- கனிஷ்கா (தென்காசி, தமிழ்நாடு) -
அத்தியாயம் ஒன்று!
 தினமும்தான் 
              சூரியன் உதிக்கிறது. தினமும் விடியத்தான் செய்கிறது. இருந்தாலும் 
              இந்தக் காலைப்பொழுது மட்டும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே 
              இருக்கிறதல்லவா! காலை சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் தனி 
              மகிமைதான். ஆனால் நமது ரிஷிக்கு மட்டும் ஒருநாளும் ஏழு மணிக்கு 
              முன்பு விடிவதேயில்லை. ரிஷி சிறு வயதிலேயே பெற்றோரை ஒரு விபத்தில் 
              இழந்துவிட்டான். தாத்தா தர்மா பாட்டி செண்பகம் இருவரின் அன்பான 
              அரவணைப்பில் வள்ர்ந்தவன். ரிஷிக்கு இப்பொழுது பதின்மூன்று வயது. ஒரு 
              வருடத்திற்குமுன்பு தாத்தா இறந்து விட்டதால் பாட்டியே அவனுக்கு 
              அம்மாஅப்பா எல்லாமுமாக இருந்தாள்.
தினமும்தான் 
              சூரியன் உதிக்கிறது. தினமும் விடியத்தான் செய்கிறது. இருந்தாலும் 
              இந்தக் காலைப்பொழுது மட்டும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே 
              இருக்கிறதல்லவா! காலை சுறுசுறுப்புக்கும் பரபரப்புக்கும் தனி 
              மகிமைதான். ஆனால் நமது ரிஷிக்கு மட்டும் ஒருநாளும் ஏழு மணிக்கு 
              முன்பு விடிவதேயில்லை. ரிஷி சிறு வயதிலேயே பெற்றோரை ஒரு விபத்தில் 
              இழந்துவிட்டான். தாத்தா தர்மா பாட்டி செண்பகம் இருவரின் அன்பான 
              அரவணைப்பில் வள்ர்ந்தவன். ரிஷிக்கு இப்பொழுது பதின்மூன்று வயது. ஒரு 
              வருடத்திற்குமுன்பு தாத்தா இறந்து விட்டதால் பாட்டியே அவனுக்கு 
              அம்மாஅப்பா எல்லாமுமாக இருந்தாள். "ரிஷி! ஏய் ரிஷிக்கண்ணா! ஸ்கூலுக்கு நேரமச்சுடா எழும்பி புறப்படு. நேற்றே ஸ்கூல் பஸ்ஸை விட்டுடப்பார்த்தியே! இன்றாவது சீக்கிரம் கிளம்பக் கூடாதா?" பாட்டியின் குரல்கேட்டு விருப்பமின்றி படுக்கையை விட்டு எழும்பிய ரிஷி பாட்டியின் கழுத்தை கட்டிக்கொண்டு"பாட்டி! ப்ளீஸ் பாட்டி! இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்" என்றுபாட்டியின் கன்னத்தில் ஒரு 'இச்' வைத்தான்.
பேரனின் இச்சில் சொக்கிய பாட்டி "சரி அஞ்சு நிமிஷம்தான்எழும்பி வந்திடணும் சரியா?"என்ற பாட்டியின் கன்னத்தில் மீண்டும் ஒரு'இச்' வைத்து "என் செல்ல பாட்டி" என்று சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். பாட்டி புன்னகைத்துக் கொண்டே சென்று விட்டாள்.பத்து நிமிடம் கழித்து "பாட்டி குட்மார்னிங்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து வந்தான். "இப்படியே தூங்கிக்கிட்டு இருந்தால்'குட் ஆப்டர்நூன்" ஆயிடும். சரி சரிஇ போய் சீக்கிரம் குளிச்சுக் கிளம்பு.நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்""பாட்டி! இன்னைக்கு பத்து நிமிஷம் முன்னாடியே ஸ்டாப்புக்குப் போகணும். இப்பெல்லாம் ஸ்கூல் பஸ் சீக்கிரம் வந்துடுது."நீ ஒரு நாளும் சரியான நேரத்திற்கு ஸ்டாப்புக்குப் போறதில்லை.பாதி சாப்பாட்டில எழும்பி தினமும் அவசரமா ஓடற. அப்புறம் எப்படிபத்து நிமிஷம் முன்னாடி போகப்போறே?""பாட்டி! என்னோடசயின்ஸ் நோட்டைக்காணலை. ஐயோ! என்னோடபேனாவையும் காணலையே.!""டேய் கத்தாதே! உன் ரூம்லதான் எங்காவது இருக்கும் பாரு.தினமும் இதே வேலைதான். ராத்திரி பன்னிரண்டு மணி வரைக்கும்ரெண்டு பேரும் லூட்டி அடிக்கிறீங்க. அறையையே தலைகீழா மாத்திடிறீங்க. காலையில எழும்பி பேனாவைக் காணோம்இ பென்சிலைக்காணோம்னு புலம்பல்.""பாட்டி இந்த ரினோ பயலை எங்க? அவன்தான் எங்காவது எடுத்துவைச்சிருப்பான்.
"அவன் என்றைக்குக் காலையில வீட்டில இருந்தான். ஐந்துமணிக்கு எழும்பி போறவன்தான் அப்புறம் எட்டு மணிக்கு தட்டைத்தூக்கிக்கிட்டு தாளம் போட்டுட்டு சாப்பிடத்தான் வருவான். எங்கபோறான்? எப்படிப் போறான்? எதுக்கு போறான்? எதுவுமே தெரியல.அவன் இங்கு வந்ததிலிருந்து அவன் செய்கை எல்லாமே மர்மமாகஇருக்கிறது. ஏதாவது கேட்டாலும் சிரிச்சே மழுப்பிடுவான். காலையிலமட்டுமா போறான். இப்பவெல்லாம் திடீர் திடீர்னு காணாமப் போயிடுறான். எங்க போறான்னே தெரியலை." "அவனுக்கு நீ ரொம்ப செல்லம் கொடுக்கிறே இல்ல அதுதான்.நல்லா பாலிலேயும் முட்டையிலேயும் பதார்த்தம் பண்ணிப் போட்டுவளர்க்கிறே. அதுதான் அவனுக்கு கொழுப்பு கூடிப்போச்சு.
""அவனும் உன்னைப் போலதாண்டா! ரொம்ப நல்லவன். நமக்குஎவ்வளவு துணையாய் இருக்கிறான். சரி நீ புறப்படு நான் ரினோவந்தவுடன் கேட்கிறேன்."" ஓ கே பை பாட்டி"" பைடா செல்லம்"ரிஷியை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் பாட்டி. அங்கேரினோ சாப்பாட்டிற்காகத் தட்டை தட்டி தாளம் போட்டுக்கொண்டிருந்தது."வாடா! என் தேள் கொடுக்கு வாலா! ஆபிசுக்கு நேரமான மாதிரிதட்டைத் தூக்கிருவியே! காலையிலிருந்து எங்கேடா போன? கேட்டாவாய் திறக்க மாட்டியே! உன்னை ரெண்டு நாளைக்குப் பட்டினிபோட்டாத்தான் சரிவருவே." பாட்டி புலம்பிக் கொண்டிருக்கையில் ரினோவேகமாக ஓடிவந்து பாட்டியின் கையைப் பிடித்து ஒரு 'ஸ்'தந்தது."ரெண்டு பேரும் ஐஸ் வச்சே காரியத்தைச் சாதிச்சிடுவீங்களே!சரி சரி வா" பாட்டியின் பின்னால் குடுகுடுவென்று ஓடியது ரினோ.
யார் இந்த ரினோ? ரிஷிக்கு அண்ணனா தம்பியா?ஆனால் பெரிய குரும்புக்காரன்.ரிஷியின் தாத்தா தர்மா ஒரு விலங்கியல் பேராசியராக இருந்தவர்.விலங்குகளிடம் அன்பும் பரிவும் காட்டக்கூடியவர். வீட்டில் ஒரு சிறுமிருகக்காட்சி சாலை என்று சொல்லுமளவுக்கு விலங்குகளை வைத்திருந்தார்.
ரிஷியின் பெற்றோர் மறைவுக்குப் பின் அவை அனைத்தையும்காட்டிலாகாவிடம் ஒப்படைத்து விட்டு சென்னையை விட்டு வந்துகுற்றாலத்திற்கு அருகில் செண்பகபுரம் என்ற ஒரு சிறு நகரத்தில் வீடுவாங்கி பாட்டி செண்பகம் ரிஷி இருவருடனும் குடிபுகுந்தார்.அந்த வீட்டிற்கு பின்புறம் அடர்த்தியான மரங்களும் செடிஇ கொடிகளும் வளர்ந்திருந்தன. தரையே தெரியாத அளவுக்கு குப்பைகளும்இலைச்சருகுகளும் மண்டிக்கிடந்தன.
ஒருநாள் தர்மா அவற்றை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது சருகுகளுக்குள்ளே ஏதோ நெழிவதுபோல் தெரிந்தது. ஒருகுச்சியை எடுத்து சருகுகளை விலக்கினார். அங்கே அவர் கண்டகாட்சி அவருக்குப் பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
இதுவரை எங்குமே பார்த்திராத விலங்கு ஒன்று அங்கு இருந்தது.பாம்பு போன்ற வழுவழுப்பான உடம்பு. தேள் கொடுக்கு போல் மேல்நோக்கி வளைந்த வால். உருண்டையான பெரிய கண்கள். தலையில்ஒற்றைக் கொம்பு. சின்ன சின்ன கைகால்கள். முகம் வித்தியாசமானதாகஇருந்தது. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருந்தது. எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. இரண்டடிஉயரம் இருக்கும். .வினோதமான இப்படியொரு விலங்கினைப் பார்த்தால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?
தர்மா மெதுவாக அதன் அருகில் சென்றார் . அது இவரைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது. மெதுவாக அதை தொட்டுப்பார்த்தார். அது இவரை ஒன்றும் செய்யாததால் தைரியமாக அதைகையில் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தார்.அவரைப் பார்த்ததும் " என்னங்கஇ தோட்டத்தை சுத்தம் செய்யபோனீங்க உடனே வந்துட்டீங்க" என்று கேட்ட பாட்டி செண்பகம்அவர் கையிலிருந்த வினோதமான விலங்கினைப் பார்த்ததும் அலறியேவிட்டாள்.
"என்னங்க இது? ஏதோ வித்தியாசமா இருக்கு. இதை எங்கேயிருந்து பிடிச்சிட்டு வந்தீங்க? எனக்குப் பார்க்க பயமா இருக்கு. ரிஷிபார்த்தாலும் பயந்து விடுவான்"
"பயப்படாதே! இது நம்மை ஒன்றும் செய்யாது. நமது தோட்டத்தில்தான் இருந்தது." என்று சொல்லிக்கொண்டே அந்த விலங்கினைகீழே விட்டார்.
"இல்லைங்க இதால நமக்கு ஆபத்து ஏதாவது 
              ஏற்படப் போகுது. இதை எங்காவது விட்டுட்டு வந்துடுங்க.""செண்பகம்! 
              சென்னையில் நான் வளர்த்த எல்லா விலங்குகளையும்விட்டுட்டு வந்தபோது 
              மிகுந்த வேதனையாக இருந்தது. ஆனால் இப்பொழுது இதைப் பார்த்தவுடன் என் 
              வேதனையெல்லாம் தீர்ந்ததுபோல் உணர்கிறேன். இதை நாமே வளர்ப்போம். நம்மை 
              ஒன்றும் செய்யாது."தர்மா கூறியதைக்கேட்ட செண்பகத்திற்கு 
              திருப்தியில்லை. 
              
              "எனக்குஎன்னவோ பயமாக இருக்குது" என்றாள்.
              
              "பயப்படாதீர்கள்! நான் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டேன்."
              
              கரகரப்பான கட்டைக்குரல் 'யார் பேசியது?' இருவரும் அதிர்ச்சியுடன் 
              சுற்றிலும் திரும்பிப் பார்த்தனர். 
              
              "நான்தான் பேசினேன்" அந்தவினோத விலங்கிட மிருந்துதான் குரல் 
              வந்தது."நீயா! நீ பேசுவியா?" இருவரும் ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
              
              
              "ஆமா,என்னால் பேச முடியும்" என்று சொல்லிக் கொண்டே அதுஎழுந்து 
              நின்றது.
              
              "நீ யார்? இங்கே எப்படி வந்தே?"என்று தர்மா கேட்டார்.
              
              "என் பெயர் 'ரினோ' நான் கல்பாவுக்குச் சொந்தக்காரன். அது மட்டும்தான் 
              என்னால் இப்பொழுது சொல்ல முடியும். ஆனால் நான் எந்த தீங்கும் 
              செய்யமாட்டேன். நான் இங்கிருப்பது வெளியில் தெரிந்தால்என்னைத் தேடிக் 
              கொண்டிருப்பவர்களால் எனக்கு ஆபத்து ஏற்படும்.எனக்கு நீங்கள் 
              பாதுகாப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் உங்களுக்கு என்றும் 
              விசுவாசமாக இருப்பேன். 
              
              "'கல்பா' என்ற வார்த்தையைக் கேட்டதும் தாத்தாவும் 
              பாட்டியும்அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அதன்பின் ரினோ கூறிய 
              எதுவும்அவர்கள் காதில் விழவில்லை. சிறிது நேரம் ரினோவையே 
              கண்இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் தர்மா. 
              
              "என்னை ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் சொல்வதில் உங்களுக்கு 
              நம்பிக்கை இல்லையா?" ரினோ பரிதாபமாகக் கேட்டது. 
              
              "முதலில் நீ எங்கேயிருந்து வந்தே? உன்னை யார் இங்கு அனுப்பியது என்று 
              சொல்""என்னுடைய பெயரும் நான் கல்பாவின் உயிரினம் என்பதும் 
              மட்டும்தான் எனக்கு இப்பொழுது ஞாபகம் இருக்கு. வேறு எதுவும் 
              தெரியாது" 
              
              "கல்பாவா அப்படின்னா என்ன?"
              
              "தெரியாது."
              
              "இல்லை உனக்கு எல்லாம் தெரியும் ஆனால் நீ பொய் சொல்றேஉன்னை இங்கு 
              அனுப்பியது யார் என்று சொல்லவில்லையென்றால் நீ இங்கிருந்து உடனே 
              போய்விடு." 
              
              "நீங்க ரொம்ப நல்லவங்க. அதனால நான் இங்கேதான் இருப்பேன்.என்னை நீங்க 
              வெளியில அனுப்ப மாட்டிங்க" 
              
              "இல்லை உன்னை நாங்க நம்பவில்லை. உங்கிட்ட ஏதோ ரகசியம்இருக்கு. நீ அதை 
              சொல்லாத வரையில் உன்னை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்." தர்மா 
              சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது"ஹாய் தாத்தா ஹாய் பாட்டி" என்று 
              சொல்லிக் கொண்டே ரிஷி வீட்டிற்குள் நுழைந்தான். 
              
              அங்கே அவர்களுடன் நின்றிருந்த ரினோவைப் பார்த்துவிட்டு "ஆ! தாத்தா 
              யாரிது? எங்க யாருக்கும் தெரியாமல் நீங்க உருவாக்கினீங்களா? இல்லை 
              வேறு ஏதாவது கிரகத்தில் இருந்து இங்கே வந்துடுச்சா?"என்று 
              ஆச்சர்யமுடன் கேட்டான். 
              
              "அப்படியெல்லாம் இல்லை ரிஷி. இதன் பெயர் ரினோ. எங்கிருந்தோநம்ம 
              தோட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கு."பன்னிரெண்டு வயது ரிஷிக்கு 
              ரினோவைப் பார்த்து எந்த பயமும்ஏற்படவில்லை. மாறாக ரினோவின் வருகை 
              அவனுக்கு மிகவும் மகிழ்ச்யைக் கொடுத்தது.ரினோ ரிஷியைப் பார்த்துப் 
              புன்னகைத்தது. ரிஷியும் ரினோவின் கைகளைப் பற்றிக் கொண்டு "இனி நாம 
              ரெண்டுபேரும் ப்ரெண்ட்ஸ்"என்றான். 
              
              "இல்லை சகோதரர்கள்" என்றது ரினோ.
              
              "ரிஷி! வேண்டாம். இதுஉனக்கு நண்பனுமில்லை சகோதரனுமில்லை.நீ உள்ளே போ. 
              ரினோ! நீ உண்மையைச் சொல்லலேன்னா இங்கிருந்து வெளியே போ" 
              
              "தாத்தா! இந்த ரினோவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனாலஅது 
              இங்கேயே இருக்கட்டும். ப்ளீஸ் தாத்தா. பாட்டி நீங்க சொல்லுங்கபாட்டி. 
              எனக்குத் துணையா ரினோ எங்கூடவே இருக்கட்டும்""ஆமா பாட்டி! எனக்கும் 
              ரிஷியை ரொம்பப் பிடிச்சிருக்கு. நான்இங்கேயே இருந்துக்கறேன்." என்று 
              சொல்லிக் கொண்டே ரினோ மேலெழும்பி மூன்று பேரையும் சுற்றி பறந்து 
              வந்தது.ரினோ பறப்பதை மூவரும் ஆச்சர்யமுடன் பார்த்தனர்.ரிஷியின் 
              பிடிவாதத்தால் ரினோ அங்க அனுமதிக்கப்பட்டது. 
              
              ஆனால் ரினோவிடம் தாத்தாவுக்கு இருந்த சந்தேகமும் பாட்டிக்குஇருந்த 
              பயமும் நீங்கவில்லை. 
              
              "பாட்டி! எனக்கு பசிக்கிறது. சாப்பாடுகிடைக்குமா?" மிகவும் 
              பரிதாபமாகக் கேட்டது ரினோ.பசி என்றவுடன் பாட்டிக்கு மனது இளகியது. 
              எதிரிக்குக்கூட பசியென்றால் பாட்டி உடனே உணவளித்து விடுவாள். உணவு 
              மட்டும் யாருக்கும் இல்லையென்று சொல்லமாட்டாள். 
              
              ரினோவிடம் "நீ என்னசாப்பிடுவே?" என்று கேட்டாள்..நான் இதுவரை பால் 
              பழங்கள் காய்கறி இதெல்லாம் சாப்பிட்டேன்.இனி இங்க உங்களோட சமையல் 
              ருசியாயிருந்தா அதையும் சாப்பிடமுயற்சிக்கிறேன்." 
              
              "பாட்டி சமையல் சுமாராகத்தான் இருக்கும். எதுக்கும் நீ கொஞ்சநாளைக்கு 
              அதையே கன்டினியு பண்ணுவது உன் உடம்புக்குநல்லது" என்ற ரிஷியை பாட்டி 
              செல்லமாக முதுகில் ஒரு போடுபோட்டாள். தாத்தா எதுவும் சொல்லாமல் அந்த 
              இடத்திலிருந்து நகர்ந்தார்.இரவு மணி பதினொன்றாகியும் தர்மாவுக்குத் 
              தூக்கம் வரவில்லை. 
              
              மெதுவாக எழும்பினார். நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த 
              அந்தஒதுக்குப்புறம் உள்ள பெரிய அறையை நோக்கி நடந்தார். சத்தம் 
              வராதவாறு மெதுவாக கதவைத்திறந்து உள்ளே சென்று மீண்டும் 
              கதவைச்சாத்திக் கொண்டார்.அந்த அறையில் பறக்கும் தட்டு போன்று ஒரு 
              வாகனம் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்குப் 
              பழையநினைவுகள் கண்முன் தோன்றின.அன்று ஒரு நாள் அதிகாலை நேரம் 
              வாசல்கதவைத் திறந்த பாட்டிசெண்பகம் அங்கு எதையோ பார்த்து பயந்தவள் 
              போல் ஓடிவந்து தர்மாவை எழுப்பி வாசலுக்கு அழைத்துச் சென்றாள். 
              தர்மாவும் என்னவோ ஏதோவென்று அவசரமாக ஓடிச்சென்றவர் அங்கு 
              கண்டகாட்சியில் அதிர்ச்சியுற்றார்.பொன்னிறத்தில் வட்ட வடிவமான இருவர் 
              அமரக்கூடிய ஒருஅழகிய பறக்கும் தட்டு போன்ற ஒரு வாகனம். மேற்புறம் 
              கண்ணாடிபோன்ற மூடியால் மூடப்பட்டிருந்து. முன்பகுதி ராக்கெட்டின் 
              முகப்புபோன்ற அமைப்பு. பார்த்தவுடன் ஏறி அமரச்சொல்லும் கவர்ச்ச.p 
              ஆனால்அது சாதாரணமானதாக தர்மாவுக்குத் தோன்றவில்லை. அந்த வாகனத்தி ல் 
              'கல்பாவின் ரோடாஸ்' என்று எழுதியிருந்தது. 
              
              எழுத்துக்கள்இருட்டிலும் ஒளிரும் வண்ணம் பளிச்சென இருந்தன.'இதை யார் 
              இங்கே கொண்டுவந்து நிறுத்தி வைத்தார்கள்' என்றுயோசித்துக்கொண்டே அதன் 
              அருகில் சென்று பார்த்தார். அதில் ஏதோதாள்போல் 
              நீட்டிக்கொண்டிருந்தது. அதை எடுத்து விரித்துப்பார்த்தார்.அது ஒரு 
              கடிதம்போல் தெரிந்தது. அதைப் படித்துப் பார்த்தவர் அப்படியே ஏதோ 
              நினைவுகளில் முழ்கிவிட்டார்.செண்பகம் பாட்டிக்கு ஒன்றுமே 
              புரியவில்லை. இவர் ஏன் இப்படிஅமைதியாக நிற்கிறார் என்ற குழப்பத்துடன் 
              அவரை நோக்கி 
              
              "என்ன ஆச்சு? ஏன் இப்படி நிக்கிறீங்க?" என்று கேட்டாள்.உடனே சுய 
              நினைவுக்கு வந்த தர்மா "ஒன்றுமில்லை. முதலில் இதை ரிஷிக்குத் 
              தெரியாமல் மறைச்சு வைக்கணும். போய் அந்த ஒதுக்குப்புறமுள்ள கடைசி 
              அறையைத்திற . அவன் எழும்பும் முன்பு இதைஅங்கு வைத்து பூட்டிடணும்."
              
              
              "இது யாருடையது? நாம ஏன் இதை வச்சிக்கணும்? அப்படிஅந்த பேப்பரில் 
              என்னதான் எழுதியிருக்குது?""இப்பொழுது சொல்றதுக்கு நேரமில்லை. 
              முதலில் உள்ளே கொண்டுசெல்லணும். ஆனால் இதை எப்படி உள்ளே கொண்டு 
              செல்வது என்றுதான் தெரியலியே!" என்று தர்மா யோசித்துக் 
              கொண்டிருக்கும் பொழுதுஅந்த வாகனம் மெதுவாக அசைந்தது. இருவரும் 
              அடுத்து என்னநடக்குமோ என்று ஆச்சர்யமுடன் பார்த்துக் 
              கொண்டிருந்தனர்அந்த ரோடாஸ் என்ற வாகனம் தானாகவே நகர்ந்து அந்த 
              அறைக்குச் சென்று விட்டது. 
              
              அன்று அந்த அறையில் வைத்து பூட்டப் பட்டதுதான். அடுத்துமூன்று 
              மாதங்களுக்குப்பின் இப்பொழுதுதான் அந்த அறையைத் திறந்துபார்த்தார். 
              இன்றுதான் செய்துவைத்தது போல் புத்தம் புதிதாக இருந்தது அந்த 
              வாகனம்.வாகனத்தில் எழுதியிருந்த 'ரோடாஸ்' என்ற 
              எழுத்துக்களைத்தடவிப்பார்த்தார். அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் 
              சத்தம் கேட்டது. 
              
              'யாராக இருக்கும்?' என்று யோசித்துக் கொண்டே போய் கதவைத்திறந்து 
              யாரென்று பார்த்தார். செண்பகம் பாட்டிதான் 
              நின்றுகொண்டிருந்தாள்."என்னங்க இந்த நேரத்தில் இங்கே என்ன 
              செய்றீங்க?""செண்பகம் இந்த வாகனத்திற்கும் அந்த ரினோவுக்கும் 
              ஏதோநெருங்கிய தொடர்பு இருக்குது.""ஆமா எனக்கும் அப்படித்தான் தோணுது. 
              இதில் ஒரு கடிதம்இருந்ததே அதில் என்ன எழுதியிருந்தது?" 
              
              "இந்தா நீயே படிச்சுப்பார்" என்று மறைத்து வைத்திருந்த அந்தபேப்பரை 
              எடுத்து செண்பகத்திடம் கொடுத்தார். அவள் அதை வாங்கிபடித்தாள். 
              அதில்'தர்மா! இந்த வாகனம் சாதாரணமானதல்ல. இது 'கல்பாவின்ரோடாஸ்'. 
              ரிஷிக்காக உருவாக்கப்பட்டது. ரிஷி அற்புத சக்தி உள்ளவன். இந்த ரோடாஸை 
              அவனிடம் கொடுத்துப்பார். அப்பொழுது அவ னது சக்தி வெளிப்படும். ரிஷி 
              சாதிப்பதற்காகவே பிறந்தவன். அவன்கோழையல்ல. அவன் சாதாரணமான பூலோகப் 
              பிறவியுமல்ல. அவன்கல்பாவின் சொந்தக்காரன் இதை சிறிது காலங்களில் நீ 
              தெரிந்து கொள்வாய்' என்று எழுதி கீழே உன் அண்ணன் 'வசந்தன் என்ற 
              வத்ஸாசர்' என்று பெயரும் எழுதியிருந்தது.அதை படித்து முடித்த பாட்டி 
              "என்னங்க இது உங்க அண்ணன்வசந்தன்தானா? இப்ப எங்க இருக்காரு?" என்று 
              கேட்டாள். 
              
              "யாருக்குத் தெரியும்? அண்ணன் இருபது வயதில் வீட்டைவிட்டுச் 
              சென்றவர். இதுவரை எங்கேயிருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. 
              ஆனால் அவர் நம்மைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். 
              அதுதான் எப்படின்னு தெரியல. இதை நம்புவதா? கூடாதா?ஒன்றுமே புரியல. 
              ஆனால் அந்த ரினோவுக்கு எல்லாம் தெரிந்திருக்கும்என்று நினைக்கிறேன்."
              
              
              "உங்கள் அண்ணன் ஏன் வீட்டைவிட்டுச் சென்றார்?"பாட்டி செண்பகம் 
              கேட்டவுடன் தர்மா சிறுவயது நினைவுக்குத் திரும்பினார். 
              
              வசந்தனுக்கு சிறு வயதுமுதலே பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்தஈடு பாடு 
              உண்டு. எப்பொழுதும் நாய் பூனை முயல் என்று அவனைச்சுற்றி 
              விலங்குகளாகத் திரியும்.வசந்தன் வளர வளர விலங்குகளை வளர்ப்பதில் 
              மட்டுமல்லாமல்அவற்றைப்பற்றி ஆராய்ச்சி செய்யவும் ஆரம்பித்தான்.அதனால் 
              அவனது அறைமுழுவதும் விலங்குகளும் பூச்சிகளும்பறவைகளுமாக 
              இருந்தன.கண்ணில் ஏதாவது உயிரினம் பட்டுவிட்டால் அடுத்த நிமிடம்அது 
              அவனது அறையில் இருக்கும். நாளாக நாளாக அவனது விலங்குகள் பற்றிய 
              ஆராய்ச்சி ஒருவித வெறியாக மாறியது.'நாயின் உடம்பில் பூனையின் தலை 
              குதிரையின் உடம்பில் மானின் தலை இதுபோல் வினோதமான உயிரினங்களை ஏன் 
              உருவாக்கக்கூடாது?' என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான்.அவனது 
              செய்கையால் அவனை எல்லோரும் 'பித்தன்' என்றனர். 
              
              தந்தையும் வசந்தன் மேல் கோபம் கொண்டு "உன் ஆராய்ச்சியை வீட்டிற்கு 
              வெளியே வைத்துக்கொள். கண்ட கண்ட மிருகங்களை எல்லாம் வீட்டிற்கு 
              கொண்டுவராதே. என் சொல்லை மீறினால் உன்னைவீட்டை விட்டே 
              வெளியேற்றிவிடுவேன்." என்று எச்சரித்தார்.அதன்பின் வசந்தன் தன் 
              உடைமைகளை கெஸ்ட் ஹவுஸிற்குமாற்றினான். அங்கு எப்பொழுதும் ஆராய்ச்சி 
              ஆராய்ச்சிதான். சரியாகசாப்பிடுவதில்லை. வீட்டிற்கும் அதிகமாக 
              வருவதில்லை.ஒரு நாள் அவன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த 
              அம்மாஅவனுக்காக சாப்பாடு எடுத்துக்கொண்டு கெஸ்ட் 
              ஹவுஸ_க்குச்சென்றாள். அங்கு வசந்தன் வளர்த்த பாம்புகளில் ஒன்று 
              கூண்டிலிருந்துஎப்படியோ வெளியில் வந்து நடமாடிக் கொண்டிருந்ததை 
              வசந்தன்கவனிக்கவில்லை. அம்மாவும் உள்ளே நுழையும் பொழுது கீழே 
              கிடந்தபாம்பைக் கவனிக்காமல் அதன் மேல் காலை வைத்து விட்டாள். 
              அதுஅவளைக்கடித்து விட்டது. எவ்வளவோ முயன்றும் அவளைக்காப்பாற்ற 
              முடியவில்லை. ஏற்கனவே வசந்தன்மேல் கோபமாக இருந்த தந்தை அவன் தாய் 
              இறப்பதற்கு அவனே காரணமாகி விட்டதால் மேலும் கோபமுற்று வசந்தனை வீட்டை 
              விட்டு வெளியே துரத்திவிட்டார்.அன்று போனவன்தான். அதன்பின் என்ன 
              ஆனான் என்று யாருக்கும்தெரியாது.வசந்தனைப்பற்றி தர்மா செண்பகத்திடம் 
              சொல்லி முடிக்கும்பொழுதுஅவர் கண்களிலிருந்து நீர் 
              வழிந்துகொண்டிருந்தது.செண்பகம்தான் அவரை சமாதானப்படுத்தினாள். 
              
              " முதலில் வந்துதூங்குங்க. உங்க அண்ணனைப் பற்றிக் காலையில் 
              ரினோக்கிட்டகேட்கலாம்."
              "செண்பகம்! நீ ஒன்றைக் கவனிச்சியா? 'கல்பா' இந்த வார்த்தையைத்தானே 
              ரினோவும் சொன்னான் . இந்த 'கல்பா'ன்னா யார் என்னன்னுதெரியலையே!.
              
              "இருவரும் குழப்பத்துடன் படுக்கைக்குச் சென்றனர்.
              
              மறுநாள் ரிஷி ஸ்கூலுக்குச் சென்றவுடன் தர்மா சாப்பிட 
              அமர்ந்தார்.அவருக்கு உணவு எடுத்து வைத்த பாட்டியிடம் "ரினோவுக்கு 
              சாப்பாடுபோட்டியா?" என்று கேட்டார்."இல்லை.""இப்பொழுது அவன் 
              எங்கே?""மாடியில் ரிஷியோட ரூம்ல இருப்பான்""அவனை வரச்சொல். 
              அவனுக்கும் சாப்பாடு போடு."பாட்டி ரினோவை அழைத்து சாப்பாடு போட்டாள். 
              சாப்பிட்டு முடிக்கும்வரை தர்மா ரினோவிடம் எதுவும் பேசவில்லை.சிறிது 
              நேரம் கழித்து" ரினோ! என்னுடன் வா!" என்று ரினோவைஅழைத்துக்கொண்டு 
              பூட்டியிருந்த அறையை நோக்கி நடந்தார். ரினோஅவரைப் 
              பின்தொடர்ந்தது.அறையைத் திறந்து அங்கிருந்த வாகனத்தைக் காட்டி 
              
              "ரினோ!இதைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.இனியும் 
              தெரியாது என்று சொன்னால் தர்மா நம்பமாட்டார் என்றுஎண்ணிய ரினோ 
              "தெரியும்" என்றது. 
              
              ரினோ தெரியும் என்று சொன்னதும் தர்மாவிற்கு சந்தோஷம்ஏற்பட்டது. பல 
              நாட்களாகத் தெரியாமல் இருந்த ஒரு மாபெரும்ரகசியம் இன்று ரினோ 
              மூலமாகத் தெரியப்போகிறது என்ற மகிழ்ச்சியில்கண்களை அகல விரித்து 
              ரினோவை நோக்கி"உனக்குத் தெரியுமா? சொல். நீ யார்? இந்த வாகனத்தையும் 
              உன்னையும் இங்கு அனுப்பியது யார்? 'கல்பா' ன்னா என்ன?" 
              என்றுஆவல்பொங்கக் கேட்டார்."என்னையும் இதையும் இங்கு அனுப்பியது 
              வத்ஸாசர்" என்றதுரினோ."வத்ஸாசர்! யார் அந்த வத்ஸாசர்?""அதுதான் 
              உங்களுக்குத் தெரியுமே! உங்கள் அண்ணன்தான்என்று" 
              
              " ஆனால் என் அண்ணன் பெயர் 'வசந்தன்' தானே வத்ஸாசர்இல்லையே"
              
              "வசந்தன்தான் வத்ஸாசர் ஆகிவிட்டார்."
              
              "அவர் இப்பொழுது எங்கிருக்கிறார்?" 
              
              "அவர் இப்பொழுது உயிருடன் இல்லை."அண்ணன் உயிருடன் இல்லை என்று ரினோ 
              சொன்னதும் தர்மாவுக்கு மனதில் வருத்தம் ஏற்பட்டது. சிறிது நேரம் அவர் 
              எதுவும்பேசவில்லை.பாட்டி செண்பகம்தான் ரினோவிடம் 
              "அப்படியானால் நீ எப்படிஇங்கே வந்தே?"என்று கேட்டாள்.
              
              "அது பெரிய கதை நேரம் வரும்பொழுது சொல்கிறேன். ஆனால்என்னாலோ இந்த 
              ரோடாஸினாலோ ரிஷிக்கு மட்டுமல்ல யாருக்கும் எந்தஆபத்தும் ஏற்படாது. 
              ஏனென்றால் கல்பாவுக்குரிய படைப்புகள் பாவங்கள் செய்வதில்லை. ஆனால் 
              ரிஷி இருக்கும் இடத்தில்தான்நான் இருக்கமுடியும். இருக்க வேண்டும். 
              இதை நீங்கள் நம்பினால்நான் இங்கிருக்கிறேன். இல்லையென்றால் உங்கள் 
              விருப்பப்படி நான்இப்பொழுதே சென்றுவிடுகிறேன்." 
              
              "எப்படி உன்னை நம்பமுடியும்? எந்த உண்மையையும் சொல்லமாட்டேன்கிறாயே. 
              சரிஸ. 'கல்பா' ன்னா என்னன்னு சொல்.""தெரியாது. வத்ஸாசர்தான் ' நீ 
              கல்பாவின் உயிரினம்' என்றுசொன்னார்" 
              "சரி உன்னை இங்கே இருக்கிறதுக்கு அனுமதிக்கிறேன். அதற்காக உன்னை நான் 
              முழுவதும் நம்பிட்டேன்னு நினைக்காதே. உன்மேல் ஏதாவது ஒரு சிறு 
              சந்தேகம் எங்களுக்கு ஏற்படட்டாலும்உடனே உன்னை இங்கிருந்து 
              அனுப்பிடுவேன்"ரினோ மூலம்தான் அண்ணனைப் பற்றிய ரகசியங்களைத் 
              தெரிந்துகொள்ளமுடியும் என்று எண்ணித்தில் தான் ரினோவை 
              அவர்களுடன்இருப்பதற்கு அனுமதித்தார் தர்மா. 
              அன்றிலிருந்து ரினோ அந்த வீட்டில் ஒருவனாக மாறிவிட்டது.ரினோவின் 
              சுட்டித்தனத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்த 
              அவர்களுக்குநாளாவட்டத்தில் அதை மிகவும் பிடித்து விட்டது.ரிஷி 
              என்றால் ரினோவுக்கு உயிர். அவன் படித்துக்கொண்டிருந்தால்அவனை எந்த 
              தொந்தரவும் செய்யாது. ஆனால் அவன் அருகில்அமர்ந்து அவன் படித்துக் 
              கொண்டிருப்பதையே கண் இமைக்காதுபார்த்துக்கொண்டிருக்கும். இதை கவனித்த 
              ரிஷி ஒரு நாள் அதனிடம்"ஏண்டா! நான் படிசிசிட்டு இருக்கும்பொழுது 
              மட்டும் எங்கேயும் போகாமல் என் பக்கத்திலேயே உட்கார்ந்து என்னையே 
              பார்த்துக்கிட்டிருக்க?" என்று கேட்டான். 
              
              "ரிஷி! எனக்கும் படிக்க ஆசையா இருக்கு. சொல்லித்தாயேன்"என்றுரினோ 
              சொன்னதைக்கேட்டு ரிஷிக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது.அவன் 
              சிரிப்பதைப் பார்த்த ரினோ "ஏன் சிரிக்கிறே? என்னால படிக்கமுடியாது 
              எழுத முடியாதுன்னு நினைக்கறே இல்ல.என்னுடைய திறமையைப்பற்றி உனக்குத் 
              தெரியாது. நீ எனக்கு சொல்லிக்கொடு. அப்புறம்பாரு அய்யாவோட திறமையை."
              
              
              "டேய் உன்னால முடியாததை எல்லாம் பேசாதே! முதலில் அந்தபக்கம் போ. 
              என்னை தொந்தரவு செய்யாதே நான் படிக்கணும்" என்றுரினோவை விரட்டிவிட்டு 
              படிப்பில் மூழ்கினான். 
              
              "உன்னைவிட நான் நல்லா படிச்சிருவேன்னு உனக்குப் பொறாமை.இப்பப் பாரு" 
              என்று சொல்லிவிட்டுச் சென்ற ரினோ சிறிது நேரம்கழித்து கையில் ஒரு 
              பேப்பருடன் வந்து நின்றது.அதைப் பார்த்த ரிஷி "இது என்னடா பேப்பர்?" 
              என்று கேட்டான்.ரினோ எதுவும் சொல்லாமல் ரிஷியிடம் பேப்பரை நீட்டியது. 
              அதைவாங்கிப் பார்த்த ரிஷிக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. 
              
              "தாத்தா இங்க வாங்களேன் இங்க வந்து இந்த ரினோ பண்ணியிருக்கிற 
              வேலையைப் பாருங்க" என்று தாத்தாவை அழைத்துஅவரிடம் ரினோ கொடுத்த 
              பேப்பரைக்காட்டி 
              " இங்க பாருங்க இவன் என்ன செய்திருக்கிறான்னு. 
              கரபபான் பூச்சியும் மூட்டைப் பூச்சியும் வரைஞ்சு வைச்சிருக்கான்" 
              என்றான். 
              
              ரிஷியிடமிருந்து பேப்பரை வாங்கிப்பார்த்து விட்டு "ரினோ! என்னடாஇது 
              வேண்டாத வேலையெல்லாம் செய்யறே. பேசாம பாட்டிக்கு எடுபிடியா 
              இருக்கவேண்டியதுதானே ஏன் இந்த வீண் ஆசை" என்றார்.ரிஷியும் தாத்தாவும் 
              கிண்டலடிப்பதைப் பார்த்த ரினோ "ரொம்ப பேசாதீங்க. கொஞ்சம் பின் பக்கம் 
              திருப்பிப்பாருங்க" என்றது.பேப்பரைத் திருப்பிப்பார்த்த தர்மாவுக்கு 
              ஆச்சர்யம். ரினோ அழகாக ஏதேதோ எழுதியிருந்தது. அனைத்தும் புரியாத 
              வார்த்தைகளாக இருந்தன. ஆனால் அவற்றில் ஏதோ அர்த்தம் இருப்பது போல் 
              தோன்றியது.அதோடு ஒரு படமும் வரைந்திருந்தது. 
              
              "ரினோ! நீ ரொம்ப புத்திசாலிதாண்டா. ரிஷியைவிட அழகா எழுதியிருக்கியே! 
              உனக்கு ஏற்கனவே எழுதப்படிக்கத் தெரியுமா? 
              யார் சொல்லிக் கொடுத்தாங்க?" என்று ரினோவின் திறமையைப் பாராட்டினார் 
              தர்மா.
              
              "எனக்கு சொல்லிக் கொடுத்தது அந்த படத்தில் இருக்காரே அவர்தான். 
              அவர்தான் என்னுடைய குரு. அவரை நல்லா உற்றுப் பாருங்கஅவர் யாருன்னு 
              உங்களுக்குத் தெரியும் "
              "இவர்..""ஆமா.. இவர்தான் அவர். அவர்தான் நீங்கள். ம்...ம். 
              நீங்கதான்னுவச்சிக்கோங்க"தர்மாவிற்கு புரிந்தது அந்த குரு 
              வத்ஸாசர்தான் என்று.ரினோ வரைந்த படத்தைப் பார்த்து ரிஷி 
              
              "ஏய் ரினோ! தாத்தாவைநல்லா வரைஞ்சிருக்கியே. நேர்ல பார்க்கிறதவிட அழகா 
              இருக்கார்."என்றான்.உடனே ரினோ ரிஷியிடம் "ரிஷி! இப்ப தெரியுதா 
              என்னுடையதிறமையை. நானும் உன்னைப்போல் ஸ்கூலுக்குப் போனால் 
              நான்தான்முதல் மார்க் வாங்குவேன். அதுக்கு அப்புறம்தான் நீயெல்லாம்.' 
              என்றுரிஷியைப்பார்த்து பெருமையடித்தது. 
              
              "டேய்! நீ வருத்தப்படக் கூடாதுன்னு சும்மா ரெண்டு வார்த்தைப்பாராட்டி 
              பேசினா உடனே உனக்குத் தலைக்கனமாயிடுச்சா" 
              
              ஆகா.. உனக்குப் பொறாமை கண்ணாஸ... பொறாமை சரி நான் உனக்குப் போட்டியா 
              இருக்க விரும்பல. ஏன்னா நீ எனக்குசகோதரனாச்சே" என்று தோள்களைக் 
              குலுக்கிக்கொண்டு ஒரு அலட்டலுடன் சொன்னது ரினோ.அதைப்பார்த்து ரிஷி 
              சிரித்துக்கொண்டே "உனக்கு வரவர வாயும்சேட்டையும் அதிகமாயிடுச்சுடா" 
              என்றான். 
              
              ரினோ இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு "நான்வளர்கிறேனே ரிஷி" 
              என்று ராகத்துடன் பாடிக்கொண்டே ரிஷியைப்பார்த்து கண்ணடித்தது.ரினோ 
              எழுதிக்கொடுத்த பேப்பரை எடுத்துக் கொண்டு சென்ற தர்மா ரினோவை அழைத்து 
              "ரினோ! இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?"என்று கேட்டார். 
              
              "இது சில மந்திர வார்த்தைகள்.""இதை ஏன் இப்பொழுது எழுதினே?"
              
              "ஏதோ ஞாபகத்திற்கு வந்தது எழுதினேன்."
              
              "இல்லை. நீ பொய் சொல்றே. இதை ரிஷிக்காகத்தான் எழுதியிருக்கிறே." 
              
              "ஆமா. ரிஷிக்காகத்தான் எழுதினேன். அவன் இதைப் படித்தால்அவனிடம் உள்ள 
              சக்தியைப் பற்றி தெரிந்து 
              கொள்வான். ஆனால்அவன்தான் படிக்கலியே."
              
              "ரினோ! நீ எந்த உண்மையையும் சொல்லாமல் மறைக்கிறாய். ரிஷியின் 
              பெற்றோர் இழப்பிலிருந்தே எங்களால் இன்னும் மீள முடியவில்லை.இந்த 
              நிலையில் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து என்றால் எங்களால் 
              தாங்கிகொள்ளமுடியாது.இப்பொழுதாவது உண்மையைச் சொல். இதற்கு மேலும் 
              என்னால்பொருத்திருக்க முடியாது." என்று சொல்லிக் கொண்டிருந்தவர் 
              திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே கீழே உடகார்ந்தார்.
              
              
              ரினோ பதறிவிட்டது."தாத்தா! உங்களுக்கு என்ன ஆச்சு?" என்று 
              கேட்டுக்கொண்டேபாட்டியையும் ரிஷியையும் அழைத்தது. 
              தாத்தாவின் நிலையைப் பார்த்த ரிஷி டாக்டருக்குப் போன் 
              செய்தான்.சிறிது நேரத்தில் டாக்டர் வந்து தர்மாவைப் பார்த்துக் 
              கொண்டிருக்கும்பொழுதே நெஞ்சுவலி அதிகமாகி சில நிமிடங்களில் தர்மாவின் 
              மூச்சுநின்றது. 
              
              ஆனந்தமாக சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தில் 
              எதிர்பாராமல்நிகழ்ந்த தாத்தாவின் இறப்பு ஒரு பேரிழப்பானது. 
              பாட்டிக்கு பெரும்வேதனை.வேதனைகளை சுமந்தபடியே கடவுளிடம் 
              பிரார்த்தித்தாள். 
              
              "கடவுளே! ரிஷியின் தாயும் தந்தையும் மறைந்த ஒரு வருடத்திலேயே அவனது 
              தாத்தாவையும் இழந்து விட்டோம். 
              இது என்னஎங்களுக்கு இடப்பட்ட சாபமா? என் ரிஷிக்கு ஏதும் நேராமல் 
              அவன்நல்லபடியாக இருக்கவேண்டும்' என்று கண்ணீர்விட்டு 
              பிரார்த்தித்துக்கொண்டிருந்தாள். 
              
              அவளது பிரார்த்தனையைக் கேட்டுக் கொண்டிருந்த ரினோ பாட்டியின் அருகில் 
              வந்து அவளது கண்களில் வழியும் கண்ணீரைத்துடைத்தது "பாட்டி! 
              கவலைப்படாதீங்க. ரிஷிக்கு எதுவும் ஆகாது.அவன் சாதாரணமானவனல்ல. 
              சாதனைகள் புரிய பிறந்தவன். அவனையாராலும் எதுவும் 
              செய்யமுடியாது.நீங்கள் சந்கோஷமாக இருந்தால்தானேநாங்களும் சந்தோஷமாக 
              இருக்கமுடியும்." என்று பாட்டிக்கு ஆறுதல்கூறியது.ரினோவின் ஆறுதல் 
              வார்த்தைகள் பாட்டியின் மனதுக்கு சற்றுஇதமாக இருந்தது. 
              
              இப்படியே சில நாட்கள் கடந்தன. ரினோ இப்பொழுது நான்குஅடியாக 
              வாந்ந்திருந்தது. ஆனால் கைகால்கள் மட்டும் குட்டைகுட்டையாக 
              இருந்தன.ஒரு நாள் காலையில் பாட்டி எழும்பும் பொழுது 
              ரினோவைக்காணவில்லை. வீடு முழுவதும் தேடியும் எங்கும் ரினோ 
              இல்லை.தோட்டத்திலும் இல்லை. பாட்டிக்கு பயம் ஏற்படட்டது. 
              'ரினோவுக்குஏதும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ' என்று நினைத்தாள்.நேரம் 
              கடந்துகொண்டே போனது. 
              
              ரிஷியும் எழும்பி ஸ்கூலுக்குப்புறப்படட்டான். புறப்படும்பொழுது" 
              பாட்டிஸ ரினோ எங்கே? நான் எழும்பியதிலிருந்து கண்ணிலேயேபடலை.நான் 
              ஸ்கூலுக்குப் புறப்பட்டா ஷீ எடுத்து தருவதும் பேக்கைஎடுத்து 
              தருவதுமாக ஆர்ப்பாட்டம் பண்ணுவானே இன்றைக்கு எங்கேபோனான்?"ரிஷியின் 
              கேள்விக்கு என்ன பதில் செர்லவதென்றே பாட்டிக்குதெரியவில்லை. ரினோவைக் 
              காணவில்லை என்று சொன்னால் ரிஷி பதறிவிடுவான் என்று எண்ணிய பாட்டி 
              "அவன் இங்கதாம்பா எங்கயாவதுதோட்டத்தில் இருப்பான். ஸ்கூலுக்கு 
              நேரமாச்சு நீ கிளம்பு" என்றுசொல்லி அவனை அவசரப்படுத்தினாள். 
              
              "சரி சாய்ந்திரம் வந்து அவனைக் கவனித்துக்கொள்கிறேன்"என்று 
              சொல்லிவிட்டு ரிஷி கிளம்பினான். ரிஷியை சமாளித்து அனுப்பிவிட்டாலும் 
              பாட்டிக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. ரினோவின் வரவுக்காக 
              காத்துக்கொண்டிருந்தாள். யாரிடமும் சொல்லாமல் ரினோ எங்கே சென்றது? 
              திரும்பி வருமா? ரினோவைக் காணாததால் வருத்தத்துடன் இருந்தாள் பாட்டி.
              
              
              அப்பொழுது "பாட்டி! எனக்கு பசிக்கிறது சீக்கிரம் சாப்பாடு எடுத்து 
              வை."என்று ரினோவின் குரல் கேட்டது. ரினோவின் குரலைக் 
              கேட்டதும்பாட்டிக்கு மகிழ்ச்ச.p இருந்தாலும் அதைக் 
              காட்டிக்கொள்ளாமல்"எங்கடா போன? இது வரைக்கும் 
              நீ எங்கேயும் போனதில்லையே! இப்போ எங்கே எதுக்காக போன? எப்படிப்போன? 
              உனக்கு ஏதாவதுஆகிவிட்டால் என்ன செய்வது? இவ்வளவு நேரமா உன்னை 
              காணாமல்எப்படி தவித்து விட்டேன் தெரியுமா? 
              
              ரிஷியை சமாளித்து அனுப்புவதற்கே பெரிய கஷ்டமாகிவிட்டது. உன்னை ரெண்டு 
              நாளைக்குபட்டினி போட்டால்தான் சரிவருவே" என்று கோபமாகத் திட்டினாள்.
              
              
              பாட்டி! இனி எனக்கு எது நேர்ந்தாலும் எதிர்த்து போராட சக்தி 
              இருக்குது. அது மட்டுமல்ல நான் சில கடமைகளை நிறைவேற்றவேண்டியுள்ளது. 
              அதற்காக நான் இனி தினமும் அதிகாலையில் ஒரு இடத்திற்கு சென்று 
              வரவேண்டியுள்ளது. என்ன காரணம் என்றுநேரம் வரும்பொழுது நானே 
              சொல்கிறேன். என்மேல் நம்பிக்கை இருந்தால் இப்பொழுது எதுவும் 
              கேட்காதீர்கள்." என்று சொல்லிவிட்டு ரினோசாப்பிட தயாரானது. 
              
              "நேரம் வரும்பெழுது சொல்றேன்.....நேரம் வரும்பொழுது சொல்றேன்னு இங்கு 
              வந்ததிலிருந்து சொல்லிட்டிருக்கே. ஆனால் இது வரைஎதுவும் சொல்ல 
              மாட்டேங்கிற" என்று பாட்டி வருத்தப் பட்டுக்கொண்டாள். அதற்குமேல் 
              எதுவும் ரினோவிடம் கேட்கவில்லை. 
              
              ஸ்கூல் முடிந்து திரும்பி வந்த ரிஷி "பாட்டி! ரினோ 
              எங்கே?"என்றுகேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான். 
              
              "ரிஷி! நான் இங்கேதானே இருக்கேன். என்ன விஷயம்?"
              
              "என்ன விஷயமா! தடியா காலையில் எங்கடா போன?" 
              
              "ரிஷி! ஏன் வந்ததும் அவன்கிட்ட கோபப்படறே. அவன் இங்கதான்தோட்டத்தில் 
              இருந்தான். நீ ஸ்கூலுக்குப்போற 
              அவசரத்தில கவனிக்கல."கோபமுடன் கேட்ட ரிஷிக்கு 
              பாட்டியே பதில் சொன்னாள்.
              
              "பாட்டி நீ அவனுக்கு சப்போர்ட்டா"
              
              "அதெல்லாம் ஒன்றுமில்லைடா. வா டிபன் சாப்பிடலாம்"டிபன் 
              சாப்பிட்டுக்கொண்டிருந்த ரிஷியிடம் ரினோ மெதுவாக வந்து"ரிஷி" 
              என்றழைத்தது. 
              
              "என்ன டிபன் வேணுமா?""அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். 
              நான் அப்பவே சாப்பிட்டாச்சு."
              
              "அதுதானே. உனக்கு வேலையே சாப்பிடறதுதானே.."
              
              "இப்படி சொன்னால் உன் டிபனெல்லாம் எடுத்து சாப்பிட்டுருவேன்." என்று 
              ரிஷியின் டிபன்தட்டை எடுக்கப்போவதுபோல் கையைநீட்டியது. 
              
              "நீ செஞ்சாலும் செய்வே. சரி முதலில் விஷயத்தைச்சொல்"
              
              "ரிஷி! கிரிக்கெட் விளையாடப் போவோமா?""கிரிக்கெட்டா? அப்படின்னா 
              என்னன்னு தெரியுமா உனக்கு?" 
              
              "ஏன்தெரியாது. உன்னைவிட எனக்கு நல்லாவே தெரியும். நீ கங்குலிமாதிரி 
              விளையாடுவேணும் தெரியும். நான் பாலாஜி 
              மாதிரி பந்துஎறிவேனாக்கும்."
              
              "டேய் இவங்களெல்லாம் எப்படிடா தெரியும் உனக்கு?"
              
              "நீ ஸ்கூலுக்குப் போனப்புறம் வேற என்ன வேலை. நாள் முழுவதும் டிவி 
              முன்னாடி உட்கார்ந்து கிரிக்கெட் புட்பால்னு பார்த்திட்டேஇருந்தா 
              தெரியாதா என்ன" பாட்டிதான் ரிஷிக்கு பதில் சொன்னாள். 
              
              "பாட்டி! ரிஷி ஸ்கூலுக்குப்போய் அறிவை வளர்க்கிறான். நான் 
              டிவிபார்த்து அறிவை வளர்க்கிறேன். இது நல்ல விஷயம்தானே" 
              
              "ஏய்! நீ பெரிய அறிவு ஜீவிதான். ரொம்ப டிவி பார்க்காதே. அப்புறம் 
              அறிவு தலையில் நிறைஞ்சு பொங்கி வழிஞ்சிடப்போகுது." 
              
              "ரிஷி! உனக்கு என்னைப்பார்த்தா பொறாமை. ஒருநாள் பார் நண்பாஎன் 
              புகழைக்கண்டு வியக்கப்போகிறாய்" 
              
              "நினைப்பு ரொம்பத்தான். சரி எனக்கு நாளை டெஸ்ட் இருக்கு படிக்கணும் 
              தொந்தரவு பண்ணாம இரு."
              ரிஷி படிக்கவேண்டுமென்றால் ரினோ எந்த தொந்தரவும் கொடுக்காமல் 
              அமைதியாகிவிடும். 
              
              காந்தி மெட்ரிக் பள்ளி. 4.30க்கு அடிக்கவேண்டிய ஓவர்பெல் 
              மூன்றுமணிக்கே அடித்தால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு 
              கேட்கவாவேண்டும்'ஹேய்'என்ற இரைச்சலுடன் பைகளைத் தூக்கிக்கொண்டு 
              பறந்தார்கள். பள்ளி பேருந்துகளில் ஓடிப்போய் ஏறிக்கொண்டு 
              'டிரைவர்அங்கிள்' என்று கத்தினர். டிரைவரும் 
              பேருந்தைக்கிளப்பினார்.ஆசிரியர்களுக்கு எதுவுமே புரியவில்லை. 'எந்த 
              அறிவிப்பும் இல்லாமல் எப்படி சீக்கிரம் மணியடித்தார்கள் வீட்டிற்குப் 
              போகலாமா? வேண்டாமா?' என்று குழம்பிக்கொண்டிருக்கையில் பிரின்சிபால் 
              மேடம் அங்குவந்தார்கள். 
              
              "இது யார் வேலை? மூன்று மணிக்கு மணியடித்தது யார்?ஸ்டூடன்ஸை யார் 
              போகச்சொன்னது? கேசவா..." என்று மேடம் போட்டசத்தத்தில் சிறிது கால் 
              ஊனமான பியூன் கேசவன் கெத்திக் கெத்தி வேகமாக நடந்து வந்தான். 
              
              "கேசவா! மணியடிப்பது உன் வேலைதானே. ஏன் மூன்று மணிக்குஓவர்பெல் 
              அடிச்சே?" என்று அதட்டினார் மேடம்."மேடம் நானில்லை மேடம்" 
              பயந்துகொண்டே கேசவன் பதில்கூறினான். 
              
              "அப்படியென்றால் யார் வேலையிது?""எனக்குத் தெரியும் மேடம்"குரல் வந்த 
              திசையில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர்..அங்கே பாட்டு டீச்சர் மாஷா 
              நின்றிருந்தார். 
              
              "மாஷா உங்களுக்குத் தெரியுமா? யார் சொல்லுங்க. சரியான தண்டனை 
              கொடுக்கிறேன்" மாஷா டீச்சர் எதையோ கண்டு அதிர்ச்சியில் உறைந்தது 
              போல்'மேடம்! எனக்குத் தெரியும் ..நான் பார்த்தேன்" என்று 
              ஒவ்வொருவார்த்தையாக விட்டு விட்டுப் பேசினார். அவரது பார்வை 
              எதையோவெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. 
              
              "மாஷா சொல்லுங்கள்" என்று மேடம் மீண்டும் அதட்டிக்கேட்டார்."அது 
              மேலேயிருந்து பறந்து வந்தது. மணியடித்துவிட்டு 
              மீண்டும்பறந்துவிட்டது."ஏதோ மர்மக்கதை சொல்வதுபோல் 
              சொல்லிக்கொண்டிருந்த மாஷாடீச்சரைப் பார்த்து மேடத்திற்கு எரிச்சலாக 
              வந்தது. 
              
              "இந்த மாஷாவுக்கு என்ன ஆச்சு? பைத்தியம் பிடிச்ச மாதிரி என்னென்னவோ 
              உளர்றாங்க" என்று சொல்லிக்கொண்டே திரும்பி நடந்தார். ஸ்டூடன்ஸ் 
              பாதிப்பேருக்குமேல் சென்றுவிட்டதால் மற்றவர்களும் ஆசிரியர்களும் 
              மேடம் கத்திய கத்தலில் " உள்ளேயா? வெளியேயா?" என்றுதெரியாமல் 
              குழம்பிக்கொண்டிருந்தனர். 
              
              ஆனால் மாஷா டீச்சர் மட்டும் கூரை முகட்டைப்பார்த்துக்கொண்டேமுதலில் 
              சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு தூக்கத்தில்நடப்பதுபோல் 
              நடந்து சென்றார். வழியில் தண்ணீர்த் தொட்டி இருப்பதைக் 
              கவனிக்கவில்லை. ஆனால் அங்கு நின்றவர்கள் கண் இமைக்கமறந்து வாய் 
              மூடாமல் நடக்கப்போவதைத் தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். 
              யாருக்கும் மாஷா டீச்சரைத் தடுக்க வேண்டும்என்று யாருக்கும் 
              தோன்றவில்லை.தொபுக்கடீர்..... 
              தொட்டிக்குள் பாய்ந்தார் மாஷா டீச்சர்.
              
              அப்புறம் என்ன காலில் அடிபட்டு மருத்துவமனையில் 
              சேர்க்கப்பட்டார்.பள்ளியிலிருந்து நேரத்தோடு வீட்டிற்கு வந்த 
              ரிஷியைப் பார்த்துபாட்டிக்கு வியப்பு."என்ன ரிஷி ஸ்கூலில் எதாவது 
              விஷேஷமா? இன்றைக்குச் சீக்கிரம் வந்துட்டே"
              
              "என்ன என்றெல்லாம் தெரியாது பாட்டி. சீக்கிரம் 
              விட்டுட்டாங்கவந்துட்டேன்."
              
              "பாட்டி! ஐயாவுக்கு ஏதாவது டெஸ்ட் இருந்திருக்கும் அதுதான்ஏதாவது 
              பொய் சொல்லிட்டு வந்திருப்பாரு." ரிஷியை சீண்டியது ரினோ. 
              
              "போடா தடியா டெஸ்ட்டுக்கு பயந்தவன் நானில்லை. எல்லாரும்தான் 
              வந்தாச்சு. பேசாம வாயை மூடிட்டு இருடா." என்று ரினோவைஅதட்டினான் 
              ரிஷி. 
              
              "ரிஷி! நீ சீக்கிரம் வந்ததும் நல்லதாப்போச்சு. நான் 
              மார்க்கெட்வரைக்கும் போகவேண்டியிருக்கு. போயிட்டு வர்றேன் ரெண்டு 
              பேரும்கதவைப் பூட்டிட்டு ஜாக்கிரதையாக இருங்க." பாட்டி 
              சொல்லிவிட்டுமார்க்கெட் புறப்பட்டாள்.பாட்டி சென்றதும் ரிஷி 
              ரினோவிடம் "ரினோ நான் கொஞ்சநேரம்தூங்குறேன். யாராவது வந்ததால் என்னை 
              எழுப்பு" என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கிச்சென்றான். 
              
              "சரியான தூங்குமூஞ்சி. ரிஷி! இப்பத்தான் தெரியுது நீ 
              ஏன்ஸ்கூலேயிருந்து சீக்கிரம் வந்தேன்னு."" உனக்கு வரவர குறும்பு 
              அதிகமாயிடுச்சு. உதை வாங்காதே பேசாம போயிடு. 
              
              "ரிஷி தூங்கிய சிறிது நேரத்தில் காலிங்பெல் அழைக்கும் சத்தம் 
              கேட்டது. ரினோ ஓடிப்போய் ரிஷியை எழுப்பியது. பாதித் தூக்கத்தில் 
              எழுப்பியதால் கோபமடைந்த ரிஷி ரினோவை ஒரு உதை விட்டான். "உருப்படியா 
              மனுஷனை தூங்க விடமாட்டியே. என்னடா?" 
              
              "யாரோ வந்திருக்காங்க அதுதான் எழுப்பினேன். உனக்குத்தூக்கம்வந்தா 
              தூங்கு. நான் போய் கதவைத் திறந்து யார்னு பார்க்கிறேன்"என்று 
              சொல்லிக்கொண்டே வேகமாக வாசலை நோக்கி சென்றது ரினோ.உடனே ரிஷி வேகமாக 
              எழும்பி ஓடினான். ரினோவைத்தடுத்துபோலி பணிவுடன் 
              
              "ரினோ கண்ணா! நீங்க உள்ளே போங்க நாங்க பார்த்துக்கறோம்"என்றான்.
              
              "ஓ கே" என்று ஸ்டைல் காட்டி விட்டுச் சென்றது ரினோ. 
              
              "எல்லாம் நேரம்டா" ரிஷி அலுத்துக்கொண்டே போய் 
              கதவைத்திறந்தான்.வெளியில் ரிஷியின் வகுப்புத்தோழன் ராகவ் 
              நின்றிருந்தான். 
              "என்ன ராகவ் என்ன விஷயம்? திடீர்னு வந்திருக்கே! உள்ளே வா.""ரிஷி! 
              நம்ம மாஷா டீச்சர் ஸ்கூலில் வச்சு தண்ணித்தொட்டியிலகால் தடுக்கி 
              விழுந்துட்டாங்களாம். காலில் காயம்பட்டு இப்போ ஹாஸ்பிட்டலில் 
              இருக்காங்களாம். வா நாமும் போய் பார்த்துட்டு வரலாம்."
              
              "அப்படியா! உனக்கு எப்படி தெரியும்?"
              
              "நம்ம கோபி போன் பண்ணினான்." 
              
              "சரி கொஞ்சநேரம் வெயிட் பண்ணு. பாட்டி மார்கெட் போயிருக்காங்க 
              வந்தவுடன் போகலாம். நானும் அதற்குள் டிரெஸ் மாத்திட்டுவந்துடுறேன்." 
              என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான் ரிஷி. அங்கே நின்ற ரினோ 
              இவனைப்பார்த்ததும் "என்ன ரிஷி! 
              அந்தபாட்டு டீச்சர் மாஷாதானே. ஏழாம் நம்பர் வீடு. அப்பாடா... இனி 
              ஒருவாரத்துக்கு பாட்டுங்கிற பேர்ல அவங்க கத்துற சத்தம் 
              கேட்காது.நிம்மதி." என்றது. 
              
              "டேய் வாயை மூடு உன் சத்தம் வெளியே கேட்கப்போகுது.
              
              "மருத்துவமனையில் மாஷா டீச்சா ; காலில் கட்டுடன் 
              படுக்கையில்படுத்திருந்தார். ரிஷி அருகில் சென்று "டீச்சர் எப்படி 
              இருக்கீங்க?"என்றான்.ரிஷியைக்கண்டதும் மாஷா டீச்சர் ஸ்கூலில் 
              உளறிக்கொண்டிருந்ததை ரிஷியிடமும் கூறினாள். 
              
              "ரிஷி ஏதோ ஒரு வினோத உருவம் பறந்து வந்து ஸ்கூலில் மணியடிச்சிட்டு 
              திரும்பவும் பறந்து போயிருச்சு. அதுக்கு குட்டைகுட்டையா கால்களும் 
              கைகளும் இருந்துச்சு. வாலும் இருத்துச்சு.ஆங்.... ஒற்றைக்கொம்பும் 
              இருந்துச்சு. நான் சொன்னா யாரும் நம்பமாட்டேங்கிறாங்க ரிஷி. நீயாவது 
              நம்பு." 
              
              ரிஷிக்குப் புரிந்து விட்டது.'ஓகோ! டேய் ரினோ இது உன் வேலைதானா. இரு 
              உன்னை வந்து வச்சுக்கிறேன்' என்று மனதிற்குள் கூறிக்கொண்டு மாஷா 
              டீச்சரிடம் "டீச்சர் நீங்கள் எதையோ பார்த்து பயந்திருக்கீங்க. 
              டாக்டர்கொடுத்த மாத்திரையை சாப்பிட்டுட்டு நல்லா 
              தூங்கி ரெஸ்ட் எடுங்க.அப்புறம் வலியெல்லாம் குறைஞ்சு சீக்கிரம் 
              குணமாயிடுவீங்க." என்றுஆறுதல் கூறினான். 
              
              அப்பொழுது மாஷா டீச்சரின் பக்கத்து படுக்கையில் இருந்தவனும்அவனுடன் 
              இருந்த மற்றொருவனும் மாஷா டீச்சர் ரிஷியிடம் சொன்னதை உற்றுக்கேட்டுக் 
              கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் டீச்சரிடம்
              
              
              "மேடம்! உங்களுக்கு இந்த காயம் எப்படி ஏற்பட்டது?" என்றுஅக்கறையுடன் 
              விசாரிப்பதுபோல் விசாரித்தான்.
              மாஷா டீச்சரும் அவனது உள் எண்ணம் அறியாமல் ரிஷியிடம்சொன்னதை அப்படியே 
              அவனிடமும் சொன்னாள்.
              
              "நீங்கள் பார்த்த அந்த வினோத உருவம் எப்படி இருந்தது 
              என்றுசொல்லுங்கள்" என்று ரினோவைப்பற்றி மேலும் கேட்டான்.பின்பு எதையோ 
              தெரிந்து கொண்டவன்போல் அவன் நண்பனிடம்சென்றான். இருவரும் ஏதோ 
              ரகசியமாகப் பேசினார்கள்.அவர்களது செயல் ரிஷிக்கு சந்தேகத்தை 
              ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் நல்லவர்களாகத் தெரியவில்லை. 
              சிறிது நேரத்தில் மாஷா டீச்சரிடம் பேசியவன் வேகமாக வெளியில்சென்றான். 
              ரிஷியும் அவனைப் பின்தொடர்ந்தான். 
              
              வெளியில் சென்றவன்ஒரு மறைவான இடத்திற்குச் சென்று யாரிடமோ செல்போனில் 
              "பாஸ்நான் ஜான் பேசுறேன். நாம ஒரு வருஷமா தேடிட்டிருக்கோமே ஒருவினோத 
              பிராணி ஞாபகம் இருக்கா? அதுதான் வத்ஸாசரின் ரினோ!அது இப்போ இந்த 
              ஊரில்தான் இருப்பதுபோல் தெரியுது. நானும் காசியும் அதை எப்படியாவது 
              கண்டுபிடிச்சுட்டு உடனே உங்ககிட்ட சொல்றோம்."ஜான் பேசியதை 
              மறைந்திருந்து கேட்ட ரிஷி 'இவர்கள் இருவருக்கும் ரினோவைப்பற்றி 
              தெரிந்திருக்கிறது. ரினோவிடமும் ஏதோரகசியம் இருக்கிறது. யார் அந்த 
              வத்ஸாசர்? ரினோவிடமே கேட்டுக்கொள்ளலாம். இவர்களால் ரினோவிற்கு ஆபத்து 
              ஏற்படலாம் உடனேவீட்டிற்குச் செல்லவேண்டும்' என்று நினைத்துக்கொண்டு 
              வேகமாகவீட்டிற்கு விரைந்தான்.மூச்சுவாங்க வீட்டிற்குள் நுழைந்த 
              ரிஷியைப் பார்த்து பாட்டி"ஏண்டாஸ இப்படி பதட்டமா ஓடிவர்றே. என்ன 
              விஷயம்?" என்றுகேட்டாள். 
              
              "பாட்டி! இன்னைக்கு ஸ்கூல்லேயிருந்து சீக்கிரம் வந்ததுக்குக் காரணம் 
              இந்த தடிப்பய ரினோதான் பாட்டி. இவரு ஸ்கூலுக்குப் பறந்துவந்து மூணு 
              மணிக்கே பெல்லடிச்சிருக்காரு. இதை மாஷா டீச்சர் பாத்திருங்காங்க" 
              
              "அவங்களுக்கெப்படி ரினோவைத் தெரியும்?"
              
              "அவங்களுக்குத் தெரியாது. ஆனால் அவங்க சொல்ற அடையாளங்களை 
              வைச்சுப்பார்த்தாஸ. அது ரினோதான்னு தெரியுது பாட்டி" 
              "டேய் ரினோ! இங்க வாடா. உண்மையைச் சொல் இது உன்வேலைதானா? நீ இப்ப 
              கொஞ்ச நாளா காலையில மட்டுமில்ல பகல்நேரத்திலேயும் வெளியே போக 
              ஆரம்பிச்சிட்டே. அது இப்படி ஏதாவதுவம்பு செய்யத்தானா." பாட்டி ரினோவை 
              அதட்டிக்கேட்டாள். 
              
              "ஆமாஸ" ரினோ தோள்களைக் குலுக்கிக்கொண்டு சொன்னது." ஏண்டா 
              இப்படிச்செஞ்சே?""ரிஷி இல்லாம வீட்டில் ரொம்ப போர் அடிச்சது அதுதான்"
              
              
              "டேய் முட்டைக்கண்ணா. உன் சேட்டையால இப்ப எவ்வளவுபெரிய ஆபத்து 
              ஏற்பட்டிருக்கு தெரியுமாடா?" என்று ரிஷி கோபமுடன் ரினோவைப்பார்த்துக் 
              கேட்டான்.ஆபத்து என்றதும் பாட்டி பதறிவிட்டாள்."ஆபத்தா யாருக்கு? 
              என்ன ஆபத்து சொல் ரிஷி." 
              
              "பாட்டி மாஷா டீச்சர் சொன்ன அடையாளங்களை வைத்து காசி, ஜான்னு 
              ரெண்டுபேர் ரினோ இந்த ஊரில் இருக்கிறதை தெரிஞ்சிக் கிட்டாங்க. அவங்க 
              போனில் பேசினதைக் கேட்டேன். யாரையோ 'பாஸ்'என்றான். அவர்கள் ஒரு 
              வருஷமா ரினோவைத் தேடிட்டிருக்காங்களாம்.அதுமட்டுமல்ல யாரோ 
              வத்ஸாசராம். ரினோ அவர்கிட்டதான் இருந்ததாம். எனக்கு ஒண்ணும் புரியலை 
              பாட்டி. ஆனால் இப்போ ரினோவுக்குமட்டுமல்ல நாம் எல்லோருக்குமே ஆபத்து 
              வரலாம்." ரிஷி வருத்ததுடன் கூறினான். 
              
              "யாருக்கும் ஆபத்தில்லை. வீணாகப் பயப்படாதீங்க. காசி, 
              ஜான்ரெண்டுபேரும் கொலைகாரங்க. அவங்க அழியவேண்டியவங்க. அவங்கமட்டுமல்ல 
              அவங்க பாஸும்தான். நீங்க ரெண்டுபேரும் கவலைப்படாதீங்க." ரினோ ஆறுதல் 
              கூறியது.ஆனால் பாட்டிதான் பெரிய குழப்பத்திற்கு ஆளானாள். 
              ரினோவிடம்எல்லா உண்மைகளையும் கேட்டறிய வேண்டும் என்று நினைத்தாள்.
              
              
              "ரினோ! இப்பவாவது உண்மையைச்சொல்." என்றாள்"என்ன உண்மை பாட்டி?" ரிஷி 
              ஒன்றும் புரியாமல் கேட்டான்."ரிஷி! ரினோவிடம் நிறைய ரகசியங்கள் 
              மறைந்திருக்கு. ஆனால்அவன் இதுவரை எதுவுமே 
              சொல்லமாட்டேங்கிறான்.""ரினோ! சொல் என்ன ரகசியம்? காசிஇ ஜான் 
              யார்?அவங்க சொன்னஅந்த வத்ஸாசர் யார்?" 
              
              "ரிஷி! எல்லா ரகசியங்களையும் கண்டிப்பாக நீ தெரிந்துகொள்ளத்தான் 
              வேண்டும். ஆனால் இன்னும் சிறிது காலம் பொமையாக இரு.நிச்சயமா 
              எல்லாவற்றையும் சொல்றேன். இப்பொழுது பசிக்கிறது சாப்பிடலாம் வா." 
              ரினோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தது."என்ன பாட்டி இவன் எதுவுமே 
              சொல்லாமல் போறான்""சரி விடு. சொல்லாமல் எங்கே போகப்போறான். கண்டிப்பா 
              ஒருநாள் சொல்வான். நீ வா சாப்பிட""பாட்டி நாளைக்கு எனக்குப் பிறந்த 
              நாள். என் பிரண்ட்ஸ் சிலபேரை வரச்சொல்லியிருக்கேன். நாளை 
              லீவுங்கிறதால கண்டிப்பா வருவாங்க."என்று தயங்கி தயங்கிச் 
              சொன்னான்.ரினோ வந்ததிலிருந்து யாரையும் வீட்டிற்கு அழைப்பதில்லை. 
              அதனால்தான் இந்த தயக்கம்."நானே உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன். 
              பரவாயில்லை உன்பிரண்ட்ஸை வரச்சொல். இந்த ரினோதான் ஏதாவது சேட்டை 
              பண்ணாம இருக்கணும்.""நான் எந்த சேட்டையும் பண்ணமாட்டேன் சமர்த்தா 
              இருந்துப்பேன் போதுமா." 
             
              
              kalpa2011@yahoo.com 



 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991




