பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
இலக்கியம் |
மகாஜனாவின் குழந்தைக் கவிதைகளின்
பாரம்பரியம்.
- குரு அரவிந்தன் -
இன்று புலம் பெயர்ந்த தமிழர்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பது
தங்கள் தாய் மொழியை, எப்படித் தாங்கள் புலம் பெயர்ந்த நாடுகளில்
தக்கவைப்பது என்பதே. தமிழர்களின் தாய் மண்ணில் இருந்து
தமிழர்களுக்கு எந்த ஒரு வகையான அரச உதவியும் கிடைக்காத இப்படியான
ஒரு
சூழ்நிலையில், தாய் மொழியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையினரிடம்
கொடுக்க வேண்டிய கடமையும் புலம் பெயர் தமிழர்களின் கையில்தான்
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்திற்குப் புலம் பெயர்ந்த
மண்ணில் இது ஒரு சவாலாகவும் இருக்கிறது. இதை எப்படிச்
சாத்தியமாக்கலாம்,
எந்த வகையில் இந்த மண்ணில் தமிழ் மொழி அழியாமல் காப்பாற்றுவதற்குத்
துணை புரியலாம் என்று சிந்தித்தால் அதற்கான பலவழிகள் புலப்படும்.
முதலில் அவற்றைச் செயற் படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
முக்கியமாக குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்பதற்கான சாத்தியமான
சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம்
யாரையாவது குறை கூறிக் கொண்டே இருக்காது, இருப்பதை வைத்துக் கொண்டு
இலட்சியத்தை அடைய முயற்சிக்க வேண்டும். குழந்தைகளின் மொழி
விருத்தியில் கவனம் செலுத்தும்போது, குழந்தைகள் மொழியை எப்படி
இலகுவில் கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்,
குழந்தைகளின் உளவியற்படி ஓசை வடிவத்தில் வெளிவரும் பாடல்கள் மூலமே
அவர்கள் மொழியை இலகுவில் கற்றுக் கொள்கிறார்கள் என்பது
தெரியவந்திருக்கிறது. ஆங்கிலத்தில் கூட நேசறிறைம் (Nursery rhyme)
என்ற
பாடல்கள் புகழ் பெற்றதற்கு இதுதான் காரணம். பொதுவாகச் சிறுவர்
என்று கூறும்போது அவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1-6
வயதுவரை(Basic), 7-8 வயதுவரை(Primary), 9-11 வயதுவரை(Elementary)
என்று இவர்களைத் தரம் பிரிக்க முடியும். இதை மனதில் கொண்டு,
அப்படியானதொரு முயற்சி மூலம் இத்தகைய வயதினருக்கு ஏற்றமாதிரி
சிறுவர், சிறுமிகளுக்குக் கிடைத்த அருமையான சிறுவர் பாடல்கள்
அடங்கிய
தொகுப்புத்தான் மகாஜனன் தந்த குழந்தைகளுக்கான இந்தக் கவிதைத்
தொகுப்பாகும்.
ஈழத்து இலக்கியப்பரப்பிலே மகாஜனக் கல்லூரி மாணாக்கர் பரம்பரையினர்
நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, சினிமா போன்ற துறைகளிலே
ஆழமான தடத்தினைப் பதித்துள்ளனர். அந்த வகையிலே தெல்லிப்பழை
மகாஜனாக் கல்லூரி சிறுவர் இலக்கியத்திற்காக மிகப்பெரியதொரு சேவையை
ஆற்றியிருக்கிறது. அன்று தொட்டு இன்றுவரை இலக்கியப்
பாரம்பரியத்தில் புகழ் பெற்றது மகாஜனாக் கல்லூரி. இவர்களின்
நூற்றாண்டை (2010)
முன்னிட்டு குழந்தைக் கவிதைகள் என்ற தொகுப்பைத் தற்போது
வெளியிட்டிருக்கிறார்கள். ஆனாலும் சில பழைய மாணவர்களான கவிஞர்களின்
ஆக்கங்கள் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை என்பதை அவதானிக்க
முடிகிறது. குழந்தைகளுக்கான கவிதைகளை அவர்கள் எழுதாமல்
இருந்திருக்கலாம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களின்
ஆக்கங்கள் விடுபட்டுப் போயிருக்கலாம். இருந்தாலும் பல
சிரமங்களுக்கு
மத்தியில், பாவலர் துரையப்பாபிள்ளையின் கவிதைப் பாரம்பரியத்தில்
வளர்ந்த, கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்களினதும், கற்பித்த
ஆசிரியர்களினதும் குழந்தைப் பாடல்கள் சிலவற்றை ஒன்றாகச் சேகரித்து
இத்தொகுப்பில் இடம் பெறச்செய்திருக்கிறார்கள். இந்த முயற்சிக்குப்
பாரபட்சம் காட்டாது முன்னின்று உழைத்த மயிலங்கூடலூர் பி. நடராசன்,
எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன், ம.பா. மகாலிங்கசிவம்
போன்றோரும், தற்போதைய அதிபர் திருமதி சிவமலர் அனந்தசயனன், முன்னாள்
அதிபர் திரு. பொ. சுந்தரலிங்கம், இதற்கான நிதி உதவி புரிந்த
முன்னாள் ஆசிரியர் திரு. க. செல்வகுணச்சந்திரன் ஆகியோரும்
பாராட்டப்பட வேண்டியவர்கள். ஈழத்து ஓவியர் ரமணி அவர்கள் குழந்தைக்
கவிதைகளுக்கு ஏற்றவாறு அழகான அட்டைப்படம் வரைந்திருக்கிறார்.
‘ஈழத்து தமிழ்க்கவிதை வரலாற்றிலே குழந்தைப்பாடல்களுக்கு
தனித்துவமான சிறப்பம்சம் எப்பொழுதும் உண்டு’ என்று இந்நூலுக்கு
அணிந்துரை
எழுதிய யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.
சிவலிங்கராசா தனது அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். 1918ம் ஆண்டு
குழந்தைகளுக்காக ச. வைத்திநாதர் என்பவர் குழந்தைப் பாடல் தொகுதி
ஒன்றை வெளியிட்டிருந்ததாகவும், 1935ம் ஆண்டு நவாலியூர் சோமசுந்தரப்
புலவர் உள்ளிட்ட பலரின் பாடல்கள் அடங்கிய ‘பிள்ளைப்பாட்டு’ என்ற
தொகுதி அப்போதைய வித்தியாதரிசியாக இருந்த க. ச. அருணந்தியின்
பெருமுயற்சியால் ஈழத்தில் வெளிவந்ததாகவும் தெரிவிக்கின்றார்.
குழந்தைகள் வாய்விட்டுப் பாடக்கூடியதாகவும், இனிய ஓசையோடு
அபிநயக்கத்
தக்கதாகவும் பாடல்கள் அமைய வேண்டும் என்றும், இத்தொகுப்பில்
பெரும்பாலான பாடல்கள் இயற்கை, சுற்றுச்சூழல், உறவுமுறைகளை மனதில்
கொண்டு எழுந்தவையாகவும், அனேகமாக குழந்தைகளுக்கு உபதேசம் அல்லது
புத்திமதி சொல்வதாய் இருப்பதாகவும், குழந்தைப் பாடல்கள் பற்றி
ஆய்வினைச் செய்பவர்களுக்கு சிறந்ததொரு களஞ்சியாமாக இத்தொகுப்பு
அமையும் என்றும் மேலும் குறிப்பிடுகின்றார்.
இத் தொகுப்பில் நாற்பத்தி நாலு கவிஞர்களின் நூற்றிப் பதின்நான்கு
குழந்தைக் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. முதற் கவிதையாக இடம்
பெற்றிருப்பது கவிஞரும், கல்லூரி ஆசிரியருமான அமரர் செ.
கதிரேசன்பிள்ளையின் வண்ணத்துப் பூச்சி, பாசம், விடிவெள்ளி போன்ற
பாடல்களும்,
அடுத்து மஹாகவி. து. உருத்திரமூர்த்தியின் கோடை வெய்யில்
கொதிக்கிறதே, விந்தை அறிந்திடு, சின்னக் குருவி பறக்கிறது போன்ற
பாடல்களும்,
அடுத்து வருவது பன்மொழிப் புலவர் மயிலங்கூடலூர் த. கனகரத்தினத்தின்
எங்கள் வீடு நல்ல வீடு, ஆனை வந்தது, சூழல் மாசுபடுமோ போன்ற
பாடல்களும் தெடர்ந்து பண்டிதர் சி. அப்புத்துரையின் பனை மரம்
பற்றிய பூலோக கற்பகதரு, அப்பா சொல்லே மந்திரம், அன்னை எங்கள்
உயிராவாள்
என்ற பாடல்களும், அடுத்து கல்லூரிக் கீதம், கொடிக் கீதம்
போன்றவற்றைத் தந்த புலவர் நா. சிவபாதசுந்தரனாரின் மின்மினி, செ.
சிவசுப்பிரமணியத்தின்
பட்டம் பறக்குது, தேரில் வாறார், எங்கள் வீட்டு நாய், புலவர் ம.
பார்வதிநாதசிவத்தின் பள்ளிக்கூடம் செல்கிறோம், அழகிய முயல்,
அம்புலிமாமா,
கவிஞர் மயிலங்கூடல் நடராசனின் நல்ல வாத்தியார், நாட்டைக்காத்த
பாலன், ஆற்றில் வீழ்ந்த ஆடுகள், பத்திரிகை ஆசிரியர் ஆ.
சிவநேசச்செல்வனின்
பஸ்வண்டி, தொழில் புரிவோமே, காக்காய் ஏனோ கரைகிறது, பேராசிரியர்
சபா. ஜெயராசாவின் காவடி வந்தது, வா வா மழையே, பாடுக பாட்டு,
எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரனின் குரும்பைத் தேர்,
கோழிச்சேவல், அவை காட்டும் வழி, யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர்
என்.
சண்முகலிங்கனின் பாப்பாவும் பாட்டியும், அன்னை தந்த கவிதை, சின்னக்
கண்ணம்மா, வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரனின் பாலர் நாங்கள்
ஆடுவோம், கல்வியெனும் செல்வம், புத்தகம், திருமதி மரகதவல்லி
சர்வானந்தராசாவின் நிலா, மயில், கிளி தெல்லியூர் நா. ஆறுமுகத்தின்
கொழும்பு
மாம்பழம், சுற்றி வந்து கூவுதே, சைவப்புலவர் சு. செல்லத்துரையின்
கோயிலுக்குச் செல்வோம், பூமித்தாய், தெய்வப்பசு, திருமதி சௌ.
பத்மநாதனின்
தாளம் போடு, மலரடி பணிவோமே, கும்மிப்பாட்டு, திருமதி பகீரதி
கணேசதுரையின் எழுக சிறுவர் இதயமே, அன்னை மொழி, இயற்கைத் தேவன், இ.
ஞானேஸ்வரனின் அம்புலிமாமா, நாட்டுக்குள் போகலாமா, பாப்பாக்கூட்டம்
பாருங்கள், திருமதி ஜெயரஞ்சனி மயில்வாகனனின் நிலாவில், ஆசானைத்
தொழுவாய், நான் ஒரு சுகதேகி, செல்வி இராஜேஸ்வரி செனகரத்தினத்தின்
பாலர், மழை, குருவிப்பாட்டு, திருமதி சிவனேஸ்வரி பரமசிவத்தின்
அன்னை,
பாடசாலை, எறும்பு, க. வாணி முகுந்தனின் முத்தம், பூக்கள், பா.
பாலமுரளியின் அறிவை வளர்க்கும் கடவுள், கதிரோன் வந்தான்,
விமானப்பறவை,
திருமதி சாமினி பிரதீபனின் சிலை, க. ஆதவனின் கனவுக்காட்சி,
சொல்லம்மா, கவிஞர் உ. சேரனின் உழைப்பு, திருமதி பாரதி. சேந்தனாரின்
மூடப்பூனை,
காகம், வட்டநிலா, ம. பா. மகாலிங்கசிவத்தின் சுட்டித் தங்கை,
எல்லோர்க்கும் உதவுவேன், வண்ணத்துப்பூச்சி, எழுத்தாளர் குரு
அரவிந்தனின் வாத்து,
சிரிக்கும் மலர்கள், ஈசன் பாதம் பணிவோமே, கவிமணி க. ஆனந்தராசாவின்
சொல்லிலல்ல செயலில் காட்டு, அம்மா எம் தெய்வம், இரா.
ஜெயக்குமாரின் காலையில் காணுபவை, எங்கள் அப்பா, நல்லவராய்
வாழுவோம், சி. சிவசிவாவின் பெரியபள்ளி, ரோஜாப்பூ, ஒரு நாள் பொழுது,
பூ.
நகுலனின் அன்னையின் துணைகள், தமிழைக் கற்றுயர்வோம், பட்டங்கள்
பெற்றிடுவோம், வே. செவ்வேள்குமரனின் கண்ணா ஓடிவா, எனது உறவினர்,
அம்மா மிகவும் நல்லவர், மா. பிரவீணனின் தாரகை, சுதந்திரப்பயிர்,
உழைப்பின் அருமை, செல்வி ஜே. கவிதாவின் வண்ணமான நிறங்கள், சூழல்
என்றொரு புத்தகம், செல்வி க. சுபாஜினியின் இனிய பிறந்தநாள், செல்வி
சஜீதா சண்முகரத்தினத்தின் நாய்க்குட்டி, செல்வி புராதனி
ஏழூர்நாயகத்தின்
ரோஜாப்பூ, பள்ளிக்குச் செல்வோம், இ. தனஞ்சயனின் சமாதானம்,
உத்தமராய் உயர்வோம், வானமழை, செல்வி கோபிகா குமாரவேலுவின் பாலர்
விளையாட்டு, நாளும் கற்றல் செய்திடுவோம், மழை, செல்வி ஸ்ரீபுராதனி
இராஜகோபாலனின் உயிர் எழுத்து, ரோஜாப்பூ, ஆசிரியர், சு. சர்மிகாவின்
கேளாய்
மகனே போன்ற பல்வேறு தலைப்பிலான பாடல்களும் இத் தொகுப்பில் இடம்
பெற்றிருக்கின்றன.
இன்றைய சூழ்நிலையில் இத்தகைய அருமையான குழந்தைக் கவிதைகள் இசையோடு
கூடிய ஒலி வடிவமைப்பிலோ, அல்லது காட்சிகளோடு கூடிய
ஒளி அமைப்பிலோ குறுந்தட்டுக்களாக வெளிவந்தால் இன்னும் சிறப்பாக,
குழந்தைகளை அதிகம் கவரக்கூடியதாக இருந்திருக்கும். மகாஜனாக்கல்லூரி
பழைய மாணவர்களான அவுஸ்ரேலியாவில் வசிக்கும் மாவை நித்தியானந்தனின்
பாப்பாபாரதி, கனடாவைச் சேர்ந்த குரு அரவிந்தனின் தமிழ் ஆரம்
போன்றன இத்தகைய குழந்தைப்பாடல்கள் அடங்கிய குறுந்தட்டுக்களாக ஒலி,
ஒளிவடிவில் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. குரு அரவிந்தனின் தமிழ்
ஆரம் குழந்தைப் பாடல்கள் குழந்தைகளை மிகவும் கவர்ந்திருப்பதை,
மூன்று குருட்டு எலி என்ற தனது படைப்பில் எழுத்தாளர் அ.
முத்துலிங்கம்
அவர்களே எடுத்துக்காட்டிப் பாராட்டியிருப்பதையும் இங்கே
குறிப்பிடத்தக்கது. பல தலைப்புக்களில் பலவிதமான சிறுவர் பாடல்களும்
இத்தொகுப்பில்
அடங்கியிருப்பதால், சிறுவர் இலக்கியத்தில் ஆர்வமுள்ள யாராவது
பொறுப்பெடுத்து இதில் உள்ள பாடல்களுக்கு ஒலி, ஒளி வடிவம்
கொடுக்கும்
முயற்ச்சியில் ஈடுபடுவார்கள் எனப் புலம் பெயர் தமிழர்களான நாங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். தாய் மொழியாம் தமிழ் மொழியைப் புலம்
பெயர்ந்த மண்ணில் தக்கவைப்பதற்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இது
என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழ்தானே என்று
அலட்சியப்படுத்தினால்
மொழி அழிந்தால் நம் இனமும் அழிந்துவிடும் என்பதை நாம் நினைவில்
கொண்டு மனப்பூர்வமாய் செயற்படவேண்டும், ஏனென்றால் நாமும்
ஒருகாலத்தில் முகவரி அற்றவர்களாக ஆகிவிட நேரிடலாமல்லவா?
kuruaravinthan@hotmail.com
|
|
|
|
©©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|