இந்திய மாணவர்கள்
    
     - 
    நடேசன் - 
    
 இந்தியாவின் வெளிவிவகார மந்திரி எஸ் எம் கிருஸ்ணா அவுஸ்திரேலியாவுக்கு 
    வந்திருந்த போது மெல்பனுக்கும் வருகை தந்தார். இவரை சந்திப்பதற்கு இந்திய 
    உதவித் தூதராலயத்திலிருந்து எனக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அவரது 
    வருகையின் நோக்கம் இந்திய மாணவர்கள் மெல்பன், சிட்னி நகரங்களில் தாக்கப்படுவது 
    தொடர்பாக ஆராய்வதற்காகும்.

    இந்த விடயம் முக்கிய செய்தியாக இந்திய மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களிலும் 
    வெளியான பின்பு தற்போது இந்திய, அவுஸ்திரேலிய அரசாங்கங்களுக்கு முக்கியமான 
    இருதரப்பு விடயமாகி விட்டது. இந்திய வெளிவிவகார மந்திரியின் வருகையிலிருந்து 
    மட்டுமல்ல, அவரது பேச்சில் தொனித்த மொழியிலும்; இந்திய மாணவர்கள் விடயத்தை 
    எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர் எடுத்துள்ளார் என்பதையும் என்னால் 
    புரிந்து கொள்ளமுடிந்தது.
    
    இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் பாரிய மத்தியதர வகுப்பை 
    உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு துறைகளில் கல்வி பயில விரும்பும் 
    மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு உகந்த அளவில் இந்திய உயர் கல்விக்கூடங்கள் 
    பெருகவில்லை. முக்கியமாக பெருநகரங்களில் இருந்த தரமான பல்கலைக்கழகங்களில் 
    படிப்பதற்கு ஆசைப்படுபவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பயிற்சி நெறியை 
    பயில்வதற்கு
    
    இடம் கிடைக்காததால் வெளிநாடுகளுக்கு சென்;று கொண்டிருந்தார்கள். அவர்கள் 
    சிலகாலத்துக்கு முன்பு தொகை பெரிய அளவில் இருக்கவில்லை. இப்படிப்பட்ட 
    மாணவர்கள்தான் சில வருடங்களுக்கு முன்பாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களாக 
    இருந்தார்கள். மேலும் இவர்களில் பெரும்பாலோர் திரும்பவும் இந்தியா 
    திரும்புபவர்களாகவும் இருந்தார்கள்.
    
    தற்போது மாணவர்களாக வருபவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு இதை ஓரு 
    வாய்ப்பாக பயன்படுத்துகிறவர்கள் தான் அதிகமானவர்கள்; இவர்களில் 
    பெரும்பாலானவர்கள் பியூட்டி பாலர் ஸ்கூல்(தலைமயிர் வெட்டுதல்) 
    கலினறிஸ்கூல்(சமையலை கற்பது) ஹோட்டி கல்சர் ஸ்கூல் (விவசாயம்) இப்படியாக பல 
    தொழில்துறைகளை கற்கிறார்கள். இப்படியான மாணவர்களை ஏமாற்றுவதற்கென்றே பல 
    முகவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களுக்கு கல்வியை முடிக்க முதலே அவுஸ்திரேலிய 
    வதிவுரிமை கிடைக்கும் என உறுதியளித்துவிடுவார்கள். இவர்களை சுற்றி குடிவரவு 
    முகவர்கள் ரொட்டித்துண்டுக்காக அலையும் காகங்கள்போன்று அலைவார்கள்.
    
    அவுஸ்திரேலிய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களின் வரவால் வரும் பொருளாதாரத்தை 
    கருத்தில் கொண்டு தங்களின் ஒரு திறந்த பொருளாதாரத்தின் பகுதியாக இதனை 
    அனுமதிக்கறது
    
    முன்னைய பிரதமர் ஜோன் ஹவாட் தலைமையிலான லிபரல் அரசாங்கம் அவுஸ்திரேலிய 
    பல்கலைக்கழகங்களின் மானியத்தொகையை குறைத்ததால், அதனால் துண்டு விழும் தொகையை 
    நிரப்புவதற்கு வெளிநாட்டு மாணவர்களில் தங்கி உள்ளது. இதேவேளையில் வரும் 
    வெளிநாட்டு மாணவர்களின் இடவசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எந்த அக்கறையும் 
    இல்லாது காசு கறக்கும் பால் மாடுகளாக நினைக்கிறார்கள் 
    
    ஆஸ்திரேலியாவின் பெரிய நகரங்களில்; தொழில் பயிற்சி கல்லூரிகளை மிக எளிதாக 
    பலரால் திறக்க முடிகிறது. இவர்கள் முகவர்களின் மூலம் இந்தியாவில் இருந்து 
    மாணவர்களை அனுதிப்பார்கள். இப்படியான சில கல்லூரிகள் விரைவில் 
    மூடப்பட்டிருப்பதையும் அறிவேன். இந்த கல்லூரிகளை இந்தியர்கள் சிலரும் திறந்து 
    பின் மூடியுள்ளார்கள்.
    
    பொருளாதார ரீதியில் 15 பில்லியன் அவுஸ்திரேலிய அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் 
    இந்த வெளிநாட்டு மாணவர்களின் வருமானம் அவுஸ்திரேலிய வருவாயில் மூன்றாவது 
    இடத்தில் இருக்கிறது. இதேவேளையில் இந்த வெளிநாட்டு மாணவர்களில் 22 வீதமானவர்கள் 
    சீன நாட்டிலும் 17 வீதமானவர்கள் இந்தியாவிலும் இருந்து வருகிறார்கள். இந்த 
    புள்ளி; விவரங்களிலிருந்து; இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு எவ்வளவு 
    முக்கியம் என்பது புரியும்
    
    இப்படியான பல பன்முகமான பின்னணியில் அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான 
    மெல்பன,; சிட்ணனியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குல் நடக்கிறது. தற்போது இந்த 
    விடயம் வெளிவிவகார மந்திரியின் வருகை மூலம் ஒரு கிளைமாக்ஸ் நிலைக்கு 
    வந்திருந்தாலும் கடந்த ஐந்து வருடங்களாக இது நடக்கிறது. இந்த விடயத்தை பற்றி 
    உதயமும் மற்றும் இந்திய சமூகப்பத்திரிகைகளும் பல முறை சுட்டிக்காட்டியுள்ளன.
    
    தற்பொழுது மெல்பனில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் 
    படிக்கிறார்கள். இவர்கள் எலலாரும் படிப்பது மெல்பன் உள்நகரப்பகுதியில். 
    அத்துடன் பெரும்பாலோர் வசிப்பது மெல்பனில் வசதிகுறைந்த மக்களும் விளிம்பு 
    நிலைமக்களும் வாழும் புறநகர்ப்பகுதிகளிலாகும். இங்கு மட்டுமே குறைந்த வாடகையில் 
    வசிப்பதற்கு இடம்கிடைக்கும். இப் பகுதிகள் போதைவஸ்துகள், திருட்டு;கள் என 
    சமூகக்குறைபாடுகள் நிலவும்; இடங்களாகும்;
    
    1988 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படீக்கும்போது என்னுடன் 
    இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் படித்தாலும் எனது நண்பர்களாக 
    இருந்தவர்கள் அவுஸ்திரேலிய மற்றும் சீன கொரிய மாணவரகள்;தான். இவர்களுடன்தான் 
    நான் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அத்தோடு இவர்களது நட்பு பல விடயங்களை 
    எனக்கு புரியவைத்தது. பல நாட்டவர்களோடு பழகும் அனுபவம் அதிலும்; மாணவ 
    பருவத்தில் கிட்டும் அந்த அனுபவம்; அதிர்ஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இதே 
    போன்று இலங்கையில் பேராதனையில் தமிழ் சிங்கள இஸ்லாமிய மாணவர்களுடன் கல்விகற்க 
    கிடைத்த வாய்ப்பும் என்னை பண்படுத்தியது.
    
     தற்போது 
    அவுஸ்திரேலியாவில் கல்விகற்கும் இந்திய மாணவர்கள் சில வகுப்புகளில் மூன்றில் 
    ஒரு வீதம் உள்ளார்கள் ;.மெல்பனில் பகல் வேளைகளில் பார்க்கும் போது இந்திய 
    மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரம் போல் தெரியும். இந்த மாணவர்கள் 
    இந்தியாவில் இருந்தது போல் இங்கும் இந்திய நண்பர்களையே வைத்திருக்கலாம். 
    சிலவேளையில் பால்ய பருவத்து நண்பர்களே இங்கு ஒன்றாக வந்து படிக்கலாம். இந்தியக் 
    கடைகளில் உணவு அருந்தலாம். போலிவூட் சினிமாவே பார்த்துக் கொண்டு இந்திய 
    பாட்டுகளை கேட்டுககொண்டு தங்கள் மொழியையே உரத்தகுரலில் இரயில் பஸ் மற்றும் 
    ட்ராம்களில் பேசியபடி இங்கு பயணிக்க முடிகிறது. அதாவது அவுஸ்திரேலிய காற்றையும் 
    சுவாசித்து மெல்பன் நீரையும் குடித்தாலும் அவுஸ்திரேலிய நாகரீகம் சிறிதும் 
    தோலில் ஒட்டாமல் தற்போது அவர்களால் இங்கு வாழமுடியும். ஆனால் இவர்கள் வசிக்கும் 
    இடங்களுக்கு வந்தவுடன் அவுஸ்த்திரேலிய நாட்டின் நிதர்சனமான நிலைமை இவர்களைப் 
    பாதிக்கிறது எல்லா பாரிய நகரங்களுக்கும் பொதுவான விளிம்பு நிலையில வாழும் 
    அவுஸ்திரேலிய இளைஞர்கள் இந்த குற்ற செயல்களில ;ஈடுபடுகிறார்கள். முக்கியமாக 
    சந்தர்ப்பத்தைப் பார்த்து குற்றம் செய்பவர்களுக்கு இந்திய மாணவர்கள் 
    இரையாகிறார்கள் சந்தர்ப்பத்தைப்பார்த்து குற்றம் செய்பவர்களைத்தடுப்பது 
    மிகக்கடினமானது. அதாவது இவர்கள் தொழில் முறையில் குற்றவாளிகள் இல்லை. 
    குழந்தையின் கையில் இருக்கும் இரையை எளிதாக கொத்திக் கொள்ளும அண்டங்காக்கையை 
    போன்ற தன்மை உடையவர்கள். இங்கேயும் இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு 
    வருமுன்பு இந்தகலாச்சாரத்தில் வாழக்கூடிய புரிதலை பெறவில்லை. இங்கு 
    வந்தபின்பும் அந்த புரிதலை பெருக்கிக் கொள்ளவில்லை.

    இப்படியான தாக்குதலில் இனவிரோதம் இல்லை என நான் முற்றாக கூறவரவில்லை. 
    அதேவேளையில் பல இந்திய ஊடகங்கள் இதை இனவிரோத தாக்குதலாக மட்டுமே காட்டி 
    அவுஸ்திரேலியாவை இனவிரோதப் போக்குள்ள நாடாக காட்டுதல் நமக்கு பிரச்சினையை 
    புரிந்துகொள்வதற்கு வழிவகுக்காது. இந்திய மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 
    பல அரபு மற்றும் ஆபிரிக்கர்கள் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள். அதேசமயம், 
    நிரந்தரமாக இங்கு பெருமளவில் வாழும் இலங்கை இ;ந்தியர்கள் மீது எதுவித 
    தாக்குதலும் இடம் பெறுவதி;ல்லை. 
    
    மேற்கு நாடுகளில் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய இரண்டு நாடுகளும் பல்லின 
    கலாச்சாரத்தை தங்கள் உத்தியேக கலாச்சார கொள்கையாக கடைப்பிடிக்கின்றன. கடந்த 
    இருபத்தியிரண்டு வருடங்களில் இந்த நாட்டில் இந்திய ரெஸ்ரூரண்டில் வேலை துவங்கி 
    பின்பு பக்ரரி வேலை செய்து அதன்பின்பு பல்கலைக்கழக மாணவனாகத்; தொடர்ந்து, 
    பல்கலைக்கழகத்திலும்; வேலை செய்து இறுதியாக சொந்தமாக தொழில்செய்யும் ஒரு அந்நிய 
    குடிமகானகத்தான் நீண்ட பாதையில் நடந்து வந்திருக்கிறேன். ஆனால் எந்த ஒரு 
    கட்டத்திலும் இன விரோதம் எனக்குத் தடை போடவில்லை. இதற்காக இங்கு மக்கள் 
    மனங்களில் இனவிரோதம் இல்லை என்று கூறவரவில்லை. மனித மனங்களில் எவ்வளவு அறியாமை 
    உள்ளதோ அந்தளவுக்கு இன சமய சாதி போன்ற வேற்றுமை உணர்வுகள் குடியிருக்கும். 
    இவற்றை எந்தச் சட்டத்தால் அகற்ற முடியும்? ஏந்த நாடு விதிவிலக்கானது?
    
    இந்திய மந்திரி; கிருஸ்ணா இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலில் இனக்குரோதம் 
    இல்லை என்று உறுதியாகச் சொன்னதும்; இப்படியான தாக்குதல்களுக்கு எதிராக 
    சகலநடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் 
    வாக்குறுதி அளித்திருப்பதும் நன்மை பயக்கும். இதில் இந்திய அமைச்சர் கிருஸ்ணா 
    இந்த மாணவர்களின் மனக்குறைகளை நேரடியாகக் கேட்டு அறிந்ததும் நடவடிக்கை 
    எடுப்பதாக சொன்னதும்; இந்தியாவிலிருந்து இங்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு பயந்து 
    கொண்டு இருக்கும் தாய் தந்தையருக்கு மனதில் ஆறுதல் அளிக்கும்.;. சில செயல்கள் 
    சிம்போலிக்காக இருந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை இரண்டு பிள்ளைகளுக்கு 
    தந்தையான என்னால் உணர முடிகிறது.