தற்கொலையாளிகளின் மரபு : ஆறு திரைப்படங்கள்!
- யமுனா ராஜேந்திரன் -
1.
'உலக
சினிமாவில் தற்கொலையாளிகள் பற்றிய குறிப்பிடத்தக்க திரைப்படங்;கள்
வெளியாகியிருக்கின்றன. பிரிட்டனின் சேனல் நான்கு
தொலைக்காட்சி தயாரித்த, செப்டம்பர் தாக்குதலில் ஈடுபட்ட அரபுத் தற்கொலையாளிகள்
குறித்த ழுழநீளப்படமான ‘தி ஹாம்பரக் ஸெல்’
(The Hambug Cell-2004), பாகிஸ்தான் தற்கொலையாளி ஓருவரைச் சித்திரிக்கும், ஹாலிவுட்
சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகரான ஜோர்ஜ் குலூனி நடித்த ஸடீபன் காஹன் இயக்கிய
‘ஸிரியானா’ (Syriana-2005), அரபு இயக்குனரான ஹனி அபு அஸாத் இயக்கிய, பாலஸ்தீனத்
தற்கொலையாளிகள் எதிர்கொள்ளும் தத்துவ மற்றும் அறவியல் பிரச்சினைகளைச் சித்தரிக்கும்
பாலஸ்தீனத் திரைப்படமான, ‘பாரடைஸ் நவ்’ ( Paradise Now-2005) அமெரிக்க இயக்குனரான
ஜோஸப் காஸ்டல்லோ இயக்கிய, அமெரிக்க சுயாதீனத் திரைப்படமான ‘தி வார் வித்தின்’ (The
War Within-2005) போன்ற நான்கு சமகாலப் படங்களை ஆதாரமாகக் குறி;ப்பிடலாம்.
குறிப்பிட்ட நான்கு கதைப்படங்களில், ‘ஹாம்பரக் ஸெல்’ திரைப்படத்தில் செப்டம்பர்
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு தெளிவான மனநிலையுடன் திட்டமிட்டு, அந்தச்
செயலில் ஈடபட்டார்கள் என்பதனையும், அவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள் அல்ல, மாறாக
மதக்கருத்தியலால் உந்தப்பட்டவர்கள் என்பதனையும் சொல்கிறது. இன்னும் அந்தச்
சம்பவத்தில் ஈடுபடடவர்கள் வறுமையினால் இதில் ஈடுபட்டவர்கள் அல்ல, மாறாக இஸ்லாமிய
மதம் என்பது ஒரு அரசியல் எனும் கருத்தியலினால் உந்துதல் பெற்றவர்கள் எனபதையும்
’ஹாம்பரக் ஸெல்’ படம் சொல்கிறது. ‘ஸிரியானா’ படத்தில் வளைகுடா நாடொன்றில்
வேலையிழந்து கால்துறையின்; அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு பாகிஸ்தான் பிரஜை,
இஸ்லாமிய மதக் கல்வி நிறுவனமான மதராஸாவில் போதனை பெற்ற பின்பு, எவ்வாறாகத்
தற்கொலைப் போராளியாக ஆகிறார் என்பதனைச் சித்தரிக்கிறது. ‘பாரடைஸ் நவ்’ எனும்
பாலஸ்தீனத் திரைப்படம் தற்கொலை எனும் பிரச்சினை குறித்த தத்துவ-அறவியல்-அரசியல்
எனும் மூன்று அம்சங்களை மூன்று பாத்திரங்;களின் வழி, தற்கொலைத் தாக்குதலின்
இஸ்லாமிய மதம் சார்ந்த அடிப்படைகளையும், அரசியல் ரீதியில் தற்கொலைத் தாக்குதலிலுள்ள
விளைவுகளின் போதாமைகளையும்
விவரிக்கிறது. ’தி வார் வித் இன்’ திரைப்படம் பிரான்ஸ் காவல்துறையினால்;
சித்திரவதைக்கு உள்ளாகும் ஒரு அப்பாவி இளைஞன எவ்வாறாக இஸ்லாமிய மதப் போதனையின் பின்
தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தும் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் நியூயாரக்
நகருக்கு வருகிறான் என்பதனையும், அங்கு அவன் எதிர்கொள்ளும் இருமனநிலையையும்,
அறத்தின் அடிப்படையில் அவனுள் எழும் ஊசலாட்டத்தையும் சித்தரிக்கிறது.
2.
சிங்கள திரைப்பட இயக்குனர் மோஹன் நியாசின் ‘களு சுது மல்’ அல்லது ‘நிறமற்ற பூக்கள்’
(kalu sudu mal-2001) எனும் கதைப் படம்,
விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்காலையாளிகள் பற்றிப் பேசும்; திரைப்படம்.
தற்கொலையாளிகள் பற்றி மட்டும் நான்கு தமிழகப்
படங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வரலாற்று ரீதியில் பாரக்க, இலங்கை ஜனாதிபதி
பிரேமதாசா தற்கொலையாளிகளால்
சொல்லப்பட்டார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலையாளிகளால் கொல்லப்பட்டார்.
மணிரத்தினத்தின் ‘உயிரே’ தற்கொலையாளிப் பெண்ணைப் பற்றிய கதையாகப்
பின்னப்பட்டிருக்கிறது. அவரது ‘கன்னத்தை முத்தமிட்டால்’ படத்தில் கால்
ஊணமுற்றவராகத் தோன்றிய ஒருவர் தற்கொலையாளியாக ஆகின காட்சி இருந்தது. சந்தோஷ்
சிவனின் ‘டெரரிஸ்ட்’ தற்கொலையாளிப் பெண்ணைப் பற்றியதாக இருக்கிறது. ரமேசின்
‘குப்பி’ தற்கொலையாளிகள் பற்றியதாக இருக்கிறது. தற்கொலையாளிகளின் அரசியலுணர்வைப்
பற்றியதான எந்த விவாதங்களையும் கொண்டிராத படங்கள் இவைகள். தற்கொலை எனும் ஒரு
அரசியல் மற்றும்; தத்துவப் பிரச்சினையை வெறுமனே
காதல்,கர்ப்பம் என மணிரத்னம் சந்தோஷ்சிவன் படங்கள் சித்தரிக்க, அரசியல் தவிர்ந்த
ஒரு வெகு சாதாரண திரில்லர் படமாக 'குப்பி’
எஞ்சி நிற்கிறது. சிங்களப் படமான ‘நிறமற்ற பூக்கள்’ இந்த மூன்று படங்களிருந்தும்
எந்த விதத்திலும் மேன்மையான படமாக இல்லை.
குறைந்த பட்சம் தற்கொலையாளிகள் மீது அதீதமான வெறுப்பைக் காண்பிக்காத படங்களாகவாவது
தமிழகத்தின் படங்கள் இருந்தன.
ஆனால் ‘நிறமற்ற பூக்கள்’ சிங்களப் படம் ஆரம்பம் முதலே தற்கொலையாளிகளின்; மீது ஒரு
அசூசையையும் களங்கத்தையும்
தோற்றுவிப்பதாகவே இருக்கிறது.
கதை இதுதான். நகரத்திற்கு வெகு அப்பால், ஆற்றுப்பாலத்தின் மீது ஒரு அரசியல்
பிரமுகரின் வாகனம் வரும் போது, தற்கொலைக்
குண்டு வெடிப்பின் மூலம் அவரைக் கொல்வதற்கான திட்டத்துடன் ஒரு பெண் ஒரு ஆண் என இரு
தற்கொலையாளிகள் நகரத்திற்கு
வருகிறார்கள். சந்தேகப்பட முடியாத வகையில் மேற்கத்திய உடைகளுடன் ஒர
பெரும்பங்களாவில் தங்கும் அவர்கள், அதற்கான
வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கான செய்ல்திட்டங்களை வகுத்துக் கொடுப்பதற்கான
பணியை அமைப்பின பெண் ஒருவர்
ஏற்கிறார். குண்டு வெடிப்புபச் செயல்பாட்டின் போது எவர் உயிர் தப்பினாலும்
அவர்களைப் பிற்பாடு கொன்றுவிட வேண்டும் என்பது
அமைப்பின் கட்டளையாக இருக்கிறது. தற்கொலையாளிகாளக அனுப்பப்படும் ஆண் கருணையற்று
பக்கத்து வீட்டு நாயைக் கொலை
செய்கிறான். அந்தப் பெண்ணிடமும் முரட்டத்தனமாகவே நடந்து கொள்கிறான.; தாம்
அனுப்பபட்ட நோக்கம் தான் முக்கியமேயொழிய
மனிதாபிமானம் என்பது தமக்குச் சுத்தமாக இருக்கக் கூடாது என்கிறான். பெண் அண்டை
வீட்டுச் சிறுமியுடன் அன்பாக இருக்கிறாள். அவசியமற்றுப் பிறர் துன்புறக் கூடாது என
நினைக்கிறாள்.
தனிமையும் மரணமுறப் போகிறோம் எனும் உணர்வும் அவர்களிடம் சஞ்சலத்தை எற்படுத்துகிறது.
இரவுகளில் உடல்; தெரியும்
ஆடையை உடுத்துக் கொண்டு அந்தப் பெண், அந்த இளைஞனின் மீது காமக்கணைகள் வீசுகிறாள்.
அவளது அங்கங்களை முறுக்கிக்
காண்பித்து அவனை உடலுறவுக்கு அழைக்கிறாள். ஆரம்பத்தில் மிகுந்த திடமனதுடன்
இருக்கும் அவன் நாளடைவில் அவளோடு
உடலுறவில் ஈடுபடுகிறான். தாங்கள் கொல்லப்போகும் திட்டத்திற்கு உடந்தையாக ஆற்றுப்
பாலத்தின் அருகில் இருக்கும் ஒரு வலனொலி
திருத்தும் கடைக்காரனை வசியப்படுத்தம் பெண், அதற்காக அவனோடு உடலுறவில்
ஈடுபடுகிறாள். அவள் பிற ஆடவனோடு உடலுறவு கொள்வதைக் காணும் இளைஞன் பொறாமை உணர்வுக்கு
ஆட்படுகிறான். அவனோடு நீ தொடர்பு கொள்ளக் கூடாது என்கிறான். ஆனால் திட்டத்திற்காக
அவனைப் பாவிப்பதில் இது தவிர்க்க முடியாதது எனும் போது அவன் மௌனமாகிறான்.
குண்டுவெடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இவர்களது உறவின் விளைவாகப்
பெண் கர்ப்பமடைகிறாள். இருவருக்கும்
குழந்தைக்காக வாழ வேண்டும் எனும் ஆசை வருகிறது. தாங்கள் தற்கொலை செய்துகொள்ளக்
கூடாது என முடிவு செய்கிறார்கள்.
வானொலி திருத்துபவனை வண்டியில் உட்காரவைத்து அவனையே தற்கொலையாளியாகப்
பாவிக்கிறார்கள். குண்டு வெடிக்கிறது. திட்டம்
முடிகிறது. ஆனால் இவர்கள் இருவரும்; தப்பிக்கிறார்கள். தப்பிப்பது அமைப்புக்குத்
தெரிகிறது. இவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட
வேண்டும் எனத் திர்மானிக்கப்படுகிறது. தப்பிச்செல்லும் இருவரையும், கடற்கரையொனறில்
வைத்து தலைமையினால் அனுப்பப்பட்ட
திட்டத்திற்குப் பொறுப்பான பெண் சுட்டக் கொல்வதுடன் படம் முடிகிறது.
இந்தத் திரைப்படத்தின் பாலுறுவுக் காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக்
கூடியதேயாகும். தற்கொலையாளிப் பெண்ணும்
போராளியும் பதுங்குகுழியில் பாலுறவுகொள்ளும் காட்சியை சந்தோஷ்சிவன் டெரரிஸ்ட்
படத்தில் காட்சிப்படுத்தவில்லை. மணிரத்னம் கூட உயிரே படத்தில் இவ்வாறான விகாரமான
சித்தரிப்புகளை மேற்கொள்ளவில்லை. ஒரு மூன்றாம்தரப் படத்தினைப் போல காமக் கணைவீசும்
காட்சிகளை, இரவு விடுதி நடன மாதின் மெல்லிய உடைகளுடன் இப்படத்தின் இயக்குனர்
பாவித்திருக்கிறார். மேலாக கர்ப்பம் பெறாத பெண் தற்கொலையாளிகள், காதல்
போன்றவற்றையும் மீறிய அவர்களது கடப்பாட்டு உணர்வுகளை இது போன்ற இயக்குனர்களால்
தீண்டிப் பார்க்கவும் கூட முடிவதில்லை என்பது இங்கு குறித்துக் கொள்ளத்தக்கதாகும்.
எந்தப் படைப்பாளிக்கும் அவர்தம் கதைமாந்தர் மீது புரிந்துண்ர்வும் பரிவுணர்வம்
இருக்க வேண்டியதென்பது படைப்பின் மீதான முதல்
நிபந்தனையாகும். ஆனால,; தற்கொலையாளிகள்; மீது ஆரம்பம் முதல் இறுதி வரை துவேச
உணர்வுடனும் விசமத்துடனும்
எடுக்கப்பட்டிருக்கும் படம் நிறமற்ற பூக்கள். இந்த இயக்குனரின் படைப்பு நேர்மையின்
இலட்சணத்தை நாம் புரிந்துகொள்ள, இந்தப்
படத்திற்கான ஆதாரங்களையும் ஆராய்;ச்சிகளையும் சிங்கள் ராணுவ
அதிகாரிகளிடமிருந்துதான் இந்த இயக்குனர் பெற்றுக்
கொண்டிருக்கிறார் என்கிற ஒரு செய்தி மட்டுமே போதும். அவமானகரமான ஒரு இழிந்த
திரைப்படம் ‘நிறமற்ற பூக்கள்’.
3.
வரலாறு
முழுக்கவும் எவ்வாறாக எதிரியை நிர்மூலமாக்கும் தற்கொலைப் போராளிகள் இருந்து
வந்திருக்கிறார்கள் என விசாரணை செய்யும் மூன்று மணி நேர விவரணப்படம்
‘தற்கொலையாளிகளின் மரபு’ (The Cult of Suicide Bombers : Produced by Bob bear :
Channel Four Documentary: 2005) எனும் விவரணப்படம்.. இந்தப் படத்தினை செப்டம்பர்
தாக்குதலையடுத்து எழுந்த விவாதங்களின்
அடிப்படையில், முன்னாள் அமெரிக்க உளவுத்துறையதிகாரியான போப் பேர்
இயக்கியிருக்கிறார். போப் பேரின் விவரணப்படம் கிறிஸ்துவின் காலத்திலிருந்து
அல்கொய்தாவின் காலம் வரை, தற்கொலை என்பது எவ்வாறு ஓரு அரசியல் ஆயுதமாக இருந்த
வந்திருக்கிறது என்பதைச் சொல்கிறது. (1).பைபிள் கால கட்டத்தில் பிடிபட்ட ஸாம்சன்,
தான் மரணமுறுவதோடு வழிபாட்டுத் தலத்தை இடித்து வீழ்;த்துவதன் மூலம், தனது எதிரிகளான
2000 பிலிஸ்டைன்களை இடிபாட்டின் இடையில் சிக்கி மடியச் செய்தான். (2).
ல்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக ரோமானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட
ஜூPடேயாவில் தமது அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக யூதர்கள் தற்கொலைத் தாக்குதல்கள
நடத்தினர். (3). சிலுவை யுத்தத்தின் போது தமது கப்பலைத் தாமே மூழ்கடிப்பதன் வழி,
கிறஸ்து-மேரி இரத்தமரபைக் காப்பாற்றும் டெம்ப்ள்ர் எனும், அதிகாரபூர்வ
கிறித்தவர்களுக்கு எதிரான மறவர் குழவினர், 140
கிறித்தவர்களையும் அதனிலும் அதிகமான இஸ்லாமியர்களையும் கொன்றொழித்தனர். (4).
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய
‘காமிகாசே’ விமான ஓட்டிகள் அமெரிக்கக் கப்பல்களின் மீது தற்கொலைத் தாக்குதல்களை
நிகழ்த்தினர். (5). விட்நாமில் வியட்காங்
வீரர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான தற்கொலைத் தாக்குதல்களை
மேற்கொண்டனர் (6).ஈரான-ஈராக் போரின் போது
ஈராக்கியர்கள் மீது கொமேனியும், லெபனான்- இஸ்ரேல் மோதல்களில் ஹமாஸ் தலைமையும், அதே
நெருக்கடியில் இடதுசாரி மார்க்சிய
அமைப்புகளும், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்களில் மதச்சார்பற்ற கருத்திலாளளரான
அபுநிடாலும், 2001 செப்டம்பர் 11 தாக்குதலில்
மதத்தினால் உந்துதல் பெற்ற அல்கொய்தா-பின்லாடன் வழிப்பட்டவர்களும் தற்கொலைத்
தாக்குதல்களை நிகழத்தினர். (7). இலங்கையில் மதச்சார்பற்ற விடுதலை இயக்கமான
விடுதலைப் புலிகள் இயக்கமும் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்தி வந்திருக்கிறது
என்கிறார் போப் பேர்.
விவரணப்படத்தில் தற்கொலைத் தாக்குதல்களுக்கான பிரதான காரணம் ‘மத நம்பிக்கை அல்ல’
என்பதனைத் திட்டவட்டமாக
முன்வைக்கிறார் போப் போர். (அ). குறைந்த இழப்பில் பாரிய அளவிலான பொருளியல் மற்றும்
உயிர் அழிவை எதிரிக்கு உருவாக்குவது முதல் நோக்கம். (ஆ). எதிரியின் மிகப் பெரிய
ஆயுத பலத்திற்கு எதிரான, சமநிலை கொண்ட ஆயுத பலம் இல்லாதபோது பாவிக்கப்படக் கூடிய
வலிமையான பீதியூட்டக் கூடிய ஆயுதமாகத் தற்கொலைத் தாக்குதல் இருக்கிறது. இந்த விளைவை
நோக்கியதாகவே ‘மதச்சார்பற்ற விடுதலை இயக்கத்தவர்களால்’ தற்கொலைத் தாக்குதல்
வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான ஜப்பானிய விமானிகள், அமெரிக்காவுக்கு
எதிரான வியட்காங்குகள், இஸ்ரேலியர்களுக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர்கள்,
ராஜீவ் காந்தி மற்றும் சிங்கள பொருளியல் இலக்குகள் மீதான விடுதலைப் புலிகளின்
தாக்குதல் போன்றவற்றை இவ்வகையில் வகைப்படுத்துகிறார் போப் போர்.
சமவேளையில் எதிரியின் மீpதான ’மானமுள்ள’ தற்கொலைத் தாக்குதலின் மூலம், சிக்கிரமே
சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதனை கிறித்தவ, யூத,
இஸ்லாமிய மதவாதிகள், அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டும் பொறுட்டு முன்வைக்கிறார்கள்.
கொமேனி ஈராக்கிற்கு எதிரான யுத்தத்திலும், பின்லாடன் அமெரிக்காவுக்கு எதிரான
தாக்குதலிலும் இந்தக் கருத்தை முன்வைத்தார்கள். ’அல்லாவிற்காகவே நான் இதைச்
செய்கிறேன்’ எனவே தற்கொலையாளிகள் சொல்கிற வகையில் மேலே கண்ட இரு தாக்குதல்களும்
அமைகின்றன. சாம்சனின் தாக்குதலும், ஜூடேயாவில் யூதர்களின் தாக்குதலும், டெம்ப்ளர்
விரர்களின் தாக்குதலும் இவ்வகையில் கொமேனி மற்றும் பின்லாடன் வகையிலான மதவாத
யூதர்களின், கிறித்தவர்களின் தாக்குதல்களே என்பதும் இங்கு தெளிவுபடுகிறது.
எதிரிகளின் மீதான தாக்குதலின் விளைவுகள் எனும் வகையில் மதவாதிகளும் சரி,
மதச்சார்பற்ற போராளிகளும் சரி ‘சிறிய அளவிலான தாககுதலின் மூலம் பாரிய அளவிலான
அழிவு’ என்பதனையே இலக்காகக் கொள்கிறார்கள். ஆனால் தற்கொலையாளிகளைத் தற்கொலைக்குத்
தயாரப்படுத்துவது எனும் அளவிலேயே இருவருது அணுகுமுறையிலும் வித்தியாசங்கள்
இருக்கிறது.
மதச்சார்பற்ற இயக்கங்களின் தற்கொலைப் போராளிகள் பெரும்பாலும் பாதிப்பக்குள்ளான
மக்கள் பகுதிகளில் இருந்தே வருகிறார்கள். உறவுகளை இழந்தவர்களாக, வறுமைக்கு
ஆட்பட்டவர்களாக, வன்முறைக்கு உள்ளானவர்களாக,சித்திரவதைக்கு நேரடியாக உள்ளானவர்களாக,
வாய்ப்பு மறுக்கப்பட்;டவர்களாக இருக்கிறார்கள். இப்படி வருகிற தற்கொலையாளிகள்
பெரும்பாலுமானவர்கள் தாமாகவே முன் வந்து தற்கொலை நடவடிக்கையில் ஈடுபடுபவர்களாக
உள்ளார்கள். இவர்கள் சொர்க்க நம்பிக்கையிலோ அல்லது முக்தி அடைவது எனும் நோக்கிலோ
தற்கொலை எனும் நடவடிக்கையைத் தேர்பவர்கள் அல்ல. அனால், தற்கொலை நடவடிக்கையில்
ஈடுபடும் முன்னால் இவர்கள் புறவுலக வாழ்விலிருந்து அன்னியப்பட்ட சூழலில்
பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறுக்கவியலாத உண்மையாகவே இருக்கிறது.
எதிரியின் மீதான இயந்திரவகையிலான தீராத பகையுணர்வை உருவாக்குவதற்கும், அறவணர்வு
சார்ந்த சுயபரீசீலனையை தற்கொலையாளி முற்றிலும் நிராகரிக்கும் முகமாகவும் இந்த
விலக்கம் என்பதான அகப்பரிமாணம் அவனுள் ஊன்றப்படுகிறது. இது ஒரு வகையிலான கருத்தியல்
மனவாக்கம் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும்;.
இதனிலும் வித்தியாசமானதாக மதவாதி இதனைக் கையாள்கிறான். கொமேனியும் பின்லாடனும்
தற்கொலையை மீட்சி என்பதாகவும்,
சொர்க்கம் ஏகும் உடனடி முறைமை என்பதாகவும் இதனை முன்வைக்கிறார்கள். அராபத்தின்
பாலஸ்தீன விடுதலை இயக்கத்திலும் இல்லாத ஒரு பரிமாணம் இது, செப்டம்பர் 11
தாக்குதலிலும் சரி, இலண்டன், மெட்ரிட் போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களிலும் சரி,
தற்கொலையாளிகளாக ஆனவர்கள் பெலும்பாலுமானோர் நேரடியிலான பாதிப்புக்கு உள்ளானவர்கள்
அல்லது சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அல்ல. மாறாக மிக அதிக அளவில்
படித்தவர்கள். மேற்கிலும் அமெரிக்காவிலும் பொறியியல், வானியல், மருத்துவம், பௌதிகம்
போன்ற விஞ்ஞானத் துறைகளில் பட்டம் பெற்றவர்கள். வசதியான குடும்பங்களைச்
சார்ந்தவர்கள.;
’ஹாம்பர்க் ஸெல்’ திரைப்படம் சொல்கிறபடி, இவர்கள் முற்றிலும் மதம் எனும்
கருத்தியலினாலும் சொர்க்க நம்பிக்கையினாலும்
தற்கொலையாளிகளாகத் தேர்ந்து கொண்டவர்கள். இவர்களில் சிறபான்மையினர் மட்டுமே
மேற்கத்திய போரத் திட்டங்களினாலும்,
அவர்களது சமூகத் திட்டங்களாலும் தத்தமது நாடுகளின் பிரதான சமூகங்களிலிருந்து
அன்னியமாக்கப்பட்டவர்கள். ’தி வார் வித்தின்’
படத்திலும், ‘ஸிரியானா’ படத்திலும் தற்கொலையாளிகளாக ஆவதற்கு முன்னால் இருவரும்
அந்தந்த நாடுகளின் காவல்துறையினால்
வன்முறைக்கும் சித்திரவதைக்கும் ஆட்படுத்தப்படுகிறார்கள், பிற்பாடு மதரஸாக்களின்
தொடர்பு கிடைக்கிறபோது அவர்களது
துன்பத்திற்கான மதவழிப்பட்ட பரிமாணம் என்பது, அவர்களுக்குப் போதிக்கப்படுகிறது.
நிஜத்துயரத்திற்கு மதம் ஒரு கற்பனையான சொரக்க ராஜ்யத்தை அவர்களுக்கு முன்பு
வைக்கிறது. வைதீக இந்துமதத்தின் பிடிப்பும், சைவமரபும் கோலோச்சுகிற தமிழ்
சமூகத்தில் ‘முக்தி’ எனும் கருத்தாக்கம் தமிழ் தற்கொலையாளிகளிலும் செயல்படுவதில்லை
என அறவே சொல்வதும் இச்சூழலில் சாத்தியமில்லை.
என்னதான் எதிரியின் மீதான வெறுப்பும்; துவேஷமும் இருந்தாலும் அது ‘அருவமான இலக்கு
அல்லது உடல்களற்ற வெளி நோக்கிய’
வெறுப்பாகவே இருக்குமேயொழிய, ’ஸ்தூலமான, நேரடியான இருத்திலுடன், சமபந்தமற்ற
அப்பாவியான பெண்கள் ஆண்கள் குழந்தைகள்’ மீதான வெறுப்பாக இருக்க முடியாது. மனித அறம்
சதா விழித்திருக்கும் பகுதியும் இதுதான். கலைஞன் இந்த இடத்தில்தான் தனது
கேள்விகளையும் தேடலையும் முன்வைக்கிறான். ‘த வார் வித்தின்’ படத்தில் தற்கொலைத்
தாக்குதல் குறித்த இந்த இருமனநிலைதான் படம் முழுவதும் விரவியிருக்கிறது.
படத்திற்கான உந்துதலைக் கூட ஒரு பத்திரிகைச் செய்தியில் இருந்தே தான் பெற்றதாக
இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலியக் குடிமக்கள் சென்று கொண்டிருக்கும் பேருந்து ஒன்றினை உடனடியாக
நிறுத்துமாறும், தான் வெடிகுண்டைத் தனது இடுப்பில் கட்டிக்;கொண்டிருப்பதாகவும், ஒரு
பாலஸ்தீனப் பயணி பேருந்து ஓட்டுனரைக் கேட்கிறார். பேருந்து நிறுத்தப்படுகிறது.
பேருந்திலிருந்து இறங்கும் பயணி ஓரு பரந்த வெளியில் ஓடிச்செல்கிறார். குண்டு
வெடிக்கிறது. அவர் சிதறிப் போகிறார்.; வெடிப்பதற்கு முன்பாக அவரிடம் ஏற்பட்ட அறம்
சார்ந்த மன மாற்றத்தினால், வெகுமக்களைக் கொல்ல விரும்பாத அவர் தன்னை மட்டுமே
மாய்த்துக் கொள்கிறார். இந்தச் சம்பவத்தின்; அடிப்படைதான், தமது படம்
உருவாக்குவதற்கான உந்துதல் என்கிறார் இயக்குனர்.
ஆனால்’பாரடைஸ் நவ்’ படத்தில் தற்கொலையை மறுப்பதற்காக ஒரு போராளியீன் மகள் சொல்லும்
காரணம் வித்தியாசமானது.
தற்கொலைத் தாக்குதலின் அல்லது அதன் பின்னான அழிவினைத் தொடர்ந்த விளைவுகள், அரசியல்
ரீதியில் அர்த்தமுள்ளவை அல்ல
என்கிறார் அவர்.; தற்கொலைத் தாக்குதல்கள் அரசியல் ரீதியில் ஒரு இயக்கத்திற்கு
பின்னடைவையே உருவாக்குகிறது என்கிறார் அவர்.
தற்கொலையின் தார்மீகத்தன்மை அல்லது அறம் என்பதை விடவும் இங்கு அதனது அரசியல்
பரிமாணம் அல்லது பெறுபேறு எனபதுவே
முக்கியமானதாக முன் வைக்கப்படுகிறது.
தற்கொலைத் தாக்குதல்; எனும்; செயல்போக்கு குறித்து எத்தனைதான்
அறவியல்-அரசியல்-தத்துவப் பரிமாணங்கள் இருந்த போதிலும்,
தற்கொலையாளியைப்; பொறுத்தும், அந்நிகழ்வில் கொல்லப்படும் அப்பாவி மனிதர்களைப
பொறுத்தும், இது ஒரு மனிதத்தன்மையற்ற
செயல் என்பதைத் தனது விவரணப்படத்தில் போப் போர் திடடவட்டமாகச் சொல்கிறார்.
rajrosa@gmail.com |