பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
கிரன் தேசாயின் நாவலுக்கு 'புக்கர்'
விருது!
புகழ்பெற்ற
ஆங்கில எழுத்தாளர் அனிதா தேசாயின் மகளான கிரன் தேசாயிற்கு 2006ற்கான
இங்கிலாந்தின் 'மான் புக்கர் விருது'
(Man Booker Price) அவரது நாவலான The Inheritance of
Loss' என்னும் நூலிற்குக்
கிடைத்துள்ளது. பரிசுத் தொகை: 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ். 35
வயதான இவரே ஆங்கில இலக்கிய உலகில் நோபல் பரிசுக்கடுத்து
மதிப்புக்குரியதாகக் கருதப்படும் இவ்விருதினை மிக இளவயதில் பெறும்
படைப்பாளி. இவருக்கு முதல் அருந்ததி ராய் இவ்விருதினைத் தனது
நாவலான The God of Small Things'ற்குத்
தனது 36 வயதில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விருதினைப்
பெறும் மூன்றாவது இந்தியர் இவரென்பதும்
குறிப்பிடத்தக்கது.முதலிருவர்: சல்மான ரஷ்டி (தனது Midnight Children
நாவலிற்காக) அடுத்தவர் அருந்ததிராய்.
இவரது தாயாரான அனிதா தேசாய் மூன்று தடவைகள் இறுதிச் சுற்றிற்குத்
தெரிவு செய்யப்பட்டபோதும் விருதினைப் பெறவில்லை. கிரன் தேசாய்
மேற்படி நூலினைத் தனது தாயாரான அனிதா தேசாயிற்கே அர்ப்பணித்துள்ளார்.
விபத்தொன்றில் தனது பெற்றோர்களை இழந்து நிராதராவான இளம் பெண்ணொருத்தி
மேற்கில் கல்வி கற்றி நீதிபதியாகவிருந்து ஓய்வு பெற்று இமாலயத்தின்
அடிவாரத்தில் வாழும் தாத்தாவுடன் வாழுகிறாள். அவளை வைத்தும்,
நியூயார்க்கில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்ற வாசியான
சமையல்காரனொருவனின் மகனான , அங்குள்ள உணவகங்களில் தொழிலாளியாகப்
பணிபுரியுமொரு இளைஞனொருவனை வைத்தும் பின்னப்பட்ட கதை இந்தியாவுக்கும், நியுயார்க்கிற்குமிடையில்
நடைபெறுவதாகச் செல்கிறது.
1971இல் இந்தியாவில் பிறந்த கிரன் தேசாய் தனது கல்வியை
இந்தியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தொடர்ந்தவர்.
எற்கனவே இவரது முதல் நாவலான
Hullabaloo in the Guava Orchard 1998இல்
வெளிவந்து 'Betty Trask'
விருதினைப் பெற்றுள்ளது. The
'Inheritance of Loss'
இவரது இரண்டாவது நாவல். அருந்தது ராயின் முதல் நாவல் பரிசினைப்
பெற்றால் கிரான் தேசாயின் இரண்டாவது நாவல் பரிசினைத் தட்டிச்
சென்றுள்ளது. பிரிட்டனின் 'மான்'
(Man)
'புக்கர்' விருதினை இந்திய 'வுமன்' எழுத்தாளர்கள் மிகக் குறைந்த
வயதில் தட்டிச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். சரியான போட்டிதான்.
- ஊர்க்குருவி -
|
|
|
© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|