இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி  2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சினிமா!
'காதல் கடிதம்' திரைப்படம் விரைவில்..!

- வசீகரன். -

'காதல் கடிதம்' திரைப்படம் 11-01-2008 வெளிவர இருக்கின்றது. Kadhal kaditham movie coming soon (In Europe and other countries)
யேசு பாலன் பிறந்தநாளில் இனிப்பான செய்தியும் நத்தார் வாழ்த்துக்களும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காதல் கடிதம் திரைப்படம் 11  -01-2008 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ குமரன், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் முதலில்  வெளிவர இருக்கின்றது. இதே நேரம் தமிழகத்திலும், நோர்வேயிலும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகின்றது. ஒரு தாய் தந்தைக்கு பிள்ளையை பெற்று வளர்த்து, பெரிய மனிதனாக ஆக்குவது சுலபம். ஆனால் ஒரு படைப்பாளிக்கோஇ கலைஞனுக்கோ நெருப்பாற்றைக் கடந்து, சுனாமியில் தப்பி, வெயிலுக்கு ஆலமர நிழலில் இளைப்பாறுவது போன்ற அனுபவம் கிடைக்கும். ஒரு இறுவட்டோடு ஆரம்பிக்கப் பட்ட கலைப் பயணத்தால் ஒரு திரைப்படம் உருவானது.

இதயம் நிறைந்த கனவும், கடின உழைப்பும் வீண் போவதில்லை என்பதற்கு இந்த திரைப்படம் ஒன்றே எங்களுக்கு உதாரணம் போல்
அமையும். எனதும், வி.எஸ்.உதயா அண்ணாவினுடைய கனவு நிறைவாக தார்மீகமான பொறுப்யை ஏற்று தயாரிப்புப் பணியை திறம்பட செய்த தில்லைநாதன் தில்லைவண்ணன் அவர்களை இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கோருகின்றோம். இச் செய்தியை உங்கள் இதயங்களில் வாங்கி நீங்கள் வாழும் நாடுகளிலும் திரையில் வெளியீடு செய்ய உதவி செய்ய வாருங்கள்.

உங்கள் நாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து இத்திரைப் படத்தை இணையத்தில் பத்தோடு பதினொன்றாக தரவிறக்கம் செய்து பார்க்காதீர்கள். திரைக்கு சென்று பார்த்தால் தான் அதன் முழுமை கிடைக்கும். வவுனியா புகையிரத நிலையத்தை யாருக்குத்தான் திரையில் பார்க்க ஆசையிருக்காது. யாழ்தேவி தொடரூந்தினை திரையில் பார்க்க யாருக்குத்தான் ஆசையிருக்காது. இப்படி பலவிடயங்கள் உங்கள் விழிகளுக்கா விருந்து வைக்க காத்திருக்கின்றன.

காதல் கடிதம் திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறிபாலாஜி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு இணையாக உங்கள்
இதயத்தை வருடும் கதாபாத்திரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிசா ஈழத்துப் பெண்ணாக அறிமுகமாகிறார். உங்களுக்கு ஏற்கனவே நன்கு
அறிமுகமான நடிகர்கள். நிழல்கள் ரவி, சிறிரஞ்சனி, காதல் திரைப்படப் புகழ் சுகுமார், விஐய் கணேஸ், பிரவீன், இவர்களோடு இலங்கைக்
கலைஞர்களில் பொப்பிசைப் பாடகர் ஏ.ஈ.மனோகரன். எங்கள் மூத்த கலைஞர் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிப்பாளர்
திரு.நடராஐசிவம் அவர்கள் கதாநாயகியின் தந்தையாக வாழ, கதாநாயகியின் தாயாக தோன்றுகிறார் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான குணச்சித்திர நடிகை ஒருவர்.

தொழிநுட்பக் கலைஞர்கள்:
தயாரிப்பு : T.தில்லைவண்ணன் Water Falls Movie Makers.
மூலக்கதை: வினோலியா
திரைக்கதை, வசனம், இயக்கம்: முகேஷ்
ஒளிப்பதிவு: B.R. ராஐன்
இசை: வி.எஸ்.உதயா
பாடல்கள்: வசீகரன் (நோர்வே)
கலை: கலைராஜ்
நடனம் : காதல் படப் புகழ் கந்தாஸ்,
படத்தொகுப்பு : வாசு சலிம்
நிழற்ப்படம ; : சிற்றரசு

இப்போதைக்கு இந்த இணையத்தளத்தை பார்வையிடுங்கள் திரைக்கு வாருங்கள் பிறகு பேசலாம்.  http://www.wmmfilm.com

அன்புடன்
வசீகரன்.
kaathalkaditham@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner