கேரளத்திரைப்பட விழா!
சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்!
- சுப்ரபாரதிமணியன்-
பத்தாவது கேரளத்திரைப்பட விழாவில் பரிசு பெற்ற சில திரைப்படங்கள் கவனத்திற்குரியவை.பத்திற்கும் மேற்பட்ட பரிசில் சிறப்பு நடுவர் பரிசு , சிறந்த இயக்கம், பார்வையாளர்கள் தேர்வு என அதிகப்பரிசு பெற்ற படம் : மவுண்டன் பெற்ரொலிங்.பீஜிங் பத்திரிக்கையாளர் ஒருவர் திபெத்திய மலைப்பகுதிக்கு வருகிறார். அப்பகுதியில் நிலவும் ஒரு சாவு குறித்த விபரங்களை சேகரிக்க முயல்கிறார். விலங்குகளை வேட்டையாடி தோலை அபகரித்து கடத்தும் கும்பல்களைப் பிடிக்க கிராமமக்களே ஒன்று சேர்ந்து உயிரைப் பணயம் வைப்பதை கண்கூடாகப் பார்க்கிறார்.உயிர் இழப்புகள், கொலை வெறி உணர்வுகள் வாழ்க்கையைத் துண்டாடுகின்றன. தன் உயிரையும் பணயம் வைத்துதான் பத்திரிக்கையாளனும் இதில் ஈடுபடுகிறான். ஊருக்குத் திரும்புபவன் இதை பத்திரிக்கையில் வெளிப்படுத்துகிறான். அரசு இதை கவனத்தில் கொண்டு விலங்குகளின் தோலை வேட்டையாடும் கும்பல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் முறைப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளனின் பணி சமூக செயல்பாட்டிற்கான அடித்தளமாகிறது. திபெத்திய நோர்புவுவின் இயக்கத்தில் வெளிவந்த தி கப், தி டிரவலர்ஸ் அண்டு மெஜசியன்ஸ் படத்தைத் தொடர்ந்து அதன் பாதிப்புகளற்று வேறொரு களத்தில் லூ சொளன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். எழுத்தாளனின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்பதை உயிரைப் பணயம் வைத்து இயங்கும் தன்னார்வப்பணியாளர்கள் போன்ற கிராமத்தினர் உணர்த்துவதை இப்படம் காட்டுகிறது.

"டேஸ் ஆப் பயர்" (ஜப்பான்) சிறப்புப்பரிசைப்பெற்றது. மண் பாண்டங்கள் செய்யும் தம்பதியினருக்கு ஏற்படும் சிக்கல் விசேசமானது. மண் பாண்டங்களின் கலை தன்மை குறித்த பிரச்சனைகளும், சர்ச்சைகளும் கணவனை சோர்வடையச் செய்கின்றன. ஊரின் முக்கியப் பிரமுகர்களிடமிருந்து தனிமைப்படுகிறான். எதிர்ப்பாராத விதமாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறிவிடுகிறான். பெண், ஆண் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு மனைவிக்கு நேர்கிறது. குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு செலவுகளுக்காக அவள் வெகு சிரமப்படுகிறாள். காதல் திருமணம் செய்து கொண்டு வெளியேறிவிடும் மகள். மகனின் ஒரு வகை நோய் சிகிச்சை செலவு அவளை கடன்காரியாக்குகிறது. அவனையும் காப்பாற்ற முடிவதில்லை. மண்பாண்ட உலைக்களத்து தீயை அணையாமல் காப்பற்ற வேண்டி இருக்கிறது. மண்பாண்டத்தில் வரையப்படும் சித்திரங்களின் நிரந்தரத்தன்மையாய் ஆகிறாள். தாய்மையின் உச்ச பட்ச படிமமாய் நின்று விடுகிறாள்.
"பிளேயிங் இன் த டார்க்" என்ற போர்ச்சுகல் படம் எழுபதுகளில் பிரேசிலில் நிலவிய அரசியல் சூழல் பற்றினது.போராளிகளூக்கும் ராணுவத்தினருக்கும் நடக்கும் சண்டையில் காயம் படும் ஒரு போராளி ஒரு அப்பார்ட்மெண்டில் வந்து சேர்கிறான். தலைமறைவு வாழ்க்கையின் பய உணர்வுகளும் திகிலும் மீண்டும் தனது சக போராளிகளுடன் சேரும் விருப்பங்களும் அவனை அலைக்கழிக்கின்றன. ஒரு பெண்ணுடனான உறவும் அவனின் வாழ்க்கை பற்றின சில அபிப்பிராயங்களை மாற்ற உதவுகின்றன. ஒரு தேர்ந்த படத்தின் தயாரிப்பாய் இருந்தது இது.
"ஸ்டோலன் லைப்" சிறந்த படத்திற்கானப் பரிசை பெற்றது. பெற்றோரின் அரவணைப்பில் இல்லாமல் பாட்டியால் வளர்க்கப்படுபவளின் கல்லூரியின் முதல் நாள் வாழ்க்கை எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றி விடுகிறது. ஓட்டுனர் ஒருவரின் நட்பு அவளுக்குக் கிடைக்காத ஆண் பரிவு பக்கம் வாழ்க்கையைத் திருப்புகிறது. அவனுடன் சேர்ந்து வாழ்பவள் அவளின் கர்ப்பம் கல்லூரி வாழ்க்கைக்கு தடையாக இருப்பதை அறிந்து வெளியேறுகிறாள். பிறந்த குழந்தை தத்து தரப்பட்ட சூழல் அவளை பாதிக்கிறது. அவளது பாட்டியே அதற்குக் காரணமாக இருக்கிறாள். கணவனும் உடன்பட்டு அது நடக்கின்றது,
கணவனின் துரோகம் மற்றும் வேறொரு பெண்ணுடனானத் தொடர்பு அவளை இன்னும் விரட்டி அடிக்கிறது. துரோகங்களும் அவமானங்களும் அவளின் வாழ்க்கையை நிரப்புகின்றன. லிசொவ்ஹொங்க்கின் இயக்கத்திலான இந்த சீனப்படம் சாதாரணக் குடும்ப நிலைகளில் பெண்களின் அவஸ்தைகளை சீன சூழலில் விவரிக்கிறது. தலைமுறையாய் சாபமாய் தொடரும் பெண்களின் நிர்க்கதி நிலைமையின் ஆழத்தையும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் விவரிக்கிறது. சீனாவின் தாராளமயமாக்கலின் மறுபுறம் தொடரும் ஏழ்மையின் அவலம் துயரமானது.
பெண்களும், குழந்தைகளும் உலகமயமாக்கலில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் பெரும்பான்மையானப் படங்கள் காட்டின. குழந்தைகளின் பால்யம் பறிக்கப்பட்டு தொழிலாளிகளாகிற அவலம் அதிலும் அகதிகளாக்கப்பட்டு கன்னி வெடிகளை நீக்குவது போன்றப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது போன்றவையும் குரூரமான முறையில் சுட்டப்பட்டன. வாழ்க்கையின் குரூரம் அவர்களை சீக்கிரம் முதியவர்களாக்கி விடுகிறது. குற்றவாளிகளாக்குகிறது.
இப்படவிழாவில் பார்த்த டி வி சந்திரனின் "
கதாவேசம் " என்ற படம் இப்படியொரு வாசகத்துடன் முடிகிறது. "இங்கு வாழ்வதற்கு
அவமானப்பட வேண்டும்"