| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம்: விஞ்ஞானப் புனைவு |  
| அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் 
  நினைவாக..... இலங்கையில் நிரந்தர சமாதானத்தை விரும்பிய ஆதர் சி கிளார்க்!  - குரு 
  அரவிந்தன் -
 
  இலங்கையின் 
  தலைநகரான கொழும்பில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்தவரும், 
  இங்கிலாந்து சோமசெட் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான சர்வதேசப் 
  புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியும், அறிவியல் புனைகதை எழுத்தாளருமான ஆதர் சி 
  கிளார்க் தனது 90வது வயதில் (19-03-2008) இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள 
  தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். தனது இறுதிக்கிரியை மதச்சார்பற்றதாகவும், 
  தனிப்பட்ட நிகழ்வாகவும் இருக்கவேண்டும் என்பதே இவரது கடைசிவிருப்பம். 
 போலியோ நோய் காரணமாக 1995ம் ஆண்டிலிருந்து சக்கர நாற்காலியின் துணையுடன் 
  செயற்பட்டு வந்த ஆதர் சி கிளார்க் அவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு 
  அதன் காரணமாக இதயம் செயலிழந்த நிலையில் இவரது மரணம் சம்பவித்ததாக சம்பந்தப்பட்ட 
  மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
 
 
  1917 
  டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இங்கிலாந்தின் சோமசெட் பிரதேசத்தில் மைன்ஹெட் என்ற 
  ஊரில் பிறந்த ஆதர் சி கிளார்க் அவர்கள் இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது 
  பிரித்தானிய றோயல் விமானப்படைப் பிரிவில் ராடார் இயக்கும் நிபுணராகப் 
  பணிபுரிந்தார். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் கணிதம் இயற்பியல் போன்ற 
  பாடங்களைக் கற்ற இவர் பின்நாளில் முழுநேர எழுத்தாளராக மாறினார். 1956ம் ஆண்டு 
  இந்து சமுத்திரத் தீவான இலங்கையில் குடியேறினார். இவர் 1948ல் எழுதிய ‘த 
  சென்ரினல்’ என்ற புனைகதையை ‘2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி’ என்ற பெயரில் இயக்குணர் 
  ஸ்ரான்லி குப்ரிக் திரைப்படமாக்கிய போது, அதன் மூலம் இவர் மிகவும் 
  பிரபலமடைந்தார். இதைத் தொடர்ந்து இவரது கதைகளை மையமாக வைத்து ‘2010: ஒடிசி 
  இரண்டு’, ‘ரென்டிஸ்வோஸ் வித் ராமா’ போன்ற திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. 
  செய்தித் தொடர்பு பரிமாற்றத்திற்கு செய்மதிகளைப் பயன்படுத்தலாம் என்பதையும், 
  சந்திர மண்டலத்தில் மனிதன் விரைவில் காலடி எடுத்து வைப்பான் என்பதையும் இவர் 
  முன்கூட்டியே 1940களில் தெரிவித்திருந்தாலும், இவரது கூற்றைக் கற்பனைக்கதை என்று 
  எவரும் நம்பமறுத்து விட்டார்கள். ஆனாலும் 1969ல் நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் காலடி 
  வைத்தபோது, அந்த அதிசய சம்பவம் எல்லோரையும் வியப்படைய வைத்தது. செய்மதி தொழில் 
  நுட்பத்துறையில் இவருக்கு இருந்த ஆளுமை காரணமாக இவரைச் ‘செய்மதி தொழில் 
  நுட்பத்தின் தந்தை’ என்றும் அழைப்பார்கள். விண்வெளிப் பயணம் என்பது ஒருநாள் 
  பொதுமக்களின் சாதாரண நிகழ்வாகிவிடும் என்று எப்போதோ இவர் ஆருடம் 
  கூறியிருக்கிறார். அது நிஜமாகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. 
 இவர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞான புத்தகங்களை வெளியிட்டது மட்டுமல்ல, 
  ஆயிரத்திற்கு மேற்பட்ட வானியல் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பிரெட்றிக் 
  போலுடன் சேர்ந்து எழுதிய ‘த லாஸ்ட் தியோரம்’ என்ற தனது கடைசி நாவலை 
  சமீபத்தில்தான் எழுதி முடித்திருந்தார். அதுமட்டுமல்ல சிறந்த நாவலுக்கான கியூகோ 
  (1980), நிபூலா (1979) போன்ற பல சர்வதேச விருதுகளையும், உள்ளுர் விருதுகளையம் 
  பெற்றிருக்கிறார். இவரது ‘த பவுண்டன் ஒவ் பரடைஸ்’, ‘ராமா’ போன்ற நாவல்கள் 
  குறிப்பிடத்தக்கன. 1956ம் ஆண்டிலிருந்து நிரந்தரமாக இலங்கையில் தங்கியிருந்த 
  இவருக்கு வித்தியாஜோதி, சாஹித்திய ரத்னா, லங்கா அபிமான்ய போன்ற உள்ளுர் 
  விருதுகளைக் கொடுத்ததன் மூலம் இலங்கை அரசும் இவரைக் கௌரவித்திருக்கிறது. இவர் 
  சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகத்தின் வேந்தராக 1989ம் ஆண்டு தொடக்கம் 2004ம் 
  ஆண்டுவரையும், அதைவிட மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் 1979ம் ஆண்டு 
  தொடக்கம் 2002ம் ஆண்டுவரையும் பண்புரிந்திருக்கிறார். பிரபல விஞ்ஞானப் புனைகதை 
  எழுத்தாளர்களான ஐசன் அசிமோவ், ரொபேட் ஏ றெய்ன்லெயின் போன்றவர்களைப் போலவே இவரும் 
  இலக்கிய ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார். என்னதான் இந்த சாதனைகள் 
  இவருக்குப் பெருமை சேர்த்தாலும், ஒரு படைப்பாளியாக இருப்பதையே தான் எப்போதும் 
  விரும்புவதாக இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.
 
 1953ம் ஆண்டு மேர்லின் மேபீல்ட் என்ற பெண்மணியைத் திருமணம் செய்த அவர் 1964ல் 
  விவாகரத்துச் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. 
  1998ல் சிறுவர்மீது துஷ்பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டு இவர்மீது 
  சுமத்தப்பட்டபோது அதை அவர் நிராகரித்தார். போதிய ஆதாரமில்லாததால் அவர் மீது 
  சாட்டப்பட்ட அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.
 
 ஆழ் நீர் மூச்சுக் கருவியின் உதவியுடன் ஆழ்கடலில் மூழ்கி சுழி ஓடுவதில் விருப்பம் 
  கொண்ட இவர், நேரம் கிடைத்த போதெல்லாம்; தனது பொழுது போக்காக அதைச் செய்து 
  வந்தார். இத்துறையில் ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் அதைக் கற்றுத் தருவதற்காக தென் 
  பகுதியின் கடலோரத்தில் உள்ள ‘கிக்கடுவ’ என்ற இடத்தில் ஒரு பயிற்சி நிலையத்தையும் 
  அமைத்திருந்தார்.
 
 ‘மிகச் சிறந்த விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர், மிகச்சிந்த விஞ்ஞானி, நடக்கப் போவதை 
  முன்கூட்டியே அறிந்து உரைக்கும் நல்ல நண்பர்’ என்று பிரித்தானிய வானியலாளர் சேர் 
  பற்றிக் மோர் இவரைப் பற்றிப் புகழ்ந்து ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.
 
 
  இலங்கையின் 
  வெளிநாட்டு அமைச்சரவையின் ஆதரவுடன் நடந்த தனது 90வது பிறந்ததினத்திலன்று கருத்து 
  வெளியிட்ட இவர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இனமோதல்களால் பாதிப்படைந்திருக்கும் 
  இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலவவேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என்ற தனது 
  ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார். சிறுபான்மை இனத்தவருக்கும் சம உரிமை 
  கொடுப்பதன் மூலம் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரலாம் என்ற இவரது ஆதங்கம் எல்லாம் 
  செவிடர்கள் காதில் ஊதியசங்காய், நிராசையாய்ப் போய்விடும் என்பதை அவர் அப்போது 
  நினைத்திருக்கவேமாட்டார். 
 kuruaravinthan@hotmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |