் குளிரையும் 
  வெளிப்படுத்துவதற்கு சாரத்தை எவ்வாறு பாவிக்கலாம்
 என்று அவர் நடித்துக் காட்டியபோது சாரத்தின் பல்வேறு பயன்பாடுகளை எவ்வளவு 
  நுணுக்கமாக அவதானித்திருக்கிறார் என்பது வெளிப்படவே செய்தது. உண்மையில் 
  ‘சாரத்தின் மகிமை’ நாடகம் ரசிகர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு இதமான 
  சூழலுக்கு இட்டுச் செல்ல உதவியது என்றே கூறவேண்டும்.
 
 ‘சாரத்தின் மகிமை’ நகைச் சுவை நாடகத்தின் பிரதி ஆக்கக் காரராகஇ நெறியாளராக, 
  நடிகராக, பல்வேறு தளங்களிலே காந்தி
 மக்கின்ரயர் தனது நடிப்பு ஆளுமையை வெளிப்படுத்தியிருந்தார்.
 
 வாத்தியார்
 சிறிய இடைவேளையின் பின் ‘வாத்தியார்’ என்ற தனிநபர் நாடகம் வித்தியாசமான வேறு ஒரு 
  உலகத்திற்கு நாடகக் கலைஞர்களை
 எடுத்துச் சென்றது.
 
 ‘கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்; சென். பற்றிக்ஸ் கல்லூரிஇ மத்திய 
  கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நான் பயின்ற போது நான்
 பெற்ற அனுபவங்களும், பிற்காலத்தில் நண்பர்களுடன் பழையமாணவர் சங்க சந்திப்பின்போது 
  குதூகலத்துடன் பகிர்ந்துகொண்ட கருத்துக்களும் இந்த நாடகத்தின் தோற்றத்துக்கு 
  மூலப் பொருட்களாக அமைந்தன’ என்று காந்தி மக்கின்ரயர் கூறுகின்றார்.
 
 தமிழ் வாத்தியார் யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் மிக முக்கிய குறியீடாக அமைகின்றார். 
  வகுப்பறையில் கண்டிப்பபைக்
 கடைப்பிடிப்பதிலும்இ மாணவர்களை நன்நெறியில் வளர்த்து எடுப்பதிலும்இ கல்வி 
  போதிப்பதிலும் அந்தக் காலத்து வாத்தியார்கள்
 கொண்டிருந்த அக்கறையும், ஈடுபாடும் இன்றைய கல்வி உலகில் நாம் காண 
  முடியாதவையாகும். மற்றவர்களை நையாண்டி செய்யக்
 கூடிய ஆற்றலும் கூர்ந்த நுண் அறிவும் கையில் பிரம்பும் வாத்தியாரின் ஆதிக்கத்தை 
  வகுப்பில் நிலைநாட்ட உதவின. ஒரு மேசை. நான்கு கதிரைகள். கரும்பலகையில் காணப்படும் 
  விபுலானந்த அடிகளின் படம். வெள்ளை வேட்டியும்,  வெள்ளை நசனலும் அணிந்து 
  கையில் பிரம்போடு பளிச்சென்று தோன்றும் காந்தி மக்கின்ரயர் நாடக மண்டபத்தையே 
  வகுப்பறையாக மாற்றிவரும் சாகசத்தை அன்றைய மேடையில் நிகழ்த்திக் காட்டினார்.
 
 மாணவர்களின் பெயர்களை வின்சன்ற்இ விக்டர், லோறன்ஸ், வல்லிபுரம்,  முருகையா 
  என்று விளித்து வாத்தியார் நடத்துகின்ற
 பாடம் அறிவூட்டலுக்கும் அப்பால், சமூக அமைப்புக் குறித்த விமர்சனமாகவும் சமூக 
  ஊழல்கள், பொய்மைகள் பாரம்பரிய மதிப்பீடுகள் ஆகியவற்றை கேள்விக்கு இலக்காக்கும் 
  தளமாகவும் விரிந்து செல்வதை அன்று சுவைத்து மகிழ முடிந்தது. உமர் கயாமின் 
  ஆங்கிலக் கவிதையைக் கூறி அதனை அழகாக மொழிபெயர்த்த இடங்கள் மிகச் சுவையாக இருந்தன. 
  சில இடங்களில் காந்தி மக்கின்ரயர் விவரித்த சம்பவங்கள், சாதாரண பாடசாலை வகுப்பறை 
  மாணவர்களின் வீச்சை மீறிய சம்பவங்களாக இருந்தன என்பதையும் குறிப்பிடவேண்டும்.
 
 சிந்தனையில் கிளர்ச்சி
 பாரதியார், பட்டினத்தார், திருமூலர் ஆகியோரின் கருத்துக்களை சுவையாக நாடகத்திலே 
  குழைத்துத் தந்த பாங்கு பாராட்டத்
 தக்கதாகும். சுவாமி விபுலானந்த அடிகளாரைப் பற்றிய விளக்க உரை சற்று நீண்டு 
  விட்டது போலவே தோன்றியது. சீதனத்துக்காக
 திருமணம் செய்துகொள்ளுகின்ற அப்புக்காத்துமார் மேற்கொள்ளும் பாலியல் நடத்தைகள் 
  குறித்தும் காந்தி மக்கின்ரயர் முன்வைக்கும்
 விமர்சனங்கள் யதார்த்தமானவையே ஆகும். கண்களை உறுத்தி மாணவர்களை விளிக்கும்போதும் 
  கையில் பிரம்போடும் வகுப்பறையில் அங்குமிங்கும் உலவித் திரியும்போது அந்தக் கால 
  வாத்தியாரை காந்தி மக்கின்ரயர் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
 
 எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் 45 நிமிட நேரம் நாடகச் சுவைஞர்களை தனது 
  நேர்த்தியான நடிப்பாற்றலால் காந்தி மக்கின்ரயர் கட்டிப்போட்டிருந்தார் என்றால் 
  அது மிகையாகாது.
 
 இந்த வாத்தியார் நாடகத்தின் உரையாடலை சிறீகந்ததாஸ் பகவதாஸ் மிக நேர்த்தியாகவே 
  எழுதியிருக்கிறார். வெறும் வகுப்பறை
 நாடகமாக அல்லாமல் சிரிப்பூட்டி சிந்தனையையும் கிளர்த்திய மிகச் சிறந்த நாடகமாக 
  வாத்தியார் நாடகம் திகழ்ந்தது. நாடக முடிவில்
 கருத்துரை ஆற்றிய கவி வீரவாகு,  சாம் பிரதீபன், எஸ்.தினேஷ்குமார், 
  எஸ்.பி.ஜோகரட்னம், எஸ். மகாலிங்கசிவம், எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் காந்தி 
  மக்கின்ரயரின் பல்வேறு சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறினார்கள்.
 
 தர்மசிறீ பண்டாரநாயக்கா
 பிரபல நாடக நெறியாளரும் விவரண இயக்குநருமான தர்மசிறீ பண்டாரநாயக்கா உரையாற்றும் 
  போது ஏனர்ஸ்ட் மக்கின்ரயரின் நாடக வழிகாட்டல்கள் தனது நாடக ஈடுபாட்டிற்கு மிகுந்த 
  உத்வேகம் தந்தன என்று குறிப்பிட்டார். ஜேர்மனிய நாடக ஆசிரியர் பேர்டோல்ற்
 பிறெக்ட்டின் (Bertolt Brecht) இன் ‘ஹானு வட்ட கத்தாவ’ (சுண்ணக் கல்வட்டம்;) என்ற 
  நாடகம் சிங்கள நாடக அரங்கில் ஆழ்ந்த பாதிப்பை
 ஏற்படுத்திய நாடகம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 
  ‘அவுஸ்ரேலியாவிற்குப் 
  புலம் பெயர்ந்த பின்னர்தான் தமிழ் நாடகத் துறைக்குள் நான் நுழைந்தேன். இளைய 
  தலைமுறையினர் மத்தியில் தமிழ் மொழியின் மகத்துவத்தைப் போதிப்பதற்கு இத்தகைய 
  நாடகங்களே சிறந்தன என்று நான் கருதினேன். எவ்வளவுதான் ஆங்கில நாடகங்களிலும் 
  திரைப்படங்களிலும் தோன்றி நடித்திருந்தாலும் தமிழ் மொழியில் தமிழ் நாடகத்தில் 
  நடிக்கும்போது நான் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறேன்’ என்று காந்தி மக்கின்ரயர் 
  தனது நிறைவு உரையில் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் 
  விறுவிறுப்போடும், உற்சாகத்தோடும் தனி ஒரு நடிகராக நின்று இந்த இரண்டு 
  நாடகங்களையும் நடித்துக் காட்டிய காந்தி மக்கின்ரயரின் பணி தொடர வேண்டும். நீண்ட 
  ஆயுளுடன் இந்த முதுபெரும் கலைஞர் தனது நாடகப் பணியைத் தொடர புலம்பெயர்ந்து வாழும் 
  தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை நல்குதல் அவசியமாகும். 
 29.10.2007
 navajothybaylon@hotmail.co.uk
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |