இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
என்ன தவம் செய்தனை

- பாரதிதேவராஜ் எம். ஏ (கோவை) -

என்ன தவம் செய்தனைபொழுதுகிளம்ப வெகுநேரம் இருக்கும் போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவனுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை.  கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார். துண்டை எடுத்து மேலுக்குப் போட்டுக்கொண்டார்.எரவாரத்தில் சொருகியிருந்த கைத்தடியை உருவிக்கொண்டார். திண்ணையில் கிழவி அசந்துத் தூங்கிக்கொண்டிருந்தாள்

அவளுக்கு சமாச்சாரம் தொpயாது. தொpந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைப் பாள.; எதுக்கும் தான் போய் பார்ப்போம் என்று புறப்பட்டுவிட்டார். வெளியே சொல்ல முடியாவிட்டாலும் மனசு பு+ராவும் மகனைப் பற்றிய சோகமே நிறைந்து அழத்துடித்தது.

இந்த பாழாப்போனவனுக்கு பத்துமணிக்கு என்ன டீ குடிக்கக்கேக்குத. அதுவும் ராத்திhp. போகாம இருந்திருந்தா அந்தசேதி காதுலேயே விழுந்து தொலைச்சிருக்காது. இப்ப இந்த அவிதியுமிருக்hது.

வேலியைத்தாண்டி படலை சாத்திவிட்டு தெருவில் இறங்கினார். என்ன சமாதானம் செய்தாலும் மனசு சுத்தி சுத்தி அந்த சேதியிலேயே வந்துநின்றது. பொன்னுக்குட்டி அதிகமாய் எங்கும் வெளியே வரமாட்டார். வர இஷ்டமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் ஆறுவருஷத்திற்கு முன்பு தன் ஆசைமகன் எவளோ கீழ்சாதிப் பெண்ணோடு ஓடிப்போனான் என்பதை கருத்தில் வைத்து,

“என்னப்பிச்சி சத்தியனப் பத்தி சேதி உண்டா.”

“அப்பிச்சி சூலூர் சந்தைக்குப்போனனா. அங்க உன்ற மகனையும் மருமகனையும் பாத்துபேசினே. சத்தியனெங்கியோ பண்ணைக்கு போறானாம். கஷ்ட ஜீவனந்தா. சோளம் வாங்கீட்டிருந்தாங்க. ஏண்டா தம்பி சோளக்கஞ்சிவச்சா குடும்பம் நடத்துறே. உனக்கேண்டா தலைவிதின்னேன். ‘வேறே வழி’ங்றான் நாந்தா போடா போக்கத்த பயலே அவளே எங்கயாச்சு ஓட்டியுட்டுட்டு ஊர் வந்துசேருன்னுட்டு வந்தேன்.

இதுமாதிரி ஏதாவது ஊர்சனங்க சொல்றத காது கொடுத்துக்கேக்க முடிய வில்லை இதனால் வெளியே வருவதையே விட்டொழித்துவிட்டார்.

2

பொன்னுகுட்டியின் மனைவி கிட்னம்மா கூட, “இப்படி திண்ணையிலேயே பொழுதன்னிக்கும் தடியப்புடிச்சுட்டே குக்கிட்டிருந்தா எப்பிடி. கோவில்மேட்லே சித்த உக்காரு. பக்கதாலே ரொட்டிக் கடைக்கு போயி ஒரு பன்னத் தின்னுட்டு டீ யக்குடிச்சிட்டுவா. இல்ல மொள்ள அப்படியே ரெங்கசாமி கோவிலுக்குப் போ. அய்யிரு நல்லதா ஏதாச்சும் சொல்வாரு. இப்படி கெடையிலேயே கெடக்காதே.பயித்தியந்தா புடிச்சுக்கும். அரும மகந்தா புலோக ரம்பையக் கூட்டீட்டு ஓடிப்போயிட்டான் அதே நெனப்பு இனியும் எதுக்கு எந்திரிச்சு போ சாமி.” என்பாள். எல்லாம் பழகிக் கொண்டாச்சு.

வாரியார்சாமி ராமர்கத சொல்றார்னு வயித்துப்புள்ளத்தாச்சியா இருந்த கிட்னம்மாவக் கூட்டிட்டு பத்துமைல் வண்டிகட்டிட்டு தினமும் கேக்கப்போனார்பொன்னுகுட்டி. ராமர்பிறந்த கதைய சொன்ன அண்ணிக்கிதான் கிட்னம்மாவுக்கு வலி வந்துச்சு. நல்ல வேளை பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்தங்காட்டிக்கு உடனே சேத்து இவம் பொறந்தான் சத்தியவந்தன் ராமர் மாதிhp இருக்கணும்னு பொன்னுகுட்டி அவனுக்கு சத்தியன்னு பேர்வச்சார்.

ராமர் காட்டுக்குப் போயி தசரதர் புத்திர சோகத்திலே படுறபாட்டை வாரியார் சாமி சொல்லச் சொல்ல பொன்னுகுட்டிக்கு கண்லே தாரதாரையா நீர் வடிஞசது.அன்னிக்கு வு+ட்டுக்குவந்துங்கூட விடிய விடிய அழுதார்.அப்படி ஒரு சோகம். வரக்கூடாதுன்னு வேண்டாத சாமியே கெடையாது.

ஆனா அவரோட வாழ்க்கையிலேயே வந்துடுச்சே! ஆசை ஆசையா வளத்து அருமையா இங்கிலிஸ் பள்ளிக்கூடத்துக் கெல்லாம் அனுப்பிபடிக்கவச்சார். அhpசிச்சோத்தத் தவிர வேறே எதையும் கண்ணுலகூட பாத்ததில்லே. அப்பேர்பட்ட மகன் சோளக்கஞ்சி குடிக்கிறான்னா மனசு என்ன பாடுபடும்.

ஊருக்குள் புகுந்து ரொட்டிக் கடையைத் தாண்டும் போது அந்த பழைய பேப்பர் செய்தியை யாரோ உரக்கப் படித்துக்கொண்டிருந்தார்.

3

“பீலிஊரைச் சார்ந்த சத்யன் என்பவர் வயது30 இவர் அதே ஊரைச்சேர்ந்த பட்டியம்மாள் வயது24 என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற் போது பாப்பம்பட்டியில் இருவரும் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். கடன் தொல்லை தாங்காது சத்யன் விஷம் குடித்து இறந்து போனார். விஷயமறிந்த காவல் துறையினர்….”

பொன்னுகுட்டியால் அந்தசேதியை ஜீரணிக்க இயலவில்லை. மவன் செத்துப் போயிட்டானா. துக்கம் தொண்டையை அடைக்க அழுகை பீறிக்கொண்டு
வந்தது. யாராவது பார்த்துவிட்போகிறார்கள் என்று துண்டால் வாயை பொத்திக் கொண்டார்.மனசு விட்டு வாய்நிறைய சத்தம் போட்டு அழவேண்டும் போலிருந்தது. அழுதால்தான் மனசு ஆறும் போல இருந்தது. ஊருக்குவெளியே குட்டையை நெருங்கிக்கொண்டிருந்தார்.சுமை தாங்கிக் கல்லருகே போய் உட்கார்ந்து கொண்டார். இருளைகிழித்துக் கொண்டு காந்திபுரம் போகும் பஸ்வந்து நின்றது.

சட்டென்று தாவி படிக்கட்டில் கால் வைத்ததும் பஸ்கிளம்பியது கம்பியை இரு கையால் சாpயாகப் பிடிக்காததால் ஆடி விழப்போனார்.

“ ஏம் பொpசு நீ சாகரதுக்கு எம் பஸ் தானாகெடச்சது.”

“ அ ஆம் போ.” கண்டக்டாpன் கையைப்பிடித்து ஒர சீட்டில் அமர்ந்தார். பஸ்ஸில் நாலைந்து போ;தான் உட்கார்ந்திருந்தனர் கண்டக்டர் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்தவர். திரும்பிப்பார்த்தார்.

“ அட என்னங் மாமா மணி ஆறுகூட ஆகலே இந்நேரத்துக்கெங்க கிளம்பீட்டே.”

“ அடடே சுப்ராயனா.”

“ மாமா கேள்விப்பட்டது நெசந்தானா?”

“ எதை கேக்கறே”

“ நம்ப நஞசப்பந்தா பேப்பர்லே என்னவோ போட்டிருக்குன்னு சாயந்தரம் உளர்னா,”

“ யாருக்கு தொpயும்.”

“ போன வாரம்தான் சந்தையிலே பாத்தானாம்.”

“ ஆமாமா எங்குட்டையும்தா சொன்னா.”

4

“எப்படி இப்படி”

“ அவம் விதி. அஞசங்கணம் ஊடு. ஆறேக்கறா தோட்டம் மாடுகண்ணு ஊரு சொந்த சனங்க இத்தனை பேரு இருக்கறப்ப எங்கயோ போய் தொலைஞ்சிருக்கானே பாவிமகன்..”

அவரையும் மீறி அழுகை பீறிட்டது. “அழுகாதீங்க மாமா.மனசைத்தேத்திகங்க. நானுமுங்க கூடத்தான் வர்றேன்.” “எதுக்கு” என்பதுபோல பார்த்தார்பொன்னுகுட்டி..

“நீங்க அக்காகிட்டகூட சொல்லாம வந்திட்டிங்களாமா.இந்த நாரவாயன் நஞ்சப்பன் தா ராத்திhp அக்காகிட்டயும் சொல்லிப்போட்டானாம்.. உங்களுக்கு தெரியக் கூடாதுன்னு ஒண்ணும் சொல்லையாம். .ராத்திரி புராவும் நீங்க படறபாட்டை பாத்துட்டுதா இருந்துச்சாம். சொல்லாம கொள்ளம புறப்பட்டதை பார்த்ததுமே அக்காவுக்கு புரிஞ்சு போச்சாம். நீங்க மகன பாக்க பாப்பம்பட்டி பொறப்பட்டீங்கன்னு விசுக்குன்னு எங்கூட்டுக்கு ஓடி வந்து சீக்கிரமா போய் பஸ்ஸப்புடிக்கச் சொன்னா. நா குறுக்குத்தடத்தில ஓடிவந்து பஸ்ஸப் புடிச்சு வர்றேன். அதுக்குள்ள குட்டைப் பக்கம் வநற்துட்டீங்களே. நான்தான பஸ்ஸை நிறுத்தச்சொன்னேன்.”

“சேதி அப்படியா கிட்னம்மாளுக்கும் விசயம் தொpஞ்சு போச்சா சரியான கைகாரி.”

கண்டக்டர் காந்திபுரத்துக்கு டிக்கெட்டை கொடுத்தார். ஆப்பாரசட்டை பையில் துழாவி பத்து ருபாய் நோட்டைத் தந்தாh;

“நீ டிக்கெட் வாங்கிட்டயா.”

“ நா அங்கயே வாங்கிட்ட மாமா.”

பஸ்ஸின் ஆட்டத்தில் அவா;களுடைய பேச்சு அடிபட்டுப்போய் மௌனம் நிலவியது.

“ஏண்டா சுப்ராயா?”

“ஏனுங்க மாமா?”

“அங்க பாப்பம்பட்டியில அவனூடு எவடதாலக்காம்?”

“ அதென்னமாமா பொpய பட்னமா. பட்டிக்காடுதானே மிஞ்சிப்போனா நாலுசந்திருக்கும். அதுவுமில்லாம போலிஸ் கேஸ்வேறே ஊரே தேர் கூட்டமா கசமுசன்னு பேசிட்டு நிப்பாங்க. கண்டுபிடிக்கறதொண்ணும் கஷ்டமில்லே மாமா.”

5

“என்னவோ போப்பா அறுபதுவயசிலே நா இப்படி இருக்கோணும். அவங்காரி யத்ததை நாம் பாக்கோணும்னு இருக்கு.”

“என்னங் மாமா சொல்றீங்க?”

“இன்னுமென்னத்தச் சொல்றது. யாரென்ன சொன்னாலும் செரி. ஊரே எதுத்தா லும் செரி. என்றமகனே எந்தோட்டத்திலே தான் அடக்கம் பண்ணனும்னு
தீர்மானம் பண்ணிப் போட்டம் போ.”

“அதெப்படிங்க மாமா முடியும் ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குதுல்லோ. குலத்துக்குப் பொpயவங்க நீங்க. நீங்களே இப்படி…”

“கொலமாவது கோத்தரமாவது அதையிதையிஞ் சொல்லித்தாண்டா அவன ஊரவுட்டே ஓட்னீங்க உப்ப உசிருக்கே ஒலையும் வெச்சுப்போட்டிங்க.சுப்ராயா சனங்க நடக்கற மாதிரி இந்த கொங்குமண்ணிலே நடந்ததே இல்லே. ராசாக் காலத்திலேகூட இந்த கொங்குமண்ணுலே சாதி பிரச்சனை கெடையாது. அதததுக்கு பட்டயமே போட்டுப் போட்டான். வு+ட்டுக்கு வௌ;ளையடிக்கறது, செத்தா ரெண்டுசங்கு வைக்கறது செருப்புப் போட்டுட்டு ஊருக்குள்ளே வாரதுன்னு இதுக்கெல்லாம்கூட அனுமதி தந்து சாதிப்பிரச்சனை யே வராம இருந்தமண்ணு இந்த மண்ணு. அதுமட்டும் புள்ளப்பெத்தா கொழந்தைய வளக்கறது,குளிப்பாட்டறது,ஏன் புள்ளை அழுதாமுலைப்பால் கொடுக்கறதுகூட அந்தமாதிரி புள்ளைகதான். என்னவோ இப்பத்தான் கீழ்சாதி கீழ்சாதின்னு நெம்பத்தான் ஆடறானுக.

“என்கென்னவோ சத்தியன் செத்துட்டான்னே மனசு ஒப்பமாட்டீங்குது மாமா.”

“பேப்பர்லே போட்டிருக்கானேடா சுப்ராயா.”

“பேப்பர்லே போடறதெல்லாம் நெசமாயிடுமா?”

பஸ் காந்திபுரத்தை நெருங்கியது. மத்தியபஸ் நிலையம் மணி எட்டைக் காட்டி கலகலத்துக்கொண்டிருந்தது.

“மாமா கடையிலே ஏதாவது சாப்புட்டுபோட்டு போலாங்களா? அங்க பாப்பம் பட்டிலே சாப்பிடறதெல்லாம் தோதுபடாது. அதுவுமில்லாம இனி எந்நேரமாகுதோ?”

“எனக்கொண்ணும் வேண்டாம். நீ வேண்ணா சாப்புடு.”

“எனக்கும் ஒண்ணும் வேண்டாம். நீங்க பசிதாங்கமாட்டீங்க. பரவால்லே ரெண்டு பேரும் சாப்புட்டுபோட்டே போலாம் வாங்க.”


6

இருவரும் எதிரே இருந்த காப்பிக்கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள். பாப்பம்பட்டி போகிற பஸ் தயாராய் நிக்கவும் அதில் ஏறப் போனார்கள். பஸ் புறப்பட இன்னும் நேரமிருந்தது. பஸ்ஸில கூட்டம்; நிறைய இருந்தது. இளவட்ட பையன்கள் நாலைந்து பேர் பஸ்ஸூக்கு வெளியே நின்று கொண்டு வருகிற போகிறவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். பொன்னுகுட்டியும்,சுப்ராயனும்பஸ்ஸில் ஏற முயன்றார்கள். கூடீ நின்ற கும்ப லில் ஒருவன்,

“பொpசு எதுவரைக்கும்?”

“பாப்பம்பட்டிக்குதாங் கண்ணு.”

“ஆரூட்டுக்கு?”

“ ஆரூட்டுக்குமில்லே. நேத்துசாயந்திரம் பேப்பர்லே போட்டிருந்துச்சே சத்தியன்னு விசங்குடுச்சு….”

“ அடடே பாடிய ராத்திரியே பெரியாஸ்பத்திhpக்கு கொண்டுபோயி-ட்டாங்க. அவங்க சம்சாரம்கூட ஆஸ்பத்திரிக்குத்தான் போயிருக்கு. ஊர்லே அவங்களுக்கு யாருமில் லே. அங்க போய் யாரப் பாக்கப்போறீங்க?”

“ அட அப்பிடியா. நல்லதாப் போச்சு. அப்ப பொpயாஸ்பத்திரிக்கே போயிர் லாங்க மாமா.”

“ ம் சொp பொpயாஸ்பத்திரிக்குப் போற பஸ்ஸப் பாரு.”

பெரியாஸ்பத்திhp காலைவேளை சுறுசுறுப் போடு வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. வௌ;ளை யுடுப்பில் கையில் ஸ்டெதாஸ்கோப்புடன் கும்பல் கும்பலாய் மருத்துவக்கல்லூhp மாணவமாணவிகள் அரட்டையுடன் போயிக்கொண்டிருந்தனர். ஓவ்வொரு வார்டிலும் நோயாளிகள் வாpசையில் டாக்டர் தாpசனத்திற்குக்காத்திருந்தனர் ஸடச்சர் வண்டி அவ்வப்போது கிறீச் கிறீச் என்ற சத்தத்தோடு போயிக்கொண்டிருந்தது.

பொன்னுகுட்டியும் சுப்ராயனும் எந்த பக்கம் போவது யாரை விசாhpப்பது என்பது தொpயாமல் விழித்துக் கொண்டிருந்தனர். இடதுபுறம் மேல் கோடியில் கூட்டம் அதிகமாயிருந்தது.

“மாமா அங்க பாருங்க அதுதான் சாவுரூம் அஙகதான் பொணத்த அறுப்பாங்க. வாங்க போய் பாக்கலாம். அதுவரை மறந்திருந்த துக்கம் மறுபடியும்
பீறிக்கொண்டுவர பொன்னுகுடடி தன்னையும் மறந்து,


7

“என்ற ராசா உன்னை இந்தக் கோலத்துல பாக்கவா தவமிருந்து பெத்தேன். ராமரப்போல நெனைச் சேனே. இப்படிப் பண்ணிப்போட்டியேடா பாவி.” -என்று கதறி வாய்விட்டழுதார்;.அவருடைய ஓலம் சுற்றி நின்றவர்களையும் கலங்கச் செய்துவிட்டது. கூட்டத்தில் யாரோ சுப்ராயனின் தோளைப் பற்றுவது உணர்ந்து திரும்பினார். சுப்ராயன் கண்ட காட்சியில் அதிர்ச்சியுற்று,

“ மாமோய் இங்க திரும்பிப்பாருங்க. இந்த அதிசயத்தை.”

சட்டென்று. திரும்பிய பொன்னுகுட்டி கண்டகாட்சியில் ஆடிப்போனார்.

“அட என்ற ராசா. ஊன்ன செத்துப் போயிட்டானுட்டானுகளே.”

“ இல்லப்பா நா சாகலே.”

“ அப்ப பேப்பர்லே போட்டது.”

“ அது நம்மூர் அய்யர்மகன் சத்தியநாராயணன்பா. அவனும் பாப்பம்பட்டிலே தான் குடியிருக்கான்.

“அப்ப பட்டியம்மான்னு போட்டிருந்ததே.”

“எம்பொண்டாட்டி பேரு பட்டத்தரசிப்பா.”

“ எப்படியோசாமி எங்கமாமா வேண்டுன சாமிக கையுடலங்கறதே போதுங்க சாமி இனி எவனெதுத்தாலும் சொp எந்த சாதியும் நமக்குத் தேவையுமில்லே. இனி நீங்க பீலியு+ர் மண்ணுலேதான் பொழைக்கோணும்.” என்று உணர்ச்சி பொங்க சுபடராயான் சொன்னார்.


bharathidvrjn59@gmail.com

 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்