புதிய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேட
வேண்டும்!
லண்டன் 'ஹரோ' தமிழ்ப்பாடசாலையில் ஜோர்ஜ் அழகையா
நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்)
BBC
தொலைக்காட்சியில் ஜோர்ஜ் அழகையா என்ற ஆங்கிலச் செய்தியாளர் தோன்றும்போது அவர் ஓர்
இலங்கையர் என்ற ஆர்வத்தோடும் பெருமையோடும் செய்திகளை அக்கறையோடு நான்
பார்ப்பதுண்டு. இலங்கைத் தமிழர் ஒருவர் BBC தொலைக்காட்சியில் செய்தி
அறிவிப்பாளராகப் பணியாற்றுவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்வாகும். ஜோர்ஜ் அழகையா
சிறந்த ஆங்கிலச் செய்தி அறிவிப்பாளர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும்
மனிதாபிமானியும்கூட என்பதை, A Passage to Africa என்ற அவரது ஆங்கில நூல் மிக அழகாக
வெளிப்படுத்துகிறது. ஜோர்ஜ் அழகையாவின் இந்த நூல் குறித்த விமர்சனத்தை, விமர்சகர்
மு. நித்தியானந்தன் தீபம் தொலைக் காட்சியில் ஐந்து வாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு,
தமிழ் நேயர்களுக்கு மிக மிகப் பரிட்சயமான ஒரு நூலாக ஆக்கியிருந்தார். ஜோர்ஜ்
அழகையாவை அறிவிப்பாளராக மாத்திரமே அறிந்திருந்த எங்களுக்கு, இந்த விமர்சனம் முக்கிய
எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தியது.
ஜோர்ஜ் அழகையா மூன்று கண்டங்களுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். இலங்கையின்
மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட
ஜோர்ஜ் அழகையா, ஐந்து வயதில் தனது தந்தையாரின் உத்தியோகத்தை அடுத்து, (Ghana)
கானாவிற்குப் புலம் பெயர்ந்தார். அங்கிருந்து, இங்கிலாந்திற்கு வந்து, ஹம்ப்சயர்
(Hampshire) சென். ஜோன்ஸ் கல்லூரியில் அரசியலைப் பிரதான பாடமாகப் பயின்று, டர்ஹாம்
(Durham) பல்கலைக்கழகப்; பட்டத்தினைப் பெற்றார். பின்னர் South Magazine எனும்
மூன்றாம் உலக சஞ்சிகையில் ஏழு ஆண்டு காலம் பணியாற்றியபின், 1989ஆம் ஆண்டு BBCயில்
அறிவிப்பாளராக இணைந்தார்.
ருவண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகள்இ தெற்கு ஈராக்கில் அராபியர்களின் நிலை,
ஆப்கானிஸ்தான், லைபீரியா, சியாரா
லியோன், சோமாலியா ஆகிய நாடுகளின் உள்நாட்டு யுத்தங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆளுமையோடு
கூடிய பதிவுகளை அவர்
மேற்கொண்டார்.
நெல்சன் மண்டேலாஇ டெஸ்மொண்ட் ருட்டு (Desmond Tutu), ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர்
கோபி அனான் ஆகிய ஆபிரிக்கப்
பெருந்தலைவர்களின் பேட்டிகளை மேற்கொண்ட தனித்துவம் கொண்டவர். பிறப்பால் ஆசியக்
கண்டத்தையும், வளர்ப்பால் ஆபிரிக்கக் கண்டத்தையும், இன்று வாழும் தேசத்தால்
ஐரோப்பாவையும் வரித்துக்கொண்டிருக்கும் ஜோர்ஜ் அழகையா, மூன்று கண்டங்களின்;
சொந்தக்காரராகத் திகழ்கின்றார்.
குர்திஷ்
இன மக்களின் உரிமை மீறலுக்கான சிறந்த ஆவணத்தை ஜோர்ஜ் அழகையா மேற்கொண்டிருக்கிறார்.
சர்வதேசரீதியாக மிகச்
சிறந்த செய்தித் தொகுப்பாளராக, சர்வதேச ஊடகங்களால் பல்வேறு விருதுகளை ஜோர்ஜ் அழகையா
பெற்றிருக்கிறார். A Passage to Africa
என்ற நூலில் ஆபிரிக்கக் கண்டத்தின் துயர்நிறைந்த அவலங்களை அவர் எவ்வாறு
விபரிக்கிறார் என்பதை, அந்நூல் பற்றிய விமர்சகர் நித்தியானந்தனின் தொலைக்காட்சி
விமர்சனங்கள் நெஞ்சை நெகிழ வைக்கும் முறையில் எடுத்துக்காட்டியிருந்தன. இந்த நூலை
எழுதும்போது ஜோர்ஜ் அழகையா, “நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இன்றைய
ஆபிரிக்காவைப் பற்றி நீங்கள் எந்த அளவு தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்
மறந்துவிட வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்;. தன்னை ஓர் ஆபிரிக்கக்
குழந்தையாகக் கருதுகின்ற ஜோர்ஜ் அழகைiயாவின் பரந்துபட்ட மனிதாபிமான உணர்வை இந்த
நூலில் நாம் சந்திக்கிறோம். ‘ஆபிரிக்கக் கண்டம் என்பது காட்டுமிராண்டிப்
பழங்குடிகளின் கண்டமென்றும், பேராசை கொண்ட, ஈவிரக்கமற்ற அரசியல் தலைவர்களின்
தேசமென்றும் சித்தரிக்கப்படுவதை’ நான் நிராகிரிக்கின்றேன் என்று ஜோர்ஜ் அழகையா
கூறுகின்றார். சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம், அந்த நாட்டின் கடுமையான பஞ்சம்இ
ருவண்டாவின் கொடூரமான இனப்படுகொலைகள்இ லைபீரியா சியாரா லியோன் ஆகிய நாடுகளின்
உள்நாட்டு யுத்தங்கள் சயரேயின் மொபுட்டு, சீக்கோவின் வீழ்ச்சி, மொசாம்பிக்கின்
பாரதூரமான வெள்ள அனர்த்தங்கள் ஆகியவை பற்றி மனிதாபிமானத்தோடு கூடிய விவரங்கள்
அனைத்தையும், நெஞ்சை உறையப் பண்ணும் விதத்தில் ஜோர்ஜ் அழகையா இந்த நூலில்
சித்தரித்துள்ளார்.
ருவண்டாவின் அகதி முகாம்களில் இடம்பெற்ற கொடூரங்களையும் ஒவ்வொரு நாளும்
கொலராவாலும்இ பட்டினியாலும் மூவாயிரம்
குற்று அகதிகள் இறந்துகொண்டிருப்பதையும் 1994ஆம் ஆண்டு ஜோர்ஜ் அழகையா BBCயில்
எடுத்துக்காட்டியபோது உலகம் அதிர்ந்தது.
ருவண்டாவில் சர்வதேசரீதியான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதற்கு ஜோர்ஜ்
அழகையாவின் இந்த அறிக்கைகள் அடிப்படையாக அமைந்தன.
சோமாலியாவின் கோரமான நிலைமைகளையும், பின்னர் இலங்கையில் சுனாமி அனர்த்தத்தின்போதும்
ஜோர்ஜ் அழகையா அங்குள்ள நிலைமைகளைச் சித்தரித்த விதத்தை யாரும் மறப்பதற்கில்லை.
ஜோர்ஜ் அழகையாவின் நூல் பற்றிய அறிமுகத்தின் பின்னர் அவர் மீதான அபிமானமும்
மரியாதையும் என்னில் ஆழமாகவே வேரூன்றி
இருந்தன. இந்த நிலையில் ஹரோ தமிழ்ப்; பாடசாலையின் 21ஆவது ஆண்டின்; தமிழ்விழாவில்
பிரதம அதிதியாக ஜோர்ஜ் அழகையா
கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி நெஞ்சில் தேனாக இனித்தது. சென்ற யூலை மாதம்
13ஆம் திகதி மேற்படி விழாவில்
கலந்துகொள்ள வாட்டர்ஸ்மீற் மண்டபத்துள் ஜோர்ஜ் அழகையா நுழைந்தபோது, மண்டபத்தை
நிறைத்திருந்த மக்கள் அனைவரும்
எழுந்துநின்று கரகோஷம் செய்து, அவரை வரவேற்ற காட்சி இன்றும் என் மனதில்
நிழலாடுகின்றது. தனது மனைவி பிரான்சிஸ் ரொபதன்,
மருமகள் மற்றும் குடும்பத்தாருடன் வருகை தந்த ஜோர்ஜ் அழகையாவுக்குத் தமிழ் மக்கள்
வழங்கிய மிகப்பெரும் பாராட்டாக அது அமைந்தது. இந்த விழாவின்போது, A Passage to
Africa பற்றி மு.நித்தியானந்தன் ஆற்றிய தொலைக்காட்சி விமர்சனங்கள் அடங்கிய
ஒளிப்பேழையையும், முக்கியமான ஈழத்து அரசியல் நூல்கள் சிலவற்றையும் ஜோர்ஜ்
அழகையாவுக்கு எஸ். பி. ஜோகரட்னம்
வழங்கியபோது, தீபம் தொலைக்காட்சி என்ற தமிழ்த் தொலைக்காட்சி லண்டனில் இயங்குவது
பற்றித் தனக்குத் தெரியாதென்று ஜோர்ஜ்
அழகையா கூறியிருந்தார். இந்த விழாவில் அவர் ஆற்றிய சிறப்புரை மிகுந்த பொருள்
பொதிந்ததாக அமைந்திருந்தது. தன்னால் தமிழில்
பேச முடியவில்லை என்பதற்காக கவலை தெரிவித்த ஜோர்ஜ் அழகையா, எள்ளே ஆயினும் ஏழாய்ப்
பிரித்துச் சாப்பிட வேண்டும் என்ற பழமொழியைத் தனது பாட்டனார் கூறியதை நினைவு
கூர்ந்தார்.
தனது காலத்தில் தான் ஆங்கில வாழ்க்கைக்கு துரிதமாகச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
இருந்தது என்று கூறிய ஜோர்ஜ் அழகையா,
இன்றுள்ள ஈழத் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்;ந்துகொண்டு தங்களின் மொழிகளையும் அதன்
வேரினையும் தேடும் நாட்டமும் கொண்ட தமிழர்களாக இருக்கிறார்கள் என்றும்
தெரிவித்தார்.
நாங்கள் ஒரு தனித்த சமூகம் என்ற உணர்வு அவர்கள் மத்தியில் நன்கு வேரூன்றி வருகிறது.
நமது தனித்துவத்தைப் பேணும்
அதேவேளை, பிரித்தானிய சமூகத்தினரிடம் நாம் எத்தகைய பங்களிப்பை வழங்க வேண்டும்
என்பது நம் முன்னுள்ள சவாலாகும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீண்ட யுத்தத்தை நோக்கும்போது, யுத்தம்
தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருப்பது
சாத்தியமில்லை என்றும், இத்தகைய யுத்தங்களில் யாரும் வென்றதாக வரலாறு இல்லை
என்றும், இந்த யுத்தம் எவ்வளவு துரிதமாக முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றதோ
அந்தளவுக்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார். அதற்கேற்ப முடிந்தவற்றைச்
செய்வோமென்றும் அவர் தெரிவித்தார்;.
ஜோர்ஜ் அழகையா பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்த ஹரோ தமிழ் பாடசாலையின் கடந்த 21
ஆண்டு கால தமிழ் சேவையில்
பங்காற்றிய ஆசிரியர்கள் அத்துடன் பாடசாலையின் வளர்ச்சிக்காக பணிபுரிந்த வை.
பாலசுந்தரம், எஸ். பி. ஜோகரட்னம், நிமால்
டொமினிக், ளு.ரமணன், புனிதா பேரின்பராஜா, ஆ.குமாரநாயகம், மற்றும் மறைமுகமானவர்கள்;
பலரும்; பாராட்டுக்குரியவர்கள்;.
ஜோர்ஜ் அழகையாவின் பேச்சில் நமது இளைய தலைமுறையினர் தங்கள் வேர்களைத் தேடவேண்டும்
என்பதனையும், தமிழ் மொழி
கற்பதனை வலியுறித்தியதையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் கவனத்தில்
கொள்ள வேண்டும் என்று கூறி
நிற்கின்றேன்.
navajothybaylon@hotmail.co.uk |