இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
வாழக் கூடாத வழியில் வாழ்ந்தழிந்த ‘மிருகம்’

- எம்.கே.முருகானந்தன் -


மிருகம் படக் காட்சி...காமம், காமம், காமம் இதனைத் தவிர வேறு எதிலும் அக்கறையற்ற ஒருவன். ஒரு மனிதன் எப்படி வாழக் கூடாதோ, அப்படியாக வாழ்ந்தவன் அவன். அத்தகைய ஒருவனின் கதையை அண்மையில் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்தது. கண்ணில் காணும் பெண்களையெல்லாம் அந்த இடத்திலேயே கிடத்தி ருசித்துவிட்டு வீசி எறிந்து போகும் குரூர குணம் படைத்தவன். விபசாரிகள் முதல், இளம் பெண்கள், மற்றவன் பெண்டாட்டி, பிச்சைக்காரி வரை எங்கு கவர்ச்சி கண்டாலும் குறி வைப்பான். அத்தோடு கோபமும் முரட்டுத்தனமும் கைகோத்துவர நியாய அநியாயங்களை மதிக்காதவன். சொந்தப் பெண்டாட்டியோடும் வெறியோடு கூடிய காமந்தான். காதலோடு கூடிய கூடல் அவன் அறியாதது.

காமமும், வெறியும் இணைந்த பாலியல்; பற்றிய திரைப்படம் பற்றி ஏன் எழுத வருகிறேன் என எண்ணத் தோன்றுகிறதா? அதிலும்
அதிகம் விமர்சகர்கள் கண்ணில் படாத திரைப்படம் பற்றி ஏன் எழுதுகிறேன். காரணத்தோடுதான். கிளுகிளுப்புகளையும் ஆபாசங்களையும் அள்ளிக் கொட்டி பணப்பையை நிரப்பும் நோக்கோடு எடுக்கப்பட்ட அர்த்தமற்ற படம் இல்லை. மாறாக ஒரு முக்கிய செய்தியைச் சொல்ல வருகிறது. அதிலும் மருத்துவ ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அக்கறை கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்பதுதான் காரணம்.

காதல் புனிதமானது என்கிறார்கள். ஆனால் பெரும்பாலான காதல்கள் காமத்திற்கான ஆசாரப் பூச்சுக்கள் மட்டுமே. ஆனால் காமம்
புனிதமானது என்றோ, எதிர்மாறாக கேவலமானது என்றோ சொல்ல முடியாது. எல்லா உயிரினங்களுக்குமே இயற்றையான உணர்வு
என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மற்றட்ட காமம், எல்லை மீறிய காமம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவை அவர் இருவர்
உணர்வு சார்ந்தவை இல்லையா? காமம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறைக்குள் நின்றாலும் சரி அந்த எல்லையை
மீறியாலும் சரி அது இயற்கையான உணர்வு, விஞ்ஞான பூர்வமான செயல்.

இருந்தபோதும் முறை தவறிய காமம் எமது சமூக, நாகரீக விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாகப் பார்ககும்போது பாதுகாப்பற்ற காமம் மட்டுமே தப்பானது. அதனால் பல ஆபத்துக்கள் காத்திருக்கும்.
இதைத்தான் இப்படம் சொல்ல முனைகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதி கிடையர்து. காமம் அதிலும் சமூகக் கட்டுகளை மீறிய காமம்
மட்டுமின்றி வன்புணர்ச்சி, பாதுகாப்பற்ற புணர்ச்சி இவை எல்லாவற்றையும் தனது வாடிக்கையாகக் கொண்டவன். அதனையே தனது ஆண்மைக்கு அழகு என்று கொள்பவன்.

பொலிகாளையை பசுவிற்கு விடும் தொழில் அய்யனாருக்கு. பொலிகாளை போலவே தானும் பெண்களின் வேட்கையைத் தணிவிப்பவன் என்ற திமிர் வேறு. இதனால் விலைமாதோடு கூடினால் கூட அவளுக்கு பணம் கொடுக்க மறுத்து, தான் கொடுத்த சுகத்திற்காக அவள்தான் தனக்கு கூலி தரவேண்டும் என அடாவடித்தனம் பண்ணுகிறான். வெளி உறவுக்கு முன்னர் ஆணுறை (கொண்டோம்) அணிய மறுக்கிறான். தன் வைரம் பாய்ந்த உடம்பை நோய், நொடி அணுகாது என வீரம் பேசுகிறான்.

கிராமத்துச் சண்டியனான இவனுக்கு அழகும் துடுக்குத்தனமும் நிறைந்த அழகம்மா மீது ஆசை வருகிறது. பணிய மறுக்கும் அவளைத் திருமணம் செய்து வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்., முதலிரவில் அவள் மறுக, மனைவியையே வன்புணர்ச்சி செய்கிறான்.
அழகுவாக பத்மப்ரியா வருகிறார். அனாசயமாக பனை மரத்தில் விறுக்கென ஏறும் போதும், நுங்கு சீவும்போதும், சீண்டுபவனை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டும் போதும், தோழிகளோடு ஆட்டம் போடும்போதும் பாத்திரமாகவே மாறுகிறார். அதுபோலவே பின்னர் புருஷனுக்காகக் கண்ணீர் வடிக்கும் போதும், கோட்டுவரை சென்று போராடும் போதும், பிணத்தை தான் ஒருத்தியாக தோளில் சுமக்கும் போதும் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார். தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிந்து கொல்ல முயலும் கணவனான அய்யனாரை, ஆவேசம் கொப்பளிக்க ஓங்கி உதைக்கும் காட்சியில் சுடருகிறார்.

அய்யனாராக வரும் ஆதி ஒரு புதுமுகம். கருங்கல் போல திடமான மேனி, பனைபோல திடமான நீ;ட்டி நிமிர்ந்த நெடும் தோற்றம்.
நிமிர்ந்த நடை. ஆவேசமும், வன்மமும், குரூரமும் தெறிக்கும் கண்கள். கதைக்கேற்ற தேர்வு. பிற்பாதியில் நோயால் துவண்டு
வாடும்போதும், தன் செய்கைகளுக்காக வருந்தும் போதும் நன்கு தேறுகிறார். உபகதையான தண்ணீர் பிரச்சனை படத்தோடு நன்கு
பொருந்துகிறது. ஊருக்கு குடிப்பதற்கு உகந்த தண்ணீர் இல்லாதபோது கிணறு வெட்ட ஊர் முடிவெடுக்கிறது. இவனது நிலத்தில்தான்
நல்ல தண்ணீர் இருக்கிறது என அறிந்து கிணறு கிண்ட அனுமதி கேட்கும்போது அலட்சியமாக விட்டெறிந்து பேசி மறுக்கிறான். ஆனால் பின் நோயுற்று மனம் திருந்திய நிலையில் தண்ணீர் பஞ்சத்தை போக்கத் தன் நிலத்தில் இடம் தருகிறான். ஆயினும் நோயுற்றவன் நிலத்துத் தண்ணீரை குடித்தால் தங்களுக்கும் நோய் வருமோ என ஊர் மக்கள் தயங்குகிறார்கள். அந்த தண்ணீரை ஊரார் குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க மகனைக் கேட்கும் காட்சியில் அற்புதமாக நடித்துக் கலங்க வைக்கிறார்.

உணவு போட்டுக் கொடுக்கும் போது கூட மகனிடம் அடியும் உதையும் வாங்கும் அம்மாவாக வருபவர், பேர் தெரியாத போதும் மனத்தில் நிற்கிறார்.

அய்யனார் ஒரு பிரச்சனையில் அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்தபோதும் திருந்தவில்லை. மாறாக கஞ்சா, ஓரினப் பாலுறவு ஆகியனவும் பழக்கமாகின்றன. ஊசியால் போதை மருந்து ஏற்றுவதும் தொடர்கிறது. இறுதியில் ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கு ஆளாகி உடல் மெலிந்து, காய்ந்து கருகிச் சருகாகி சிறிது சிறிதாக உதிர்கிறான். இப் பகுதி மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இயக்குனர், ஒப்பனையாளர், படப்பிடிப்பாளர் அனைவரும் அர்ப்பணிப்போடு அசய்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் படத்தின் பிரதான அம்சமே இதுதான். அந்த மிருகத்தின் அழிவு முழுப்படத்தின் மூன்றில் ஒரு பகுதிவரையே ஓடுகிறது என்ற போதும் செய்திப் படம் போல சலிக்க வைக்கவில்லை. கதையோடும் காட்சிகளோடும் எம்மைப் பிணைத்து வைப்பதில் இயக்குனர் சாமி வெற்றி பெறுகிறார். பாராட்டுக்குரியவர். இவரது முதல் திரைப்படம் உயிர் என்பதையும் சொல்லி வைக்கலாம்.

இதற்கு மாறாக முன் பகுதி முழுவதும் குரூரமும், வன்மமுமே நிறைந்திருந்தன. மிருகமாக வாழ்ந்த ஒரு பாத்திரத்தின் அழிவைச்
சொல்வதற்கு அதன் பின்புலமான அடாவடித்தனங்களை பதிவு செய்வது அவசியமானதுதான். அதன் மூலமே அப்பாத்திரத்தின்
குணாம்சத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். ஆயினும் பலதருணங்களில் நிறையவே முகம் சுளிக்கச் செய்கிறது. பல காட்சிகள் குடும்பத்தோடு இருந்து பார்க்க அசூசையளிக்கக் கூடியவை. ஆயினும் அந்தக் குரூரமான மிருகத்தின் செய்கைகளும், அதன் விளைவான அழிவும் மனத்தில் பதிந்து விடுவதை மறுக்க முடியாதுள்ளது.

இது விடயமாக இயக்குனர் சாமி ஒரு நேர்காணலில் கூறிய கருத்தைப் பதிவு செய்வதும் அவசியம் என நினைக்கிறேன். “நான் எடுத்துக் கொண்ட கதைக்கு - சொல்ல வந்த விஷயத்துக்கு தேவையான அளவில்தான் காட்சிகளை வைத்திருக்கிறேன். நான் நினைத்ததை சொல்லியிருக்கிறேன். சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்க்கும் காட்சிகளையே வைத்திருக்கிறேன். இந்த விஷயத்தில் நான்
சினிமாவுக்கான நேர்மையுடன் நூறு சதவிகிதம் சரியாகவே நடந்து கொண்டு கதையைக் கையாண்டு இருக்கிறேன்.” என்கிறார். மேலும்
“இது குடும்பத்தினருடன் பார்க்க எடுக்கப்பட்டது அல்ல என்றே வைத்துக் கொள்ளுங்களேன். வயது வந்த இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை எச்சரிக்கை செய்யவே இப்படம்.” எனவும் தெளிவுபடுத்துகிறார்.

எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீருக்கு பின்னர் பிரதான பாத்திரத்தின் அழிவை மிகச் சிறப்பாகச் சித்தரித்த திரைப்படம் இது என மதன் தன்
பார்வையில் சொல்லியது உண்மையாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது. ரத்தக்கண்ணீர்; நான் சிறுவயதில் பார்க்காத படம்.
பின்னர் பார்த்த சில காட்சிகள் அதை ஏற்க வைக்கின்றன. இதைப் படத்தின் சிறப்பு என்று கொள்ளலாம். மறுபுறத்தில் இப்படத்தின்;
கதையின் சில பகுதிகளும், வார்ப்பும் பல தருணங்களில் அண்மையில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை அப்பட்டமாக
ஞாபகப்படுத்துவது முக்கிய குறையாகப் படுகிறது. ‘குத்த வெச்ச குமரிப் பொண்ணு …’ பாடல் அச்சொட்டாக பருத்திவீரன் காட்சி
போலவே இருக்கிறது

பம்புசெட் பம்புசெட் எனப் பட்டப் பெயர் சூட்டப்படும் அழகுவிற்கு அந்தப் பட்டம் ஏன் வந்ததென்பதை இறுதிவரை ஆவலைத் தூண்டிச்
செல்கிறார் நெறியாளர். இறுதியில் அதை அறியும் போது இவ்வளவுதானா என எண்ண வைத்தாலும் மென்சிரிப்போடு ரசிக்கவும் முடிகிறது.

இன்று உலகளாவிய ரீதியிலும், முக்கியமாக இந்திய உபகண்டப் பகுதியிலும் ஆபத்தான மருத்துவப் பிரச்சனையாக உருவெடுத்து
சமூகரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நோய் எயிட்ஸ். இது பற்றிய திரைப்படத்தை எடுக்கத் துணிந்த இயக்குனர் நிச்சயம்
பாராட்டப்பட வேண்டியவர். நோய் பற்றிய பல செய்திகளைத் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்த வந்தாலும் அதையும் ஓரளவு
கலாபூர்வமாக, சலிக்க வைக்காமல் பார்க்க வைத்ததற்கு சபாஸ் கொடுத்தே ஆக வேண்டும். நோய் தொற்றுவது எப்படி, அது தொற்றாமல் இருக்க ஆணுறை அணிதல் போன்ற பல விடயங்கள் செய்தியாக உறுத்தாமல் கதையோடு நகர்கினறன.

மிக முக்கிய விடயமாகச் சொல்லப்படும் செய்தி எயிட்ஸ் நோயாளியை எப்படி சமூகமும் வீடும் எதிர் கொள்ள வேண்டியது என்பது பற்றியதாகும். இதையே இத்திரைப்படம் தெளிவாகச் சொல்ல முனைகிறது என்பேன். ஒருவருடன் நெருங்கிப் பழகுவதாலோ, தொட்டுப் பேசுவதாலோ அது தொற்றுவதில்லை. உடலுறவால் மட்டுமே தொற்றும் நோய் இது. நோயாளியை ஒதுக்கி வைக்கக் கூடாது. வீட்டில் வைத்தே பராமரிக்க வேண்டும் என்பதை நோயாளியின் டொக்டர், அவனது மனைவி போன்ற பாத்திரங்கள் ஊடாகக் காட்சிப்படுத்துகிறது. கிராம மக்கள் அவனை ஒதுக்கி வைப்பதையும் அவனது வீட்டை நெருப்பு வைத்து அழிப்பதையும் தவறு என்று சுட்டுகிறது, அவனது வீட்டு குழாயில் நீர் எடுப்பதால் நோய் தொற்றாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. இறந்து மடியும் அவனது உடலைத் தூக்கிச் செல்லக் கூட ஊர் மக்கள் தயங்குவதை அவளது ஆவேச வார்த்தைகள் ஊடாக கண்டிக்கிறது. இறுதியில் அவள் ஒருத்தியாகவே அவனது உடலைச் சுமந்து செல்வதும் பதிவாகிறது. மொத்தத்தில் நோய் பற்றிய வீண் பீதிகளை நீக்க முயல்கிறது.

இவை எல்லாம் எயிட்ஸ் பற்றிய தெரிந்த தகவல்கள் தானே எனச் சலிக்கிறீர்களா. உண்மைதான் படித்த உங்களுக்கும் எனக்கும் தெரிந்த
பழைய தகவல்கள்தான். ஆனால் இவை கூடத் தெரியாத மெத்தப் படித்த மனிதர்களை இன்றும் கூட காணக் கிடைக்கிறது என்பது
நேரிடையாக அறிந்த உண்மை. இந்நிலையில் காட்சிப் புலனூடாக விழிப்புணர்பு ஏற்பட முயற்சித்தது கூடிய பலனளிக்கும் என
நம்பலாம். முக்கியமாக பாமர மக்களுக்கும் எட்டும் ஊடகம் அல்லவா திரைப்படம்.

ஒளிப்பதிவு ராம்நாத் ஷெட்டி. அவரது கமராவின் கண்கள் எமது கண்களை நயக்க வைக்கின்றது. ஆயினும் நோயாளியின் உடலில் நோய் பரவுகிறது என்பதைப் காட்சிப்படுததும்; கம்பியூட்டர் தொழில் நுட்பம் சோபிக்கவில்லை. சற்றே அபத்தம் போலவும் தோன்றியது.
கலைநயத்துடன மெருகூட்டியிருக்கலாம். இசை சபேஷ்-முரளி. பாடல்கள் மனத்துள்ளும் இசைந்து மகிழ்விக்கின்றன. பின்னணி இசையும் நன்றாக உள்ளன. பாடல் வரிகள் நா. முத்துக்குமார். அவை வெற்று வரிகள் அல்ல. கருவோடு இணைந்தவை.

இந்தப் படம் பற்றிய எனது அக்கறைக்கு இன்னுமொரு காரணம், இது தமிழ் நாட்டின் முதல் எயிட்ஸ் நோயாளி பற்றிய படமாகும்.
திருவாரூர் மாவட்டம் களப்பால் அருகிலுள்ள குலமாணிக்கம் என்கிற ஊரில் வாழ்ந்த உண்மைப் பாத்திரம் அது என்பது போலவே,
இன்னொரு வகையில் தமிழ் கூறும் உலகில் மற்றொரு எயிட்ஸ் முதல் நபர் நானாவேன். அதாவது தமிழில் முதலாவது எயிட்ஸ் பற்றிய நூலை எழுதியவன் என்றவகையில். இலங்கையில் இரண்டு பதிப்புகளைக் கண்ட எனது ‘எயிட்ஸ்’ நூல் தமிழகத்தில் என்.சீ.பீ.எச்.
வெளியீடாக மூன்று பதிப்புகளாக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

Dr.M.K.Muruganandan
Family Physician
http://hainallama.blogspot.com
http://suvaithacinema.blogspot.com/
http://www.geotamil.com/pathivukal/health.html

kathirmuruga@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner