'புகலிட வாழ்க்கையில் காணப்படும் எம்மக்களின் அவலங்கள் பலவும் யதார்த்தபூர்வமாகச் சி;த்தரிக்கப்பட்டுள்ளதை 'இளங்கோவன் கதைகளில்" காணலாம். பன்முக ஆளுமை வளம் பெற்றவர் இளங்கோவன். அவர் கவிதைகள், சிறுகதைகள் மூலம் ஐரோப்பியத் தமிழிலக்கியப்பரப்பில் முக்கிய இடம்பெற்றுள்ளார். இலக்கியச் செழுமைமிக்க, புத்திஜீவிகள் நிறைந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனது சிறுகதைத் தொகுதியினை இங்கு வெளியிட்டுவைப்பதில் மிக மகிழ்ச்சியடைகிறேன்" இவ்வாறு பல்கலைவேந்தன் வி. ரி. இளங்கோவனது சிறுகதைத்தொகுதியான 'இளங்கோவன் கதைகள்" நூலை வெளியிட்டுவைத்து உரைநிகழ்த்திய 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.
வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க, பிரெஞ்சுக் கிளையின் 'வித்தியாலய விழா" கடந்த ஞாயிறு (15 - 10 - 2006) மாலை பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் விசேட நிகழ்வாக 'இளங்கோவன் கதைகள்" நூல்வெளியீடு இடம்பெற்றது. விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட 'கல்விச் சேவையாளர்" சி. காராளபிள்ளை மேலும் பேசுகையில், 'அரசியல், மருத்துவம், சட்டம், கலை இலக்கியத்துறைகளில் ஈடுபட்டுப் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனை மாணவப் பருவம் முதல் நன்கறிவேன். அவர் பாரிஸ் வந்த காலந்தொட்டு அவரது படைப்புகளைத் தவறாது வாசிப்பவன் நான். கலை இலக்கியத்துறையில், ஐரோப்பியத் தமிழ்ப் படைப்பாளர்களுள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கவராகத் திகழும் அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
எழுத்தாளர் சு. கருணாநிதி பேசுகையில், 'நாடறிந்த கவிஞராகத் திகழ்பவர் இளங்கோவன். அவர் இச்சிறுகதைத் தொகுதியின் மூலம் தமது ஆளுமையின் இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளார். சிறந்த கவிஞராகவும், நல்ல தமிழ்ப் பேச்சாளராகவும் நாட்டிலும், புகலிடத்திலும் பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற இளங்கோவன், சிறுகதைகள் மூலமும் புகலிடத் தமிழிலக்கியப்பரப்புக்கு வளம் சேர்த்துள்ளார்" என்றார்.
வேலணை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரெஞ்சுக் கிளையின் சார்பில், சங்கச் செயலாளர் திரு எஸ். மகேந்திரன், இளங்கோவனுக்கு மாலை அணிவித்துக் கௌரவித்ததுடன், வித்தியாலயப் பழைய மாணவரான இளங்கோவனது நூலை விழாவில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். நூலின் முதற்பிரதியை இலக்கிய ஆர்வலரும், பாரிஸ் கிரு~;ணா அச்சக அதிபருமான திரு யா. பாலகிரு~;ணன் பெற்றுக்கொண்டார்.
ஒரு பழைய மாணவனின் நூலைத் தமது விழாவில் வெளியீடுசெய்து கௌரவித்தமை ஒரு முன்னுதாரணமான நிகழ்வாகுமென வி. ரி. இளங்கோவன் தமது பதிலுரையில் குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், தமது நான்கு சகோதரர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் படித்தவர்கள் என்பதை நினைவுகூர்ந்ததுடன், அந்த வித்தியாலயம் உருவாக்கிய மாணவர்கள் பலரும் இன்று உலகளாவிய ரீதியில், கலை இலக்கியத்துறையில் மாத்திரமின்றி சகல துறைகளிலும் புகழ்பெற்று முன்னணியில் விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.
கவியரங்கம், நடன, இன்னிசை நிகழ்ச்சிகள் பலவும் விழாவில் இடம்பெற்றன. பெருந்தொகையானோர் கலந்துகொண்ட இவ்விழாவி;ல் வழமைபோல இராப்போசனமும் வழங்கப்பட்டது. சங்கத்தி;ன் புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.
நிகழ்வுக் காட்சிகள் சில...
vtelangovan@yahoo.fr