இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2009 இதழ் 110  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
சமூகம்
India: The Welfare Foundation Of The Blind!
ஆதரவும், உதவியும் நல்குவீர்
 - வெங்கடேஷ் பாபு -

அன்புடையீர், வணக்கம்.பார்வையற்றவர்களுக்கான ப்ரெயில் எழுத்துக்களைக் கண்டுபிடித்த லூயி ப்ரெயிலைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.குறிப்பாக, படித்த பார்வையற்றவர்களுக்கு லூயி ப்ரெயில் குறித்த விழிப்புணர்வும், நன்றியுணர்வும் மிகவும் உண்டு. காரணம்,ப்ரெயில் எழுதுமுறை என்ற ஒன்றை உருவாக்கி வெறும் ஆறே புள்ளிகளில் (அவற்றின் வெவ்வேறு இணவுகளில்) உலகிலுள்ள அத்தனை மொழிகளையும் பார்வையற்றோர் கற்கக் கூடிய வழியமைத்துத் தந்தவர் அவர்! பார்வையற்றோருக்குக் கல்விக் கண்ணைத் திறந்து விட்டவர்.பார்வையற்றோரும் கல்வி கற்று வேலை பார்க்கவும், சுயமாக இயங்கவும் வழியமைத்துக் கொடுத்தவர் லூயி ப்ரெயில்.

லூயி ப்ரெயிலின் 200ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமாக ஜனவரி 2008 முதல் ஜனவரி 2009 முடிய உலகெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகின்றன. லூயி ப்ரெயிலின் அரிய பணியைப் போற்றிப் பாராட்டும் விதமாக அவருடைய 200ஆவது பிறந்த நாளை மகத்தான வழியில் கொண்டாடுமாறு ஐ. நா சபை உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. அவருடைய சீரிய பணியை நாட்டு மக்களுக்கு அறியச் செய்யும் விதமாய் லூயி ப்ரெயில் உருவம் பதித்த தபால் தலையை வெளியிட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள நான்கு பார்வையற்றோர் நன்நல அமைப்புகள் -
The Indian Association for the Blind, The Tamil Nadu Association of the Blind, Visually Impaired Women’s Association and, The Welfare Foundation of the Blind, நான்குமே தில்லியிலுள்ள ALL INDIA CONFEDERATION OF THE BLIND என்ற அகில இந்திய அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பவை, மற்றும் வேறு இரண்டு அகில இந்திய அமைப்புகளான National Association for the Blind, National Federation of the Blind ஆகியவற்றின் தமிழ்நாட்டுக் கிளைகளும் இணைந்து லூயி ப்ரெயில் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒருங்கிணைப்புக் குழு லூயி ப்ரெயில் நினைவைப் போற்றும் விதமாகவும், பார்வையற்றோர் வாழ்வில் ப்ரெயில் எழுத்துக்களுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் பற்றியும், பார்வையற்றோரின் பிரச்னைகள், திறனாற்றல்கள் ஆகியவை குறித்தும் மக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வை
ஏற்படுத்தும் நோக்கத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த ஓராண்டு காலமாக நடத்திக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பார்வையற்றோர் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ப்ரெயில் எழுதும், வாசிக்கும் திறன் சார் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பார்வையற்ற கல்லூரி
மானாக்கர்களுக்காக ப்ரெயிலின் முக்கியத்துவம் குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

ப்ரெயில் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ALL INDIA CONFEDERATION OF THE BLIND இந்த நூலை வெளியிடுகிறது. இதில் லூயி ப்ரெயிலின் வாழ்க்கை வரலாறு, மற்றும் ப்ரெயில் எழுத்துமுறை பற்றிய, இந்த ஆண்டு தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்த அளவில் நடந்தேறிய மொழிபெயர்ப்புப் பயிலரங்கில் பார்வையற்ற மாணாக்கர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மொழிபெயர்த்த கட்டுரைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

பார்வையற்றோர் நலனில் அக்கறை கொண்டு, அந்த இலக்கை நோக்கிய எங்கள் பயணத்தில் எங்களுக்கு ஆதரவும், உதவியும் நல்கி உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று எல்லோரையும் அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

வெங்கடேஷ் பாபு ( Venkatesh Babu)
செயலாளர் ( Secretary )
The Welfare Foundation of the Blind


தகவல்: ramakrishnanlatha@yahoo.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner