| 
பெண் குழந்தை 
 -
கிரகம் - 
 காலை 
சி.எல்.ஆர்.ஐ பாலத்தின் மீது வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு காரினுள் சுதாகர்,
அவரது வட இந்திய மனைவி அகான்ஷா, குழந்தை 
சச்சின், பெரியப்பா பையன் மணி இருந்தனர். கார் கேந்திரா 
வித்யாலயா வாசலை கடந்து உள்ளே சென்றது. 
இன்று ஜøன் 
மூன்று மூன்றாயிரத்து ஒன்றாம் ஆண்டு. சச்சின் பள்ளிக்கூடம் சேர்க்கைக்கான முதல் 
நாள். 
      
ஆசிரியை 
“குழந்தை 
உன் பிறப்பு எண் என்ன?” 
      
சச்சின் அவள் அம்மா சொல்லிக்கொடுத்த எண்களை நினைவுப்படுத்தி ஒவ்வொரு எண்களாக 
கூறினான். 
      
ஆசிரியை 
“வெரிகுட் 
இந்த பேப்பரில் என் பிறப்பு எண்களை எழுது”. 
      
சச்சின் ஒவ்வொரு எண்களையும் நிதானமாக எழுதினான். அவன் எழுதியிருந்த பதினைந்து இலக்க 
எண்களை சரி பார்த்த ஆசிரியை 
“குட்பாய்”
என்று அவன் தலை முடிகளை லேசாக கோதிவிட்டாள். ஆசிரியை தொடர்ந்து 
அவனை ஓஎல்இடி திரையுடன் இணைக்கப்பட்ட கீபோர்டில் எண்களை டைப் செய்யச் சொன்னாள். 
ஆசிரியை ஜீரோ முதல் ஒன்பது வரை உள்ள எண்களை வரிசை மாற்றி கூறிக்கொண்டே வந்தாள். 
சச்சின் ஒவ்வொரு எண்களாக சரியாக அழுத்தினான். 
      
ஆசிரியை 
“உன் 
பெயர் என்ன?” 
      
“சச்சின்”
என்றான். 
      
சச்சின் அருகில் அமர்ந்திருந்த சுதாகர் 
“எதற்கு 
எண்கள் சம்மந்தமான கேள்விகள் அதிகம் கேட்கிறீர்கள்?”
என்று ஆசிரியை பார்த்துக் கேட்டான். 
      
“இங்குள்ள 
எல்லா அறைகளிலும் உள்ள கதவுகள் நம்பர் லாக் செய்யப்பட்டவை. ஒரு அறையிருந்து 
வெளியேவோ அல்லது உள்ளேயோ செல்ல வேண்டுமெனில் சரியான நம்பரை தரவேண்டும். 
அதற்குத்தான் இந்த எண் பரிட்சை”
என்றாள் ஆசிரியை. 
“யார் 
இந்த அழகான யுவன்”
என்று சுதாகரிடம் மணியை பார்த்து கேட்டாள்.  
சுதாகர் 
“என் 
தம்பி” 
“என்ன!
”
என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் 
சுதாகர் 
“இவர் 
என் சொந்த தம்பியில்லை. பெரியப்பா பையன்” 
“அப்ப 
உறவுக்கார பையன்”
என்று சொல்லுங்கள் 
“அண்ணா,
அக்கா வார்த்தைகளெல்லாம் உபயோக மற்றவை”
என்றாள். 
“என்ன 
அவர் பேசமாட்டாரா?”
என்றாள் ஆசிரியை 
மணி 
“நீங்கள் 
திருமணமான பெண்ணா?” 
ஆசிரியை 
“அய்யோ,
உங்களை பேசச்சொன்னது தப்பா பேச்சே, முதல் 
கேள்வியே வில்லங்கமா கேட்கிறீர்களே, எனக்கு திருமணம் ஆகல”
என்றாள் 
மணி 
“உங்கள் 
பிறப்பு எண்ணை சொல்லுங்கள்?” 
ஆசிரியை சிரித்தபடி 
எண்களை கூறினாள். 
நாளை முதல் குழந்தை 
சச்சினை பள்ளிக்கு அனுப்புவதாக கூறிவிட்டு அவர்கள் காரினுள் நுழையும் முன் அவள் 
தன்னை பார்க்கிறாளா என்று நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான் மணி. 
தூரத்திலிருந்த அவள் மணியை பார்த்துக் கொண்டிருந்தாள். 
ஓரியண்ட் 
குரோமோசோம் டெஸ்ட் லேபின் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தான் மணி. எவ்வளவு அழகான பெண்?
அவள் கண்களில் தீட்டியிருந்த மை, உதடுகளில் 
பூசியிருந்த சாயம், சிறு புன்னகையுடன் கூடிய பேச்சு,
ஆபாசமில்லாது அவள் அணிந்திருந்த உடை, 
சொர்க்கம் அவள். அவள் மட்டும் எனக்கு மனைவியாகிவிட்டால் இந்த இயந்திர உலகில் 
என்னைவிட கொடுத்துவைத்தவன் எவனுமில்லை. 
ரிசப்ஷனில் 
“ஸôர்,
உங்களுக்கு என்ன வேணும்?” 
மணி 
“குரேமோசோம் 
டெஸ்ட் செய்யணும்”. 
ரிசப்ஷனிஸ்ட்
“உங்க 
பிறப்பு எண்?” 
ரிசப்ஷனிஸ்ட் மணி 
கூறிய பதினைந்து இலக்க எண்களை கீபோர்ட்டில் டைப் செய்தான். ஓஎல்இடி திரையில் மணியை 
பற்றிய விபரங்கள் தெரிந்தன. ரிசப்ஷனிஸ்ட் அதை படித்துப் பார்த்து விட்டு திருமண 
பகுதிக்குள் சென்றார். வைப்பேஜ் புதிதாக தொன்றி விவரங்களை தோற்றுவித்தது. 
அதில் மணிக்கு 
அரசாங்கம் நிர்ணயித்திருப்பது குழந்தை பெண் என்றும் மேலும் பெண் குழந்தை 
பிறப்பதற்கான ஒத்த குரோமோசோம்கள் உடைய திருமணமாகாதபெண்களின் போட்டோக்கள் ஒன்றன் 
பின் ஒன்றாக திரையில் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. 
ரிசப்ஷனிஸ்ட்
“ஸôர் 
இதில் எந்த பெண்ணோட குரோமோசோம் உங்களோட குரோமோசோமோடு டெஸ்ட் பண்ணி சொல்லணும்”
என்று திரையில் தோன்றி மறையும் பெண்களின் போட்டோக்களை கை நீட்டி 
கேட்டான். 
மணி 
“இதிலிருக்கிற 
பெண் கிடையாது. வேறொரு பெண்”. 
ரிசப்ஷனிஸ்ட்
“அப்ப 
டாக்டர்கிட்டயிருந்து லெட்டர் வாங்கிட்டு வரணும்,
உங்ககிட்ட இருக்கா?” 
மணி 
“இல்லை,
என்ன லெட்டர்? 
” 
ரிசப்ஷனிஸ்ட்
“ரிசல்ட் 
தவறானதுன்னு பின்னாடி தெரிய வந்தா,
அதற்கான தண்டனையை நீங்களே எடுத்துப்பீங்கன்னு டாக்டர் லெட்டர் 
தரணும்”. 
மணி 
“என்ன 
தண்டனை?” 
ரிசப்ஷனிஸ்ட்
“தூக்குத் 
தண்டனை” 
மணிக்கு அவன் 
கூறியது பயத்தை ஏற்படுத்தியது.  
டாக்டர் ரங்கநாதன் 
காலை வேளையில் சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் பிரவசராக வேலை செய்கிறார். 
மதியம் வீட்டிற்கு வந்து நன்றாக சாப்பிட்டுவிட்டு குட்டித் தூக்கம் போட்டு நான்கு 
மணிக்கு எழுந்து ஐந்து மணி முதல் எட்டு மணி வரை அவருடைய நுங்கம்பாக்கம் 
கிளினிக்கில் வேலை செய்வார். 
அவரை பார்ப்பதற்காக 
மணி அவருடைய கிளினிக்கிற்கு சென்றிருந்தான். 
மணி அறை கதவை 
திறந்து கொண்டு உள்ளே சென்றவுடன் 
“குட் 
ஈவினிங் ஸôர்”
என்றான். 
ரங்கநாதன் 
“ப்ளீஸ் 
கம், 
உட்காருங்க” 
“சொல்லுங்க,
உங்களுக்கு என்ன பிரச்சினை? 
”
என்று கேட்டார். 
மணி 
“அரசாங்கம் 
கூறியிருந்த பெண்களை தவிர்த்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள 
விரும்புகிறேன். அதற்கு முன்னாடி குரேமோசோம் டெஸ்ட் செய்து பார்க்கணும். அது 
செய்யனும்னா உங்ககிட்டயிருந்து லெட்டர் வாங்கிட்டு வரனும்னு ஒரியண்ட்ல சொன்னங்க.” 
டாக்டர் 
“உங்களுக்கு 
என்ன வயது?” 
“இருபத்தி 
எட்டு”
என்றான் மணி 
டாக்டர் 
“ஏன் 
சின்ன வயசுலே இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கீறிங்க” 
மணி 
“ஏன் 
சார் வேற பெண்ணை கல்யாணம் செய்துட்டா குற்றமா? 
டாக்டர் 
“குற்றமில்லை,
நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்ணை மணந்து கொள்ளலாம். ஆனால் 
அரசாங்கம் நிர்ணயித்த குழந்தையை மட்டும் தான் நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்”. 
மணி 
“எனக்கு 
பிறக்கும் குழந்தை அப்படி இல்லையென்றாள்?
” 
டாக்டர் 
“நீ 
இங்கு இருக்கமாட்டாய்,
உன்னை கொன்று அந்த இடத்தில் உன் குழந்தையை வைத்து பூர்த்தி செய்து 
விடுவார்கள்”. 
மணி 
“என்ன 
கொடுமையான உலகம் இது”. 
மணி 
“டாக்டர் 
முதலில் எனக்கு குரோமோசோம் டெஸ்ட் செய்ய அனுமதி கொடுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் 
கொள்கிறேன்”.
டாக்டர் 
“சரி 
அதற்கு மேல் உங்கள் விருப்பம்”
என்று கூறியபடி ஒரு படிவத்தை அவனிடம் கொடுத்து படித்துப் பார்த்து 
கையெழுத்திடும்படி கூறினார். 
அந்த படிவத்தை 
படித்துப் பார்த்த மணி ஒரு நிமிடம் அதிர்ந்து போனான். அந்த எழுத்துக்களை 
திரும்பவும் படித்துப் பார்த்தான். 
‘நீங்கள் 
எடுத்துக் கொள்ளும் இந்த டெஸ்ட் சில சமயம் தவறானதாக கூட இருக்கலாம். அப்படி தவறாக 
இருந்தால் அதற்கு ஒரியண்ட் நிறுவனமோ,
உங்களை பரிந்துரை செய்யும் டாக்டரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க 
மாட்டார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளை மன மகிழ்ச்சியோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.' 
மணி அந்த 
படிவத்தின் கோடிட்ட இடத்தில் கையெழுத்திட்டு டாக்டரிடம் கொடுத்தான். 
டாக்டர் 
“இன்னும் 
மூணு நாள் கழிச்சி டெஸ்ட் ரிசல்ட்ட ஓரியண்ட் லேபில போய் வாங்கிக்கோங்க. இந்த 
படிவத்தை நானே அவங்களுக்கு அனுப்பிடுவேன்”
என்றார். 
“தேங்க் 
யூ ஸôர்”
மணி 
டாக்டர் 
“வெல்கம்”
என்றார் 
மன மகிழ்ச்சியின்றி 
ஒரு வித பயத்துடன் கிளினிக்கை விட்டு வெளியே வந்தான் மணி.  
நீலாங்கரையை 
அடுத்து இசிஆர் ரோட்டில் கடலை ஒட்டிய ஓர் உணவகத்தில்,
வட்ட வடிவ மேசை அதன் மத்தியில் ஒரு மெழுகுவர்த்தி காற்றில் 
அணையாதபடி குடுவையினுள் மறைக்கப்பட்டிருந்தது. மேசையை சுற்றி இரண்டு நாற்காலிகள் 
எதிர்ரெதிர் திசையில் இருந்தன. இதே போல ஐந்து அமைப்புகள் வெட்ட வெளியில் கூரைகள் 
இல்லாமல் கடல் காற்றின் குளிர்ச்சியுடன் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்தது. 
மணியும் அந்த 
ஆசிரியையும் நாற்காலியில் வந்து அமர்ந்தனர். ஆசிரியை கரு ஊதா நிற டாப்சும்,
வெள்ளை நிற பேண்ட்டும், வெள்ளை நிற 
துப்பட்டாவும் அணிந்திருந்தாள். மணி டிரகர் ஜீன்ஸ் பேண்ட்டும்,
கழத்துப்பகுதியில்லாத டீ சர்ட்டும் அணிந்திருந்தான். 
“என்ன 
விஷயமா வரச்சொல்லியிருந்தீங்க?”
என்று கேட்டாள், மணி சற்று நேர 
மவுனத்திற்கு பிறகு 
“திருமணத்தைப் 
பற்றி”
என்றான்.  
“யார் 
திருமணம் பற்றி?” 
“நம் 
திருமணம் பற்றி” 
“என் 
பெயர் தெரியாது?
ஊர் தெரியாது? அதற்குள் கல்யாணத்தை பத்தியா”, 
“எதற்கு 
தெரிய வேண்டும்,
வீட்டில் மட்டும் தான் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் 
வெளியே எல்லோரையும் எண்களை கூறித்தானே அழைக்கிறார்கள். நாம் என்ன மனிதர்களாகவா 
நடத்தப்படுகிறோம் இங்கே?” 
“இப்ப 
கூட என் பெயரை தெரிஞ்சுக்க உனக்கு விருப்பமில்லை,
உன் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீதும், 
அதன் சட்டதிட்டங்கள் மீதும் தான்”. 
“சரி 
கேட்கிறேன் சொல்லு” 
“பெயர் 
ராக்ஷி மனோகர்,
அப்பாவுக்கு கன்னியாகுமரி, அம்மாவுக்கு 
ஸ்ரீநகர், அம்மா இறந்துட்டாங்க, 
அப்பா என் கூடத்தான் இருக்காங்க”. 
“என்னைப்பத்தி 
சொல்லணும்னா,
அப்பா அம்மா இரண்டு பேருக்கும் சொந்த ஊர் மதுரை,
இப்பவும் அங்க தான் இருக்காங்க. நான் இங்க பெரியப்பா பையன் கூட 
தங்கியிருக்கேன். கேப் ஜெமினியில சாப்ட்வேர் டெஸ்டிங் இன்ஜினியரா இருக்கேன். மாசம் 
இருபது லட்சம் சம்பளம். பார்ட்டீன்னா லைட்டா தண்ணி அடிப்பேன். தினமும் சாப்பிட்ட 
பிறகு சிகரெட் பிடிப்பேன். வேற ஏதாவது தெரியணுமா என்னைப்பத்தி?” 
“என்ன 
உங்களுக்கு எப்படி பிடிச்சது” 
“உன்னோட 
அழகான பேச்சு கூட காரணமாக இருக்கலாம்” 
“சோ,
உங்களுக்கு உறுதியா தெரியல, என்ன?” 
“ராக்ஷி 
உன்ன எனக்கு பிடிச்சிருக்கு,
அதற்கான காரணம் வேணா என்னால சொல்ல முடியாம இருக்கலாம். ஆனா நான் 
எடுத்திருக்கிற இந்த முடிவு அவசரத்தில் எடுத்த முடிவு மட்டும் கிடையாது. இதுக்கு 
மேல எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல”. 
ராக்ஷி 
“நான் 
என்ன சொல்லணும்” 
மணி 
“உன்னோட 
விருப்பத்தை” 
ராக்ஷி பதில் 
கூறாது மணியின் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள். 
குரோமோசோம் டெஸ்ட் 
ரிசல்ட் மணிக்கு சாதகமாக அமைந்தது. மணிக்கும் ராக்ஷிக்கும் திருமணம் நடந்தது. 
எத்தனை போட்டோக்கள்?
எத்தனை பத்திரிக்கை நிருபர்கள்?  திருமணத்தின் 
ஒரே நாளில் இவ்வளவு பிரபலம் ஆவேன் என்று எதிர்பார்க்கவேயில்லை,
காரணம்? ஒன்றே ஒன்று தான் அரசாங்கம் 
கூறியிருந்த பெண்களை தவிர்த்து வேற பெண்ணை மணமுடித்திருப்பது இது வெற்றியா?
இல்லை தோல்வியா? தெரிந்து விடும் இன்னும் 
ஒரு வருடத்தில் என்று முதலிரவு அறையினுள் கட்டிலில் படுத்து விட்டத்தில் சுற்றிக் 
கொண்டிருந்த விசிரியை பார்த்தபடி தனக்குள் பேசிக் கொண்டான் மணி. முடிவிற்கான 
பிள்ளையார் சுழியுடன் பரிட்சை எழுத ஆரம்பித்தான். திருமணம் முடிந்து மூன்று 
மாதங்கள் ஆகின. மாத விலக்கு தள்ளிப் போய் பத்து நாட்களுக்கு மேல் ஆகியதால் ராக்ஷி 
லேடி டாக்டரை பார்க்கச் சென்றாள். 
டாக்டர் ஜெயராணி 
நாப்பது வயதை கடந்தவள் போல் இருந்தாள். சேலை அணிந்திருந்தாள். நெற்றியில் திருநீர் 
அதனை அடுத்த வரிசையில் சின்னதாய் கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு இட்டியிருந்தாள். 
ஜெயராணி 
“உட்காருங்க” 
“ப்ரியட்ஸ் 
வர்ற டேட் முடிஞ்சி பத்து நாள் ஆச்சி இன்னும் வரலை” 
டாக்டர் அவர் 
கழுத்திலுள்ள தாழியை கவனித்தாள் 
“கல்யாணமாகி 
எத்தனை மாசம் ஆகுது?
” 
“மூன்று 
மாசம் டாக்டர்” 
“இதுக்கு 
முன்னாடி இப்படி வராம இருந்துருக்கா?
” 
“இல்ல 
டாக்டர்” 
டாக்டர் 
பரிசோதனைக்கு பின் 
“மாசமா 
இருக்கீங்க” 
ராக்ஷி மகிழ்ச்சி 
அடைந்தாள் 
ராக்ஷி 
“டாக்டர் 
என்ன குழந்தை பிறக்கும்னு பார்த்துச் சொல்ல முடியுமா?
” 
“ஏன் 
கேட்கிற,
உன் கணவருக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்குமே”
அதை பத்தி 
“ஆமா
“டாக்டர்,
ஆனா நாங்க காதல் திருமணம் செஞ்சவங்க” 
“ஓ! 
அப்படின்னா உங்க கணவர் பெயர் மணியா?
” 
“எஸ்” 
“குரோமோசோம் 
டெஸ்ட்ல பாஸிட்டிவ் தான் வந்தது” 
“அது 
நூறு சதவீதம் உண்மையா இருக்காதே,
வெறும் கால்குலேஷன்ல சொல்றது தானே 
”,
உனக்கு பிறக்க வேண்டிய குழந்தை?” 
பெண் குழந்தை?” 
“அப்படி 
பெண் குழந்தை பிறக்கவில்லையென்றால் உன் கணவருக்கு என்ன நடக்கும் தெரியுமா? 
“தெரியும் 
டாக்டர் ”
என்று கூறிவிட்டு தலையை கீழே குனிந்து கொண்டு அழுதாள். 
“அழாதம்மா,
படித்தவளே இப்படி அரசாங்க சட்டதிட்டங்களை மீறலாமா?” 
“என்ன 
டாக்டர் காதலித்து திருமணம் செய்து கொண்டாள் தவறா?” 
“தவறு 
தான். உனக்கு இந்த கதை தெரியாதென்று நினைக்கிறேன்”
தொடர்ந்து டாக்டர் பேசினாள். 
“நம் 
நாட்டின் இப்போதைய மக்கள் தொகை இருபது கோடி. இருபத்தோராம் நூற்றாண்டின் மக்கள் தொகை 
தெரியுமா?” 
“தெரியாது
”
என்றாள் ராக்ஷி 
“நூறு 
கோடி, 
எங்கு பார்த்தாலும் கூட்டம், நெருக்கடி சுத்தமான காற்றை கூட 
சுவாசிப்பது கஷ்டம். பேருந்து நிறுத்தத்திலே சிலர் குடும்பம் நடத்தினர். அதன்பின் 
அரசாங்கம் ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது. அதனால் 
பிறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் ஆண் குழந்தைகளின் பிறப்பு 
எண்ணிக்கை வட மாநிலங்களில் அதிகமாக இருந்தது. தமிழ் நாட்டில் மட்டும் பெண் 
குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருந்தது. இதனால் பெண் 
குழந்தைகளுக்கு தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு அதிகம் கடத்தப்பட்டனர். வயது 
கடந்த திருமணமாகாத ஆண்கள் திருமணமான பெண்களுடன் சேர்ந்து உடலுறவில் ஈடுபாடு 
குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். முடிவு ஒரு பெண்ணுக்கு பல கணவன்மார்கள் 
அமைந்தார்கள். இந்த நிலைமையை சரி செய்யவே இந்திய அரசாங்கம் வயதுக்கு வரும் ஒவ்வொரு 
ஆணின் விந்துக்களை பெற்று அதை பல்வேறு திருமணமாகாத பெண்ணின் கருமுட்டையுடன் 
சேர்த்து வாடகை தாயாக அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்படும் பெண்களின் வயிற்றில் 
வைத்து வளர்க்கிறார்கள். குழந்தை ஆணா இல்ல பெண்ணா என்று தெரிந்தவுடன் கருவை 
களைத்துவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் பெரும் சம்பளம் ஐந்து லட்சம் ரூபாய்,
சில சமயம் கருவை களைக்கும் போது இறப்பு கூட நேரிடும். ஒரு ஆணின் 
விந்தை பத்து வெவ்வேறு மாநில பெண்களின் கருமுட்டைகளோடு சேர்த்து பரிசோதிப்பார்கள். 
அதில் அதிகமாக எந்த குழந்தை பிறக்கிறதோ அதை அந்த ஆண் பெற்றெடுக்க வேண்டும் என்கிறது 
அரசாங்கம். பிறகு பரிசோதனை செய்த பெண்ணின் படங்களை அதற்குரிய ஆணின் வெட்டிங் பேஜில் 
அப்லோடு செய்கிறார்கள். இதற்கு மேல் ஒரு அரசாங்கம் ஜனத்தொகையை கட்டுப்படுத்த என்ன 
செய்ய முடியும்.” 
ராக்ஷி 
“நீங்கள் 
சொன்ன கதையைத்தான் என் அம்மாவும் கூறினாள்,
இப்ப என் நிலைமைக்கு பதில் என்ன?” 
டாக்டர் ஜெயராணி 
சற்று கோபத்துடன் சிரித்தாள்,
சுயநலமிக்க பெண்கள் என்று வாயிற்றுக்குள்ளே சொல்லிக்கொண்டாள். 
டாக்டர் 
“எதுவானாலும் 
பத்து மாதம் கழித்து தான் சொல்ல முடியும்,
நீங்கள் புறப்படலாம்”
என்றாள். கோபத்துடன். 
ராக்ஷியின் 
வயிற்றில் குழந்தையிடம் பயமும் சேர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. 
vigneshpushparaj@yahoo.co.in |