| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம்! |  
| அனிதா நாயர் எழுதிய 'லேடீஸ் கூபே 
  ('Ladies Coupe' by Anita Nair )! 
 - ஜெயந்தி சங்கர் -
 
 [சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விழாவானது 
  எதிர்வரும் டிசம்பர் 1-9 காலகட்டத்தில் நடைபெறவுள்ளது. அச்சமயம் எழுத்தாளர் அனிதா 
  நாயர் சிங்கப்பூர் வருகைதரவுள்ளார். அதனையொட்டியும், பதிவுகள் வாசகர்களுக்கு 
  அனிதா நாயர் பற்றிய அறிமுகத்திற்காகவும் இந்நூல் மதிப்புரையினை எழுத்தாளர் 
  ஜெயந்தி சங்கர் அனுப்பி வைத்துள்ளார்.]
 
 
   'ஒரு 
  பெண், ஓர் ஆணின் துணையின்றி தனியே வாழ்க்கையைச் சமாளிக்க முடியாதா 
  (கூடாதா)?'கதாநாயகி நாற்பத்தைந்து வயது அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி.  
  வீட்டின் மூத்த பெண். அவளின் கேள்விதான் அது. இதற்கான 'தேடல்' அவளில் 
  தீப்பொறியாகக் கிளம்பிப் பின் கனன்று எரிந்த படியிருகிறது அவளது இளம் வயதுமுதலே. 
  அவள் திடீரென்று ஒரு பையைத் தூக்கிக்கொண்டு கன்யாகுமரியை நோக்கிக் கிளம்புகிறாள். 
  தேடல் பயணம், இரயில் பயணத்தில் தீவிரம் கொள்கிறது. மொத்தத்தில் சுதந்திரத்தையும் 
  மனோபலத்தையும் தேடும் ஒரு பெண்ணின் கதை இந்த 276 பக்கங்கள் கொண்ட நாவல். 
 நாவலின் தலைப்பே கதையின் களத்தைச் சொல்கிறது. ஆமாம், கன்யாகுமரிக்குச் செல்லும் 
  இரயிலின் ஒரு லேடீஸ் கூப்பே தான் களம். உண்மையில் அப்படியும் சொல்லவிடமுடியாது. 
  காரணம், அங்கே அகிலா உடன் பயணிக்கும் ஐந்து பெண்களைப் பரிச்சயப்படுத்திக்கொண்டு 
  அவரவர் கதையைக்கேட்கிறாள். ஆகவே, பாத்திரங்கள் சந்திக்கும் இடம் தான் இரயிலின் 
  லேடீஸ் கூபே. மற்றபடி அவரவர் கதை சென்னை, கொடைக்கனால், பெங்களூர், காஞ்சீபுரம் 
  என்று போய் மீண்டும் லேடீஸ் கூபேவுக்கே திரும்புகிறது. உள்ளங்கையில் தாங்கும் 
  கணவன் உள்ள குழம்பிய மனைவி ஜானகி, அசாதாரண புரிந்துணர்வுடடனான 14 வயதான ஷீலா, தன் 
  தேவையென்னவென்றே புரிந்துகொள்ளாத கெமிஸ்ட்ரி டீச்சர் மார்கரெட் ஷாந்தி, ஒரே 
  இரவில் தன் வெகுளித்தனத்தை மொத்தமாய்த் தொலைத்த மரிக்கொழுந்து மற்றும் நல்ல 
  மகளாயும் மனைவியாயும் விளங்கும் ப்ரபாதேவி ஆகிய ஐவரின் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு 
  சிறுகதை தான். ஒவ்வொன்றும் தன் கதையைப்போன்றே இருப்பதைப்போலவும் அதே சமயம் 
  தன்னுடையதிலிருந்து வேறுபட்டிருப்பதைப்போலவும் உணர்கிறாள் அகிலா.
 
 'Ladies Coupe' - A Novel In Parts 
  என்று தான் இரண்டாம் பக்கத்தில் தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அனிதா 
  நாயர் நூலின் கடைசி பக்கத்தில் 1998 க்குப்பின் இந்திய இரயில்களில் லேடீஸ் கூபே 
  இல்லாமல் இருப்பதாய் ஒரு குறிப்பும் கொடுத்துவிடுகிறார். அனிதா வசிப்பது 
  பெங்களூர். இவரின் இன்னொரு நாவல் 'The Better Man' னாம். தேடிப் படிக்கவேண்டும். 
  86 வது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், 'From 
  the Gurukula stage of life, she had moved directly to Vanaprastha. And she 
  wanted no part of some one else's karmic flow', 
  என்ற வரிகள் அகிலாவை மிகவும் நன்றாகவே வாசகனுக்குப் 
  பரிச்சயப் படுத்துகின்றன. ஒரு தாயின் தவிப்போ ஒரு பதின்மவயதுப் பிள்ளையின் 
  மனநிலையோ அவளுக்குக் கொஞ்சமும் பிடிபடாதிருக்கின்றது. காரணம், அவளின் வாழ்க்கை 
  முறை. குடும்பத்திற்காக உழன்று உழன்று அகிலாவுக்கு வெளியுலகைப் பார்க்கும் 
  எண்ணமும் அனுபவங்கள் சேகரிக்கும் துடிப்பும் வலுக்கின்றன. இலக்கில்லாமல் 
  எங்கேயாவது போகவேண்டும் என்று தான் முதலில் நினைக்கிறாள். 'எங்கேயாவது போனால் 
  போதும்' என்ற நிலைக்கு வந்தபின் பெரிதாய் யோசிக்காமல் சட்டென்று கன்யாகுமரியைத் 
  தேர்ந்தெடுத்துவிடுகிறாள்.
 
 திடீரென்று கிளம்பும் போது அகிலாவைப்பார்த்து அவளைவிடப் பத்து வயதுக்கும் மேல் 
  இளையவளான அவளுடையை தங்கை பத்மா கேட்கிறாள்." நாராயணன் அண்ணா, நரஸி அண்ணா வந்தா நீ 
  திடீர்னு தனியாக கிளம்பிப்போறதப்பத்தி என்ன சொல்லுவாளோ?,.." பெண் தனியே 
  கிளம்பினால், நடுத்தர பிராமணக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களும் 
  பயங்களும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவளின் வயது, முதிர்ச்சி,அறிவு,பதவி 
  ஆகியவை கடந்து கேள்விகள் முளைக்கவே செய்கின்றன. பலநாட்கள் யோசித்து யோசித்துக் 
  களைத்திருந்த அகிலா கூட்டிலிருந்து கிளம்பும் பறவையின் உணர்வோடு, தங்கையின் 
  கேள்விக்கு ஒருவித எதிர்வினையும் செய்யாது ஒற்றைப் பார்வையை மட்டும் பதிலாகக்
 கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிவிடுகிறாள்.
 
 கண்டோன்மெண்டில் தோழி நிலோ·பர் டிக்கெட்டுடன் காத்திருக்கிறாள். அங்கே டிக்கெட் 
  கௌண்டர்கள் பற்றி விவரிக்கும் போது -
 
 Akhila read the board above the line,' Ladies, 
  Senior citizens and Handicapped Persons". She did not know if she should feel 
  angry or venerated. There was certain old fashioned charm, a rare chivalry in 
  this gesture by the Railway Board that pronounced a woman shouldn't be subject 
  to the hustle and bustle, leacherous looks and grouping hands, sweaty armpits 
  and swear words that were part of the experience of standing in the General 
  Queue. But why spoil it all by clubbing woman with senior citizen and 
  handicapped persons?Akhila stifled and looked for Niloufer.
 
 இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் ஆழமான வரிகள் ரசிக்கும்படி நாவலெங்கும் வருகின்றன.
 
 சீரான கதையோட்டம். அகிலாவோடு நாமும் தேடலில் நம்மையறியாது பங்குகொள்வதைத் 
  தவிர்க்கமுடியாது போகிறது. நீண்ட வாசகபயணம் என்றபோதிலும் சோர்வு தெரியவில்லை . 
  ஓவ்வொரு அத்தியாயத்திலும் அகிலவுக்கு 'விடை' கிடைத்திருக்கிறதா என்ற 'விடை' 
  தேடும் ஆவல் வாசகனையும் தொற்றிக்கொள்கிறது.
 
 ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்ளும்போது, திருமணம் குழந்தைகள் போன்ற பேச்சு 
  எழும் போது, அகிலா தான் மணம் புரியாத காரணத்தைச் சொல்லநேர்கிறது. சகபயணிகளிடம் 
  அகிலா மனம் திறக்கிறாள். அத்துடன் தன் கேள்வியையும் அவர்கள் முன் வைக்கிறாள். 
  உண்மையில் இதெல்லாமே மிக இயல்பாக ஆரஞ்சுப்பழங்களைப் பகிர்ந்துண்ணும் போதே 
  நடந்துவிடுகிறது. ஒருவரின் கருத்து மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை 
  என்று எல்லோருமே சொல்லிக்கொள்கிறார்கள். இருந்தாலும், அவரவர் கருத்தாகச் 
  சொல்லாமல் அவரவர்
 வாழ்க்கையின் அனுபவங்களைச் சொல்வதன் மூலம் தன் சிந்தனைக்கு உதவ முடியும் என்று 
  அகிலா விடாமல் வற்புறுத்திக் கேட்கும் போது மற்றவர்களும் 'இரயில் சிநேகம் தானே, 
  நாம் தான் இனிமேல் சந்திக்கப்போவதில்லையே', என்ற எண்ணத்துடன் தைரியமான மனம் 
  திறந்து அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் இயல்புக்கு எதிராய்த் தானே 
  வலியபோய் பேசி, மற்றவரையும் பேசவைப்பதைப் பார்த்துத் தானே வியந்து கொள்கிறா¡ள் 
  அகிலா உள்ளுக்குள்ளே. ஆரஞ்சின் மணமும் இரயில் ஜன்னலில் இருந்த 'துரு' மணமும் 
  பிற்காலத்தில் தன் நினைவுகளோடு
 சேர்ந்து வரும் என்றும் நினைத்துக்கொள்வாள். ஆபீஸ்போய் மட்டுமே பழக்கப்பட்ட 
  தன்னால் இத்தனை வயதிற்குமேல் ஒரு வீட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம் 
  அகிலாவிற்குள் எழுகிறது. ஒவ்வொரு விநாடியையும் கட்டினவனுக்காகவே வாழ்வது 
  சலிக்காதா, அதுதான் ஒற்றுமையைப் பலப்படுத்துமா என்றெயெல்லாம் அப்பெண்களிடம் 
  கேட்கிறாள்.
 
 எப்போதும் தான் உழைக்க மற்றவர் இளைப்பாறியதுபோக, இரயில் இலக்கை நோக்கி 
  ஓடிக்கொண்டிருக்க தான் உறங்குவது சுகமென்று உணர்கிறாள். பாதுகாப்பாகக்கூட 
  உணரமுடிகிறது அவளால். விநோத கனவொன்றும் காண்கிறாள்.
 
 
  அகிலா 
  வளர்ந்த சமூகத்தில் பெண்ணின் நிலையும் அவளில் புகுத்தப்படும் எண்ணங்களும் அவளை 
  கிட்டத்தட்ட ஒரு ஜடப் பொருளாக்கிவிடுகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டு, 
  பெண்ணைவிட ஒரு படி உயர்ந்தவன் ஆண் என்று அவள் உள்ளத்தில் பதியவைக்கப்படுகிறது. 
  முதிர்ச்சியடையும் நிலையில் அவ்வெண்ணங்களுக்கு எதிராகத் தன் சிந்தனை விரிவதை அவள் 
  உணர்கிறாள். நடைமுறை என்று வரும்போது பழமையிலிருந்தும் சமூகப்பார்வையிலிருந்தும் 
  விலகிவிடமுடியாது என்றுணர்ந்து திணறுகிறாள். ஆகவேதான் அகிலாவுக்குத் தன்னைப்பற்றி 
  சிந்திக்கும்போதெல்லாம் பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன 
 Amma had her own theories on what a good wife 
  ought to be like. First of all no good wife could serve two masters- the 
  masters being her father and her husband. A good wife learnt to put her 
  husband's interest before anyone else's, even her father's. A good wife 
  listened to her hasband and did as he said. "There is no such thing as equal 
  marriage," Amma said. " It is best to accept that the wife is inferior to the 
  husband. That way, there can be no strife, no disharmony. It is when one wants 
  to prove one's equality that there is warring and sparring all the time. It is 
  so much easier and simpler to accept one's station in life and live 
  accordingly. A woman is not meant to take on a man's role. Or the gods would 
  have made her so. So what is this about two equals in marriage?
 
 இப்படிச்சொன்ன அம்மாதான் அகிலாவின் அப்பா இறந்ததும் அந்த இடத்தில் அவளை 
  வைத்துப்பார்க்கிறாள். அதில் அம்மாவுக்கு உறுத்தலில்லை. அவளை ஒரு பெண்ணாகப் 
  பார்ப்பதையே நிறுத்திவிடுகிறாள். இத்தனைக்கும் எதிர்பாராது நிகழும் அப்பாவின் 
  சாவுவரை, அதாவது அகிலாவின் பதின்மவயதின் இறுதி வரை அம்மா அவளைத் திருமணத்திற்குத் 
  தயார்செய்யும் வகையில் தான் வளர்க்கிறாள். பார்க்கிறாள். அம்மாவின் பார்வையிலும் 
  குடும்பத்தின் மற்றவர் பார்வையிலும் அதன்பிறகுதான், வீட்டிற்கு உழைத்துப் போடும் 
  ஆணாகிவிடுகிறாள் அகிலா. தனியாக வசிக்க
 நினைத்தாலோ, பிரயாணம் செய்ய நினைத்தாலோ மட்டும் அகிலா பெண் என்ற நினைவும் 
  குடும்பத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் கெட்டபெயர் வந்துவிடும் என்ற 
  அக்கறையுடனான எதிர்ப்புகள் கிளம்பும்.
 
 
  ஆங்காங்கே 
  அகிலாவின் சிறுவயது சம்பவங்கள் நினைவலைகளாக வருகின்றன. படிக்க மிகவும் சுவையாக 
  இருக்கின்றன. அகிலாவின் அப்பா மரணம், இரயில்வே ஸ்டேஷன், கோடை நாள், குடும்பத்தின் 
  ஞாயிறு என்று ஏராளமான சுற்றுச்சூழலை விவரிக்கும் விதம் காட்சிகள் அப்படியே நம் 
  கண்முன் விரிகின்றன. அப்பா லஞ்சம் வாங்குவது கிடையாது. தன் கொள்கையில் 
  தீவிரமாயிருக்கிறார். அதுவே அவரைச்சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களுக்கு இடைஞ்சலாக 
  இருக்கிறது. இந்தப் பின்னணியின் காரணமாய் அப்பாவின் சாவு சாலை விபத்தில்லையோ, 
  ஜோடிக்கப்பட்டு செய்த கொலையோ என்று சந்தேகிக்கிறாள் அகிலா. இந்தப் புத்தகத்தைப் 
  படிக்கும் போது ஆங்கிலப்புத்தகத்தைப்படிக்கும் உணர்வே எழுவதில்லை. தமிழ் புத்தகம் 
  படிக்கும் உணர்வே எழும். அதற்குக்காரணம் எளிய ஆங்கிலம் மட்டுமல்ல, கத்தயின் களம் 
  தமிழ்நாடு என்பது மட்டுமல்லாது பாத்திரங்கள் எல்லோருமே பெரும்பாலும் 
  மிகச்சாதாரணமாக நாம் சந்திக்கும் தமிழ்ப்பெண்களே. 'கரு' வேண்டுமானால் கனமானதாய் 
  இருக்கலாம். ஆனால், மொழி ஒரு தொடக்கநிலைப் பள்ளி மாணவனுக்கும் புரியக்கூடியது. 
  முக்கிய கிளைக்கதையான சரசா மாமியும் மகள்கள் மற்றும் சக பயணிகளான பெண்களின் 
  தனிக்கதைகள், சிறுசிறு கிளைக் கதைகள் பற்றியெல்லாம் எழுதினால் கிட்டத்தட்ட 
  முழுநாவலையும் கொடுத்ததுபோன்ற தோற்றம் வரக்கூடிய அபாயம் இருப்பதால், இங்கு 
  அவற்றின் உள்ளே போகவில்லை. அவை ஒவ்வொன்றும் நாவலின் முக்கிய பகுதிகள் என்பதில் 
  எள்ளளவும் ஐயமில்லை. நாவலாசிரியர், கதை மாந்தரின் இயல்புக்கேற்றவாரு மொழியை 
  மாற்றிக்கொள்வது ரசிக்கும் படியுள்ளது. அகிலா உட்பட எல்லோரது கதையும் படர்கையில் 
  கூறப்பட்டிருக்கிறது. மரிக்கொழுந்து மற்றும் மார்கரெட் ஷாந்தி ஆகியோரது கதைகள் 
  மட்டும் தன்மை ஒருமையில் கூறப்பட்டிருக்கின்றன. இதன் சூக்ஷமம் ஆராய்ச்சிக்குரியது 
  என்றே தோன்றுகிறது. மார்கரெடின் மொழியும் ரசாயனம் சார்ந்தது. தன்னைச்சுற்றியுள்ள 
  ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான கெமிகல் பெயர் கொடுத்துப் பேசுகிறார். இது 
  பாத்திரத்தின் சிந்தனை ஓட்டத்திற்கு வலுச்சேர்ப்பதுடன் கையோட்டத்திற்கு நகைச்சுவை 
  சேர்க்கவும் செய்கிறது. 
 காதல் மற்றும் திருமணம் பாதுகாப்பானது என்று ஜானகியும், அவை மாறக்கூடியது என்று 
  மார்கரெட்டும் அகிலாவுக்குச் சொல்கிறார்கள். ஜானகி இரயிலைவிட்டு இறங்குமுன், "எது 
  செஞ்சாலும் ரொம்ப நல்லா யோசிச்சு செய். அதுக்கப்புறமா இறந்தகாலத்தை நினைத்து 
  ஏங்காதே," என்று சொல்கிறார். மார்கரெட், " Just 
  remember that you have to look out for yourself. No one will", 
  என்கிறாள் கடைசியாக இறங்கும்முன்.
 
 
  அகிலா 
  வளர வளர அவளுக்குத் தன் பெற்றோரிடையே நிலவும் அதீத 'அன்யோன்யம்' அசௌகரியத்தைக் 
  கொடுக்கிறது. ஒரு வித பாதுகாப்பின்மையைக் கொடுக்கிறதாம். The children of 
  lovers are no better than orphans 
  என்கிறார் படைப்பாளி அகிலாவின் மூலம். எத்தனை யோசித்தும் 'இப்படியும் தோன்றுமா 
  என்ன?' என்றுதான் தோன்றியதே தவிர கதாசிரியரின் கூற்று மட்டும் எனக்குப் 
  புரியவில்லை.
 
 வருமானவரித்துறையில் க்ளார்க்காகப் பணியாற்றும் அகிலா பதின்மவயதில் தன் தந்தையை 
  இழந்ததும், குடும்பச் சுமையை ஏற்று தங்கை தம்பிகளுக்கு வாழ்க்கைப்பாதைகளை 
  வகுத்துக் கொடுத்துவிட்டு தன்னைப்பற்றி நினைக்கும்போது வயதாகிவிடுகிறது. அப்பா 
  இறந்ததும் அவரது இலாகாவிலேயே அதே பதவி அவளுக்குக் கிடைத்துவிடுகிறது. 
  அம்பத்தூரிலிருந்து தினமும் ஆபீஸ் போகிறாள் இரயிலில். ஆபீஸ் போகும் போது அகிலா 
  கட்டும் கஞ்சிபோட்ட பருத்திப் புடைவைப்பற்றி கூறும் போது நாவலாசிரியர் மிகவும் 
  சுவைபட எழுதுவது-
 
 When she tucked the last pleat in at the waist 
  and flung the pallu over her shoulder, the bottom of the sari hiked up her 
  legs playfully, so that the last thing Pama did before Akhila left home was to 
  crouch at her feet and teach the sari the laws of gravity. Tug, tug, what goes 
  up has to come down and stay there. By evening, the sari had neither the 
  vitality nor the starch to resist the pull of the earth.
 
 மாலைக்குள் வியர்வையிலும் இரயில் கூட்டத்திலும் இடிபட்டுக் கசங்கித் 
  துவண்டுவிடுமாம். இதுபோன்ற லேசான நகைச்சுவை இழையும் இடங்கள் ஏராளமாய் நாவலில் 
  உண்டு.
 
 
  சின்னத்தம்பி 
  நரஸிம்மன் தானே தேர்ந்தெடுத்த பெண்ணை மணக்க நினைக்கும்போது பெரிய தம்பிக்குப் 
  பெண் பார்க்க நினைக்கிறாள் அகிலா. ஆனால், அவளின் திருமணம் பற்றியோசிக்க 
  யாருக்கும் தோன்றுவதேயில்லை. கடைக்குட்டி பத்மா பெரியவளாகும்போது அகிலாவிடமே 
  பெண்ணின் பெருமையையும் அழகையும் அலங்காரத்தையும் பறைசாற்றும் அம்மா, அகிலாவை ஒரு 
  பெண்ணாகவே நினைக்கத்தவறிவிடுகிறாள். வீட்டுத் தலைவன் பதவி ஏற்றுக்கொள்ளும் 
  அகிலாவை அவள் அம்மா பேர் சொல்லிக்கூப்பிடாமல் 'அம்மாடி' என்றழைக்க 
  ஆரம்பித்திருந்ததையும் ஆபீஸில் 'மேடம்' என்றழைப்பதையும், வீட்டில் தங்கை தம்பிகள் 
  'அக்கா' என்றழைப்பதையும் யோசித்துப்பார்க்கும் 'அகிலா' என்ன ஆனாள்?, 
  'அகிலாண்டேஸ்வரி என்ன ஆனாள்?' என்றெல்லாம் யோசித்துத் தன்னையே தேடுகிறாள். 
  ஒருமுறை தன் அம்மாவோடு தமிழ் படம் ஒன்றைப்பார்க்கிறாள். படைப்பாளி, 'அவள் ஒரு தொடர் கதை' என்று படத்தின் பெயரைச் சொல்லாமலே படிக்கும் 
  நமக்குப்புரிந்துவிடுகிறது. அன்று முழுவதும் படக்கதாநாயகியில்
 தன்னைப்பொருத்திக்கொண்டு யோசிக்கிறாள். அம்மாவோ அன்று முழுவதும் பெண்ணின் 
  பார்வைத் தவிர்த்துவிடுகிறாள்.
 
 ரயில் சிநேகமாகத் தொடங்கிக் காதலாகும் அகிலாவின் ?ரியும் கதையில் வருகிறான். அவன் 
  தன் இளைய சகோதரனைவிட இளையவன் என்பதை அறிந்தே காதலிக்கிறாள். மணம் முடிக்கவும் 
  நினைக்கிறாள். வீட்டில் அலுவலக நண்பர்களோடு மைசூர் போவதாய்ச் சொல்லிவிட்டு 
  ம?¡பலிபுரம் சென்று அவனுடன் கூடவும் செய்கிறாள். கிளம்புமுன் தம்பியாகவே 
  இருந்தாலும் ஆண் என்ற காரணத்தால் அவனிடம் சொல்லி அனுமதிபெற்றுத்தான் போகவேண்டும் 
  என்று அம்மா சொல்கிறாள். அகிலாவிற்கு இதுபோன்ற தருணங்களில் கோபமும் எரிச்சலும் 
  வருகிறது.
 
 ?ரியுடன் அவள் இருக்கும்போது மற்றவர்களின் கேள்வி ஏந்திய 'பார்வை' அகிலாவை 
  அசௌகரியமாக்குகிறது. இருவரிடையே இருக்கும் வயது வித்தியாசம் பற்றி 
  யோசிக்கிறாள்.பிறகு ஞானோதயம் வந்து, வயது வித்தியாசம் திருமணத்திற்குச் சரி 
  வராது, பிரிவோம் என்று பிரிந்தும் விடுகிறாள். சமூகத்தின் பார்வையைச் 
  சகிக்கமுடியுமா என்று பயந்தே அம்முடிவுக்கு வருகிறாள். ?ரி மட்டும் விடாமல் 
  வருடக்கணக்கில் முகவரி, தொலைபேசியுடன் புத்தாண்டு வாழ்த்தட்டைகளை அனுப்புகிறான். 
  அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலும், தொடர்புகொள்வதில்லை. பெங்களூருக்குக் 
  கிளம்பும் முன் முகவரி தொலைபேசி எண்ணை மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று 
  குறித்துவைத்துக் கொள்கிறாள்.
 அப்பாவைப் பறிகொடுத்ததையும், சரசா மாமியின் கணவர் இறந்ததையும் 
  நினைத்துக்கொள்ளும்போது மரணம் குறித்த அலசல் அகிலாவினுள் நிகழ்கிறது. மிகவும் 
  இயல்பாக எந்த ஒரு சாமான்யருக்கும் தோன்றும் விதமாயுள்ளது. மரணத்தின் காரணம் தான் 
  என்ன?, அதன் பின்புலம் என்ன?, அதன் பின்விளைவுகள் என்ன? அம்போவென்று குடும்பத்தை 
  விட்டுவிட்டு விடுதலை பெறுவதுதான் மரணமா? அதுதான் அதன் நோக்கமா? என்றும் 
  பலவாறாகச் சிந்திக்கறாள் அகிலா. மாற்றங்களை ஏற்கமறுக்கும் மனித மனம் பற்றியும் 
  அகிலா சிந்திக்கும்போது தோன்றும். அம்மா இறந்ததும்
 தம்பியோடு திருச்சியிலா இல்லை தங்கையோடு பெங்களூரிலா என்று தன் வாழ்க்கையைத் தொடர 
  குழம்புகிறாள். அம்மாவின் மரணம் அவளின் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அவளை 
  அம்பத்தூரிலிருந்து பெங்களூருக்குத் துரத்துகிறது. ஒன்பது மாதங்களுக்கு தங்கை 
  பத்மாவின் குடும்பத்தோடு வாழ்ந்த பிறகு தனக்கென்று குவார்ட்டர்ஸ் அல்லாட் ஆனதும், 
  அங்கே குடி போக நினைக்கிறாள் அகிலா. பத்மா ஊர் ஊராய் சுற்றவேண்டிய தன் கணவனின் 
  வேலையைக் காரணம் காட்டி கூடவே குடும்பத்தோடு ஒட்டிக்கொள்கிறாள். அப்போது 
  அகிலாவிற்கு தான் தனியாக
 வாழநினைப்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், பத்மா அகிலாவின் நலனுக்காகத்தான் 
  அவர்கள் அவளோடு வசிப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறாள். பல இடையூறுகளிடையே அகிலா 
  சகித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், பத்மா தான்தான் அவளைச் சகித்துக் கொள்வாய்ச் 
  சொல்லிக்கொள்கிறாள்.
 
 சந்திராவின் மகள், நாராயணனின் அக்கா, ப்ரியாவின் பெரியம்மா, மூர்த்தியின் மச்சினி 
  என்று மற்றவர் சார்ந்தே இருந்துவரும் தன் முகவரியில் அகிலா சலிப்பு கொள்கிறாள். 
  தன்னை யாரேனும் தனி மனுஷியாக, முழுமனுஷியாகப் பார்க்கமாட்டார்களா என்று 
  ஏங்குகிறாள். ஒரு நாள் ஷாப்பிங்க் செய்யும்போது தன் பால்ய சிநேகிதி கற்பகத்தைச் 
  சந்திக்கிறாள். அவள் கணவனை இழந்தபின்னும் பூவும் பொட்டுமாய் இருப்பதைப் 
  பார்க்கிறாள்.
 கற்பகம் தான், அகிலாவைத் தனியே வசிக்கச் சொல்லித் தூண்டுகிறாள். 'மற்றவர்கள் என்ன 
  நினைக்கிறார்கள்' என்று கவலைப்படுவதை நிறுத்து என்கிறாள். 
  " Happiness is choosing one's own life: to live it the way 
  one wants. Happiness is knowing one is loved and having someone to love. 
  Happiness is being  able to hope for tomorrow," 
  என்று அகிலாவின் மனதில் பதியும்படி சொல்கிறாள்.
 
 வீட்டில் இந்தப் பேச்சை எடுக்கும்போது தான் புது வீடு வாங்க நினைப்பதாய்ச் 
  சொல்கிறாள் அகிலா. பத்மா மீண்டும் அகிலாவோடு ஒட்டிக்கொள்ள தன் கணவனின் குறைந்த 
  வருமானம் மற்றும் இரண்டு மகள்களின் திருமணம் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறாள். 
  பத்மாவின் சுயநலம் அகிலாவுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுக்கிறது. ஆனால், அகிலா 
  இம்முறை மிகவும் உறுதியாக இருக்கிறாள். தம்பி நரஸிம்மன் மற்றவர்கள் என்ன 
  நினைப்பார்கள்
 என்றும் தன் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்றும் கேட்கிறான். பத்மா 
  அகிலாவுக்கு யாரோடோ தொடர்பு என்று கூறி அக்காவிடம் அறை வாங்குகிறாள். பத்மாவின் 
  மௌன யுத்தம் தொடங்கிவிடுகிறது வீட்டில். நாராயணன் மட்டும் அக்கறையும் பயமும் 
  கலந்து பேசுகிறான். சிலரிடம் தனியே வசிப்பதைப்பேசி முடிவெடுக்கச் சொல்கிறான். 
  அகிலாவும் அவனது யோசனையை ஏற்கிறாள்.
 
 அப்போதுதான் அகிலாவின் தேடல் தொடங்குகிறது. சக பயணிகள் ஒவ்வொருவராய் விடைபெற்று 
  கோழிக்கோடு, கோவை, நாகர்கோவில் என்று இறங்கிவிட, ஒவ்வொருவரின் கதையையும் 
  கேட்டபின் பயணத்தின் முடிவில் உள்ளே தான் தளர்ந்த மாதிரியும், தனக்கென்று 
  வாழவேண்டும் என்ற எண்ணம் தன்னுள் வளர்வதை உணர்கிறாள் அகிலா.
 
 கதையின் முடிவு ஒன்றும் பிரமாதமான எதிர்பாராத திருப்பம் என்றெல்லாம் 
  சொல்லிவிடமுடியாது. இருப்பினும், அகிலாவின் தேடல் பயணம் இருக்கிறதே அதுவே சுகமான 
  அனுபவம். நாமும் எதையாவது, குறிப்பிட்டு எதுவுமில்லாவிட்டாலும் பலவித 
  அனுபவங்களையாவது தேடிக்கிளம்பிவிடுவோமா என்றே படிக்கும் நம்மை நினைக்கவைக்கிறது. 
  சிறுவயதில் அகிலா குடும்பத்தோடு ராமேஸ்வரம் பிக்னிக் போகும்போது மைசூர் பாக், 
  தேங்காய் சாதம், புளியஞ்சாதம், சீடை, முறுக்கு மட்டுமில்லாமல் பச்சைமிளகாய், 
  மாதுளம்பழம் மற்றும் பச்சைக்கொத்துமல்லி போட்ட
 தயிர் சாதம் என்று நினைவு கூறும் இடங்களில் கூட பேசாமல் தமிழிலேயே 
  எழுதியிருக்கலாமென்றும் தோன்றவேயில்லை தெரியுமா. மொழி அத்தனை அழகாகவும் 
  இயல்பாகவும் பொருந்தியிருக்கிறது. அவ்வகையில் ஆர்.கே.நாராயணனின் ஆங்கிலம் தான் 
  என் நினைவுக்கு வந்தது.
 
 
  வாழ்வோடு 
  இணைந்த '?¢ந்து' நாளிதழ், Wordsworth 
  இன் daffodils 
  பூக்களை இகழ்ந்து தமிழ் மக்களின் மல்லிகைப்பூவைப் புகழ்ந்து பேசுவதோடு தினமும் 
  பேருந்தில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளைப் படித்து, மனனம் செய்து வந்து, 
  வகுப்பில் அகிலாவைச் சொல்லச் சொல்லும் தமிழாசிரியர், கோலம் வரைவதில் உள்ள 
  நுணுக்கங்கள் மற்றும் அதன் கலாசாரப்பின்னணி, ஜவ்வரிசி வடாம் போடும் சரசா மாமி, 
  எம் ஜீ ஆரின் மரணம் மற்றும் அதன் பின்விளைவாய் ஏற்படும் கலவரம்/குழப்பம் 
  போக்குவரத்து நிறுத்தம், அகிலாவீட்டு ஊஞ்சல், மதுரை சுங்குடி சாரி, ஞாயிறுகளில் 
  அப்பாவிற்காக அம்மா செய்யும் கத்தரிக்காய் பஜ்ஜி, அம்மா கட்டிக்கொள்ளும் மடிசார்,மற்றும் பலவிதமான 
  பிராமணக் குடும்பத்திற்கே உரிய வழக்கங்கள் என்று ஆங்காங்கே விரியும் ஏராளமான 
  நுணுக்கங்கள் போதாதா இது எளிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அப்பட்டமான தமிழ் நாவல் 
  என்று உணர. ஆனாலும், துளியும் நெருடவேயில்லை. படித்து முடித்ததும் இந்நாவலுக்குக் 
  கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்தமாதிரித் தெரியவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் 
  கவிந்தது.
 
 'Ladies Coupe' by Anita Nair -First published by 
  Penguin Books India 2001
 
 நன்றி: திசைகள் மார்ச் 2005
 
 In connection with Singapore Writer festival 
  other links :
 http://www.singaporewritersfestival.com/home.html
 http://www.dreams2000.com/nair/anithanair.htm
 http://www.livemint.com/2007/10/27104948/Books-List--Anita-Nair.html
 http://gothamist.com/2006/08/13/art_and_the_nov.php
 
 sankari01sg@yahoo.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |