மீள்பிரசுரம்: வீரகேசரி.காம்.
மல்லிகை 43 ஆவது ஆண்டு மலர்!
ஐம்பதாவது
ஆண்டை எதிர்நோக்கி நடைபோடும் ஒரு சிறு சஞ்சிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு மலர்
வெளியிடுவது மிகச் சிரமமான பணி. அதையே சாதனைக்குரிய அøடயாளமிட்டு மல்லிகையின் 43
ஆவது ஆண்டு மலரை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர்
டொமினிக் ஜீவா. நவீன முகங்கள் கொண்டதாய் ரமணியின் அட்டைப் படம் அசத்துகிறது.
அட்டையைத் திறக்கும்போது முதல் பக்கமே நமது இலங்கையின் இளந்தலை முறை வீரர்
முத்தையா முரளிதரன் பற்றிய செய்தியை ஆண்டு மலர் பதிவு செய்திருக்கிறது. [ மலரினை
வாசிக்க... உள்ளே ]
""கருவைச் சுமப்பவள் பெண்; கருத்துக்களைச் சுமந்து திரிபவன் கலைஞன்'' என்ற
மகுடத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா சில கருத்துக்களை ஓர்மத்துடன்
சொல்லியிருக்கிறார்.
""ஈழநாடு'' இதழின் புனை கதைப் பங்களிப்பு'' என்ற ஆய்வுக் கட்டுரை செங்கை ஆழியான்
க. குணராசாவால் தீட்டப்பட்டுள்ளது. ஈழநாடு பத்திரிகையின் ஆரம்பம் அது குறித்த
செயல்பாடுகள், அதில் பிரசுரமான புனைகதைகள், அவற்றை எழுதிய படைப்பாளிகள் பற்றிய
தகவல்கள் மற்றும் பல தலைமுறை எழுத்தாளர்களின் சிறு கதைப் படைப்புகள் பற்றியதான
ஒரு ஆய்வுக் கோவையாக ஆண்டு மலர் தாங்கியிருப்பது நாளைய வரலாற்றுச் சிறப்பு. இதில்
பெண் எழுத்தாளர்கள் பற்றிய விபரங்களும் அடங்கியுள்ளன.
இம்முறை மல்லிகை ஆண்டு மலர் சிறுகதைச் சிறப்பிதழாக தன்னை முகம் காட்டுகிறது.
கிட்டத்தட்ட 16 சிறுகதைகள் பிரசுரம் கண்டுள்ளன. திக்வல்லை ஸப்வான்
எழுதியிருக்கும் சிங்கள மொழி பெயர்ப்புக் கதையான ""மகவைக்கென்றொரு உலகம்''
மற்றும் அவஸ்தை தெணியான், ""வதை'' மு. பஷீர், "புவனேஸ்வரி த. கலாமணி, பட்டமரமும்
பகற் குரு பாலம் ஆனந்தி அவர்கள் இருவர் க. சட்டநாதன், மனிதம் இன்னும்
மரித்திடவில்லை' ச. முருகானந்தன், ""இராஜநாயகம் மாஸ்டரின் இலட்சியம்'' ப.
ஆப்டீன், ""பேய்க் கூத்தும், ஆமணக் கந்தடியும்' பரன், "" தொடரும் காத்திருப்பு''
எஸ். சாந்தகுமாரி, "கனவு மெய்ப்பட'' வசந்தி தயாபரன்'', செல்லாயிக்கிழவிபிரமிளா
பிரதீபன் சின்னமனிசர்மா.பாலசிங்கம், உதவாக்கரை' உடுவை தில்லை நடராஜா
வராமற்போனதும். வராமற் போனவர்களும்'' சுதாராஜ், ""இறுமாப்பு'' தெளிவத்தை ஜோசப்
ஆகிய சிறுகதைகள் மலரை அலங்கரித்திருக்கின்றன.
இவற்றுள் மு. பஷீரின் "வதை' மட்டக்குளி, காக்கைதீவில் இடம்பெற்ற வல்லுறவுச்
சம்பவமொன்றை உணர்த்துகின்றது.
"வதை' சுவைக்கத்தக்க கதையாய் இருக்கிறது. ச. முருகானந்தனின் "மனிதம் இன்னும்
மரித்துவிடவில்லை'' என்ற சிறுகதை வடக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்
இளைஞனையும், சிங்கள யுவதியையும் பற்றிப் பேசுகிறது. இரு இனமும் இந்தப் போரால்
பாதிக்கப்படுவதையே இக்கதை வெளிப்படுத்துகிறது. "தொடரும் காத்திருப்பு' காணாமல்
போன மகனை இழந்து பரிதவிக்கும் ஒரு தாயின் அவலத்தை தொட்டுக் காட்டுகிறது.
வசந்தி தயாபரன் எழுதிய ""கனவு மெய்ப்பட...'' மேலைத்தேய தேசத்தில் வாழ்ந்தாலும்
நமது கலாசாரம் மாறக்கூடாது என்பதை உணர்த்துகிறது. "பீலிக்கரை' தந்த பிரமிளா இதில்
"செல்லாயிக் கிழவியைப் படைத்திருக்கிறார். ஆயிரம் உறவுகள் இருப்பினும் அயல் வீடு
நமக்கு அவசியமான உறவுதான் என்பதைக் கூறினார். "இறுமாப்பு' வாழ்வியல்
பிரச்சினைகளைச் சொல்கிறது. தெளிவாகத் தந்திருக்கிறார் தெளிவத்தை ஜோசப். நடுத்தர
வர்க்க மனிதர்களுக்கு பஸ் பயணம் கூட ஒரு சித்திரவதைதான்.
திடீர் மின் வெட்டினால் அவஸ்தைக்குள்ளாகும் அவதிகளையும் தொட்டுத் தருகிறது இக்
கதை.
இவை தவிர பிரசுரிக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கதைகளிலும் ஏதோ ஒரு உயிர்ப்பு
இருக்கவே செய்கின்றன. தமது நடைமுறை வாழ்க்கையின் எச்சங்களாகவே இக்கதைகள் யாவும்
சொல்ல முற்படுகின்றமையை வாசித்தலில் புரிந்து கொள்ள முடிகிறது.
குருடர்களின் வெளிச்சம் கெகிராவ ஸுலைஹா தந்திருக்கும் பயனுள்ள ஆங்கில
மொழிபெயர்ப்புக் கட்டுரை மாணவர்கள் படித்தறியத்தக்க பொக்கிஷம். பிரச்சினைகள்
மீதான கண்÷ணாட்டத்தில் இலங்øகத் தமிழ் எழுத்தாளர்களின் சவால்களும் சாதனைகளும்
என்ற தலைப்பில் அந்தனி ஜீவாவின் கட்டுரையும், ஈழத்துப் பெண்ணியக் கவிதைகள்'' என்ற
மேமன் கவியினது கட்டுரையும் பெண் எழுத்துப் பற்றி பேசுகிறது.
இது தவிர கே.எஸ். சிவகுமாரனின் "திருவனந்தபுரம் அனுபவம் சிறுகட்டுரையும்
ஜெயகாந்தன் பற்றிய அந்தனி ஜீவாவின் சிறு கட்டுரை, திக்குவல்ல கமாலின் ""புத்தக
வெளியீட்டு விற்பனை பரவலாக்கம் ஒரு தமிழ் நிலைக் கனவு'' ஆகிய கட்டுரையோடு மற்றும்
சில கட்டுரைகளும் இதில் பதிவாகியிருக்கின்றன. தீவிர வாய்ப்புடைய
நேசிப்பாளர்களுக்கும் இக்கட்டுரைகள் பெரும் தீனியாகவே அமையும்.
மதிபுஸ்பா ஓவியங்களை வரைந்திருக்கிறார். சிறு கதைகளுக்குரியதாக ஓவியங்கள்
சரியாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆசிரியர் அடுத்த மலரில் கவனமெடுப்பார் என
நம்புகிறோம்.மணியின் குட்டிக் கவிதைகள், கம்பவாரிதி இ. ஜெயராஜின் சின்னச் சின்ன
கவிதைகள், "குடிகாரனை' குறை சொல்லும் எஸ். முத்துமீரானின் கவிதை மற்றும் அனார்,
நிருபா, மல்லிகா, லுணுகலை ஹஸீனா புஹார், கெகிராவ சஹானா முதலியோரின் கவிதைகளும்
மலரை அலங்கரித்துள்ளது.
நாற்பத்தி மூன்றாவது ஆண்டு மலர்
நாளைய சந்ததிக்கு ஒரு ஆவணம்.
நன்றி:
http://www.kalaikesari.com/culture/culturenews/results.asp?key_c=186
|