இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
தமிழகத்தில் பத்திரிகையாளர் முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தும், அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தீக்குளித்து மரணம்!

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்இலங்கை அரசின் குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தை..ஈழத்தின் வன்னிப் பகுதியில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடரும் போரைக் கண்டித்தும், இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் ஈழ மக்களுக்கெதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும், தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் முத்துக்குமார் சென்னையிலுள்ள இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை 1983 இனக்கலவரக் காலகட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் தீக்குளித்து மடிந்த சாஜகான் என்னும் இளஞரை நினைவு கூர வைக்கிறது. இவரது மரணம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களை சோகத்திலாழ்த்தியிருக்கிறது. ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் முக்கியமானதோர் இடத்தைத் தன் அழிவின் மூலம் பதித்துச் சென்றுள்ள முத்துக்குமார் தனது இறுதி அறிக்கை மூலம் இன்றைய ஈழத்தமிழர்களின் நிலைமையையிட்டு ஏற்பட்ட மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவரது மரணமாவது இந்திய, தமிழக அரசுகளின் செயற்பாடுகளை ஒவ்வொரு நாளும் அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் அமைதியைக் கொண்டுவரும் வகையில் தீவிரப்படுத்த வைக்குமாவென்று பார்ப்போம். இலங்கையில் நடைபெறும் யுத்தச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அமைதிக்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் வகையிலான அரசியற் தீர்வு பற்றிய செயற்பாடுகளை முன்னெடுக்க முத்துக்குமாரின் தியாகம் உதவட்டும். இவர் பற்றிய எமக்குக் கிடைத்த மடல்களையும் , ஈழத்தமிழர்கள் பற்றிய பத்திரிகைச் செய்திகளையும் பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.

மீள்பிரசுரம்: புதுவை கோ.சுகுமாரன் வலைப்பதிவிலிருந்து..
ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30. தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.

தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!

நன்றி: http://kosukumaran.blogspot.com/2009/01/blog-post_29.html

கீற்று இணைய்த்தளத்திலிருந்து...
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...: முத்துக்குமார்

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

"உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குங்கள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆள்பலம், பணபலம், அதிகார வெறியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம் என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்."..உள்ளே

மேலும் படிக்க, http://www.keetru.com/literature/essays/muthukumar.php

கவிதை: வசீகரன் (நோர்வே)
தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
தொப்புள் கொடியில்
உயிர்க் கொடி
ஏற்றிய தோழா
ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா!

இணையத்திலே உன் அழகிய
முகம் பார்த்தோம்
இதயத்திலே கருகிப் போனது
எங்கள் மனம்!

எவ்வளவு இளகிய
மனம் கொண்டவன் நீ
எங்களுக்காய்...
ஏன் கருகிப் போனாய்?

தூத்துக்குடியில்
முத்துக் குளித்தவன் நீ
சாஸ்திரி பவனில்
ஏனையா தீக்குளித்தாய்?

குடம் குடமாய்
நாங்கள் அழுது வடித்த
எங்கள் கண்ணீரில்
உன் முகமே பூக்கிறது!

எம் தமிழ்மீது
நீ கொண்ட பற்றுக்கு
எல்லையே இல்லை என்பதை
இப்படியா உணர்த்துவது!

தமிழினத் தலைவர்கள்
என்று சொல்லத் துடிக்கும்
எங்கள் தலைவர்களின்
நாக்கை அறுத்தாய் நீ!

கையாலாகாத பரம்பரை
என நினைத்தாயோ
பூவாய் இருந்தவன் நீ
புயலாய் ஏன் வெடித்தாய்?

முப்பது ஆண்டுகள்
நாம் சுமந்த வலிகள்
போதாத ஐயா
ஏனையா எரிந்து போனாய்?

பெரு வலியோடு
உனைப் பெற்ற தாயை
எந்த முகத்தோடு போய்
நாங்கள் இனிப் பார்ப்போம்

எட்டாத தூரத்தில்
வாழ்ந்தாலும்
வாகை மரம் போல
வாடிப் போய் நிற்கிறோம்

மண்ணெணையை
உன் மீது ஊற்றி
தமிழ்மண்ணைக் காக்க
ஏனையா உனைக் கொடுத்தாய்?

தமிழீழம் வாழவே
எங்களை வாழ்த்தி
உன் வாழ்வை
ஏனையா நீ அழித்தாய்?

மரணத்திடம் மண்டியிடாமல்
மண் எங்கும் ஓடுகிறோம்
மரணத்தை தேடி நீ
ஏனையா ஓடினாய்?

தமிழீழ வரலாற்றில்
முத்தான உன் பெயர்
இனி எழுத்தாணிகளின்
முதல் வரியாகட்டும்!

உன் தியாகத்தின் முன்
நாங்கள் வெறும் சருகுகளே!
தமிழகத்தின் தாய்மடியில்
கண்ணீர் அஞ்சலி செய்கிறோம்!

