இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2007 இதழ் 95  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் மறைவுக்கு கடல் கடந்த கண்ணீர் அஞ்சலி!  - நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -
பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவின் மறைவுஇ ஈழத்தின் தலைசிறந்த அரசியல் அறிவியல் சிந்தனையாளர் ஒருவரை மட்டுமல்ல,  குறிப்பாக ஈழத்து இலக்கியத்தில் அக்கறை கொண்டிருந்த ஒரு இலக்கிய விமர்சகரின் மறைவையும் தொட்டுக் காட்டியிருக்கிறது. ஈழத்துத் தமிழர் அரசியலின் தலைமைத்துவ பண்புகள் குறித்தும்,  தமிழரசுக் கட்சியின் வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா மேற்கொண்டிருந்த ஆய்வுகள்
தனித்துவம் மிக்கவை ஆகும். பேராசிரியர் ஏ.ஜே. வில்சன்,  பேராசிரியை ஊர்மிலா பட்நிஸ் (Urmila Phadnis) ஆகிய அரச அறிவியல் நிபுணர்களின் வழிகாட்டலில் மலர்ந்த அம்பலவாணர் சிவராஜாவின் மறைவு ஈழத்தின் அரச அறிவில் துறையில் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கின்றது.

யாழ்ப்பாண அரசியல்
23.11. 19997 இல் பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் மணிவிழா மலரில் இடம் பெற்றுள்ள அம்பலவாணர் சிவராஜாவின் ‘யாழ்ப்பாண
சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம்: குடும்ப,  சமூக பொருளாதார பின்னணி பற்றியதொரு ஆய்வு’ என்ற கட்டுரை யாழ்ப்பாண அரசியலின் தலைமைத்துவத்தின் அரசியலை வெளிப்படுத்தும் தலை சிறந்த கட்டுரையாகத் திகழ்கின்றது. ‘இலங்கையின் இன முரண்பாடும் சமாதானத் தீர்வு முயற்சிகளும்’ என்ற தலைப்பில் ஜி. பார்த்ததசாரதி முதல் எரிக்சொல்ஹைம் வரை பேராசிரியர் சிவராஜா அவர்கள் எழுதி ‘பிரவாதம்’ என்ற ஆய்வுச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை,  இலங்கையின் சமாதான முயற்சிகளை ஆர்வத்தோடு அவதானித்த ஒரு அரசியல் ஆய்வாளரின் சிறந்த வெளிப்பாடாக கருதத் தக்கதாகும்.

கலை விமர்சகர்
அரசியல் அறிவியல் துறையில் தனது ஆழ்ந்த ஞானத்தை நூல்கள் வாயிலாகவும்,  கட்டுரைகள் வாயிலாகவும் எழுதி வெளியிட்ட அம்பலவாணர் சிவராஜா ஈழத்து இலக்கிய உலகில் மகத்துவம் மிக்க விமர்சகராகத் திகழ்கின்றார் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

மலையக இலக்கியம்
ஈழத்து இலக்கியத்தில் குறிப்பாக மலையக இலக்கிய வளர்ச்சியில் பேராசிரியர் சிவராஜா மிகுந்த அக்கறை காட்டியிருந்தார். ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் மத்தியில் எழுந்து வரும் இலக்கிய வெளிப்பாடுகளில் அம்பலவலாணர் சிவராஜா பேரார்வம் கொண்டிருக்கிறார்.‘மலையகத் தமிழரும் அரசியல் வரலாறும் இலக்கியங்களும்’ என்னும் தலைப்பில் அம்பலவாணர் சிவராஜா எழுதிய ஆய்வேடு  மலையகத் தமிழர் இலக்கியங்களில் எழுந்த பிரச்சனைகளில் தொழிற்சங்கங்களின் எழுச்சி – சமூகப் பொருளாதாரப் பிரச்னைகள் என்பன எவ்வாறு செயற்பட்டுள்ளன
என்பதனை அறிவு சார்ந்த நிலையிலும்,  உணர்வு பூர்வமான அணுகு முறையோடும் வெளிப்படுத்தி உள்ளார்.

குரும்பசிட்டி பாரம்பரியம்
‘குரும்பசிட்டியின் இலக்கிய பாரம்பரியம்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த ஆய்வேடு அமரர் த. இராசரத்தினம் அவர்களின் நினைவு நாள் உரையாக அம்பலவாணர் சிவராஜா அவர்கள் வழங்கிய சொற்பொழிவின் நூல் ஆக்கமாகும். குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நிழலில் உருவாகிய எழுத்தாளர்களைப் பற்றிய மிகச் சிறந்த வரலாற்றுக் குறிப்பேடாக அது அமைகின்றது. கலாயோகி ஆனந்த குமாரசாமியின் ஆராய்ச்சி முயற்சிகள் குறித்து பேராசிரியர் சிவராஜா அக்கறை செலுத்திக் கொண்டிருந்ததுடன, அவரது இலங்கை வாசத்தின் போது ஆற்றிய பணிகளையும் கட்டுரையாக
வெளியிட்டிருக்கிறார்.

அகஸ்தியருடன் ஈடுபாடு
ஆழ்ந்த அரசியல் அறிவும்,  நுணுகிய இலக்கியப் புலமையும் கொண்ட அம்பலவாணர் சிவராஜாவுடன் நான் பழக நேர்ந்த நாட்களை என் வாழ்வின் இனிய பாக்கியமாகக் கருதுகிறேன். எனது தந்தை அகஸ்தியரின் மனதிற்கினிய அம்பலவாணர் சிவராஜாவின் மறைவு தனிப்பட்ட எனது குடும்பத்தின் சோகம் நிறைந்த நிகழ்வாகும். பாரீசில் இருக்கும் என் அன்பு அன்னை ‘நவமணி’ கண்ணீர் மல்க பேராசிரியர் சிவராஜாவின் மறைவை தொலைபேசியில் எனக்கு அறிவித்த போதுஇ செய்தி கேட்ட என் கண்கள் குளமாகின. ஆஜானுபாகுவான தோற்றமும்இ நேசம் நிறைந்த பார்வையும், கனிவு நிறைந்த இதயமும்இ விசால மனமும் கொண்ட அந்தப் பெருமகனுடன் எனது தந்தையும்இ நானும் உலவிய நாட்களை கண்ணீரோடு நினைவு
கூருகின்றேன்.

இலக்கிய விமர்சகர்களின் இருட்டடிப்பை மேவி அயராது எழுதி வந்த என் தந்தையின் அர்ப்பணிப்பு மிகுந்த எழுத்திலே பேராசிரியர் சிவராஜாவுக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. என் தந்தையின் முற்போக்கான எழுத்துக்களைப் பாராட்டி அவர் ஆற்றிய உரைகளும்இ எழதிய கட்டுரைகளும் என் துயர நினைவில் வந்து மோதுகின்றன. கண்டியில் இலக்கிய செயற்பாட்டுத் தளத்தில் என் தந்தை செயற்பட்டிருந்த பணியின்மீது பேராசிரியர் சிவராஜா
மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். எனது தந்தையும் நானும் அவரோடு கண்டியில் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்ரமணியம் இல்லத்திற்கு சென்ற நாட்களை துயரத்தோடு நினைவு கூருகின்றேன்.

பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் எனது தந்தையின் இலக்கியப் பணிகள் குறித்து ஆற்றிய உரைகளும் எழுதிய கட்டுரைகளும் தனக்கு மிகுந்த உத்வேகத்தைத் தந்ததாக என் தந்தை என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார். பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா,  கலாநிதி துரை மனோகரன், கலாநிதி க. அருணாசலம், கலாநிதி செ.யோகராஜா ஆகியோர் மீது எனது தந்தை மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார்.

எனது தந்தையின் ஆக்கங்கள் குறித்து பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ‘காலத்திற்கேற்ற கடமையாளன்’ என்ற தலைப்பில்… ‘தனது காலப் பகுதியின் சமூக,  பொருளாதார,  சித்தாந்த,  அரசியல் பிரச்சனைகளை அவற்றிற்குரிய பகைப்புலன்களை மையமாகக் கொண்டு மிக நுணுக்கமாக வெற்றிகண்ட அகஸ்தியர்,  களத்திற்கேற்ப உரைநடையைக் கையாள்வதிலும்,  பாத்திரங்களின் இயல்பான பேச்சு மொழியை ஒலி வடிவில் யதார்த்தமாக வார்ப்பதிலும்,  குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு கிராமங்களிலும் நிலவுகின்ற பேச்சு வழக்கினை யதார்த்தங்களினூடாக வெளிக் கொணர்வதிலும் வல்லவர். அத போன்று மலையகப் பிரதேசங்களில் வழங்கி வரும் பேச்சுவழக்கினைக் கையாள்வதிலும் தனித்திறமை கொண்டவர்’ ( பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா)

1998 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கண்டி இரா.அ. இராமன் அவர்களின் முயற்சியோடு ‘கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்’ கண்டி சிட்டி மிஷன் மண்டபத்தில் ஏற்பாடு செய்த எனது தந்தை அகஸ்தியரின் நினைவுக் கருத்தரங்கின்போது, பேராசிரியர் எஸ் தில்லைநாதன்இ ‘கங்குலன்’ கே. கோவிந்தராஜ்,  வீரகேசரி ஆசிரியர் வி.தேவராஜ்,  எம்.புன்னியாமீன்இ கலாநிதி துரை மனோகரன், சிறீ.ல.மு.காங்கிரஸ் கண்டி நகர அமைப்பாளர் மொஹமத் நஸார் ஹாஜியார்இ சேகரன் சோமபாலன் ஆகியோர் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜாவை அந்த நினைவு விழாவில் கௌரவித்து
வரவேற்றதை இங்கு நினைவு கூருகின்றேன்.

சகோதரியின் அஞ்சலி
நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் தத்தமது துறைகளுக்கு அப்பால் பரந்து விரிந்த பார்வையைக் கொண்டிருப்பது அபூர்வமானதாகும்.  முற்கற்பிதங்கள் எதுவுமின்றி இலக்கியத்தை நேர்மையோடு நுணுகிய முறையில்,  பேராசிரியர் சிவராஜா சிருஷ்டி எழுத்தாளர்களுக்கு மிகப் பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அந்த இலக்கியப் பெருமகனுக்கு கடல் கடந்து வாழும் ஓர் அன்பு சகோதரியின் கண்ணீர் அஞ்சலி இதுவாகும்.

navajothybaylon@hotmail.co.uk

© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner