பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நிகழ்வுகள்! |
இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)
- முனைவர் துரை.மணிகண்டன் -
பெரம்பலூரில்
உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லுரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா 18.02.2009
(புதன்கிழமை காலை
11.30 மணியளவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா.சுவாமி நாதன் அவர்கள்
லைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் நான்
உரையாற்றினேன்.
இணையம் என்றால் என்ன? இணையத்தில் தமிழ் எந்த அளவிற்கு செல்வாக்குப்பெற்று வருகிறது
என்பதைக் காட்சி முறை வழி
நடத்திக்காட்டினேன்.இணையத்தில் தமிழை எப்படி பதிவு செய்வது என்பதை சுரதா
எழுதிகொண்டு செயல்படுத்திக்காட்டினேன்.
தமிழ் இணையதளங்களையும் அதன் மூலம் நாம் பெரும் பலன்களையும் விரிவாக
எடுத்துக்கூறினேன். ஒருசில இணைய
இதழ்களான் திண்ணை, பதிவுகள், முத்துகமலம், வார்ப்பு, தமிழ்த்திணை,
நிலாச்சாரல்,தமிழ் நெட், தமிழ் நேசன், தமிழ்மரபு
அறக்கட்டளை போன்றவைகளையும் எடுத்துக்காட்டினேன்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தோற்றம் குறித்தும்,அதில் உள்ள நூலகளினையும்,
கதைகள் பற்றியும் பேசினேன்.
மேலும் பாரதிதாசன் பல்க்லைக்கழகத்தின் மாண்மைமிகு முனைவர்.பொன்னவைக்கோவின் தமிழ்
பற்றுக்குறித்தும், அவர்களின் தமிழ்ப்பணி இணையத்தில் எந்த அளவிற்கு சிறந்து
விளங்குகிறது என்பதையும் மாண்வர்களுக்கும், பேராசிரியர்களுக்கு
எடுத்துக்கூறினேன்.
தமிழ் விக்கிபீடியாவின் அளப்பறியா தொண்டை யும் அதில் கட்டுரை எழுதி அனுப்பும்
வழிகளையும் விளக்கினேன்.
ஒருங்குறி மூலம் தமிழைத் தட்டச்சு செய்தும் அதனை மாணவர்களுக்குப் பயன்படுத்தியும்
காட்டினேன். மாணவர்களுக்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுச்சொல்லை உருவாக்கிக் கொடுத்து அதில் அவர்களுக்கு
உபயோகப்படுத்தியும்
காட்டினேன்.
சுமார் முன்று மணி நேரம் நடந்த இன் நிகழ்விழ் நூற்றுக்கும் அதிகமான தமிழ்மாணவ
மாணவியர்கள் ,தமிழ்
பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ் இணையதளத்டினை தினமும் உலகில் 10 லட்சம் பேர் பார்வையிடுகின்றனர். தமிழ் மரபு
அறக்கட்டளை என்ற
இணையதளத்தில் தமிழின் வரலாறும், தமிழ்மொழிக்கலாச்சாரம், பண்பாடு மற்றும்
ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்தும்
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம் கற்றவர்களால்தான் கணிப்பொறியையோ, இணையத்தையோ பயன்படுத்தமுடியும் என்ற
நிலையை மாற்றி தமிழிழும் இணையத்தைப்பயன்படுத்தமுடியும் என்பதை தெளிவாக
விளக்கிக்காட்டினேன்.
சிங்கப்பூர்,மலேசியா, கணடா, தென்கொரியா,ஜெர்மனி, நார்வே, இலைங்கை போன்ற நாடுகளில்
தமிழ் இணையத்தைப்
பயன்படுத்துகின்றனர்.
நம் தமிழ் மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக இணையத்தைப் பயன்படுத்தாமல் தமிழ்
சமுதாயத்தைப் பழுது பார்ப்பதாக
இணையத்தைப் பயன்படுத்தவேண்டுகிறேன்.
சுமார் முன்று மணி நேரம் நடந்த இன் நிகழ்விழ் நூற்றுக்கும் அதிகமான தமிழ் மாணவ
மாணவியர்கள், தமிழ் பேராசிரியர்களும்
கலந்துகொண்டனர்
இவ்விழாவிற்கு தமிழ்த்துறையின் தலைவர் திரு. தமிழ்மாறன்,உயிர்தொழில் நுட்பவியல்
துறைத்தலைவர் திரு.ராமமூர்த்தி, மற்றும் பிறத்துறைப்பேராசிரியர்களும் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.நிகழ்வுக் காட்சிகள் ....
mkduraimani@gmail.com |
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|