வசீகரன் நோர்வே
29.01.09

vaseeharankavithai@gmail.com

வக்தா தொலைக்காட்சியிலிருந்து...
முத்துக்குமாருக்கு வீரவணக்கம்! - வீடியோ காட்சிகள்...

http://www.vakthaa.tv/play.php?vid=2891
http://www.vakthaa.tv/muthukumar.htm

Admin
Vakthaa TV
admin@vaktkhaa.tv
www.vakthaa.tv
Mail mailing list
Mail@vakthaa.tv
http://lists.vakthaa.tv/mailman/listinfo/mail
zsenthil@gmail.com

தினக்குரல்.காம் தளத்திலிருந்து..
"வன்னியில் பெரும் மனிதாபிமான நெருக்கடி'
29 - January - 2009] வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்;

விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கில் இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன.

இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் மூண்டுள்ள கடும் சண்டைகளையடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். வசதிகள் குறைந்த ஆளணி பற்றாக்குறையுள்ள வைத்திய நிலையங்கள் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினால் நிறைந்து வழிகின்றன.

மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளும் அம்புலன்ஸ்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் பணிகள் அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைப்பட்டிருக்கின்றன.

பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாகவுள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை இலட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் எல்லாம் ஓயும் போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது.

மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன், அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு கேட்டுக் கொள்கின்றது. முடிந்த அளவு காலத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும் அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.

வன்னிப் பிரதேசத்தினுள்ள மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்ற படி மனிதாபிமான பணியாளர்களும் அவர்களது இடங்களும் ஷெல் வீச்சுகள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியிலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது.

அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: http://www.thinakkural.com/news/2009/1/29/importantnews_page66813.htm

3 ஆயிரம் படையினரை கொச்சியிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு

இந்தியாவின் துரோகத்தை மூடி மறைப்பதே முகர்ஜியின் பயணம் சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகத்தை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு; * வைகோ குற்றச்சாட்டு; இந்தியாவின் துரோகத்தை மூடி மறைப்பதே முகர்ஜியின் பயணம் சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகத்தை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு;

கடந்த ஒரு வாரமாக முல்லைத்தீவுப் பகுதியில் சிங்கள இராணுவம் நடத்தும் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். திங்கட்கிழமை கூட பாதுகாப்பான பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருந்த 500 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய அரசு கொடுத்துள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தித்தான் இலங்கை இராணுவம் இத்தகைய படுகொலையை நடத்தி வருகிறது.

இலங்கை விமானப் படைக்கு ராடார்களைக் கொடுத்தது. சிங்கள விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்திய விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கு அனுப்பி வைத்தது. பலாலி விமானத் தளத்தையே இந்திய அரசின் செலவில் பழுதுபார்த்துக் கொடுத்தது. ஏராளமான இராணுவத் தளபாடங்களை இலங்கைத் தரைப்படைக்கு வழங்கியது என இந்திய அரசின் தமிழினத் துரோகம் தொடர்கிறது.

துரோகத்தின் உச்சக் கட்டமாக இலங்கை இராணுவத் தாக்குதலுக்கு உதவ இந்திய இராணுவத் தாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சித் துறைமுகத்திலிருந்து அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

இது உண்மையாக இருக்கக் கூடாது என உள்ளம் பதைக்கிறது. எனினும் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ஏராளமான இராணுவத் தாங்கிகள் ஈரோடு வழியாக கேரளாவுக்கு அனுப்பப்பட்ட படங்கள் செய்தித் தாள்களில் வெளியாகியுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அரசு செய்துவந்துள்ள காரியங்களை எண்ணும் போது இதையும் மத்திய அரசு செய்யக்கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.

7 கோடி தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தமிழ் இனத்துக்குச் செய்யும் துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.

இந்த துரோகங்களை மறைக்கவே வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3 மாதமாகப் போர்நிறுத்தம் பற்றி ஒருவார்த்தை கூட மத்திய அரசு கூறவில்லை. அது எங்கள் வேலையில்லை எனக் கூறிய பிரணாப் முகர்ஜி, இப்போது மட்டும் இலங்கை செல்லும் மர்மம் என்ன?

உலகெங்கும் உள்ள தமிழர்கள் பதறிய நெஞ்சத்தோடு உள்ள நிலையில், பிரணாப் முகர்ஜி திடீரென விடுதலைப் புலிகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது ஏன்?

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை 900 தடவைக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்திய போது இலங்கையைக் கண்டித்து இந்தியா ஒருவார்த்தையாவது கூறியதுண்டா?

எனவே, தமிழக மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி ஏதோ திடீர் ஞானோதயம் ஏற்பட்டதைப் போல பிரணாப் முகர்ஜி இலங்கை சென்றுள்ளார் எனக் கூறியுள்ளார் வைகோ.

நன்றி: http://www.thinakkural.com/news/2009/1/29/importantnews_page66806.htm

From BBC Website...
Wounded S Lanka civilians rescued

Wounded S Lanka civilians rescued Aid agencies in Sri Lanka say they have evacuated hundreds of civilians wounded in fighting between troops and Tamil Tiger rebels. The UN and the Red Cross (ICRC) say they have escorted the injured to a hospital in the town of Vavuniya. The Sri Lankan military says it is continuing its advance into rebel-held territory in the north-west. A BBC correspondent in the north says artillery fire can still be heard from the front line. International agencies say hundreds of civilians have been killed in the fighting and a quarter of a million more are trapped. They say further convoys must be permitted. Sri Lanka's defence secretary, Gotabaya Rajapakse, told the BBC that the numbers are exaggerated, there are no civilian casualties and aid agencies are panicking...Read More

© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner