| 
 
லண்டன் நூல் கண்காட்சி - 2009: சில குறிப்புகள்!- மீனாள் நித்தியானந்தன் (லண்டன்) -
 
 லண்டன் 
நூல் கண்காட்சியில் (20–22 ஏப்ரல் 2009) கலந்து கொள்வதற்காக ஏர்ல்ஸ் கோர்ட் 
சுரங்கரயிலில் இருந்து வெளியே வந்தபோது கண்காட்சி நடைபெறும் பிரமாண்டமான 
மண்டபத்தின் முன் அலைஅலையாய் குவிந்திருந்த பார்வையாளர் கூட்டத்தைப் பார்த்து 
ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். கண்காட்சியின் மையப் பொருளாக இந்தியா 
அமைந்ததை ஒட்டி, மண்டப முகப்பில் இந்திய தேசியக் கொடி அந்தக் காலை வெய்யிலில் 
பட்டொளி வீசிப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் எழுத்து வடிவம் கொண்ட 
மொழிகளாக 32 மொழிகள் உள்ளன. பல நூற்றுக்கணக்கான பேச்சு மொழிகள்கொண்ட இந்தியா 
வேறுபட்ட கலாச்சார, பண்பாட்டு அம்சங்களைக் கொண்டது. ஒவ்வோராண்டும் இந்தியாவில் 
ஆங்கில மொழியில் மாத்திரம் கிட்டத்தட்ட 15.000 நூல்கள்
வெளியாகின்றன.
ஆங்கில் மொழியில் நூல்கள் வெளியிடும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கின்றது. 
 
இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், விமர்சகர்கள், ஆய்வு 
அறிஞர்கள் என்று 50 பேருக்கு மேற்பட்டோர் 
இந்த நூல் கண்காட்சியில் கலந்துகொண்டு இந்திய இலக்கியம் பற்றி உரையாடியமை முக்கிய 
அம்சமாகும். 
 
 
ஆங்;கிலத்தில் மட்டுமன்றி இந்திய மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களும் 
இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருந்தனர். அமர்த்யா சென், 
விக்ரம் சேத், அமித் சவுத்திரி, கிரிஷ் கர்னாட், டி.ஆர்.அனர்ந்தமூர்த்தி, 
கே.சச்சிதானந்தன், ராமச்சந்திர குஹா, சௌம்யா பட்டாச்சாரியா, 
டருன் ஜே.தேஜ்பால், வர்ஷா அடால்ஜா, சல்மா என்று பலதரப்பட்ட எழுத்தாளர்களை 
இக்கண்காட்சியில் ஒருசேரக் காண முடிந்தது.
 
  
 கண்காட்சியின் முதல்நாள் நிகழ்வில் இந்தியாவின் அறிவுலக மேதை அமர்த்யா சென், 
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் 
டேவிட் மிலிபான்ட் கலந்துகொண்ட பேட்டியானது பெருந்தொகை ஆர்வலர்களை ஈர்த்த நிகழ்வாக 
அமைந்தது. பொருளாதரத்திற்காக 
நொபல் பரிசு பெற்ற மேதை அமர்த்தியா சென்னின் பேச்சைக் கேட்க வேண்டுமென்ற ஆசை 
எனக்குள் நீண்ட காலமாக இருந்தது. 
அமர்ததியா சென் எழுதிய “The Argumentative Indian” என்ற நூலை மு.நித்தியானந்தன் 5 
வாரங்களாக தொலைக்காட்சியில் தொடர்ந்து 
அறிமுகஞ் செய்த நிகழ்;ச்சியை நான் ஆவலோடு கேட்டு வந்திருக்கிறேன்.
 
 அமர்த்தியா சென் -. டேவிட் மிலிபான்ட் பேட்டி ஒரு மணி நேர நிகழ்ச்சியாகும். இந்தியா 
அதன் ஜனநாயகம், பொருளாதாரம், 
சகிப்புத்தன்மை, வேறுபாடுகளுக்குள்ளும் பரஸ்பர மரியாதை பேணுதல் அனைத்திலும் மகத்தான 
வெற்றி கண்ட தேசம் என்று 
குறிப்பிட்ட டேவிட் மிலிபான்ட் எதிர்காலத்தில் இந்தியா வலிமை மிகுந்த நாடாகத் 
திகழும் என்று இச் சந்திப்பில் தெரிவித்தார்.
 
 பாகிஸ்தானில் ஜனநாயகம் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது. என்பதிலிருந்து ஐ.நா. 
பாதுகாப்புச் சபையில் இந்தியா அங்கம் 
வகிப்பதுவரை டேவிட் மிலிபான்ட் அமர்த்தியா சென்னியிடம் கேள்வி எழுப்பினார்.
 
 ஐ.நா.பாதுகாப்புச்சபையில் இந்தியா நிரந்தர அங்கத்துவம் பெற்றால் இந்தியா எத்தகைய 
பங்கினை வழங்கும் என்று மிலிபான்ட் எழுப்பிய 
கேள்விக்குஇ இந்தியா அதனை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகப் பாவிக்கப் போகிறது 
என்பதிலேயே தங்கி இருக்கிறது என்று அமர்த்தியா
சென் பதிலளித்தார். ஐ.நா.சபையில் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதில் தான் அதிகம் 
அக்கறை கொண்டவன் அல்ல என்றும், 
ஆனால் இந்தியா அதில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதில் பலமான நியாயம் உண்டு என்றும் 
பதிலளித்தார். பாகிஸ்தான் ஆட்சியைப் 
பற்றி மிலிபான்ட் எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போதுஇ “பாகிஸ்தான் 
சுதந்திரம் பெற்ற 61 ஆண்டுகளில் 31
ஆண்டுகள் இராணுவ ஆட்சியில் இருந்தமை பாகிஸ்தானின் துரதிஷ்டம்” என்று அமர்த்தியா 
சென் பதில் அளித்தார். பாகிஸ்தானில் 
ஜனநாயகம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
 
 உத்தர பிரதேசத்தில் சமாஜவாதித் தலைவர் முலயாம் சிங், ஆங்கிலத்தைத் தடை செய்ய 
வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருவது 
குறித்து அமர்த்தியா சென் தனது உரையாடலில் எச்சரிக்கை விடுத்தார். ஆங்கிலம் பேசாத 
அடித்தட்டு மக்களை பிரதான 
நீரோட்டத்திலிருந்து அது மேலும் தனிமைப்படுத்தி விடும் அபாயம் உள்ளது என்று அவர் 
குறிப்பிட்டார். வங்காளத்தில் 70களி;ன் 
பிற்பகுதியில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு கம்யூனிஸ்ட்டுகள் 
முனைந்தபோது அதற்கு எதிர் மாறான விளைவுகளே 
ஏற்பட்டன என்று அவர் கூறினார். ஓர் இந்திய மொழி என்பது இந்தியாவில் பாவனையில் உள்ள 
மொழியே என்றும் ஆங்கிலம் நீண்ட 
காலமாக இந்தியாவில் புழக்கத்திலிருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
 
  
இந்திய சாகித்திய அக்கெடமித் தலைவரான யு.ஆர். அனந்தமூர்தியும, பிரபல கன்னட 
நாடகாசிரியரான கிரிஷ் கர்னாட்டும் இணைந்து 
நிகழ்த்திய கலந்துரையாடலும் மிகச் சுவையாக அமைந்தது.
 அன்று காலை அனர்ந்தமூர்த்தியோடு உரையாடிக் கொண்டிருந்தபோது மறைந்த பேராசிரியர் க. 
கைலாசபதியை அவர் நினைவுகூர்ந்தார். 
ஏற்கனவே லண்டனில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஓர் இலக்கியச் சந்திப்பில் நான் 
அனர்ந்தமூர்த்தியுடனும் அவரது 
மனைவியுடனும் பரிச்சயமாகி இருந்தேன்.
 
 அன்றைய நிகழ்வில் தனது “சம்ஸ்காரா”நாவலைப் பற்றி அனர்ந்தமூர்த்தி விபரித்தார். அந்த 
நாவல் வெளிவந்தபோதுஇ கன்னட 
இலக்கியத்தில் அது பெரும் சர்ச்சையை எழுப்பியது என்றும் தான் வாழ்ந்த கிராமத்தில் 
அந்த நாவலை வாசித்தவர்கள் அந்த நாவலில் 
வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்தக் கிராமத்தில் யார், யாரைக் குறிக்கிறது என்று 
அடையாளம் கண்டார்கள் என்றும் சற்றுத் தள்ளி 
நகர்ப்புறங்களில் அந்நாவல் பிராமண சமூகத்தின் ஒரு பிரிவினை விமர்சிப்பதாக 
கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார். இன்னும் பரந்த 
அளவில் சென்றபோதுஇ அந்நாவல் சமூக மாறுதல்களை பற்;றிப் பேசுவதாகக் கருதப்பட்டது எனத் 
தெரிவித்த அனந்தமூர்த்தி, நாவலின் 
வாசகர் வட்டம் விரிய விரிய எனது யதார்த்த நிலையிலிருந்து விலகிச் 
சென்றுகொண்டிருப்பது தெரிந்தது என்று குறிப்பிட்டார்.
 
 
  
 பிரபல கன்னட நாடகாசிரியரான கிரிஷ் கர்னாட் பேசும்போது, அனந்தமூர்த்தி கன்னடத்தில் 
எழுதிய “சம்ஸ்காரா”நாவலை 
ஏ.கே.ராமானுஜம் ஆங்கிலத்தில் தரமாக மொழிபெயர்த்ததால் தான் அந்நாவலுக்கு மிகப் பெரிய 
அங்கீகாரம் கிடைத்தது என்றார். இந்திய 
மொழியில் எழுதப்படும் உயர்ந்த இலக்கியங்கள் தரமானவர்களால் ஆங்கிலத்தில் 
மொழிபெயர்க்கப்படுவது அவசியம் என்பதை கிரிஷ் 
கர்னாட் வலியுறுத்தினார்.
 
 
  
 குஜராத்திய மொழியில் 40 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள நாவலாசிரியை வர்ஷா அடல்ஜா தனது 
படைப்புக்கள் எதுவுமே ஆங்கிலத்தில் 
வெளிவரவில்லை என்றும் இந்நூல் கண்காட்சிக்காக அவசர அவசரமாக மொழிபெயர்க்ப்பட்ட ஒரே 
ஒரு சிறுகதைதான் ஆங்கிலத்தில் 
வெளியாகியுள்ளதென்றும் ஆதங்கப்பட்டார். இந்திய சாகித்திய விருது பெற்ற அவர், தனது 
மகனின் ஆதரவில் வாழ்ந்துகொண்டுதான் 
தனது இலக்கியப் படைப்பு முயற்சிகளை தொடர்ந்து வருகின்றேன் என்று கூறினார். இப்போது 
தான் செல்போனில் பேசப் பழகிக் 
கொண்டிருக்கிறேன் என்றும் தன்னிடம் எல்லாரும் தனது ஈமெயில் முகவரியைக் 
கேட்கிறார்கள் என்றும் தனக்கு ஈமெயில் முகவரி 
கிடையாது என்று சுவாரஸ்யமாகப் பேசிய அவரது பேச்சு அனைவரையும் ஈர்த்தது.
 
 வர்ஷா அடல்ஜாவின் ஆங்கிலத்தில் வெளியானஇ 
“May Parvathi watch over you” என்ற 
சிறுகதை 
“The Little Magazine” என்ற 
இலக்கிய சஞ்சிகையில் வெளியாகியிருப்பதை வர்ஷா என்னிடம் தெரிவித்தார். அன்;று இரவே 
வர்ஷாவின் அந்தச் சிறுகதையை 
வாசித்தேன். வர்ஷா அழகாகக் கதை எழுதும் ஆற்றல் கொண்டவர் என்பதை அச்சிறுகதை 
நிரூபிக்கிறது.
 
 கணப் பொழுதிலேயே நேசத்துடன் உங்களை ஈர்;த்துக்கொள்ளும் வசீகரம் கொண்டவர் வர்ஷா.
 
 
  இந்தக் கண்காட்சியில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, 
மணிப்பூர், அசாம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 
Mamang Dai, Kynpham sing, Nongkynrih, Y.D. Thongchi 
ஆகிய 
எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களைப் பற்றி பேசிய 
பொழுது ஆச்சரியமாக இருந்தது. அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கவிஞரான 
மமாங்தாய் தனது தாய்மொழிக்கு வரிவடிவம் 
இல்லை என்றும் தனது கவிதைகளை ஆங்கிலத்திலேயே எழுதி வருவதாகவும் தெரிவித்தார். 
இந்தியாவின் உயர் நிர்வாகப் பதவி வகித்த 
மமாங்தாய் தனது பதவியை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராகத் திகழ்கின்றார். 
 
  மேகாலயாவைச் சேர்ந்த கின்பாம் சிங் பேசும்போது ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த தான் 
உண்மைகளை எழுதுவதில் பெரும் 
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேர்கிறது என்ற தெரிவித்தார். அவர் தனது தாய்மொழியான 
காசி மொழியில் 12 நூல்களையும்இ 
ஆங்கிலத்தில் 7 நூல்களையும் வெளியிட்டிருக்கிறார். தனது தாய்க்குத் தெரியாது என்றும் தனது மனைவிக்கு கதை எழுதுவது அறவே பிடிக்காது 
என்றும் சுவாரஸ்யமாக உரையாடினார். இவர் 
எழுதிய “மௌன உதடுகளும்; துடிக்கும் இதயமும்” என்ற அசாமிய மொழியில் எழுதப்பட்ட நாவல் 
இந்திய சாகித்திய அக்கடமி 
விருதினையும் பெற்று திரைப்படமாகவும் வெற்றி பெற்றது.
 
 
  
 இந்தியாவின் தலைசிறந்த அறிஞரான ராமச்சந்திர குஹா ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு 
உரையாற்றியபோது, தான் அண்மையில் எழுதி 
வெளியாகியுள்ளINDIA AFTER GANDHI என்ற நூலைப் பற்றி விபரித்தார். இந்தியா 
சுதந்திரம் பெற்ற பின் சரித்திரம் நின்று போய்விட்டது 
என்றும் அரசியலும் மானிடவியலும் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன என்றும் 
குறிப்பிட்டார்.
 
 
  ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’என்ற நாவலின் மூலம் பிரசித்திபெற்ற சல்மா தமிழ்நாட்டின் 
பிரதிநிதியாக இக் கண்காட்சி அமர்வில் 
கலந்து கொண்டமை எனக்குப் பெருமையாக இருந்தது. ஆனால் தான் அமர்ந்து கொண்ட அமர்வில் 
அவர் எந்தத் தாக்கத்தையும் 
ஏற்படுத்தாத ஒருவராக அமர்ந்துவிட்டுச் சென்றதும் பெரும் ஏமாற்றமாக இருந்தது. 
 “சினிமா இலக்கியம்”என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு அமர்வில் இந்தியச் சினிமாவின் 
பன்முகத்தன்மை சிறப்பாக 
வெளிப்படுத்தப்பட்டது. தலைசிறந்த உருது, ஹிந்தி எழுத்தாளரான ஜாவித் அக்தார் 
நெறிப்படுத்திய இந்த அமர்வில் சுமத் 
மக்கோபாத்யாய் , ப்ரஸ_ன் ஜோஷி, கிரிஷ் கர்னார்ட் ஆகியோர் சிறந்த கருத்துக்களை 
வழங்கினர். வங்க இலக்கியத்திலிருந்தே தான் 
திரைப்படத்திற்குள் நுழைந்ததாகக் குறிப்பிடும் வங்கத் திரைப்பட இயக்குநர் சுமன் 
சிறந்த வங்க இலக்கியங்கள் சிறந்த 
திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன என்றார். தாகூரின் நாவல் ஒன்றையும் 
சுமன் வெற்றிகரமாக திரைப்படமாக்கி
 இருக்கிறார்.
 
 காளிதாசனுக்குப் பின் இந்தியாவில் நாடகாசிரியன் தோன்றவில்லை என்றும் வங்க மொழியில் 
தாகூரின் நாடக ஆக்கங்கள்தான் சிறந்தன 
அல்ல என்றாலும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய முயற்சிகள் என்று கிரிஷ்கர்னாட் 
தெரிவித்தார்.
 
 ரஷ்ய இளந்தலைமுறை எழுத்தாளர்கள்
 
 
  
புதிய ரஷ்ய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் மாபெரும் ரஷ்ய நாவல்கள் மீண்டும் 
தோன்றுமா? என்ற கேள்வியுடன் இடம்பெற்ற அமர்வு 
மிகவும் சுவையாக இருந்தது.
 திமித்ரி பைக்கோவ்இ மிக்கையில் ஷிஷ்கின்இ லெவ் தனில்கின் ஆகியோர் மகோன்னத ரஷ்ய 
நாவல்கள் ஏன் இன்று எழவில்லை என்பது 
பற்றிக் கருத்துரைத்தனர். ஒல்கா ஸ்லாவ்னிக்கோபா என்ற பிரபலப் பெண் நாவல் ஆசிரியை 
2017 என்ற ரஷ்ய நாவலை எங்களுக்குக் 
கையெழுத்திட்டுத் தந்தார்.
 
 திமித்ரி பைக்கோவ் ஆற்றிய உரையில் ஒரு ரஷ்ய மனிதனின் இயல்பை அவதானிக்க முடிந்தது.
 
 இந்தியாவின் மிக முக்கிய எழுத்தாளர்களையும் ஏனைய மொழியின் சிறந்த எழுத்தாளர்களையும் 
இந்த மூன்று நாட்களில் பல்வேறு 
இலக்கிய அமர்வுகளில் காண்பது மகிழ்ச்சியாக இருந்தது.
 
 பிரிட்டனின் பிரபல்ய பதிப்பாளர்களும், ஐரோப்பிய, ரஷ்ய, சவூதி அரேபிய பதிப்பகங்களும் 
தத்தமது வெளியீடுகளை காட்சிப்படுத்திய 
விதம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. திக்குத் தெரியாத காட்டுக்குள் விடப்பட்டதுபோல் 
சில சமயங்களில் உணர்ந்தேன். சில நேரங்களில் 
ஒரேசமயத்தில் பல அமர்வுகள் இடம்பெற்றதால் சில அமர்வுகளைத் தவிர்க்க வேண்டிய 
நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மூன்று நாட்களுமே 
வித்தியாசமான புத்தக உலகத்தில் வாழ்ந்து மீண்டதுபோன்ற உணர்வே ஏற்பட்டது.
 
 ஓவியர், நடிகர் கே.கே.ராஜா இந்த நூல் கண்காட்சியில் நாங்கள் கலந்துகொண்ட சகல 
அமர்வுகளையும் தனது கமராவுக்குள் நுட்பமாகப் 
பதிவு செய்தார். கவிஞர் மு.புஷ்பராஜன் மூன்று நாட்களும் நேரத்துடனேயே மண்டப 
வாயிலில் காத்து நின்று சாத்தியமான அனைத்து 
அமர்வுகளிலும் கலந்து கொண்டார். என் கணவர் மு.நித்தியானந்தன் நாங்கள் கலந்த கொள்ள 
வேண்டிய நிகழ்வுகளைத் தேர்வு 
செய்வதிலிருந்து மூன்று நாட்களும் எனக்கு உற்சாகமான துணையாக இருந்தார் என்பதனையும் 
நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
 
 படங்கள: கே. கே. ராஜா
 
 KKRAJAH2001@aol.com
 |