| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| பதிவு! |  
| 
  
			
            
            
              
              'கலைச்செல்வி' கார்த்திகை 1965: 
              எம்.ஜி.ஆரின் இலங்கை விஜயம்!'மரகதத்தீவில் மக்கள் திலகம்'
 - சி-.சு.-
 
  [நூலகத் 
              தளத்தில் ஈழத்துப் படைப்புகள், சஞ்சிகைகளையெல்லாம் சேகரித்து 
              ஆவணப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய 
              வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு இம்முயற்சி பெரிதும் பயன்படும். 
              ஈழத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களில் முக்கியமானதொன்று 
              சுன்னாகத்திலிருந்து வெளிவந்த 'கலைச்செல்வி' இதழ். இவ்விதழின் 
              கார்த்திகை 1965 இதழில் அச்சமயம் ஈழத்துக்கு நடிகை சரோஜாதேவியுடன் 
              வருகை தந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி 'மரகத்தீவில் 
              மக்கள் திலகம்'என்னுமொரு கட்டுரை சி.சு. என்பவரால் எழுதப்பட்டுள்ளது. 
              அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளன.] 
 கண் பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற 
              சனக்கூட்டம்; வீதியோரங்களிலே, வெளியான இடங்களிலே, மாடிவீடுகளிலே, 
              மதிற்சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, 
              வாசற்படிகளிலே, வாகனக்களின் மேலே எங்கெல்லாம் ஒற்றக்காலிலாவது 
              நிற்கலாமோ அங்கெல்லாம் அப்படியே நிற்கிறார்கள். ஆடவரும், அரிவையரும் 
              அணியணியாய் நிற்கிறார்கள். சிறுவரும், சிறுமியரும் சீராக 
              நிற்கிறார்கள். சிங்களரும், தமிழரும், சோனகரும் நின்றார்கள். 
              தொழிலாளியும் முதலாளியும் தோளோடு தோள் நின்றார்கள். கொதி கொதிக்கும் 
              வெயிலிலும் கொடகொடக்கும் குளிரிலும் கூட்டமாய் நின்றார்கள்.
 
 வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்றார்கள்? 
              எதற்க்காக நின்றார்கள்?
 
 நாடாளும் மன்னனுக்காக நிற்கவில்லை; நாட்டின் பிரதமருக்காக 
              நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் 
              காவலருக்காக நிற்கவில்லை. சர்வாதிகாரிக்காகவும் நிற்கவில்லை.
 
 
  பின், 
              யாருக்காக நின்றார்கள்? 
              ஒரு மனிதனின் வரவை எதிர்பார்த்து நின்றார்கள்; எம்.ஜி.ராமச்சந்திரனை 
              எதிர்பார்த்து நின்றார்கள், ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு மனிதன். மனித 
              உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில் - மனிதரைப் போன்ற கயவர்கள் 
              மலிந்துள்ள இவ்வுலகில் - ;மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த , உயர்ந்த 
              பண்புகளும் சிறந்த குண்நலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற 
              நிறைகுடம் எம்.ஜி.ஆர். அந்த மனிதனை எதிர்பார்த்துத்தான் ஆயிரம் 
              ஆயிரமாகக் கூடி நின்றார்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை 
              கொண்டார்கள்; கடவுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்குகின்றார்கள். 
 கொழும்பிலும், கண்டியிலும், 
              மட்டுநகரிலும், மாத்தளையிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் 
              இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு 
              நகரத்திலும் கூடியது....
              
              மேலும் வாசிக்க
 
              
              மேலும் சில காட்சிகள்.... 
                நன்றி: நூலகம் 
              http://noolaham.net/ |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |