இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2007 இதழ் 93  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

பாரதிதாசன் – ஓர் உலகக்கவிஞன்!

-துரை. மணிகண்டன் ( விரிவுரையாளர்,
தமிழ் ஆய்வுத் துறை, தேசியக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி)
-


முனைவர் துரை மணிகண்டன்.20-ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தியப் பெருமை பாரதியையும், பாரதிதாசனையும் சேரும். தமிழ்த் தேசிய இனத்தின் தன்னிகரற்ற பாவலராகிய புரட்சிக் கவிஞரைக் குறுகிய மனப்பான்மை உடையவர், குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர், அவர்க்கு ஊர்ப்பார்வை உண்டே தவிர உலகப்பார்வை இல்லை என்று குறைத்துப் பேசும் ஆராய்ச்சியாளர் உளர். இத்தகைய கருத்துக்களில் இருந்து பாரதிதாசனைப் பிரித்து வேறுபட்ட பார்வையில் இக்கட்டுரையானது ஆராய்கிறது.

ஆசிரியர் குறிப்பு:

பாரதியாரின் சீடரான பாரதிதாசன், தமிழன்னை வியக்கும் வகையில் தமிழைப் பாடியவர். மூடநம்பிக்கையால் முடக்கப்பட்டவர்களை தன்பாட்டுத் திறத்தால் மருத்துவம் செய்து உலா வரச் செய்தவர். 1891 ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதன் இரவு புதுச்சேரியில் பிறந்தார். தந்தை கனகசபை, தாய் இலக்குமி அம்மையார். இவரின் இயற்பெயர் கனகசுப்புரெத்தினம். 1895இல் ஆசிரியர் திருப்புளிச்சாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். 1898இல் முதுபெரும் புலவர் பு.அ. பெரியசாமியிடமும், பங்காரபக்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். 1909ல் காரைக்காலில் ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். பல படைப்புகளை வெளியிட்டவர். 21.04.1964இல் இப்புண்ணிய பூமியைவிட்டு பரலோகம் சென்றடைந்தார்.
பாரதிதாசனைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
புதுச்சேரியில் தோன்றிய புயலை சிலர் மென்காற்று, வறண்ட மேகம் என்று பாரதியை உயர்த்தியும், தாசனை இகழ்;ந்தும், தாசன் உலக கவிஞரே இல்லை என்ற மாயையைத் தோற்றுவித்தனர். அவர்களில் வ. சுப்பிரமணியம் என்பவர்

"எங்கேயோ (புதிய ருஷ்யா) அடிமைச்சங்கிலி அறுந்ததற்காக இங்கே கவிஞன் குதூகலிக்கவில்லையா? பாரதிதாசனிடம் காணமுடியாத இந்த ~உலகப்பொதுமை| அல்லது ~அகிலத்துவம|; பாரதியின் தேசியப் பாடல்களில் காணக்கூடிய தனிச்சிறப்பு"
என்று தனது 'வாழ்வியல் கவிஞர்கள்'| என்னும் நூலில் (ப.41) குறிப்பிட்டுள்ளார். உலகப்பொதுமை அல்லது அகிலத்துவம் என்பதைப் பாரதிதாசனிடம் காணமுடியாது என்பது இவரது கருத்தாக உள்ளது.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. சீவானந்தம் அவர்கள்
"பொது மக்களின் ப+ர்ணக்குரல் பாரதிதாசனின் பாடல்களில் இன்று கேட்க வேண்டுமென்று வர்க்க உணர்ச்சியும் அரசியல் பேதமும் கொண்ட பொதுமக்களின் சார்பில் வேண்டிக் கொள்கிறேன். ஜார் வீPழ்ச்சியைப் பற்றி பாரதி பாடினான். இட்லர் வீழ்ச்சியைப் (பாசிச வீழ்ச்சியைப் பற்றி) பாரதிதாசன் பாடியிருக்க வேண்டும். பிஜித்தீவு கரும்புத் தோட்டக் கஷ்டத்தைப் பற்றி பாரதி பாடினார். வங்கப் பஞ்சத்தைப் பற்றி பாரதிதாசன் பாடியிருக்க வேண்டும்." என்று குறிப்பிடுவதும் (கவிஞர் மலர் ப.95) ஏறத்தாழ முன்னர் கூறிய கருத்தோடு ஒத்தே அமைந்துள்ளது.
ஆய்வாளர்களிடம் பரவலாகக் காணப்படும் இத்தகைய கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை. தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாய் உள்ளத்தோடு பாடியவர் பாரதிதாசன் ஆவார்.

உலகக் கவிஞர்களோடு பாரதிதாசன்:

புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்பாரதிதாசனை உலகக் கவிஞர்கள் பலரோடு ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளனர். குறிப்பாகக் கவிஞர்களுக்குச் சென்னையில் நடந்த நிதியளிப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்ட கவிஞர் மலர் (28.07.1946) இதற்கு மதிப்பீடுகள் பலவற்றைத் தந்துள்ளது. "மதங்களிலும் பழைய ஆசாரங்களிலும் ஊறிக்கிடந்த மக்களிடையே இவருடைய பாடல்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆதலால் இவர் ஒரு புரட்சிக்கவி, அமெரிக்கப் புரட்சிக்கவி வால்ட்விட்மன், தமிழ்நாட்டுப் புரட்சிக்கவி பாரதிதாசன். இக்கவிஞரைப் பலதுறையிலும் பாராட்ட வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும்." என்று தமிழ்நாட்டு வால்விட்மன்;| என்னுந்தலைப்பில் கவிமணி தேசியவிநாயகம் குறிப்பிட்டுள்ளார். (கவிஞர் மலர் ப.12)

'மாயக்காவ்ஸ்கி' என்னும் தலைப்பில் ஏ.பி. சனார்த்தனம் தம் கட்டுரையில் (ப.83) "மாயக்காவ்ஸ்கி இலக்கியக் கவிதைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. குழந்தைப் பாட்டுக்கள், காதல் கீதங்கள் ஆகியவைகளை இயற்றினார். ஆனால் இயந்திரங்களின் ஓசை, பாட்டாளியின் உழைப்பு, புரட்சியின் வேகம், சமுதாய முன்னேற்றம், எழுச்சி இவைகளுக்குத் தான் அவர் கவிதைகளில் முதலிடம்."

"பாட்டாளியின் பாசறைக்குத் தன் திறமையைக் காணிக்கையாகக் தருகிறவனே கவிஞன் என்பது அவரது முடிந்த முடிவு. இந்நாள் திராவிடத்திலும் ஒரு மாயக்காவ்ஸ்கியைக் காண்கிறோம். அவர்தான் பாரதிதாசன்! புரட்சிக் கவிஞருக்கு இன எழுச்சி, அரசியல், அறிவியல், சமுதாய விடுதலை குறிக்கோள், கவிஞரின் பாக்கள் மக்கள் உரிமைப் போராட்டத்தில் நம்மை ஈடுபடுத்தும் தன்மையுடையன." என்று ஒப்பீடு செய்கிறார்.
'புரட்சியில்பூக்கும் புது உலகு' என்னும் கட்டுரையில் (ப.37), இரா. நெடுஞ்செழியன்,  "பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞராக ஆக்கியது அவரது சூழ்நிலையேயாகும். ரஷ்யா ஒரு புஷ்கினையும், ஆங்கில நாடு ஒரு ஷெல்லியையும், பிரான்சு ஒரு ஹ_கோவையும் அமெரிக்கா ஒரு வால்ட்விட்மனையும் கண்டவாறு திராவிடமும் ஒரு பாரதிதாசனைக் கண்டது."

என்றும், 'கொலைவாளினை எடடா' என்னும் கட்டுரையில் (ப.48) க. அன்பழகன், "ஆங்கில நாட்டுக் கவிஞர் ஷெல்லியைப் போல,
அமெரிக்க நாட்டுக் கவிஞர் வால்ட்விட்மனைப் போல
இஸ்லாமிய இனத்திற்குக் கிடைத்த கவிஞர் இக்பாலைப் போல
திராவிட நாட்டிற்குத் தமிழ் இனத்திற்குக் கிடைத்த
ஒப்பிலா அறிஞர் புரட்சிக்; கவிஞர் பாரதிதாசன்' என்று போற்றுகிறார்.

சமூக புரட்சியாளர்:

''சமூகப் புரட்சி| என்னும் கட்டுரையில் முனைவர் ப. கிருஷ்ணசாமி
"ஆந்திரதேசத்திலே சமூக ஊழல்களையும் அநீதிகளையும் ஒழிக்க முன்னாள் கவி வேமன்னா தோன்றினார். தமிழ் உலகில் இந்நாள் பாரதிதாசன் தோன்றிச் சமூகப் புரட்சிக்குக் கடைக்கால் போட்டிருக்கிறார். பாரதிதாசன் கற்பனாசக்தியுள்ள கவிமாத்திரமல்ல, காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவர். அவர் எழுப்பியிருக்கும் தீ வெகு விரைவில் சமூக அட்டூழியங்களைக் கொளுத்திச் சாம்பலாக்கப் போகிறது||
என்று சற்று விளக்கமாக அளித்திருக்கும் மதிப்பீடு (ப. 80) தனித்து நோக்கத்தக்கது.

வால்ட்விட்மனைப் பற்றிய கட்டுரை ஒன்றிற்கு அறிஞர் அண்ணா 'அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்| என்ற தலைப்பைத் தந்திருப்பது (திராவிட நாடு 1-4-45) தனித்துக் குறிப்பிடத்தக்கது. மேலும் பாரதிதாசன் மணிவிழாவையொட்டி ~ஒரே நிலவு| என்னும் தலைப்பில் அண்ணா செய்துள்ள ஒப்பாய்வு ஒளிக்கீற்றுகள் அனைவரும் அறிய வேண்டியவையே.

'இக்பால் இஸ்லாமிய கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்றால், பாரதிதாசன் திராவிட கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்று சொல்லலாம்@ கவி தாகூரின் இயற்கை வருணனைகளை மிஞ்சியவை கவிஞரின்' அழகின் சிரிப்பு| என்று அவனி ஒருநாள் ஒத்துக்கொள்ளத்தான் போகிறது. ஷெல்லி ஆதிக்கப்புரியினர் மீது தனது கவிதா சக்தியை ஏவினார். இதிலே அவரையும் மிஞ்சி விட்டவர் பாரதிதாசன் என்று தான் அவரது கவிதைகள் கூறுகின்றன. வால்ட்விட்மன் பழைமை பாசி படர்ந்த கொள்கைகளை அகற்றிப் புதுசமுதாயம் உருவாக மெருகிட்டார்||
என்று பாரதிதாசனை அண்ணா இக்பால், தாகூர், ஷெல்லி, வால்ட்விட்மன் போன்றோர் கவிஞர்களோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

பேராசிரியர் மருதநாயகம் கடவுள் மறுப்புக் கொள்கை அடிப்படையில் பாரதிதாசனையும் கனடா நாட்டுக் கவிஞன் இர்வின்லேட்டனையும் இணைத்துப் பேசும் கட்டுரையில் (பாரதிதாசன் அவரும் அவர்தம் படைப்பாற்றலும், ப.83)
'பாரதிதாசனை மேலைநாட்டுக் கவிஞர்கள் சிலரோடு ஒப்பிட்டுப் பல கட்டுரைகளும் ஆய்வேடுகளும் எழுதப்பட்டுள்ளன. அவரது தாயகப் பற்றிற்காக ஸ்காட்லாந்து கவிஞர் பர்ன்ஸோடும் (சுழடிநசவ சுரசளெ) உரிமை வேட்கைக்காக ஷெல்லியோடும், இயற்கை ஈடுபாட்டிற்காகக் கீட்ஸோடும், புரட்சி மனப்பான்மைக்காக பைரனோடும், மனித வாழ்வு பற்றிய சிந்தனைக்காக ஏட்ஸோடும் (று.டீ. லுநயவள) பொதுவுடைமை எண்ணங்களுக்காக மாயகாவ்ஸ்கியோடும் ஒப்பிடுவதால் அவரது கவிதைகளில் புதிய உள்ளொலிகளையும் பரிமாணங்களையும் பார்க்க இயலும்"

என்று ஆய்வாளர்களின் ஒப்பாய்வுப் பரப்பைப் புலப்படுத்துகிறார். மேலும் உலகக் கவிஞர்களோடு சிறப்புப் பொருந்தியவர் பாரதிதாசன் என்பதையும் நம்மால் உணரும் வகையில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

பாரதிதாசனின் தமிழ்ப்பற்று:

உலக கவிஞர்கள் வரிசையில் முன்நிற்கும் பாரதிதாசன் தமிழை உயிராக, உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். கவிஞர்கள் தமிழில் பாடினார்கள். ஆனால் இவர் தமிழைப் பாடினார். இவரைவிடத் தமிழை அதிகம் பாடியோர் இல்லை எனலாம்.

"தமிழுக்கு அமுதென்று பேர்! அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்"

என்ற தமிழ் உணர்வுக் கவிதைகளைக் கொடுத்தவர். மேலும் தமிழை

"செத்தாலும் தமிழ்ப்படித்து சாக வேண்டும் இல்லையெனில் என் சாம்பலிலும் தமிழ்மணம்தான் வீச வேண்டும்" என்று தாய்மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்பையும் உலகறிய வைத்தவர்.

பாரதிதாசன் பார்வையில் இந்தியா:

பாரதிதாசன் தமிழ்க் கவிதைகளை, தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதவில்லை. உலக மக்களுக்குகெழுதிய விதம் தான் சிறந்தது. அவருக்குத் தெரிந்த மொழிகளான தமிழ், போர்ச்சுகீசியம் தவிர ஆங்கிலம் சற்று குறைவாகத் தெரியும் என்று முனைவர் இரா. இளவரசு அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் பாரதிதாசன் பிற மாநில நிகழ்ச்சிகளையும் தம் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

பீகார் நிலநடுக்கம்:

1934இல் சனவரி மாதம் 15ஆம் நாள் பீகாரில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரழிவு பாரதிதாசனைப் பெரும்
பாதிப்புக்குள்ளாக்கியது. அல்லற்படும் பீகார் மக்களுக்கு ஆதரவு திரட்ட அவர் நெஞ்சம் விழைய ~இயற்கைத் தேவியின் கோபம்| என்னும் தலைப்பில் ஒரு பாடலை எழுதினார். அப்பாடல் 18-02-1934 மணிக்கொடி இதழில் (ப. 5) வெளியாகியுள்ளது. இயற்கையை ஒரு
பெண்ணாக உருவகப்படுத்தி அந்தப் பெண் தன்னிடம் சொல்வதாகப் பாடலைத் தொடங்குகிறார்.
"குடமும் புனலும் நிலையிற் சாய்தல் போலே
குடிலும் ஏழைக் குலமும் சாயுங்காலே
படையால்மாளும் பகைபோல் மாளக்கண்டேன்
பணமும் பிணமும் மண்ணில் புதையக் கண்டேன்
தடமும் வீடும்சமமே யாதல் கண்டேன்
சதையும் மண்ணும் இரத்தக் குமிழும் கண்டேன்
மாங்கீர் சீதா மார்முகி சபர்புரி ஊரும்
மதுபான் மோத்கரி சுமசுதகிரி என்றாரும்
ஆங்கே பற்பல ஆயிர மைல்களிலன் எல்லை
அழகும் பொழிலும் தெருவும் வீடும் இல்லை
ஏங்கிய மைந்தர் தாயொடு வெளியில் நின்றார்
எத்தனை ஆயிர மக்கள் மண்ணிற் சென்றார்!
தாங்கிட வாரீர் பீகார் மக்கள் தம்மைத்
தாரீர் பொருளை எதிர்பார்க்கின்றார் உம்மை"
என்று பீகார் நிலநடுக்கத்தினை நேரில் கண்டு எழுதியதுபோல தனது மனத்துயரத்தை அனைவருடனும் பங்கீடு செய்துள்ளார்.

குவெட்டா நிலநடுக்கம்:
1935ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் வைகறை 4 மணி அளவில் நெஞ்சத்தை நடுங்கச் செய்யும் நிலநடுக்கம் குவெட்டாவில் ஏற்பட்டது. இன்றைய பாகிஸ்தானைச் சேர்ந்த, அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியாயிருந்த குவெட்டா நகரில் அந்தக் கொடுமை நடந்தது. குவெட்டா நகரை அறியாத தமிழ் மக்களுக்கு அதைப் பற்றிய விளக்கத்தை அளித்து, நிலநடுக்கச் செய்தியை 7-6-1935 'ஊழியன்' இதழில் (ப.5) வெளியிட்டுள்ளார்.

குவெட்டா நகரில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இரவு வேளையில் 56 ஆயிரம் பேரின் உயிரைக் காவு கொண்ட அந்த நிலநடுக்கம் பாரதிதாசனை உலுக்கித் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிழியும் மனத்துயர் பாடலாய் வழிந்தது. 16 கண்ணிகளைக் கொண்ட அந்தச் சிந்துப் பாடல், பாரதிதாசன் அப்போது ஆசிரியராக இருந்து வெளிவந்த ~ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்| இதழில் உடனுக்குடன் வெளி வந்தது. குவெட்டாவில் நடந்தது சாவு எனப் பாரதிதாசனால் கருத முடியவில்லை. அது ~பெரும் படுகொலை| எனக் கருதிக் 'குவெட்டாவில் கூட்டுக்கொலை' என்னும் தலைப்பில் பாடலைப் பாடியுள்ளார்.

'நல்ல குவெட்டாவில் உன்
நல்ல உறவினர்கள்
இல்லம் தெருக்களுடன் அவர்
இல்லை எனக் கேட்டோம்
சொல்லத் துடிக்குதடா உடல்!
தூய வடநாட்டார்
அல்லற் பெருஞ்சாவின் வயிற்றில்
அகப்பட்டறைப் பட்டார்!'

என அடே! இறந்தவர்கள் தமிழர் அல்லரே என்று எண்ணிவிடாதே வடநாட்டார்தாம் எனினும் தூயவர், நல்லவர், எல்லாவற்றிற்கும்
மேலாக உன்னுடைய உறவினர்| என்று கூறியுள்ள பாரதிதாசன் இந்தியாவில் வாழும் அனைவரும் சகோதரர்களே என்ற உயர்ந்த
எண்ணத்தில் உறுதிபடக் கூறியுள்ளார்.

பாரதிதாசன் பார்வையில் உலகம்:
தமிழகம், இந்தியப் பார்வைகளைக் கடந்து பாரதிதாசன் உலகத்திற்காகவும் கவிதைகளைப் பாடியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அவர்களின் நிலைமையையும் கண்டு பொங்கி எழுதியுள்ளார்.
இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழர்கள் இந்தியாவிற்கு வந்தனர். அவர்களுக்கு நிதிஉதவி வழங்கிட வேண்டுமென்று அப்போதைய இந்தியத் தலைமையமைச்சர் பண்டித நேரு அவர்களிடம் கேட்டதற்கு, அவர் ~~இலங்கையில் நடக்கும் கலவரங்களுக்கும் இந்திய நாட்டிற்கும் சம்பந்தமில்லை@ தமிழர் சிங்களவர் மோதலினால் தமிழர்களுக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டதென்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை@ இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடாது, இலங்கையிலிருந்து தமிழர்கள் போதுமான வசதியோடு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு உதவி தேவையில்லை. இலங்கை வாழ் தமிழர் சொந்த நாடற்றோர்|| (பாவேந்தரின்
உலகநோக்கு, ப.49) என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இதையறிந்து பாகிஸ்தானில் வடஇந்தியர் விட்டு வந்த சொத்துக்களுக்கு நட்ட ஈடு கோரி நாடோறும் கடிதமெழுதியும் தூதுக்குழுவை அனுப்பியும் பேச்சுவார்த்தை நடத்தும் நேரு இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தைப் பற்றி நமக்கு கவலையில்லை என்கிறார். வடநாட்டுப் பணியாட்கள் நாடு பிரிவினையின் போது இந்தியாவிற்கு வந்தவர்களை
வரவேற்று மறுவாழ்வுக்கு 345 கோடி ரூபாய் செலவிட்ட நேரு தான் இலங்கைத் தமிழர்கள் வசதிகளோடு வெளியேறுகிறார்கள் என்று கூறுகிறார்|| என்று நேருவின் போக்குப்பற்றி வருத்தமடைந்து அதனைக் கண்டிக்கும் கட்டுரையொன்றைக் குயில் (26.8.58) இதழில் வெளியிட்டுள்ளார். பாரதிதாசன் அடுத்த இதழிலேயே (9.9.58)
"நிலைகெட்ட பாகித்தான் மக்கட்கு நேரு
மலையொத்த பொன்னை வழங்கி நிலைகெட்
டிலங்கைவிட்டு வந்த தமிழர்களை எல்லாம்
கலங்கவிட்டார் கையை விரித்து" என்று இந்திய அரசின் 'இரட்டைநிலைப் போக்கையும்' இலங்கைத் தமிழர்களுக்காக தம் முதல்
குரலையும் வெண்பா வடிவில் பதிவு செய்துள்ளார்.

இட்லர் எதிர்ப்பும் ஆங்கில அரசுக்கு ஆதரவும்:
இலங்கைத் தமிழர்களின் நிலைமையை எடுத்துக்கூறிய பாரதிதாசன் ஜெர்மன் இட்லரையும் கடுமையாக விமர்சனம் செய்து ஆங்கில அரசை உயர்த்தியும் கவிதை வடித்துள்ளார். பெரியார் ஈ.வெ. இராமசாமி இரண்டாம் உலகப்போர் தொடர்பான கருத்து அறிவிக்கும்போது "இந்தப் போரில் இட்லர் வெற்றி பெற்றால் அந்நிய ஆட்சியின் கொடுமை பன்மடங்கு அதிகமாகிவிடும். இந்தியா உள்ளிட்ட உலக நன்மையைக் கருதினால் இட்லர் தோற்க வேண்டும். பிரிட்டன் வெல்ல வேண்டும்|| என்று குறிப்பிட்டுள்ளார் (புரட்சியாளர் பெரியார்,
ப.108). 'விடுதலை' இதழ் போர் ஆதரவு ஏடாக மாற்றம் செய்யப்படுகிறது. பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட திராவிடர் கழகத்தில் ஈடுபாட்டோடு பாடுபட்டு வந்த பாரதிதாசன் இல்டரை எதிர்த்து நாசிகளைக் கண்டித்து நேசநாடுகளின் ஆதரவுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவரின் போர் முயற்சி ஆதரவு உரையும் பாடல்களும் சென்னை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. (க.கு.நெ.கு.ப. 360)

அந்தக் காலத்தில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த திரைப்படப் பாடல் மெட்டுகளில் பாரதிதாசன் போர் முயற்சி ஆதரவுப் பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றாக
"மக்களின் சம்மதம் பெற்று நடந்திடும் ஆட்சி - அது
மாசற்ற தென்றுரைக்கும் ஜனநாயக ஆட்சி
முக்கியமாய் ஜனநாயகம் ஹிட்லரின் வைரி - அவன்
மூர்க்கம் தொலைப்பதுதான் அறியத்தக்க செய்த்
திக்குத் தெரியாத போக்கல்லவா அவன்போக்கு - பெரும்
செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான் தெருநாய்க்கே
இக்கணமே தொலைப்போம் அந்த ஜெர்மானியரை - முன்
னேறுமுன் னேறுமுன் னேறுது பாரதசேனை"
என்று இட்லரைக் கடுமையாகத் தாக்கிப் பாரதப்படையின் முன்னேற்றத்தைப் பாடியுள்ளார். (பாரதிதாசன் இதழ்பணிகள், பக் 214-215)

அடாவடியின் செயலில் அமெரிக்கா:
இட்லர் வீழ்ச்சி தொடர்ந்து நடந்தாலும் இரண்டாம் உலகப்போர் 1945 மே மாதம் செருமனியில் தோல்வியுடன் ஒரு முடிவுக்கு வந்தது. அடுத்த ஆகஸ்டு சப்பானின் தோல்வியுடன் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டம் நிறைவடைந்தது. உலக வரலாற்றில் ஓர் இருண்ட நாளாக கருதத்தக்கது 1945 ஆகஸ்டு 6ஆம் நாளாகும். உலக மக்கள் யாவரையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கிய அன்றுதான் காலை 8.15 மணிக்கு கிரோசிமா என்னும் சப்பானிய நகரில் அமெரிக்க வல்லரசு முதன்முதலில் அணுகுண்டினை நாகசாகி என்னும் துறைமுக நகரத்தின் மீதும் வீசியது. இதனால் முதலில் விழுந்த அணுகுண்டால் ஏறத்தாழ 1,50,000 மக்கள் உயிர் இழந்தனர். இரண்டாவது அணுகுண்டிற்குச் சற்று அதிகமாக 75,000 மக்கள் பலியாயினர். இதனைக் கேள்வியுற்ற பாரதிதாசன் கடும் துயரத்துடனும் கனத்த இதயத்துடனும் அமெரிக்காவை தன் கவிதை அணுகுண்டால் உடைத்தெறிந்தார். 'வைய விரோதிகள்|, 'பாவிகள் அமெரிக்கக் கொலைப்படை|, 'அமெரிக்கச் சுரண்டல்காரர்' என்று தெளிவாக அமெரிக்காவைச் சாடுகிறார்.

அணுகுண்டின் ஆற்றலை 'எரிமலைத் தீ சரோலனக் கவிழ்ந்ததைப் போல்'| எனவும் 'உலக முழுவதுமுள்ள நச்சுப்பாம்புகள்
அனைத்தையும் ஒன்றாகக் கூட்டி வானிலிருந்து வீசியதைப் போல்|| எனவும் உவமை வாயிலாகப் புலப்படுத்துகிறார். குண்டுவீச்சின் தீய
விளைவை,
~~இன்னும்ஓர் நூற்றாண்டுக்கும்
இரண்டூரின் சுற்றுப் பக்கம்
ஒன்றுமெ முளையாதாமே
வாழ்தலும் ஒண்ணாதாமே
இப்பாரை இனிக்கலக்கி
இனிவருங் காலமின்றித்
தப்பாது செயினும் செய்யும்
என்றும் எதிர்காலம், வாழ்வுக்கான எதுவுமில்லாமற் போதுமென்பதையும் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
உலகம் கருதிய பொது உண்மைகளாகச் சிலவற்றையும் பாரதிதாசன் பதிவு செய்யத் தவறவில்லை. முதலாளித்துவம் உலகம் முழுவதும்
ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை
~~ஒன்றுகேள் முதலாளித்துவம்
உலகினை அழிக்கும் முன்னம்
நன்றுநாம் செய்தல் எல்லாம்
நாமதை ஒழித்தல் வேண்டும்.
தறுதலை முதலாளித்துவம்
எப்போதும் நமைவிடாது
செய்வன இன்றே செய்க
என்று குறிப்பிடுகிறார்.
ஐ.நா. அமைப்பு என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சுட்டிக்காட்டும் தாசன்
"வையப் பாராட்டு மன்றம்
புலம்பலில் பயனே இல்லை
பொசுக்குக போர் மூலத்தை!"
என்று பாடுகிறார். இவ்வாறாக அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின் விளைவு, ஐ.நா. சபை செய்ய வேண்டியது என
உலகத்தேவையின் நலம் கருதி பாடல் எழுதிய கவிஞன் பாரதிதாசன் ஆவார்.

வியட்நாம் போர்:

இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் கம்போடியா, இலாவோசு ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரஞ்சு இந்தோ சீனாவின் ஒரு பகுதியாக வியட்நாம் இருந்தது. போரின்போது சப்பான் இந்தோசீனாவைக் கைப்பற்றியது. ஆனால், போர் முடிவில் இந்தோசீனாவின் பெரும்பகுதி பிரஞ்சுக் கட்டுப்பாட்டின்கீழ் மீண்டும் வந்தது. வியட்நாமைத் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான சந்தையாகவும், வியட்நாம் மக்களை
மலிவான கூலிகளாகவும் பிரெஞ்சியர் பயன்படுத்தினர். வியட்நாம் விடுதலைக் கழகத்தின் பொதுவுடைமைத் தலைவர் கோசிமின்
தலைமையில் வடக்கு வியட்நாமில் தனிப்புரட்சியரசு ஏற்பட்டது.
வடவியட்நாம், தென்வியட்நாம் என்று இரு பிரிவாக பிரிக்க பிரிட்டன் சோவியத்து ஒன்றியமும் ஈடுபட்ட வேளையில் அமெரிக்கா இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வியட்நாமில் இரு பிரிவினருக்கும் இடையில் பிரிவை ஏற்படுத்தி அமைதியை நிலை குலைய வைத்தது. மீண்டும் வியட்நாமுடன் போரில் ஈடுபட்டது.  இரண்டாம் உலகப்போர் முடிந்ததென எல்லோரும் நினைத்த நேரத்தில் இப்போர் தொடுக்கப்பட்டது என்றும், வியட்நாமியர் பிரஞ்சு நாட்டிற்குப் பல்லாண்டு அடிமைப்பட்டுக் கிடந்து கடுமையாகப் போராடி விடுதலை பெற்றுத் தங்கள் மேம்பாட்டுக்கு உழைக்கும் வேளையில் அமெரிக்கா உள் நுழைந்து உருக்குலைத்தது என்றும் வரலாற்று உணர்வோடு பாடலைத் தொடங்குகிறார் பாரதிதாசன்.

வியட்நாம் போர் முடிவதற்குச் சற்றொப்பப் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இப்பாடல் அன்றைய அமெரிக்கத் தலையீட்டைச் சரியாகக் கணித்தும் வியட்நாம் மக்களின் வீரத்தைப் போற்றியும் நான்கு எண் சீர் விருத்தங்களில் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள்
ஆயிரம்ஆண்டானாலும் பணிவதில்லை@ திமிருற்ற ஏகாதிபத்தியத்தைத் திசைதோறும் எதிர்க்கின்றார்@ அவர் நாட்டாரே.....ஊன்றிஎழும் நிறவெறிப்போர் களைய வில்லை@
உலகமக்கள் உறவென்றும் அன்பும் இல்லை@
ஈன்றவரும் வெறுக்கும் வண்ணம், வியட்நாம் வீரம்
இடுப்பொடித்துப் போடும்உனை எச்சரிக்கை!"
என்று எத்தனை ஆண்டுகளானாலும் இறுதி வெற்றி வியட்நாமியர்க்கே என்று உறுதிப்படுத்தும் பாரதிதாசனின் முன்னுணர்திறன் பாராட்டத்தக்கது.

உருசியா உலகின் உயிர்:

செருமனை வல்லரசாக்க விரும்பிய இட்லர், பல நாடுகளைப் போரில் தன்வசப்படுத்திக் கொண்டார். இறுதியாக நட்பு நாடான
உருசியாமீது படையெடுப்பு நிகழ்ந்தது. 1942 நவம்பர் தொடக்கத்தில் ஏல்-அலாய்மென் பகுதியிலும், 1943 சனவரியில் இசுடாலின்கிராது
அருகிலும், இலெனின்கிராது முற்றுகை உடைப்பிலும் செருமனிக்கு ஏற்பட்ட படுதோல்வி இரண்டாம் உலகப்போரின் திருப்புமுனையாக அமைந்தது. இட்லரின் வீழ்ச்சி இதிலிருந்து தொடங்கியது. இந்தப் போர் நடவடிக்கைகளையெல்லாம் கூர்ந்து கவனித்துள்ளார். பாரதிதாசன் என்பதைக் 'குடியானவன்' பாடல் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

இந்தியக் குடியானவனின் காதில் இட்லரின் வீழ்ச்சிச் செய்தியும் சோவியத் மக்களின் எழுச்சிப் பண்ணும் கேட்கின்றன.
ஆற்றலனைத்தையும் திரட்டிப் பெரும்படையோடு புறப்பட்ட இட்லரை, "பெல்ஜியம் போலந்து முதல்நல்ல நாடுகள்
பலவும் அழித்துப் பல்பொருள் பெற்றான்
முடியரசு நாடு, குடியரசு கொள்ள
முடியும் என்பதை முடிந்த பிரான்சை
வஞ்சம், சூழ்ச்சியால் மடக்கி ஏறி
அஞ்சாது செல்வம் அடியொடு பறித்தான்,
இத்தாலி சேர்த்தே இன்னல் சூழ்ந்தவன்,
கொத்தாய் ஆசியாக் கொள்கையை நாடும்
ஜப்பான் போக்கையும் தட்டிக் கொடுத்தான்"
என்றும்,

"ஆங்கில நாட்டையும் அமெரிக்கா வையும்
எரிக்க நினைத்த இட்லர் என்னும்
'குருவி' நெருப்புக் குழியில் வீழ்ந்தது" என்றும் இட்லர் குருவி என வீழ்ச்சி பற்றி பாரதிதாசன் எழுதுகிறார். தான் வென்ற நாடுகளில் நின்ற படைகளையும் திரட்டிக் கொண்டு,
"உருசிய நாட்டை அழிக்கச் செலுத்தினான்!
உலகின் உயிரை ஒழிக்கச் செலுத்தினான்!
பெரிதினும் மிகவும் பெருநிலை கண்ட
உருகிய நாட்டை ஒழிக்கச் செலுத்தினான்!
மக்கள் வாழ்வின் மதிப்பு இன்னதென,
ஒக்க வாழும் உறுதி இதுவென,
முதிய பெரிய முழுநிலத் திற்கும்
புதிய தாகப் புகட்டிய நாட்டில்
செலுத்தினான் இட்லர், தீர்ந்தான்@ முற்றிற்று!
உருசிக நாட்டின் உடைமையைக் கடமையை
மக்கள் தொகையால் வகுத்தே, வகுத்ததை
உடலில் வைத்தே உயிரினால் காக்கும்
உருசியத்தை இட்லர் உணர்கிலான்!"
என்று இட்லரின் வீழ்ச்சியையும், உருசியாவின் தன்னம்பிக்கையையும் பாரதிதாசன் எத்தனை அழகாக பாடியுள்ளார்.

நிறைவுரை:

உலக நாடுகளுக்கு எங்கும் செல்லாத பாரதிதாசன்;@ இருமொழியை மட்டும் அறிந்திருந்த தனது அனுபவ அறிவாலும்@ உலகப் பற்றாலும் தம் கவிதைகளைப் புதுமெருகேற்றியவர். தமிழ், இந்தியா என பாராமல் உலக நாடுகளின் செயல்களையும், அந்நாட்டு அதிபர்களையும்
கவிதையாகவும், உரைநடையாகவும், வானொலி பேச்சாகவும் பதிவு செய்துள்ளார். உலக கவிஞர்களோடு பாரதிதாசனைக் கவிமணி தேசிய விநாயகப்பிள்ளை, ஏ.பி. சந்தானம், இரா. நெடுஞ்செழியன், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, க. அன்பழகன், அறிஞர் அண்ணா, பேராசிரியர் மருதநாயகம் போன்றோரின் கருத்துக்கு ஒத்தே பாரதிதாசன் தமது படைப்புகளைப் படைத்துள்ளார். மேலும், இந்தியாவில் பீகார், குவாட்டா நிலநடுக்கத்தைப் பற்றியக் கவிதைகளையும், உலகப் பார்வையில் இலங்கையையும், இட்லரை எதிர்த்து ஆங்கிலேயரை உயர்த்தியும், அமெரிக்காவை பாராட்டியும், திட்டியும், ஐ.நா.வின் செயல்பாடுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்தும் உள்ளார். வியட்நாம் போர், ரசியாவின் புகழையும் உயர்த்திக் காட்டியுள்ளார். இதன் மூலம் பாரதிதாசன் மற்றைய கவிஞர்களைவிட உலகக் கவிஞர்கள் வரிசையில்
முன்நிறுத்திக் காண்பது நலம்பயப்பதாகும்.

எழுத உதவிய ஏடுகள்
ஐ. பாரதிதாசன் படைப்புகள்:
1. பாரதிதாசன், அழகின் சிரிப்பு, முல்லைப் பதிப்பகம், சென்னை@ மு.ப.1944.
2. பாரதிதாசன், இசையமுது, பாரத சக்தி நிலையம், புதுவை@ (ஆ.இ.) (1942).
3. பாரதிதாசன், இந்தி எதிர்ப்புப் பாட்டு, பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி@ மு.ப.30.7.49
4. பாரதிதாசன், குடும்ப விளக்கு, பாரத சக்தி நிலையம், புதுவை@ (ஆ.இ.) (1942).
5. பாரதிதாசன், குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி விருந்தோம்பல், முல்லைப் பதிப்பகம், சென்னை@ மு.ப. 1944.
ஐஐ. மற்றவர் படைப்புகள்:
6. அண்ணாத்துரை, டாக்டர்.மா, பாரதிதாசன் இதழ்ப் பணிகள், ப+ங்கொடி வெளியீடு, ஈரோடு 2@ 1990.
7. அய்யாமுத்து. கோவை.அ, எனது நினைவுகள், வானதி பதிப்பகம், சென்னை 17@ மு.ப. 1973.
8. இராமசாமி. அ, புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு, ப+ங்குன்றம் பதிப்பகம், மதுரை@ மு.ப. திசம்பர் 1991.
9. இளவரசு. இரா, இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன,; மருதம், திருச்சி 21, மு.ப. திசம்பர் 1990.
10. இளவரசு. இரா, பாவேந்தரின் உலகநோக்கு, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி 21@ மு.ப. 2002.
11. குருசாமி. ம.ரா.போ., பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம்.
12. சுப்பையா. வ. (ஆங்கில மூலம்) காசி வில்லவன் (தமிழில்), பிரெஞ்சு இந்திய விடுதலை இயக்க வரலாறு, அலமு நிலையம்,
சென்னை 17@ மு.ப. திசம்பர் 1991.
ஐஐஐ. இதழ்களும் மலர்களும்:
13. விடுதலை (நாளிதழ்)
14. குயில் (தமிழ் தினசரி)
15. ஊழியன் (வார இதழ்)
16. குடியரசு (வார இதழ்)
17. திராவிட நாடு (வார இதழ்)
18. புதுவை முரசு (வார இதழ்)
19. சக்தி (மாத வெளியீடு)
20. ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம், திங்கள் கவிதை இதழ்


முனைவர் மணிகண்டன்:
gunama73@yahoo.co.in


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner