பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
சினிமா! |
யதார்த்தம்!
- பராசக்தி சுந்தரலிங்கம் (ஆஸ்திரேலியா) -
சிட்னியில்
குறும்படங்களின் திரைக்காட்சி ஒன்று நடந்தது. மிகவும் யதார்த்தமான படங்கள்.
இவற்றைப் பார்த்தபோது, இந்தப் படங்கள்
நமது மண்ணிலா எடுக்கப்பட்டவை, என்ற பிரமிப்புத்தான் ஏற்பட்டது. எமது கலைஞர்களின்
திறமை வியப்பளித்தது. தமிழ் மக்களின் போர்ச் சூழல் வாழ்க்கை முறையை விளக்கும் ஆறு
குறும் படங்கள் இவை. ஒவ்வொரு படமும் பத்து நிமிடங்களுக்குத் திரையிலே வந்தன.
ஒவ்வொன்றும் அழகிய கவிதைபோல மனதிலே அழியாத இடத்தைப் பெற்றுவிட்டன.
பிரித்தானியாவைச் சேர்ந்த
SCRIPTNET என்ற நிறுவனத்தின் ஆதரவுடனும்
ஆலோசனையுடனும் எமது கலைஞர்களால் எமது
மண்ணிலே இவை தயாரிக்கப்பட்டவை. தமிழ் இயக்குனர்களும், சிங்கள இயக்குனர்களும்
இணைந்து செயலாற்றி உள்ளனர். பல
வருடங்களுக்கு முன்னர் பொன்மணி என்ற திரைப்படத்தைத் தயாரித்த திரு காவலூர் இராசதுரை
அவர்களும், அவரோடு இணைந்து திரு ஸ்கந்தகுமார் அவர்களும் இந்தத் திரைப்படக் காட்சியை
ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சினிமா என்னும் ஊடகம் மற்றைய எல்லா ஊடகங்களிலும் பார்க்க மிகவும் சக்தி வாய்ந்தது
என்பதை எல்லோரும் அறிவோம். இன்று நாம் அறிந்துள்ள சினிமா வேறு, இன்றைய சினிமா எம்மை
ஒரு மாய உலகுக்கு அழைத்துச் சென்று, சற்றுநேர இன்பத்தில் ஆழ்த்துகிறது. இதற்கு
மாறுபட்ட திரை உலகம் இருக்கிறது. அது உள்ளதைக் கலையாக வடிக்கிறது. பார்வையாளர்
உள்ளத்திலே அது அழியாமல் பதிந்துவிடுகிறது. முன்னையது ஒரு மாயை என்றால், பின்னையது
யதார்த்தம். இந்த யதார்த்தம், இந்த உண்மை, இந்த நிஜம்தான் வாழ்க்கை. இதைத்தான்
இந்தக் குறும் படங்கள் அழகியலாக வடித்துள்ளன. பத்திரிகைகளிலும், வானொலி போன்ற
ஊடகங்களிலும் நாம் படித்தவற்றையும், கேட்டவற்றையும், திரையிலே நிதர்சனமாகப்
பார்க்கும்போது மனதிலே ஏற்படும் தாக்கம் வேறு. அந்தத் தாக்கமே இந்தப் படங்களின்
வெற்றி.
இந்த ஆறு படங்களும் ராகவன், ஞானதாஸ், கௌதமன், அல்பேட் போலஸ் (Albert
Paulus) ஆகியோரால் தயாரிக்கப்பட்டவை. பிரபல
சிங்கள இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், அவர் மனைவி சுமித்திரா பீரிஸ், இவரும் ஒரு
சிறந்த இயக்குனர், மற்றும் பிரசன்ன, விதான என்பவர்களும் இப்படங்களுக்கு ஆலோசகர்களாக
இருந்திருக்கிறார்கள். திருமதி கோகிலா மகேந்திரன், குழந்தை சண்முகலிங்கம், மறைந்த
செம்பியன் செல்வன், காவலூர் இராசதுரை போன்றவர்கள் ஆலோசகர்களாகவும்,
மொழிபெயர்ப்பாளர்களாகவும் பங்களிப்பு
வழங்கி உள்ளனர்.
வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே கையையும், காலையும், கண்ணையும் இழந்த சிறுவர்களின்
வாழ்வை உதயத்தில் இருள் (Darkness at Dawn)
என்னும் படத்திலே பார்க்கிறோம். வாழ்வு அவர்களுக்கு விடிந்த உடனேயே இருண்டுவிட்டது.
காரணம் போர்ச் சூழுல். ஆனால், அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. வெற்றுத் தோட்டாக்
கூடுகளை ஊதுகுழலாக மாற்றி, ஒரு சிறுவன் இசை மீட்டுகிறான் - போரின் எச்சம்!
மணிக்கட்டோடு தனது கையை இழந்த ஒரு சிறுவன், கண்களையும் இழந்த நிலையில், அந்தக்
குறைக் கரத்தில் மணிமாலைகளை மாட்டியபடி, கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்கிறான்.
இந்த இரண்டு சிறுவர்களும் சந்திக்கும் காட்சி மனதைத் தொடுகிறது. கண்ணில்லாத சிறுவன்
மற்றவனின் ஊன்றுகோலைத் தடவிப் பார்த்து அவனை இனம் காணுவதும், காலில்லாத சிறுவன்
தனது ஊது குழலை வழங்கி அவனை மகிழ்விப்பதும் அழகாகப்
படமாக்கப்பட்டுள்ளது. தூரத்திலே கோயில் கோபுரம், மேளவாத்திய இசை, மக்கள் போவதும்
வருவதும் மங்கலாகக் காட்டப்படுவது,
மிகவும் இயல்பாக அமைகிறது.
இந்தப் படத்தின் விசேஷம், அங்கு உரையாடல் இல்லை, மௌனமும் அசைவும் மட்டுமே. மௌனமும்
ஒரு மொழிதான். அது மிகவும் சக்தி வாய்ந்த மொழி. பின்னணியிலே வாத்திய இசை, சோகமான
இசை அல்ல, நம்பிக்கை ஊட்டும் இசை. படம் ஆரம்பிக்கும்பொழுது காலில்லாத தம்பியும்,
அவனின் அக்காவும், காற்றிலே மிதந்து வரும் இலவம்பஞ்சை ஊதுவதையும், அதைத் தொடர்ந்து
சென்று விளையாடுவதையும் காட்டும் இயக்குனர் தனது திறமையைப் படம் முழுவதிலும்
பதித்துவிடுகிறார். கமராவின் கோணங்களில் அழகியலைக் காண்கிறோம்.
உதயத்தின் இருள் முழுக்க முழுக்க சிங்களக் கலைஞர்களால் நடித்து இயக்கப்பட்டது.
ஒளித்து விளையாடு (Hide and Seek)
என்னும் மற்றொரு படமும் சிங்களக் கலைஞர்கள் தயாரித்தது. முகாம் ஒன்றிலே
தடுத்துவைக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழ்ச் சிறுவர்களைக் கொலைசெய்த இரு
கொலையாளிகள் வீடொன்றில் ஒளித்திருக்கும் பொழுது, ஒருவன் மனச்சாட்சியால் அவஸ்த்தைப்
படுவதையும், மற்றவன் எங்கே அகப்பட்டுவிடுவோமோ, என்ற பயத்தில் கூட்டாளியையே கொல்ல
முயல்வதையும் பார்க்கிறோம்.
~பொலிஸ் எங்களுடைய பக்கம்தான் பயப்படாதே| என்று கொலையாளி கூறுவதை, இயக்குனர்
துணிவுடன் திரையில் கொண்டுவருகிறார். உண்மையைக் கூறுவதற்கு உண்மைக் கலைஞர்
அஞ்சுவதில்லை, என்ற உண்மையை இங்கே பாரக்கிறோம். மனச்சாட்சி உள்ள மக்களும்
பெரும்பான்மை இன மக்களிடையே இருக்கிறார்கள் என்பது, இனவெறி மிக்க இக்காலத்தில்
மனதுக்கு ஆறுதல் தருகிறது.
வெட்டுண்ட கையுடன் சிங்கள வீடொன்றில் ஒளித்திருக்கும் தமிழ்ச் சிறுவனோடு உரையாடும்
சிங்களப் பெண்குழந்தை, மனதிலே நீங்காத இடத்தைப் பெற்றுவிடுகிறாள். கிராமியத்தன்மை
நிறைந்த இயல்பான குணசித்திரம்.
ஏனைய நான்கு படங்களிலும் போர்ச் சூழலின் அவலங்களையும், அதனால் அழுத்தத்திற்கு
ஆளாகும் தமிழ்க் குடும்பங்களையும்
சந்திக்கிறோம். பொருளாதார நெருக்கடியாலும், போரின் அச்சத்தாலும், மனதில் பாரங்களைச்
சுமக்கும் சாதாரணக் குடும்பத் தலைவன் தலைவியர் பொறுமை இழப்பதையும், அருமைக்
குழந்தைகளின் சிறிய ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிப்பதையும், காரணமில்லாமல்
கோபித்துப் பிள்ளைகளை அடிப்பதையும், பின்னர் பச்சாதாபப்படுவதையும், வெகு
யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார்கள்.
அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து, மின்கலம், மின்சாரம் ஆகியவற்றைத் தடைசெய்த
போதும், அவர்கள் மீது வானிலிருந்து
குண்டுமாரி பொழிந்த போதும், அவர்கள் அலமலக்க குண்டுக் காப்புக் குழிக்குள் ஓடி
ஒளிந்து நடுங்கியபோதும், பட்ட அவலங்களை இந்தப் படங்கள் காவியமாக்கி உள்ளன.
பாம்புக் கடிக்குப் பலியாகும் தம் ஒரே பிள்ளையின் மரணச் சடங்குக்கு அந்தப் பிள்ளை
சிறுகச் சிறுகச் சேர்த்த உண்டியல் பணத்தை எடுத்துக் கொடுத்தபோது, அந்தத் தாயும்
தந்தையும் அலறிய அலறல் இன்னும் காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றது. ஆசுப்பத்திரியில்
பாம்புக்கடி மருந்து இல்லாததே இச்சிறுவனின் மரணத்துக்குக் காரணம், என்று எல்லை
((Barrier) என்ற
இந்தப் படம் காட்டுகிறது. கண்ணீர் காயாத நிலையில் தாய் அழுதபடி இருக்க, தந்தை
வயிற்றுப்பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போவதோடு படம் முடிகையில், பல உண்மைகள்
தொக்கு நிற்கின்றன. இந்த யதார்த்தம் இன்னும் தொடர்கிறது என்பதுதான் வேதனை.
ஒரு சிறுமியின் செருப்பு வாங்கும் ஆசையை செருப்பு (Slipper) என்னும் திரைப்படம்
காட்டுகின்றது. வெய்யிலிலே கல்லும் முள்ளும் நிறைந்த பாதையிலே தினமும் பாடசலைக்குச்
செல்லும் குழந்தையின் ஆசையை நிறைவேற்றமுடியாத பெற்றோரின் இயலாமையை, இயக்குனர் வெகு
நேர்த்தியாகக் காட்டுகிறார்.
அன்னியோன்னியமான அந்தக் குடும்பப் பாசம் மனதைத் தொடுகிறது. சிறுகச் சிறுகச் சேர்த்த
உண்டியல் பணத்தைச் செருப்பு வாங்கத் தன் தந்தையின் கையில் கொடுக்கும்போது, கடன்
கொடுத்த ஒருவர் தந்தையிடன் பணத்தைக் கேட்டு வருகிறார். அந்தக் குழந்தை, தனது
சேமிப்புப் பணத்தை வந்தவருக்குத் தெரியாமல் மறைக்கும்போது, மிகவும் யதார்த்தமாகப்
படம் தொடர்கிறது.
தந்தை கொண்டுவரும் செருப்பை அணியமுடியாது, கண்ணி வெடியிலே தனது ஒரு பாதத்தை
இழக்கும் இந்தக் குழந்தையின் நிலை, பெற்றோரின் சோகம், எம்மையும் பாதித்துவிடுகிறது.
இது கொடுமை. பார்வையாளர் பலர் அவ்வேளை கண்ணீர் விட்டதைக்
கண்ணீருக்கூடாகப் பார்க்க முடிந்தது.
ஆனால், தடியை ஊன்றியபடி, தனது மற்றக் காலிலே ஒற்றைச் செருப்பைப் போட்டு அழகுபார்த்த
குழந்தையின் மகிழ்ச்சியில் எமது மனங்களும் சிலிர்த்துவிடுகின்றன. சின்னச் சின்னத்
திருப்திகள், நம்பிக்கைகள், இவைதான் காலத்தின் கோலங்கள். இதுதான் இந்தப் படத்தின்
வெற்றி.
அழுத்தம்
(Under Stress)
என்னும் படத்தில், குண்டுக் காப்புக் குழிக்குள் ஓடிய போதும், புத்தகத்தை எடுத்துக்
கொண்டுவா என்று கட்டளையிடும் தந்தையையும், திரும்பிவரும்வரை பதகளித்தபடி இருக்கும்
தாயையும் பார்க்கிறோம். இந்தப் படத்திலே எண்ணை ஆட்டும் செக்கோடு செக்கு மாடாக
உழைக்கும் தாயையும், தங்களைப் போலக் கஷ்டப்படாமல், டாக்டராகவோ எஞ்சினியராகவோ தங்கள்
பிள்ளைகள் வரவேணுமென்று கண்டிப்புடன் வளர்க்கும் சராசரி தமிழ்த் தந்தையையும்,
இயக்குனர் துல்லியமாகப் படம் பிடிக்கிறார்.
பெற்றோருக்குப் பயந்து புத்தகத்தோடு இருக்கும் மகளையும், துருதுருத்த மகனையும்,
சைக்கிளின் டைனமோவை வைத்து றேடியோ கேட்கும் அச்சிறுவனின் சாதுரியத்தையும்
பார்க்கிறோம். தமிழரின் இந்த யதார்த்த வாழ்வு யுத்தகாலத்திலும் தொடர்கிறது.
மூக்குப்பேணி (Brass Beaker)
என்னும் படம் ஒரு சிறு சம்பவத்தை வைத்துப் பின்னப்பட்டது. சிறியதோர் நிகழ்வுகூட ஒரு
தேர்ந்த
இயக்குனரின் கையில் கலை வடிவம் பெறமுடியும் என்பதற்கு இது நல்ல ஒரு
எடுத்துக்காட்டு. பழைய சாமான்கள் வாங்கும்
வியாபாரியிடம், தாயாருக்குத் தெரியாமல் பழைய பித்தளை மூக்குப்பேணி ஒன்றை
பண்டமாற்றுச் செய்து பிளாஸ்ரிக் மொம்மை ஒன்றைப் பெற்று மகிழும் சிறுவன் ஒருவனின்
மனப் போராட்டத்தை, இக்கதை படம் பிடித்து விடுகிறது.
மயக்கமடையும் நிலையில் சிறுவனின் தாத்தா மூக்குப்பேணியிலே தண்ணீர் குடிக்க
விரும்பிக் கேட்பதையும், மூக்குப்பேணி இல்லாததால் சிறுவன் தவிப்பதையும், தாத்தாவின்
மரணத்தின் பின்னர் அவன் குற்ற உணர்வில் வருந்துவதையும், பொம்மையைத் திரும்பக்
கொடுத்து மூக்குப்பேணியை மீட்டபின்னரே சிறுவனின் மனம் சாந்தியடைவதையும், ஒரு கவிதை
போல இயக்குனர் வடித்துவிடுகிறார். குழுந்தை உளவியல் சம்பந்தமான சிறந்ததொரு திரை
ஓவியம் என்று கூறலாம்.
இந்தப் படங்கள் எமது இனத்தின் போராட்ட வரலாற்றுப் பதிவுகள். எமது மண்ணிலே எமது
கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட
காரணத்தால், மண் வாசனை வீசும் படங்கள். தரமான உலகத் திரைப்படங்களின் வரிசையில்,
எமது கலைஞர்களின் படங்களும்
கணிக்கப்படும் நிலை உருவாகிவிட்டது. இவற்றைத் தமிழர்கள் மட்டுமல்ல ஏனையோரும்
பார்க்கவேண்டும். படத்தில்
உரையாடல்களுக்கு ஆங்கிலப் பெயர்ப்புரை (subtitle)
வருவதால், இங்குள்ள ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் ஒளி பரப்ப வகை செய்யவேண்டும்.
சிறந்த கலைஞர்கள் ஊக்குவிக்கப் படுவது காலத்தின் கட்டாயம்.
parasundha@gmail.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|