இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2009 இதழ் 115  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கலை!

தினக்குரல்.காம்
ரசிகர்களின் நெஞ்சைவிட்டகலாத பொப் இசைச் சக்கரவர்த்தி

வாஷிங்டன்: "கிங் ஒப் பொப்' என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வாஷிங்டன்: "கிங் ஒப் பொப்' என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வாஷிங்டன்: "கிங் ஒப் பொப்' என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறிய வயதிலேயே பொப் உலகின் சிகரத்தைத் தொட்ட மைக்கேல் ஜாக்சன் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி அமெரிக்காவின் சிறிய மாநிலங்களில் ஒன்றான இன்டியானாவிலுள்ள கேரி நகரில் ஜோசப் வால்டர் கேத்ரின் எஸ்தர் என்ற ஏழைத் தம்பதியின் 7 ஆவது மகனாக பிறந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு 4 ஆண் சகோதரர்களும் 4 பெண் சகோதரிகளும் உண்டு. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த போதும் இளவயதிலேயே இசையின் மீதும் நடத்தின் மீதும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் ஜாக்சன். ஜாக்சன் சகோதரர்கள் 5 பேரும் சேர்ந்து ஜாக்சன் 5 என்ற பெயரில் பொப் இசைக்குழுவைத் தொடங்கி நடத்தினார்கள். ஒரு பொப் பாடல் போட்டியில் ஜாக்சன் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போது மைக்கேல் ஜாக்சனுக்கு 6 வயது.

1969 ஆம் ஆண்டு தனது 11 ஆவது வயதில் மைக்கேல் ஜாக்சன் தனி பொப் இசைக்குழுவைத் தொடங்கினார். 14 ஆவது வயதிலேயே (1972 இல்) தன் முதல் பொப் பாடல் அல்பத்தை வெளியிட்டார். அதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது.

இசைக்கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும் பாட்டமும் பொப் இசைப்பிரியர்களின் மனதைக் கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்இசைக்கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும் பாட்டமும் பொப் இசைப்பிரியர்களின் மனதைக் கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.  இதுதவிர, அவரது பொப் இசை பாடல் அல்பங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரபரப்பாக விற்கப்பட்டன. ஒப் தி வோல் (1979), த்ரில்லர் (1982), பேடு (1987), டேஞ்சரஸ் (1991) ஆகிய 4 பொப் இசைப்பாடல் அல்பங்களும் விற்பனை உலகில் சாதனை படைத்தன.
1972 ஆம் ஆண்டு "பென்' என்னும் பெயரில் தனது தனி அல்பத்தை வெளியிட்ட மைக்கேல் ஜாக்சன், 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான "தி விஸ்' ஸில் நடித்தார்.

பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979 இல் ஒப் தி வோல் மற்றும் 1982 இல் த்ரில்லர் ஆகிய ஜாக்சனின் இசை அல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஒப் தி வோல் அல்பம் தான் டிஸ்கோ இசையை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்றைக்கு உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.

த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்சன். உலகமே இனம், மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.  த்ரில்லர் அல்பம் மட்டுமே 41 மில்லியன் டொலர்களுக்கு விற்றுத்தீர்ந்தன. இன்றும் பொப் இசையில் அதிகம் விற்பனையாகும் அல்பங்களில் ஒன்றாகவே த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாகக் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்சனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியேயில்லாமல் வெள்ளையர்கள் ஜாக்சனைக் கொண்டாடும் அளவிற்கு இசையைத் தனது வசப்படுத்திக்கொண்டிருந்தார் ஜாக்சன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992 ஆம் ஆண்டு ஹீல்த வேர்ல்ட் எனும் அறக்கட்டளையைத் தொடங்கினார் மைக்கேல் ஜாக்சன். இந்த அமைப்பின் மூலம் உடலால், மனதால், நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்வதாக அறிவித்தார்.

ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் நெவர்லாண்ட் என்னும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இருந்து சிறுவர்களுடன் பொழுதைக் கழித்தார். இங்குதான் பிரச்சினைகள் எழுந்தன. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. வழக்குகள் தொடுக்கப்பட்டன. நீதிமன்றத்திற்கு வெளியே கொடுக்கல் வாங்கல்களும் நடந்தன. இந்தச் சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்சனால் மீண்டும் ஒரு இசை அல்பத்தைத் தர முடியாமல் போனது. ஆனாலும் , பொப் உலக மன்னனாகவே கடைசி வரை அவர் பார்க்கப்பட்டார்.

1994 இல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்துகொண்டு தன்மீதான சிறுவர் பாலியல் தொந்தரவு புகார்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார். ஆனால், இந்தத் திருமணமும் இரு ஆண்டுகள் தான் நீடித்தது. லிசா மேரியை விவாகரத்துச் செய்த கையோடு 1996 இல் டெபி ரோவை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரு குழந்தைகள் பிறந்தன. ஆனால், 1999 ஆம் ஆண்டு வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது. பின்னர் வேறொரு பெண் மூலம் 3 ஆவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மைக்கல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும் ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கல் ஜாக்சன்2 ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

2005 ஆம் ஆண்டு அனைத்துப் பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் மைக்கேல் ஜாக்சன்.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி முதல் லண்டன் மற்றும் பிரிட்டனில் குறிப்பிட்ட நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லொஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்துவந்தது. இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது இமேஜை திரும்பப் பெற முடியும், புதிய இசை அல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

"இறுதித் திரை' என்னும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.

இசைக்கச்சேரி மேடைகளில் அவரது ஆட்டமும் பாட்டமும் பொப் இசைப்பிரியர்களின் மனதைக் கொள்ளையடித்தது. அவரது கச்சேரிகளுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்ஜாக்சன் உடல்நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர், தன் உடல் முழுவதையுமே தொடர் கொஸ்மெடிக் சர்ஜரி மூலம் சிவப்பாக மாற்றிக்கொண்டார். முகத்தில் மட்டும் பலமுறை கொஸ்மெடிக் சிகிச்சை நடந்துள்ளது. இதனால், அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உருமாறத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த கொஸ்மெடிக் சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோயை வரவழைத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சி வழங்குபவர் என்ற பிரிவில் இவர் உலகில் ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார். 13 கிராமி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இது உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இவரது அல்பங்கள் பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

நன்றி: http://www.thinakkural.com/


 
aibanner