| ஈழத் தமிழர்களுக்காக மின்னஞ்சல், மண்ணஞ்சல் 
அனுப்புவோம்...  - ஆல்பேர்ட் (அமெரிக்கா) - 
 
  அன்பினிய 
ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ் உலகம் என்னும் மடலாடற்குழுமத்தின் சார்பில், 
ஈழத் தமிழர்கள் நலனுக்காக மின்னஞ்சல், மண்ணஞ்சல் அனுப்பும் போராட்டத்தை 
துவங்கியுள்ளோம்.முதற்கட்டமாக காங்கிரசுக்கு இதை அனுப்புகிறோம். அடுத்து திமுக, 
இந்திய எதிர்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று ஒவ்வொன்றாகச் செய்ய 
எண்ணியுள்ளோம். தமிழ் உலக மடலாடற்குழு மட்டுறுத்தர்(moderator) என்ற முறையில் இதனை 
தங்களுக்கு அனுப்புகிறோம். இதனை நீங்கள் பிரசுரித்தால் வாசகர்களும் இதில் 
பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதால் அனுப்புகிறேன். நன்றி.ஆல்பர்ட்,
 அமெரிக்கா.
 *** *** *** அன்பின் நண்பர்களே,
 வணக்கம்.
 
 முதற்கட்டமாக நண்பர்களின் பொதுமடல் மற்றும் தனி மடலில் தெரிவித்த ஆலோசனைப்படி 
முதற்கட்டமாக ஒரே மடலை 5 பேர்களுக்கு அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
 முதலில் பிரதமர் உட்பட காங்கிரசு தலைவர் திருமதி.சோனியா காந்தி மற்றும் இராணுவ 
அமைச்சர் ஏ.கே.அந்தோணி,காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலர், செயலர் உடபட 
5பேர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுவதற்கு ஏதுவாக கீழே மின்னஞ்சல் முகவரி 
தரப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி இல்லாத இருவருக்கு தொலைநகல் முகவரி உள்ளது. 
அஞ்சல் முகவரி எல்லோருக்கும் உள்ளது.
 
 எல்லோருமே மின்னஞ்சல் செய்வது எளிது; தயங்காமல் உடனே செய்யலாம்.
 
 பிரதமருக்கு மட்டும் மின்னஞ்சலும் நேரடி பார்வைக்கான பிரதமர் அலுவலக அஞ்சற் 
பெட்டியும் உள்ளது. அதில் சப்ஜெக்ட்டில் எதை உள்ளிடலாம் என்று கேட்டிருந்தனர். 
Foreign Affairs என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் பெயர்,முகவரி, 
மின்னஞ்சல் விபரத்துடன் கீழ் உள்ள செய்தியை பிரதமருக்கு அனுப்பலாம்.
 
 தொலை நகல் அனுப்ப இயலுபவர்கள் அதையும் செய்யலாம்.
 
 மண்ணஞ்சல் முகவரிக்கு அனுப்பவிரும்புவோர் ஒரு அஞ்சலட்டையில் எழுதியனுப்பினால் 
நல்லது. (இந்தியாவில் இருப்பவர்கள் அதிகம் செய்யலாம். பிற நாடுகளில் 
இருப்பவர்களும், அவரவர் நாட்டு அஞ்சலட்டையைப் பயன்படுத்தலாம்.
 
 மின்னஞ்சல் அனுப்பவேண்டிய நாள் :திங்கட்கிழமை 9/02/09
 
 மண்ணஞ்சல் (அஞ்சலட்டை) அனுப்பும் நாள் :செவ்வாய் கிழமை 10/02/09
 
 தொலைநகல் அனுப்பும் நாள் : புதன் கிழமை 11/02/09
 
 குவியட்டும், நம் கோரிக்கைகள்!
 
 உலகத் தமிழர்களின் எதிர்ப்பை காங்கிரசுக் கட்சியினர் புரிந்துகொள்ளட்டும்!
 
 ஈழத் தமிழர் நலனுக்கான நம் சிறு முயற்சியாக இது இருக்கட்டும்.
 
 அடுத்து திமுக வினருக்கு அனுப்பும் மின்னஞ்சற் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! அதற்கு 
உங்கள் நல்லாலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
 
 நட்புடன்,
 தமிழ் உலகம் சார்பில்.
 
 1) Smt. Sonia Gandhi,M.P.,
 10, Janpath,
 New Delhi - 110 011
 
 soniagandhi@sansad.nic.in
 
 2) DR. MANMOHAN SINGH,
 Prime Minister,
 7, Race Course Road, New Delhi
 manmohan@sansad.nic.in
 
 http://pmindia.gov.in/write.htm
 
 3) Rahul Gandhi, MP
 12, Tughlak Lane
 New Delhi
 Fax (R) : 23012410 & Fax (011) 23018550
 
 4) Shri A. K. Antony, MP
 9, Krishna Menon Marg
 New Delhi-110011
 Fax (R) : 23013612
 ak.antony@sansad.nic.in
 
 5) Shri Ashok Gehlot, Ex-CM
 Gen.Secratary,
 15, Gurudwara Rakab Ganj Road
 New Delhi
 Fax (R) : 23092803
 
 Dear Sir/Madam, 
 This is unacceptable to Tamils. We are hurt. We are afraid Congress enjoys TN 
Tamils' hurts.
 
 Please, Dont Aid Sinhalese War. Dont Fund Sinhalese War.
 
 This is against Tamils' feelings. We want to see our blood relations in Srilanka 
win their Nation and live peacefully.
 
 I strongly OPPOSE killing innocent tamil people in srilanka.
 
 India has the sole responsibilty to stop this genocide.
 
 TN Tamils have mourned for 18 years and paid respects to Mr.Rajiv Gandhi.
 
 No history appreciates ugly vengence and revenge! No religion preaches ugly 
vengence and revenge!
 
 No race has taken up, this many beatings of Congress party on Tamils.
 
 I implore you to act to stop the genocide in Srilanka, and to do so now.
 
 Please Stop the war - If not - Atleast dont Aid the War. We will still Vote for 
you if you do this.
 
 Thanks.
 Regards
 <Name>
 <Address>
 <email id>
 
 albertgi@gmail.com |