| 
டென்மார்க் சாகித்திய சுருதிலயாவின் இசைப்பட்டறையும் இசைவிழாவும் 2007!  - 
ஜனரஞ்சன் - 
 
டென்மார்க் 
நாட்டில் சிறந்த இசைக் கோயிலாக விளங்கும் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 
வருடா வருடம் நடைபெறும் இசைப்பட்டறையும் இசை விழாவும் கடந்த 05. 04.2007 தொடக்கம் 
06.04.2007 வரை இரண்டு நாட்கள் இசைப்பட்டறையும் 08.04.2007 ஞாயிற்றுக்கிழமை 
இசைவிழவும் வெகு விமர்சியாக கேர்ணிங் நகரில் அமைந்துள்ள கொய்பியா மண்டபத்தில் 
நடைபெற்றது. வழமைபோல் இந்த வருடமும் தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 
இசைமேதைகள் இசை வகுப்புகளிலும் இசை விழாவிலும் பிரதம, சிறப்பு விருந்தினர்களாக 
கலந்து சிறப்பித்தர்ர்கள். 
 பூர்வி, பைரவி, சைந்தவி, மாளவி என நான்கு வாசல்கள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 
மேடையில் சுமார் 160 மாணவர்கள் கலந்து கொண்டு தமது இசைத்திறனை வெளிக்காட்டிக் 
கொண்டார்கள். வழமைபோல் ஸ்ரீமதி குமுதினி பிருத்திவிராஜ் அவர்களின் மாணவ மணிகளின் 
இசை மழையில் நனைந்து திளைக்கும் பாய்க்கியம் பெற்றோம். கூடவே பிரதம விருந்தினராக 
வருகை தந்த தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழக இசைத்துறை வரிவுரையாளரும் சென்னை வானொலி, 
தொலைக்காட்சி நிலையக் கலைஞரும் ஆன ஸ்ரீமதி ஆர்.எஸ். ஜெயலக்ஷ்மி அவர்களின் 
வீணையிசையில் லயித்தும் அவரது பிரதம பேச்சில் வீணைஇசை பற்றிய நுணுக்கங்களை அறியும்
வாய்ப்பும் பெற்றோம். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த 
தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசை மேதை 
இசைக்குயில் ஸ்ரீமதி மாலா மோகன் அவர்களினதும வளர்ந்து வரும் முன்னணிப் பாடகி 
செல்வி ஸ்ரத்தா அவர்களினதும் கர்நாடக இசைமழையில் சிறுதுளியினைப் பருகும் வாய்ப்பும் 
பெற்றோம். 
 இக்கலை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களாக மிருதங்க வித்துவான் ஸ்ரீ நெய்வேலி 
வெங்கடேஸ் அவர்களும், இந்திய
 வானொலி, தொலைக்காட்சி முதல்தர வயலின் கலைஞர் ஸ்ரீ எஸ்.பி.அனந்தபத்மநாப அவர்களும் 
டென்மார்க் தபேலாக் கலைஞர் ஸ்ரீமான் ஜெகன் அவர்களும் இசைத்து நிகழ்ச்சிக்கு 
சிறப்புச் செய்தார்கள். தேவன் அவர்களின் ஒலி அமைப்பில் முரளி அவர்கள் நிகழ்ச்சினை 
தொகுத்து வழங்கியிருந்தார். சிறப்புரை நிகழ்த்திய ஸ்ரீமதி மாலா மோகன் அவர்கள் 
குறிப்பிடும்போது இந்த இசைமாணவர்களைப் பார்க்கும்போது இவர்களது ஆசிரியரை மெச்சுவதா 
அல்லது இவர்களது பெற்றோரை மெச்சுவதா அல்லது இவர்களது இசைத்திறனை மெச்சுவதா எனத் 
தெரியவில்லை எனக் குறிப்பிட்டார். உங்களது பிள்ளைகள் இசை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி 
இசைக்கின்ற மகிழ்ச்சியோடு நின்றுவிடாமல் தொடர்ந்து நல்ல பல கர்நாடக இசைக் 
கச்சேரிகளை கேட்கும் வாய்ப்பினையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் 
எனவும் கேட்டுக் கொண்டார். அப்படி அமைந்தால் நிச்சயமாக இவர்களது எதிர்கால 
இசைப்பயணம் வெளிச்சமானதாக அமையும் எனக் கூறினார். டென்மார்க்கில் முன்னணிப் 
பாடகிகளாக விளங்கும் சாந்தினி, துவாரகா, சத்தியா,  தமிழினி, அர்ச்சனா, வாணி, 
ஸ்ரெபியா, சிந்து இன்னும் பலரும் ஸ்ரீமதி குமுதினி பிருத்திவிராஜ் அவர்களின் 
மாணவிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
 இசைவிழாவில் விருத்தம் பாடிய ஸ்ரெபியா வினதும் லோச்சனா என உச்சரித்துப் பாடிய 
சிந்துவினதும் தெலுங்கு உருப்படியினைப் பாடிய பிரியங்காவினதும் தாயகப் பாடலைப்பாடிய 
சத்தியாவினதும் காப்பி இராகத்தில் பாடிய நிவேத்தாவினதும் ரீங்காரமாகப் பாடிய 
வாணியினது இசையும் குளிர்காலத்தில் இதமான வெப்பத்தில் சுகமாக குளிக்கின்ற சுகத்தைத் 
தந்தது. பகல் 10.00மணிக்கு தொடங்கிய இசைவிழா நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு 
நிறைவடைந்தது.
 
 thavaa@hotmail.com
 |