பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நூல் விம்ர்சனம! |
க்ரியாவின் தமிழ் அகராதியில் இலங்கைத் தமிழ்
- எம்.கே.முருகானந்தன் -
'எனக்கு தமிழ் அகராதி பார்க்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. எனக்குப் பொருள் தெரியாத
தமிழ் சொல் எதுவும் அகராதிகளில் இருப்பதாகத்
தெரியவில்லை' எனப் பெருமை அடித்துக் கொண்டவர் ஒரு இலக்கிய நண்பர். க்ரியாவின்
தற்காலத் தமிழ் அகராதியின் புதிய பதிப்பு வந்துள்ள
தகவலை அவரிடம் சொன்னபோது அவரது எதிர்வினை இதுவாக இருந்தது. உண்மைதான். அவர்
எழுத்தாளர் மட்டுமல்ல. தமிழ் அறிஞரும் கூட. பழம்
தமிழில் மாத்திரமல்ல நவீன தமிழ் இலக்கியத்துடனும் பரிச்சயம் கொண்டவர். இருந்தபோதும்
அவரது கருத்துடன் என்னால் ஒத்துப் போக
முடியவில்லை. காரணங்கள் இரண்டு.
முதலாவது காரணம் இன்றைய தமிழ்ச் சூழலில் அதுவும் உலகளாவிய ரீதியல் மூலை
முடுக்கெங்கும் தமிழ் பேசப்படுகையில், எங்கெங்கோ
இருந்தெல்லாம் வட்டார மொழிகளில் நூல்களும், இணையத்தில் பதிவுகளும் தினமும் வெளி
வந்து கொண்டிருக்கையில், நவீன விஞ்ஞானத்
தகவல்கள் புதிது புதிதாக பிரசுரமாகையில், அறிவியல் சுயமொழியில்
கற்பிக்கப்பபடுகையில் இன்றைய தமிழ் சொற்கள் யாவற்றையும் எந்த ஒரு
தனிமனிதரும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.
உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம். அண்மையில் இலங்கைப் பெண்மணி ஒருத்தி தனது வலைப்
பதிவுச் சமையல் குறிப்பில் ரம்பை இலை பற்றிக்
குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டு அன்பர் ஒருவர் 'அது என்ன சினிமா நடிகையின்
பெயரா?' என பகிடியாகக் கேட்டிருந்தார். உண்மையில் அவருக்கு
அச்சொல்லுக்குரிய பொருள் தெரிந்திருக்கவில்லை என்பது வெளிப்படை. தமிழ் நாட்டில்
இதன் பெயர் பாண்டா இலையாம். என எழுதியதும் புரிந்து
கொண்டார்.
சரி பகிடி என்ற சொல் இலங்கைக்கு அப்பால் எத்தனை தமிழர்களுக்கு புரியும். இதேபோல
எங்களுக்குப் புரியாத தமிழ்நாட்டின் பல்வேறு வட்டாரச்
சொற்களின் பொருளை அறியவும் உதவுகிறது என்பது வெளிப்படை.
இரண்டாவது காரணம் வெங்கட் சாமிநாதன் இந் நூல் பற்றி தனது விமர்சனத்தில் கூறுவது.
அக்கருத்துடன் நானும் முழுமையாக ஒத்துப் போகிறேன்.
அவர் சொல்கிறார் 'சாதாரணமாக, ஒரு அகராதியை நாம் கையிலெடுப்பது, தேவை எழும்போது, ஒரு
சொல்லின் பொருள் அறிய. ஆனால் என் அளவில்
தற்காலத் தமிழ் அகராதியின் இரு பதிப்புகளும் விரிக்கும் பக்கங்களில் ஆழ்வது ஒரு
மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. மொழியின் சொற்களின்
பயணத்தை மக்களின் பண்பாட்டு வெளிப்பாடாகவும் பாரக்க முடிகிறது. ஓவ்வொரு சொல்லும்
எங்கெங்கோ நம்மை இட்டுச் செல்கிறது'
உண்மைதான் இது வெறும் அகராதி அல்ல. சொல்லின் பொருளை மட்டும் கொடுப்பதுடன் அதன் பணி
நிறைவடைந்து விடவில்லை. பெயர்ச்
சொல்லாக, வினைச்சொல்லாக, துணைவினையாக, சொல்லின் பொருள் என்ன? அதன் இலக்கண வகை என்ன
எனவும் பதிவு செய்கிறது. அத்துடன்
நின்று விடாது பொருத்தமான ஒரு வாக்கியம் மூலம் அதன் பொருளை உணர்த்துவதும்
செய்யப்பட்டுள்ளது. இதனால் பன்முகம் கொண்ட மனித
வாழ்வின் வாழ்வியல் கோலங்கள் ஆங்காங்கே தரிசனமாகிறது. இலக்கியப் படைப்பிற்குள்
மூழ்குவது போன்ற மகிழ்வுடன் நடைபோட முடிகிறது
இதுவும் காரணமாகிறது.
அத்தோடு இலங்கையர்கள் என்ற முறையில் நாம் மகிழ்வதற்கான இன்னொரு சமாசாரமும் இவ்
அகராதியில் உள்ளது. இலங்கைப் பொதுத் தமிழில்
வழங்கும் 1700 சொற்கள் இதில் அடங்கியுள்ளன. 21,000 சொற்களை அடக்கும் இந்நூலில்
இலங்கைத் தமிழுக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம்
ஒதுக்கியிருப்பது நிச்சயம் பெருமை அடையக் கூடியதே.
இதற்குக் காரணமான திரு.து.குலசிங்கத்தின் பங்களிப்பு பற்றி க்ரியா ராமகிருஸ்ணன்
இவ்வாறு கூறுகிறார்.
'...பருத்தித்துறையைச் சேர்ந்த இ.து.குலசிங்கம் பெரும் அதிஷ்டம் போல் எங்களுக்குக்
கிடைத்தார். க்ரியாக்கும் குலசிங்கத்திற்கும் சுமார் 30 ஆண்டுகள்
உறவு உண்டு. சொந்த அலுவலை முன்னிட்டு சென்னைக்கு வந்திருந்த அவர் எங்கள் தேவையைப்
புரிந்து கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் சுமார்
இரண்டு மாதங்கள் கிட்டத்தட்ட தினமும் காலையிலிருந்து மாலைவரை எங்களுடன் இருந்து
இலங்கைத் தமிழுக்குள் எங்களை அழைத்துச் சென்றார்.
அவருடைய ஈடுபாடும் அரப்பணிப்பும் இந்த 2ம் பதிப்புக்குக் கிடைத்த பெரும்பேறு.
புத்தகங்களுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டிருக்கும் குலசிங்கம் நாங்கள் தொகுத்து
வைத்திருந்ததற்கு அப்பால், மொழியில் அவருக்கு இருக்கும்
இயல்பான பிடிப்பின் காரணமாக, எங்களுக்குத் தரவுகளும் சொற்களும் நிறையக்
கிடைப்பதற்கு உதவி செய்தார். இந்தப் பதிப்பில் இலங்கைத் தமிழ்
பிரகாசமாக ஒளிர்கிறது என்றால் அதற்குக் குலசிங்கம்தான் காரணம்.'
அவர் கூற்று மிகையானதல்ல. நவீன தமிழ் இலக்கியத்துடன் குலசிங்கத்திற்கு உள்ள ஈடுபாடு
பலருக்கும் தெரியும். தேடித்தேடி நூல் வாங்குவதும்,
வாசித்து ரசிப்பதும், மற்றவர்களை வாசிக்கத் தூண்டுவதும் அவரோடு பிறந்த இயல்புகள்.
ராமகிருஸ்ணன் மேலும் கூறுகிறார். 'அவருடைய தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு வேலை
செய்யும்போது எழுந்த மொழியியல் சார்ந்த
சந்தேகங்களுக்கு எங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து உதவியிருப்பவர் ஞ.ஜெயசீலன்.
சென்னையில் ஆராச்சி மாணவராக வந்திருக்கும்
ஜெயசீலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் கற்பிக்கிறார்.
'நிச்சயம் நாம் பெருமைப்படலாம். சென்ற நூற்றாண்டில் தமிழ் அகராதித் தொகுப்பில்
இலங்கையர்கள் பலரும் பங்காற்றிய பின்னணியில் இன்று
இவர்கள் க்ரியாவிற்கு கொடுத்த ஒத்துழைப்பு பெறுமதிமிக்கதே.
தமிழ் அகராதியின் வரலாறு சிங்கார வேலு முதலியாரின் 'அபிதான சிந்தாமணி' என 1910 ல்
ஆரம்பிக்கிறது. 1936ல் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட
சொற்களைக் கொண்ட Tamil Lexican வெளிவந்ததாக வெங்கட் சாமிநாதன் குறிப்பிடுகிறார்.
இலங்கையைப் பொறுத்த வரையில் 'யாழ்ப்பாண அகராதி' 1842 ல் சந்திரசேகர பண்டிதரால்
தொகுக்கப்பட்டது. தம்பசிட்டியைச் சேர்ந்த சதாவதானி
நா.கதிரவேற்பிள்ளையால் தொகுக்கப்பட்ட 'தமிழ் பேரகராதி' 1899ல் வெளியாகி, மீண்டும்
1911ல் விரிவுபடுத்தி வெளியிடப்பட்டது. கு.
கதிரவேற்பிள்ளையால் தொகுக்கப்ட்ட 'தமிழ்ச் சொல் அகராதி' 1910ல் வெளியாகி, மீண்டும்
1912, 1923 ல் மீள் பதிப்புகளைக் கண்டது. இவை தவிர
'தமிழ் ஆங்கில அகராதி- கையடக்கப் பிரதி' (Tamil English Dictionary- Pocket
Edition) 1900லும், 1909ல் '20ம் நூற்றாண்டு தமிழ் அகராதியும்
வெளிவந்ததாகத் தெரிகிறது.
க்ரியாவின் இலங்கைத் தமிழ் எவ்வாறு எடுத்துக் காட்டப்படுகிறது.
ஒரு உதாரணம்:
அங்கப்பிரதட்டை பெ, (இலங்) அங்கப்பிரதட்சிணம்:going round the sanctum of a temple
by rolling along the passage around (in fulfilment of a vow) முருகன்
கோயிலில் அப்பா அங்கப்பிரதட்டை செய்தார்.
'பெ' என்பது பெயர்சொல்லையும், 'இலங்' என்பது இலங்கைச் சொல் என்பதையும் குறிக்கும்.
'முருகன் .. .' என ஆரம்பிக்கும் வசனம், எடுத்துக் காட்டும்
வாக்கியமாகும். இத்தகைய வாக்கியங்கள் மூலம் இலங்கைச் சொற்களின் கருத்தை
மாத்திரமின்றி, அது எவ்வாறு இங்கு பயன்படுத்தப்படுகிறது என்ற
பண்பாட்டு அம்சத்தையும் குலசிங்கம் எடுத்துக் காட்டுகிறார்.
மற்றொரு உதாரணம்:
தொதல் பெ. (இலங்) அரிசி மாவோடு தேங்காய்ப்பால், சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்
பருப்பு ஆகியவற்றைக் கலந்து கிண்டித் தயாரிக்கும் இனிப்புப்
பண்டம்.
இச்சொல்லுக்கு அவர் தரும் எடுத்துக் காட்டும் வாக்கியம்- வருடப் பிறப்புக்கு
நாங்கள் தொதல் கிண்டினோம். ஃ என் பிறந்த நாளுக்கு அம்மா தொதல்
கிண்டித் தந்தாள்.
இவை பயன்படும் வாக்கியங்கள் மாத்திரமல்ல, வாழ்வை நயந்து நோக்கவும் வைக்கின்றன.
பேராசிரியர்கள் அண்ணாமலை, தாமோதரன் தலைமையில் க்ரியா எஸ்.இராமகிருஸ்ணனை ஆசிரியராகக்
கொண்டு பெரியதொரு அறிஞர் குழவின்
ஆதரவுடன் பல ஆண்டு முயற்சியின் பலனாகவே இந்த 2ம் பதிப்பு வெளிவந்துள்ளது. 1985ல்
ஆரம்பித்த பணி 1992ல் முதல் பதிப்பாகப் பிறந்தது.
மிகுந்த வரவேற்பு பெற்ற அகராதி அது. மொழியி;ன் வளர்ச்சியையும் காலத்தின தேவையையும்
கருத்தில் கொணடு இரண்டாம் பதிப்பு பற்றிய சிந்தனை
மலர்ந்தது.
மீண்டும் நீண்ட ஒன்பது ஆண்டு கால ஓயாத பணியாக 1999ல் ஆரம்பித்ததன் பலன், 2008ல்
இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. இதற்கு அவர்கள் பட்ட
கஸ்டங்கள். எடுத்த முயற்சிகள், சுமைகள் யாவற்றையும் முன்னுரையைப் படிக்கும்போது உணர
முடிகிறது. அதற்கான பலன் தமிழ் மக்களுக்கு
பரிசாகக் கிடைத்துள்ளது. எம்மவர்களின் பங்களிப்பு அதிலுள்ளமை இரட்டிப்பு மகிழ்வைத்
தருகிறது.
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களிடையே இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. 'சிங்கப்பூர்
அரசு குறிப்பிடத்தக்க வகையில் க்ரியா அகராதியை
பரவலாக்குவதற்கு உதவியிருக்கிறது. சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்காக தனியே ஓர்
பதிப்பை வடிவமைக்கச் சொல்லி மாணவர்களிடையே
அகராதியின் பயன்பாட்டை விரிவுபடுத்தி இருக்கிறது' என ஆசிரியர் கூற்றிலிருந்து
அறிகிறோம். இங்கும் பள்ளி மாணவர்களிடையே அதற்குப் பெரு
வரவேற்பு இருப்பதை அறிவோம்.
அகராதி என்ற மொழிக்கருவி என்றைக்கும் முடிந்த முற்றான நிலையை அடைவதில்லை. ஏனென்றால்
மொழி தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகிக்
கொண்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் சமூக, அரசியல், விஞ்ஞான, தொழில்நுட்பத்
துறைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை
மொழியின் பயன்பாட்டில் நெகிழ்ச்சியையும் பரவலாக்கலையும் செய்துள்ளன. இணையம்,
மின்னஞ்சல் போன்றவற்றில் பல்லாயிரம் சொற்கள்
வந்துள்ளன. சில பழைய சொற்களுக்கு புதிய பொருள்கள் சேர்ந்துள்ளன. எனவே காலத்திற்குக்
காலம் புதிய பதிப்புகள் தேவையே.
1956ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் உரைநடையில் எழுதப்பட்டவையே இவ் அகராதிக்கான
தரவுமூலங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக
சொல்லப்பட்டிருக்கிறது.
செய்தித்தாள்கள், வாரமாத இதழ்கள், இணையம், வானொலி, தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள்,
சிறுகதை, நாவல் முதலிய படைப்பிலக்கியங்கள்,
வேளான்மை, அறிவியல் போன்ற துறை நூல்களும், கல்லூரி பள்ளிகளுக்கான பாட நூல்களும் பிற
உரைநடை நூல்களும் சொல் தொகுப்புக்கு வரவு
மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. துண்டறிக்கைகள். அழைப்பிதழ்கள் ஆகியவையும்
பயன்படுத்தப்பட்டனவாம். பல இலட்சம் சொற்கள்
உள்வாங்கப்பட்டன. எத்தகைய அசுர முயற்சி.
75 இலட்சம் சொல்வங்கியிலிருந்து பெற்ற தகவல்களை பிரித்துப், பகுத்து பயன்மிகுந்த
அகராதியாக வெளிக்கொணர்வதற்கு கணனியும், அதற்கான
மென்பொருளும் பயன்படுத்தப்பட்டு இருப்பதை உணர்கிறோம். கணனி இன்று அகராதி சாத்தியம்
இல்லையென்றே கூறலாம்.
இது ஒரு தமிழ் அகராதி என்றாலும் தமிழை இரண்டாவது மொழியாகப் பயில்வோருக்கும்
உதவும்பொருட்டு ஆங்கிலத்திலும் பொருள் தரப்பட்டிருப்பது
குறிப்பிடத் தக்கது.
'தற்காலத் தமிழில் சொற்கள் பற்றி தேவையான செய்திகளை இந்த அகராதி தர முயல்கிறது.
இந்தச் செய்திகள் தமிழை துல்லியமாக பயன்படுத்த
உதவும்' எனத் தொகுப்பாளர்கள் கருதுவதை பாவனையாளர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.
தொடர்புகளுக்கு
:CreA,
H-18 Flat No.3,
South Avenue,
Thiruvanmiyur,
Chennai-41
India.
இந்திய விலை ரூபா 495.
எம்.கே.முருகானந்தன்
MKM
Dr.M.K.Muruganandan
Family Physician
visit my blogs
http://hainallama@blogspot.com
http://www.geotamil.com/pathivukal/health.html
http://suvaithacinema.blogspot.com/
kathirmuruga@hotmail.com
|
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|