இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சினிமா!

மல்பேண் சர்வதேச திரைப்பட விழா!

- நடேசன் -


பிரபலமான ஜெர்மன் டைரக்ரர் வொல்கர் ஸொலண்டெர்வ்வால் (Volker Schlondorf) இயக்கப்பட்டதுஎன்னோடு சில காலத்திற்கு முன்பு வேலை செய்த ஒருவர் தனது வேலையில் இருந்து ஒரு மாத விடுப்பு எடுத்து மெல்பேண் சர்வதேச திரைப்பட விழாவில் காட்டப்படும் படங்களைப் பார்ப்பார். அப்படி செய்ய எனக்கு ஆசை. சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. அந்த நண்பரின்மேல் ஒரு சிறிய பொறாமை உணர்வு ஏற்படும். சிறுவனாக இருந்தபோது டாக்டர், என்ஜினியர் என உத்தியோகம் பார்க்க ஆசைப்படவில்லை. தியேட்டர் ஒன்றில் வேலை செய்யவே ஆசை இருந்தது. அந்த அளவு சினிமா என்னை பாதித்து இருந்தது. இம்முறை மெல்பேண் திரைப்பட விழாவில் பல படங்களை பார்க்க திட்டம்போட்டிருந்தேன். பல காரணங்களுடன் மெல்பேண் குளிரும்சேர்ந்து இரண்டு படங்களை மட்டுமே பார்க்கமுடிந்தது. இரண்டும் ஜெர்மன் டைரக்டர்களால் நெறிப்படுத்தப்பட்டவை.

உல்சான் (Ulzhan):
பிரபலமான ஜெர்மன் டைரக்ரர் வொல்கர் ஸொலண்டெர்வ்வால் (Volker Schlondorf) இயக்கப்பட்டது. பரிசை சேர்ந்த பாடசாலை ஆசிரியர். மத்திய ஆசிய நாடான காசாக்கிஸ்தானுக்கு பிரயாணம் செய்கிறார். இவருடன் ஒரு ஜிப்சியும் சேர்ந்துகொள்கிறான். இந்தப் பயணத்தில் காசகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஆசிரியரை சந்திக்கிறான். இந்த பயணத்தின் நோக்கம் புதையலைத் தேடுவதற்காக என கூறப்படுகிறது. பின்பு மரணத்தைதேடி செல்லும் பயணம் என கடைசியில்தான் பார்ப்போருக்கு புரிகிறது. எப்படியும் அவனை காப்பாற்றவேண்டும் என்ற பெண்ணுக்கு நடக்கும் போராட்டமாக இந்தப்படம் புரிந்துகொள்ளப்படுகிறது.

பாலைவனத்திலும் பின்பு அழகான மத்திய ஆசிய மலைப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஒரு சைக்கோலஜிகல் திரில்லர். கடைசியில்; திரைப்படக்கதை மெதுவாக பூக்கும் ஒரு ராட்சத மலர்போல் திரையில் விரிந்துகொள்கிறது. கதையில் வசனங்கள் இரண்டு அல்லது மூன்று கடுதாசியில் எழுதிக்கொள்ளலாம். கான்ஸ் திரைப்பட விழாவால் சிறப்பு படமாக திரையிடப்பட்டது.

நான் வேறு பெண் (I am the other women):
ஜெர்மனிய பெண் டொக்ரர் மார்கிறற்றா வொரொற்றாவங் (Margarethe von Trota) நெறிப்படுத்தப்பட்ட இந்தப்படம் மல்ரிப்பின் பேசனல்டி டிஸ் ஒடா எனப்படும் மனநோயுள்ள மெண்ணை மையப்படுத்தி உள்ளது. ஜெர்மனியில் வைன் தயாரிக்கும் பணக்கார குடும்பத்தில் வந்த இளம் பெண் பகலில் தகப்பனுக்கு அடங்கிய பெண்ணாகவும் இரவில் விடுதிகளில்சென்று விபச்சாரம் செய்யும் விலைமாதாகவும்வரும் பாத்திரமாகிறாள். இவளை காதலிக்கும் சிவில் என்ஜினியருக்கும் இவனது தகப்பனுக்கும் ஏற்படும் முரண்பாடுகள் இந்தப்படத்தை நகர்த்துகிறது. இந்தப்படம் ஒரு சைக்கோலஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்தது.

இந்த இருபடங்களிலும் வசனங்கள் மிகவும் சொற்பமாக பேசப்படுகிறது. கமரா தனது நிழல் படத்தால் கதையை பார்ப்பவர்களுக்கும் புரியவைக்கிறது. படங்களில் ஏற்படும் பாதிப்பு மனங்களில் பல காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

இப்படங்களைபார்க்கும்போது எனது மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. நமது தமிழ்ப்படங்கள் கலைப்படைப்பாக உலகதரத்துக்கு வராததற்கும் நாடகங்களில் இருந்து வந்த மிகைநடிக்கும் நடிகள்களாதான் காரணம் என நினைத்திருந்தேன். அது தவறு என புரிந்துகொண்டேன். மாறாக அரசியல் சித்தாந்தத்தை மக்களிடம் புகுத்தவிரும்பி மணிக்கணக்காக வசனங்களை பேசவைத்த வசனகர்த்தாக்கள்தான் உண்மையில் கமராவை சோம்பலடைய வைத்துவிட்டார்களோ என நினைக்கிறேன். அண்ணாதுரை, கருணாநிதி போன்ற திராவிட கழகத்தினர் அரசியல் வளர்க்கவிரும்பி கலை வடிவத்தை விகாரமாக்கிவிட்டார்களோ என்று சிந்தித்தேன்.

uthayam@optusnet.com.au


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner