'மக்கள் திலகம்' எம்ஜிஆர்!
 மக்கள் 
              திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் 
              என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். 
              அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் 
              துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 
              எம்ஜீஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் 
              உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல். 
              அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் 
              வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே  வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது 
              சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, 
              உற்சாகத்தினைக் கொடுக்கின்றன. கூத்தாடியென்றார்கள். 
              மலையாளியென்றார்கள் . ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் 
              சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய 
              வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு 
              வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் 
              குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் 
              கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் 
              ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த 
              பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் 
              இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன. வாழ்வில் அனைத்துச் சவால்களையும் 
              உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். 
              இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக 
              இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த 
              நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் 
              பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.

              இளமையில் முறையான கல்வி கற்க முடியாத நிலை, வறுமை ஆகியவற்றின் 
              பாதிப்பு அவர் மனதை எப்போதுமே வாட்டி வந்தது. முதலமைச்சராக வந்ததும் 
              இதன் காரணமாகவே சத்துணவுத்திட்டம் மற்றும் பல்வேறு மாணவர் 
              நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இவற்றை அவர் கொண்டு 
              வந்தபொழுது பலர் அவை தமிழ்நாட்டின் திறைசேரியினைக் காலியாக்கி 
              விடுமென்று குரல்கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் 
              அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றினார். இலட்சக்கணக்கான மாணவர்கள் 
              பாடசாலை செல்வதை ஊக்கி உற்சாகப்படுத்தின அத்திட்டங்கள். 
               இறந்தும் தன் 
              சொத்துக்களை குருடான, செவிடான மாணவ
              மணிகளுக்கு உதவும்பொருட்டு வழிவகைகள் செய்தவரிவர். இன்றும் அவரது 
              திட்டங்களின் பயன்களை இலட்சக்கணக்கான தமிழகக் குழந்தைகள் அனுபவித்து 
              வருகின்றார்கள். உலகத் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் இவரைப் போல் 
              கொள்ளை கொண்ட ஒருவர் அண்மைக்காலத்தில் பிறந்ததில்லையென்று நிச்சயம் 
              துணிந்து கூறலாம். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 
              எம்ஜீஆருக்குத் தனியிடமுண்டு. அவரது நினைவு நாள் டிசம்பர் 24. அவரைப் 
              பற்றிய விக்கிபீடியா கட்டுரையில் அவரது வாழ்வினை வெளிப்படுத்தும் 
              பல்வேறு புகைப்படங்களுள்ளன. அவரது ஞாபகார்த்தமாகப் பதிவுகள் 
              வாசகர்களுக்கு அக்கட்டுரையின் இணைப்பினைத் தருகின்றோமிங்கு...உள்ளே.

              அதோ அந்தப் பறவை போல வாழ 
              வேண்டும்....
The
              Man from Marathur 
              and Malai Nadu 
              - 
              
              Sachi Sri Kantha, 1999 
               Eighty 
              two years ago, a baby boy was born to a migrant couple, Gopala 
              Menon and Sathyabama, in a ‘line-room’ of a tea estate in Kandy. 
              Later, this baby boy would grow into a leader with the name 
              Maruthur Gopalan Ramachandran (popularly adored by Tamils all over 
              the world with the acronym MGR).Maruthur was the ancestral village 
              in the Kerala state from where his parents hailed from. Many have 
              ridiculed the uncertainty of his birth date, though MGR had used 
              17 January 1917 in his personal documents. One should sympathise 
              with MGR on this matter because he was born to an Indian immigrant 
              family in a tea plantation in Ceylon....Read 
              More

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒருவ்ரலாறு.....உள்ளே
எம்ஜிஆர் திரைப்படக் காட்சிகள் சில.....
              
 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991