'அனைவருடனும் அறிவினைப்
பகிர்ந்து கொள்வோம்!' 'Sharing Knowledge with
every one'!
Pathivugal ISSN 1481-2991
ஆசிரியர்:வ.ந.கிரிதரன்
Editor: V.N.Giritharan
அக்டோபர் 2010
இதழ் 130 -மாத
இதழ்
பதிவுகள்
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
மணமக்கள்!
தமிழ் எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம்.
சினிமா
வெப்துனியா.காம் (தமிழ்) பிரபல பின்னணிப் பாடகி சுவர்ணலதா திடீர் மரணம்
தமிழ்,
தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைப்படப்
பின்னணிப் பாடல்களைப் பாடிய பிரபல பாடகி சுவர்ணலதா இன்று சென்னையில்
தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 37. நுரையீரல்
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சுவர்ணலதா இன்று காலை சிகிச்சைப்
பலனின்றி காலமானார். 1995ஆம் ஆண்டு பாரதிராஜாவின் கருத்தம்மா
திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய "போறாளே
பொன்னுத்தாயி" என்ற அருமையான பாடலுக்கு தேசிய விருது பெற்றார். இவர்
கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தவர். இவரது தந்தை
கே.சி.செருக்குட்டி ஹார்மோனியம் வாசிப்பவர், பாடகர். தாய் கல்யாணியும்
இசையில் நாட்டமுடையவர். சுவர்ணலதாவிற்கு ஹார்மோனியமும், கீ போர்டு
இசைக்கருவிகளையும் வாசிக்கத் தெரியும்.
1989ஆம் ஆண்டு முதல் பாடி வரும் சுவர்ணலதா, இளையராஜாவின் இசையில்
சத்ரியன் என்ற படத்தில் "மாலையில் யாரோ மனதோடு பேச" என்ற பாடல் மூலம்
தனது அருமையான குரல் வளத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து இவர் அலைபாயுதே படத்தில் பாடிய 'எவனோ ஒருவன்", பாம்பே
திரைப்படத்தில் பாடிய குச்சி குச்சி ராக்கம்மா, ஜென்டில்மேன் படத்தில்
பாடிய 'உசிலம் பட்டி பெண்குட்டி' காதலன் படத்தில் முகாபலா முகாபலா ஆகிய
பாடல்கள் தமிழ் நாட்டில் அடிரடி ஹிட் பாடல்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
உயிரேயில் இவர் பாடிய 'பூங்காற்றிலே", இந்தியன் படத்தில் பாடிய மாயா
மச்சீந்திரா' ஆகியவையும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவருக்கு புகழ்
சேர்த்தன. இளையராஜா இசையில் எடுத்துக் கொண்டால், கேப்டன் பிரபாகரன்
திரைப்படத்தில் இவர் பாடிய 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய
'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில் "மாலையில் யாரோ",
சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான்
ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
மேலும் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை படத்தில் இவர் பாடிய 'மாசி மாசம்',
ராஜ்கிரணின் ராசாவின் மனச்சுல படத்தில் பாடிய 'குயில் பாட்டு',
புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் பாடிய 'ஊரடங்கும் சாமத்தில' ஆகிய
பாடல்கள் ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்டு போக, பட்டித்
தொட்டிகளிலெல்லாம் முழங்கியது தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி
ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே, மருமகளே' என்ற
அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது
குறிப்பிடத்தக்கது.
வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே',
'மலைகோயில் வாசலில்' ஆகிய இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.
இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே தமிழில் ஹிட் பாடல்கள் என்றால் அது
மிகையாகாது.