இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2006 இதழ் 82 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அறிவியல்!
நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வாசல் திறந்த வான்வெளியில்,
ஈசல் மீது கூடு கட்டி,
ஈர்ப்பு விசையிலா விண்வெளி கடந்து
ஊர்தியில் பறந்து போய்
மீண்டும்,
நிலவில் இறங்கும் பயணமா?
உலவிய நிலவில் தங்க நிரந்தர
நிலையம் அமைக்கவா?
அங்கே விமானிகள் ஓய்வெடுத்துச்
செங்கதிர் வீசும்
செவ்வாய்க் கோளுக்கு அடுத்துத்
தவ்வும் தீர்க்கப் பயணமா?
இம்முறை நான்கு பேர்
விண்வெளிக் கப்பலைச் செலுத்திச்
செம்மண்ணில் தடம் பதித்து
புது வரலாற்று யுகத்தைச்
செதுக்கவா?
நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2
"1961 ஆம் ஆண்டு முதல் நிலவுக்கு மனிதரை அனுப்பிய காலத்தை விடத் தற்போது மனிதரைச் செவ்வாய்க் கோளுக்குச் சீக்கிரம் அனுப்பும் அனுபவமும், நுணுக்கமும், உறுதியும், வல்லமையும் நாசா விஞ்ஞானிகள் மிகுதியாகப் பெற்றுள்ளார்." - ராபர்ட் ஸ¤ப்ரின்
[Robert Zubrin, President of Pioneer Astronautics & The Mars Society (2001)]

"நம் மூளை அக்கினியை வெளியாக்கி, நமது ஆயுட் காலத்திலேயே நமது பரிதி மண்டலத்தின் அண்டக் கோள்களையும், மற்ற பிண்ட வடிவுகளையும் [Solar Bodies like Comets, Planet Moons] மனித இனத்தின் கரங்கள் தொட்டு வரும் நீட்சி எல்லைக்குக் கொண்டுவர முற்படுவோம்." - டேனியல் கோல்டன்
[Daniel Golden, NASA Director (2001)]

"பிளாஸ்மா உந்து சக்தி ராக்கெட், முற்றிலும் மாறுபட்ட டிசைனில், முந்தைய சாதாரண ரசாயன ஆற்றல் ராக்கெட்டை விடப் பன்மடங்கு அசுர வல்லமை கொண்டதாய் ஆக்கப் பட்டுள்ளது! அதன் உதவியால் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் விண்வெளி விமானிகளின் காலம் பாதியாக அல்லது பாதிக்கும் குறைவாக [மூன்று மாதப் பயணமாக] ஆகப் போகிறது! -டாக்டர் பிராங்கலின் சாங்-டையாஸ்
[Dr. Franklin Chang-Diaz, Former NASA Astronaut, Plasma Rocket Engine Developer]

"புதியதாகத் தயாரிக்கப்படும் ஏரெஸ் ஏவுகணைதான் [Ares Rockets] விண்வெளியில் பயணம் செய்து, மனித இனத்தைப் பரிதி சூழ்மண்டலத்தின் நான்காவது அண்டமான செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகிறது! நாசாவின் விண்வெளித் திட்டத்தில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் கனவு கண்டு, எதிர்பார்த்து, ஏமாந்து பன்முறைக் கைவிடப் பட்டத் திட்டமிது! .. நான் முழுக்க முழுக்க நாசாவின் அண்டவெளித் தேடல் பயணங்களை ஆதரிப்பவன். அவற்றிலும் சிறப்பாக மனிதரியக்கும் பயணங்களை வரவேற்று ஊக்குவிப்பவன். அண்டவெளிப் பறப்புத் திட்டங்களில் மானிடப் பயணச் சாதனைகளே அமெரிக்காவின் உன்னதப் பணியாக நம்புகிறவன் நான்." - மைக்கேல் கிரி·ப்பின்
[Michael Griffin, NASA's Administrator (2003)]

"மனிதர் 2020 ஆண்டுக்குள் அண்டவெளி நோக்கிப் பயணம் செய்து, முதன்முதல் செவ்வாய்க் கோளில் தடம் வைத்துத் தங்கி மீளப் போகிறார்கள்." - ஜியார்ஜ் புஷ், அமெரிக்க அதிபதி (ஜனவரி 2004)

"நம்மில் எவருக்குமே வாழ்க்கை எளிதாக இருப்பதில்லை! அதனால் என்ன? நம்மிடம் விடாமுயற்சியும், எல்லாவற்றையும் விட நம் திறமை மீது அசையாத நம்பிக்கையும் இருக்க வேண்டும். இயற்கைக் கொடையாக நமக்கு ஏதோ சிலவற்றில் திறமை உள்ளதென நம்பி, அதைத் தேடி அடைய வேண்டும்." - மேரி கியூரி [இரட்டை நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை (1867-1934)]

முன்னுரை: பல்லாயிரம் ஆண்டுகளாய் நமது அண்டைக் கோள் சந்திரனில் கால்வைக்க மனிதர் கனவுகள் கண்டு சாதித்தது போல், பூமியைப் பல வகைகளில் ஒத்தச் செவ்வாய்க் கோளில் தடம்வைக்க, தற்போது மனிதர் முற்படுவதில் விந்தை ஒன்றுமில்லை! 1969 ஜூலை முதல் விண்வெளித் தீரர் பலர் நிலவில் விளையாடிய போதிருந்த நிபுணத்தை விட நாசாவின் விண்வெளிப் பொறிநுணுக்கம், பறப்பு வல்லமை, விஞ்ஞான விளக்கம் 21 ஆம் நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி விரிந்துள்ளது! கடந்த 50 ஆண்டுகளாக விண்வெளி யுகத்தின் மகத்தான வெற்றிகள், மதியற்ற தோல்விகள், மனமுடைந்த மரணங்கள் ஆகியவை நாசா விஞ்ஞானிகளையும், பொறியாளிகளையும் கூர்மையான அறிவாளராய் ஆக்கியுள்ளன! நமது அண்டை நிலவுக்குப் போகச் சுமார் 250,000 மைலும், பூமிக்குத் திரும்ப 250,000 மைலும் எடுத்தது. ஆனால் பக்கத்தில் உள்ளதாகத் தோன்றும் செவ்வாய்க் கோளானது பூமியிலிருந்து 136 மில்லியன் முதல் 150 மில்லியன் மைல் தூரத்தில், சற்று நீண்ட நீள்வட்ட வீதியில்
[Elliptical Orbit] பரிதியைச் சுற்றி வருகிறது! செவ்வாய்க் கோளுக்குத் தற்போதைய ராக்கெட்டில் விண்வெளிக் கப்பலை ஏந்திப் பயணம் செய்ய விமானிகளுக்குச் சுமார் 6 அல்லது 9 மாதங்கள் எடுக்கலாம்! உலக விஞ்ஞானிகள் பொறிநுணுக்க முறையில் தேர்ச்சி பெற்ற மனிதர் இன்று செவ்வாய்க் கோளுக்குச் சென்று மீள முடியும் என்று உறுதியாக நம்பினாலும், அந்தக் குறிக்கோள் பணி நடைமுறைக்கு ஏற்ற செயலா, நிதிச் சிக்கனத் தேடலா அல்லது பாதுகாப்பான பயணமா போன்ற ஆழ்ந்த வினாக்களுக்குப் பதில் சொல்லத்தான் வேண்டும்.

மனிதர் செவ்வாய்க் கோள் சென்று வரத் தீர்மானம்

ஈராண்டுகளுக்கு [26 மாதங்கள்] ஒருமுறை, செவ்வாய்க் கோள் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கும் போது, அவ்விரு கோள்களின் சுற்று வீதிகள் அருகி, இடைத்தூரம் குறைந்து விண்வெளிக் கப்பல் பயணத்துக்குக் குன்றி யளவு எரிபொருளே தீய்ந்து செலவாகிறது. அவ்விதத் தவணைகளில் மீண்டும், மீண்டும் விண்கப்பல்கள் அனுப்பப் பட்டுச் செவ்வாய் கோளின் தளத்தில் ஊர்திகள் பன்முறை உலவி, அதன் தளவியல் பண்புகள் வெற்றிகரமாக உளவப் பட்டுள்ளன! 2007 இல் ·பீனிக்ஸ் உளவி [Phoenix Probe] ஏவப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. செவ்வாய்க் கோளின் அடித்தளங்களில் நீர்மை உள்ளதா என்று குழி தோண்டி ஆராயும் குறிப்பணிகளை அது முக்கியமாக மேற்கொள்ளும். மேலும் கீழ்த்தளங்களில் ஆர்கானிக் மூலக்கூறுகள் [Organic Molecules] உள்ளனவா வென்றும் அது உளவுகள் செய்யும். செவ்வாய்த் தளத்தின் மேடு பள்ளங்களில் மிகையான அளவு நீரோட்டம் நதிகளாய் ஓடியிருப்பதைக் கண்டுபிடித்தது செவ்வாய் ஆடிஸ்ஸி உளவி. ·பீனிக்ஸ் அதைத் தொடர்ந்து மாதிரிகள் எடுத்து நீர் இருந்ததை மேலும் உறுதிப் படுத்தும்.

2003 பிப்ரவரி முதல் தேதி நேர்ந்த கொலம்பியா விண்கப்பலின் கோர விபத்தை உளவு செய்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் தீர்வுகளை மெச்சிய, அமெரிக்க அதிபதி ஜியார்ஜ் புஷ் 2004 ஜனவரியில் நாசா விண்வெளித் திட்ட நிபுணர்களின் முன்பாக, 2020 ஆண்டுக்குள் சந்திரனைத் தொட்டு மீளும் மனிதப் பயணத்துக்குப் புதியதோர் விண்வெளிக் கப்பல் தயாரிக்கும்படியும், செவ்வாய்க் கோளுக்கு மனிதர் சென்று மீளும் குறிக்கோளுடன், நிலவில் நிரந்தரத் தங்குமிடம் [Lunar Base] ஒன்றைக் கட்டும் படியும் கூறியதாகத் தெரிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அரசாங்கப் பிரதிநிதிகள் 383 பேர் ஆமோதித்தும், 15 பேர் எதிர்த்தும் வாக்கெடுப்பில் அத்திட்டம் வரவேற்கப் பட்டு ஆரம்பமானது. பிறகு அந்த விண்வெளிக் குறிப்பணியைச் செனட்டர்களும் ஏக மனதாய் ஆமோதித்து ஆதரவளித்தார்.

செவ்வாய்ப் பயணத்துக்குச் செம்மையான பிளாஸ்மா ராக்கெட் எஞ்சின்
நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2
நிலவுக்குப் போக ஏதுவான சனி-V ராக்கெட்டுகளும் [Saturn-
V Rockets for Moon], விண்மீட்சிக் கப்பல் ராக்கெட்டுகளும் [Space Shuttle Rockets] ரசயான வாயுத் திரவ எரிசக்தியில் உந்திச் [Liquified Gases -Chemically Propelled Rockets] சென்றன. அந்த ராக்கெட்டுகளை ஏவிச் செவ்வாயிக்குப் பயணம் செய்ய சுமார் 6 அல்லது 9 மாதங்கள் பிடிக்கும். அத்தனை நாட்கள் பயணத்தை நீடிக்கத் தேவையான அளவு எரிவாயுத் திரவம் கொள்ளளவில் அளவற்றது! அதனை ஏந்திக் கொண்டு உந்திச் செல்லவும், தூக்கிச் சுமக்கவும் மாபெரும் வடிவமுள்ள ராக்கெட் வாகனம் தேவைப்படும். மேலும் செவ்வாய்க் கோளிலிருந்து மீளவும், இடையில் பயணம் தடைப்பட்டுப் போனால் திரும்பவும் அந்த அளவு எரித்திரவம் போதாது! அந்தப் பிரச்சனையைத் தீர்வு செய்யப் புதியதாக "கனல் பிழம்பு எஞ்சின் ராக்கெட்டை" [Plasma Engine Rocket] நாசா பொறியாளர் செவ்வாய்க் கோள் பயணத்துக்குச் சிறப்பாக விருத்தி செய்து வருகிறார்.

நாசா பொறியியல் நிபுணர் விருத்தி செய்யும் பிளாஸ்மா எஞ்சின் ராக்கெட், செவ்வாய்ப் பயணத்துக்கு எடுக்கும் 6 முதல் 9 மாதக் காலத்தைப் பாதியாக குறைத்து, குறைந்தது 3 மாதத்தில் முடிக்கும்படி எரிச்சக்தியையும், நாட்களையும் சிறுக்கிறது. பிளாஸ்மா எஞ்சின், வாயுக் கொந்தளிப்பு எதிர்போக்கு எஞ்சின்
[Gas-Dynamic Mirror Engine] என்றும் அழைக்கப் படுகிறது. அந்த எஞ்சினில் வாயு அடைபட்டு, சூடாக்கப் பட்டுப் பல்லாயிரம் டிகிரியில் பரிதியின் உட்கருப் பிணைவு உஷ்ணத்தைப் [Fusion Temperature] பெறுகிறது! அப்பெரும் உஷ்ணத்தில் எளிய நிறை உள்ள வாயுக்கள் சூடேறி அணுக்கருப் பிணைவில் பின்னிக் [Nuclear Fusion] கனநிறை மூலகமாக மாறிப் பேரளவுச் சக்தியை வெளியாக்குகிறது! தற்போது 6 அடி நீளமுள்ள சோதனை மாடல் பிளாஸ்மா எஞ்சின் ஒன்று தயாரிக்கப் பட்டு, ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இப்போது விருத்தியாகும் பிணைவு சக்தி ராக்கெட் எஞ்சினில் [Fusion-Powered Rocket Engines], பிழம்பு வாயுக்கள் கசிந்து வெளியேறி உந்து ஆற்றலை அளிப்பதுவும் தேவையான ஓர் இயக்கமாகும்.

செவ்வாய்க் கோள் பயணத்தில் மனிதரை அனுப்பச் செலவுகள்

செவ்வாய்க் கோளானது நிலவுக்கு உள்ள தூரத்தை விட பூமியிலிருந்து 600 மடங்கு தொலைவில் [120-150 மில்லியன் மைல்] பரிதியைச் சுற்றி வருகிறது. 1963-1972 ஆண்டுகளில் மனிதரை நிலவுக்கு அனுப்பப் பயிற்சி அளிக்கவும், நிலவுக்கு அனுப்பி மீட்கவும் பயன்பட்ட அபொல்லோ திட்டங்களுக்குச்
[Lunar Landing Apollo Programs] செல்வான தொகை: 106 பில்லியன் டாலர் [2005]. அடுத்து விண்மீள் கப்பல் திட்டங்களுக்குச் [Space Shuttle Programs] நாசா செலவிட்ட தொகை: 153 பில்லியன் டாலர். கடந்த 30 ஆண்டுகளாக அகிலதேச விண்வெளி நிலையத்தின் [Internatioanal Space Station] அமைப்புக்குச் செலவு: 100 பில்லியன் டாலர். அடுத்து மீண்டும் நிலவுக்குச் சென்று நிரந்தர ஓய்வு நிலையம் அமைக்க 104 பில்லியன் டாலர் செலவாகும் என்று நாசா மதிப்பீடு செய்திருக்கிறது. செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்பும் புதிய திட்டங்களுக்கு ஆகப் போகும் செலவுத் தொகை: 500-800 பில்லியன் டாலர் [2006] ஆகலாம் என்று நாசா கணக்கிட்டிருக்கிறது. ஆனால் முதிய விண்வெளித் திட்டநிதி ஆலோசகர் மார்க்கோ காஸெரஸ் [Marco Caceres] நாசா கணக்கீடை விட 5 முதல் 10 மடங்கு செலவாகும் என்று குறிப்பிடுகிறார். காஸெரஸ் மதிப்பீடின்படி செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்கள், நிலவுத் திட்டத்தையும் சேர்த்து 2 டிரில்லியன் டாலர் ஆகிவிடும் என்று பெருமூச்சு விடுகிறார்.

[முற்றும்]

தகவல்:

Image Credits: NASA, Discover Magazine (Sep. 2006), Sky & Telescope (Dec 2005),
1. Discover Magazine Science, Technology & The Future: Does NASA have A Future? By: David Freedman (September 2006)
2. Back to the Future for NASA in 2005 By: Brian Berger Staff Writer
3. NASA's Future Plans for Mars Exploration.
4. Future Manned Mars Missions [www.vectorsite.net/]
5. Europe's Eve on Mars By: Robert Noeye, Mars Up Close -Sky & Telescope [December 2005]
6. Human Travel to Mars May Happen Sooner than Expected, Scientists Say By: Betsy Quema [May 21, 2001]
7. Advanced Rocketry NASA Works on Powerful Plasma Rockets By: Glen Golightly [June 16, 2000]
8. Rocket Engine for the Future Space Travels By: Ray Villard [September 28, 1999]
9. NASA to Commercialize Advanced VASMIR Plasma Rocket Concept By: Staff Writers [www.space-travel.com/reports (Jan 24, 2006)]

jayabarat@tnt21.com [September, 30 2006 (R-1)]

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner