இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2008 இதழ் 101  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
http://thamizulagamviza.blogspot.com!
தமிழ் உலக பாரதிதாசன் விழா
!

- ஆல்ப‌ர்ட் _


பாரதிதாசன்அன்பினிய தமிழ் உலக நண்பர்களே! வணக்கம். பாரதிதாசன் விழா தமிழ் உலகில் கடந்த 21ம்தேதி துவங்கி இன்று 29ம்தேதிவரை நடைபெற்றது. இவ்விணைய விழாவில் தமிழ் உலக நண்பர்களும், நம் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிலிருந்தும் விழாவுக்கான உரைகளை குறைந்த கால அவகாசத்தில் செய்து தந்தமைக்காக‌ அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

இணைய இதழ் ஆசிரியர்களான திரு.அண்ணா கண்ணன்(சிஃபி தமிழ்)பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் திரு.வ.ந.கிரிதரன், தென்றல் இணைய இதழ்ஆசிரியர் திரு.மதுரபாரதி ஆகியோருக்கு என் இனிய கைகூப்புகளும்,இதயமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவ‌ரும் ப‌ல்வேறு ப‌ணிச்சூழ‌ல்க‌ளில் ந‌ள்ளிர‌வுதாண்டிய‌ நேர‌த்தில் என்னைஅழைத்து இதோ உங்களுக்கு க‌ட்டுரை என்று ம‌ற‌வாம‌ல் தந்த‌நேய‌ம் என் க‌ண்க‌ளைப் ப‌னிக்க‌ச் செய்கிற‌து.

தமிழ் உலகில் இல்லையென்றாலும் நம் அன்பு வேண்டுகோளுக்குச் செவிமடுத்து குறுகிய காலத்தில் அவர்களுக்கு பல்வேறுசூழல் சரிவராத நிலையிலும் அன்பிற்குரிய நண்பர்களும் பேராசிரியர்களுமான முனைவர்.கோவி.இராசகோபால்(தில்லி பல்கலைக் கழகம்) பேராசிரியர்.பெஞ்சமின் லெபோ(பிரான்சு) (இவர் நம் தமிழ் உலக‌உறுப்பினராகிவிட்டார்கள்) ஆகியோருக்கு என் அடிமனத்துநன்றிகள்!

இதே போல‌ க‌விஞ‌ர்.ம‌துமிதா அவ‌ர்க‌ள் உரை த‌ர‌ ஒப்புக்கொண்டுபின்ன‌ர் க‌ணினி அவ‌ர் காலை வாரிவிட‌ எப்ப‌டியோ அடிச்சுப்பிடிச்சு மூச்சுவாங்க‌ ஓடிவ‌ந்து ஓட்ட‌ப்ப‌ந்த‌ய‌த்தில் வென்ற‌ திருப்தியோடு அவ‌ர் விழா உரை ஈந்த‌ பாங்கு என்னால் எளிதில்
ம‌ற‌க்க‌ இய‌லாது.அவ‌ர்க‌ளுக்கும் என் சிர‌ம்தாழ்த்துக்க‌ள். ந‌ன்றிக‌ள்!

விழாவில் ப‌ங்கெடுத்துகொண்ட‌ திரு.அன்பு, அய்யா.சிங்கை. திரு.கிருஷ்ண‌ன், அய்யா.இராமகி, திருவாட்டி.புதிய‌ ம‌தாவி, திரு.இண்டிராம், அன‌லை திரு.திரு., சிறீ.சிறீத‌ர‌ன், ரியாத் திரு.வெற்றிவேல், ம‌லேசியா.சுப‌.ந‌ற்குண‌ன், ஆகியோருக்கு என் க‌னிவான‌ ந‌ன்றியை ச‌ம‌ர்ப்பிக்கிறேன்.

அய்யா.இராம‌கி அவ‌ர்க‌ள் விடுதலை ஆசை பாட‌லை விழாவில் இட்டுஅதை யாரேனும் பாடித்தர‌வேண்டும் என்ற‌ வேண்டுகோளை
வைத்தார்க‌ள்.ஒருசில‌ரை தொட‌ர்பு கொண்டேன். ஒரு சில‌ர் இய‌லாமையைத் தெரிவித்தாலும்என் இனிய‌ அன்புச் ச‌கோத‌ர‌ர் அழ‌கி
விச்வ‌நாத‌ன் ம‌றுநாளே பாடி... சும்மா அற்புத‌மாக‌ க‌ணீர் குர‌லில் பாடி அச‌த்தினார். அதை வ‌லையில் ப‌திக்க‌ வேண்டும்என்று வ‌ந்த‌போது
ந‌ண்ப‌ர் இல‌ங்கை எம் ரிசான் செரீப் உத‌வினார். ஆக‌ இந்த‌ தேனினுமினிய‌ பாட‌ல் உங்க‌ள் காதுக‌ளில் ரீங்காரமிட‌ உத‌விய‌ இரு
ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும் இந்த‌ நேர‌த்தில் ந‌ன்றி சொல்வ‌தில் ம‌கிழ்கிறேன். கேளுங்க‌ள்

http://thamizulagamviza.blogspot.com/

கேட்டு ம‌கிழ்ந்து பின்னூட்ட‌மிடுங்க‌ள். அதுதான் அவ‌ர்க‌ளுக்கு நாம் கொடுக்கும்உற்சாக‌ம்,ஊக்குவிப்பு!

விடுதலை ஆசை (தனித்தமிழ் வண்ணம்)
தனதன தான தனதன தான
தனதன தான தன தானா
கருவிழி ஓடி உலகொடு பேசி
எனதிடம் மீளும் அழகோனே
கழைநிகர் காதல் உழவினில் ஆன
கதிர்மணி யே,
என் இளையோய் நீ பெரியவ னாகி
எளியவர் வாழ்வு பெருகிடு மாறு
புரியாயோ? பிறர்நலம் நாடி
ஒழுகிணை யாக இருசெவி வீழ
மகிழேனோ?
தெரிவன யாவும் உயர்தமி ழாக வருவது
கோரி உழையாயோ? செறிதமிழ் நாடு
திகழ்வது பாரீர் என
எனை நீயும் அழையாயோ?
ஒருதமி ழேநம் உயிரென யாரும்
உணவுறு மாறு புரியாயோ?
உயர்தமிழ் நாடு விடுதலை
வாழ்வு பெறஉன தாசை பெருகாதோ?


ந‌ண்.நாக‌ இளங்கோவ‌ன் ந‌ட்ச‌த்திர‌ வார‌த்தில் சிக்கி ந‌ம் விழாவில் ப‌ங்க‌ளிப்பு குறைந்து போன‌து ஒருவ‌கையில் துர‌திர்ட்ட‌ம்தான்!

இறுதியாக என் வழக்கமான பணியுடன், இவ்விழாச் சிறக்க‌ ஒருங்கிணைத்த‌ல், ஒவ்வொருநாளும் த‌மிழ் உல‌க விழா உரையை
http://thamizulagamviza.blogspot.com/
வ‌லைப்ப‌திவில் இடுத‌ல் போன்ற ப‌ணிக‌ள் என் ப‌ங்க‌ளிப்பைச் செய்ய‌ இய‌லாம‌ற் போன‌து இன்னொரு துர‌திர்ட்ட‌ம்.விழாவில் ப‌ங்கேற்க‌
எண்ணியும் இய‌லாம‌ற் போனவ‌ர்கள் அடுத்த‌ ஆண்டில்இன்னும் உற்சாக‌த்தோடு ப‌ங்கெடுக்க‌ கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோருக்குமான என் இனிய‌ ந‌ன்றிகள் மீண்டும்! ந‌ட்புட‌ன்,

ஆல்ப‌ர்ட்
albertgi@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner