| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம்! |  
| 'பெண்நிலைவாதம்! 
 - எம்.கே.முருகானந்தன் -
 
 
  'தமிழ் 
  மண்ணில் உடலரசியலின் மூன்றாம் பரிமாணம்.' இது குட்டி ரேவதி எடுத்துக் கொண்ட 
  ஆய்வுக் கட்டுரைக்கான தலைப்பு. பெண் கவிஞர்கள் பெண் உறுப்புக்களை படிமங்களாக் கொண்டு எழுதும்போது அதைக் 
  கொச்சைப்படுத்துகிறார்கள். சொந்த வாழ்வில் பாலியல் திருப்தி காணாதவர்கள் என 
  அநாகரிமாகக் கூறுகிறார்கள். ஒரு கவிதையில் யோனி என்ற சொல் வருகிறது. ஆனால் 
  கவிதையின் இறுதி வரிகளில் அது சடப் பொருளாக அல்லாமல் உயிருள்ளஇ அழகுள்ளஇ 
  உணர்வுள்ள வண்ணத்துப் பூச்சியாக உருவகப்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம்.
 
 உண்மையில் பெண்கள் தங்கள் பாடுகளைக் கூறவே பெண் உறுப்புக்கள் பற்றிப் 
  பேசுகிறார்கள். ஆண்டாண்டு காலமாக அனுபவித்த அடக்குமுறையை காத்திரமாக எடுத்துக் 
  காட்டவே இவ்வாறு பயன்படுத்துகிறார்கள். ஆண்களும் பெண் உறுப்புகள் பற்றிப் பேசாமல் 
  இல்லை. அவர்கள் உடலுறுப்பை இன்ப நுகரச்சிப் பொருளாகவே பாரக்கிறார்கள் பெண் எந்தப் 
  பிரச்சனை பற்றியும் எழுதக் கூடியதாக இருக்கிறது. ஆனால் பெண் உறுப்பைப் பற்றி எழுத 
  முடியாது இருக்கிறாள். அப்படி எழுதினால் அவமானப் படுத்தப்படுகிறாள். இன்ரநெட், 
  ஈமெயில், கற்பனை நேர்காணல் என பாலியல் ரீதியான உரையாடல்களால் அவமானப் 
  படுத்துகிறார்கள். பல பிரபல ஆண் எழுத்தாளர்களும் இதில் அடங்குகிறார்கள். இது 
  அவர்களின் உள்மன அரசியலை அப்பட்டமாக்குகறது.
 
 இன்னொரு கருத்தையும் சொல்லலாம். ஆண்கள் பெண் உறுப்புகள் பற்றி ஒற்றைப் பரிமாண 
  அர்த்தம் கொடுத்தே எழுதுகிறார்கள். ஆனால்
 பெண்களோ தங்கள் பாடுகளைக் கூற அவற்றிக்கு பல புதிய அர்த்தங்களைத் தேடுகிறார்கள். 
  பல சாதாரணப் பெண்களுக்கு பெண் உறுப்பு மற்றும் பாலியல் பற்றிய தெளிவின்மையைத்தான் 
  ஆண் ஆதிக்க சமுதாயம் விட்டுச் செல்கிறது. பெண் டாக்டரிடம் சென்றுதான் கேட்டறிய 
  வேண்டியதாயுள்ளது.
 
 இவையும் இன்னும் பல கருத்துக்களும் இவரால் முன் வைக்கப்பட்டன.
 
 கொழும்பு பெண்கள ஆய்வு மையத்தில் 'தேசியம், மதம், அரசியல், வாழ்வியல் 
  போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண்
 தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண்நிலைவாதம்' என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கு 
  சென்ற கார்த்திகை 30இ மார்கழி
 01இ 2007 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக 
  நடைபெற்ற நிகழ்வுகளில் மூன்று மணிநேரம்
 மட்டும் கலந்து கொண்டபோதே இக்கருத்துக்களை என்னால் கேட்க முடிந்தது.
 
 மேற்படி ஆய்வுக் கட்டுரையின் முடிவில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் சபா 
  ஜெயராசா உடல் அரசியல் என்பது பெண்களின்
 போராட்டத்தின் ஒரு வாயக்காலாக மட்டுமே உள்ளது. அதன் மூலம் மாற்றததைக் கொண்டு வர 
  முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
 
 மதுசூதனன் கருத்துக் கூறும்போது கவிதையில் பெண்மொழி பற்றி ஆழமான விமர்சனங்கள் 
  வைக்கப்படாதது பெரும் குறை என்றார்.
 
 இதனை ஒத்துக் கொண்ட ரேவதி ஒரிரு குறிப்புகள் தவிர ஆழமான விமர்சனங்கள் கூட ஆண் 
  எழுத்தாளர்களால் வைக்கப்பட்வில்லை.
 மொழியில் ரீதியில் ஆய்வுகள் முன்வைக்கப்படவில்லை. நாங்களை எமது கவிதைகள் பற்றிப் 
  பேச வேண்டியுள்ளது.
 
 இந்த அரங்கு ச.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. ஏனைய அரங்குகளுக்கு செல்வி 
  திருச்சந்திரன்இ பத்மா சோமகாந்தன்இ சித்ரா
 மௌனகுரு ஆகியோர் தலைமைகளில் நடைபெற்றன.
 
 ஏனைய ஆய்வுக் கட்டுரைகள்:-
 
 காலக் கனவு: தமிழில் ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்- பொன்னி அரசு
 
 தலித் பெண்நிலை பார்வையில் சாகித்திய ஆணாதிக்கம் மற்றும் அடையாள அரசியல்: 
  இமையத்தின் சேடல் ஒரு விமர்சன வாசிப்பு-
 ச.ஆனந்தி
 
 போரையையும் வன்முறையையும் பற்றி இலக்கியத்துக்கு ஊடான பெண்களின் எதிர்வனை- சித்ரா 
  மௌனகுரு
 
 முரண்படும் சமூகத்தில் தமிழ் எழுத்தின் இன்றைய பெண்நிலை வாதம்- திலகபாமா
 
 பெண்- வெளிப்பாடு- இயக்கம்- மதுசூதனன்.
 
 பெண்நிலை வாதமும் தேசியவாதமும்: ஈழத்துப் பத்திரிகை சர்ச்சைகளின் அடிப்படையில் 
  சில அவதானிப்புகள்- செ.யோகராசா
 
 உலகமயமாக்கலும் பெண்களும்- பவானி முகுந்தன்
 
 பெண்களும் அனர்த்த முகாமைத்துவமும்- சே.அனுஸியா
 
 குட்டி ரேவதியின் ஆய்வுக் கட்டுரையின் போதும் அது சம்பந்தமான கலந்துரையாடலின் 
  போதும் மட்டுமே பிரசன்னமாக இருந்ததால்
 ஏனையவை பற்றிக் குறிப்பு எதுவும் தர முடியவில்லை.
 
 மிக அமைதியாக ஆடம்பரமற்ற சூழலில் இக் கருத்தரங்கு நடைபெற்றது. குறைந்த அளவிலான 
  ஆனால் மிகவும் காத்திரமான நபர்களின் பங்களிப்பும் கருத்துப் பரிமாறல்களும் 
  நிகழ்வுக்கு கனதியைத் தந்தன. பயனுள்ள பொழுதாயிற்று.
 
 எம்.கே.முருகானந்தன்
 http://hainallama.blogspot.com
 http://suvaithacinema.blogspot.com/
 http://www.geotamil.com/pathivukal/health.html
 
 kathirmuruga@hotmail.com
 |  
| 
 |  
| ©  
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |