பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
கலாநிதி திருமதி பாரதி ஹரிசங்கரரின் கனடா விஜயம்!
கலாநிதி
திருமதி பாரதி ஹரிசங்கர் ஆங்கிலத்தில், தமிழில் எழுதும் பிரபலமான இந்தியப் பெண்
எழுத்தாளர். இவரது நூல்கள், மொழிபெயர்ப்புகள் பல வெளிவந்துள்ளன.
Shakti : Multidisciplinary Perspectives on Women’s
Empowerment in India என்னும் ஆங்கில நூலின்
தொகுப்பாசிரியர்களிலொருவர். இவரது மொழிபெயர்ப்புக் கவிதைகள் சில பதிவுகள்
சஞ்சிகையிலும் 2003 காலகட்டத்தில் வெளிவந்துள்ளன (அவை கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளன).
தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் Reader ஆகப் பணிபுரிகின்றார். இவரது புலம்
பெயர் தமிழர்கள் பற்றிய கட்டுரையொன்று அண்மையில் The Literary Criterionஇல்
வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 'கண்ணில் தெரியுது வானம்' தொகுப்பிலிருந்தும்
இவர் சில ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவருக்கு இந்த வருட கனடியக்
கற்கைக்கான சாஸ்திரி புலமைப் பரிசில் கிடைத்துள்ளது. அதன் பொருட்டுத் தற்போது கனடா
வந்துள்ள இவர் இவர் யூன் 10-13 காலகட்டத்தில் தொடராண்டோவிலிருப்பார். ஜூன் 13 நாடு
திரும்புமிவர் யூன் 11 அன்று மாலையில் இங்குள்ள தமிழர்களைச் சந்திதித்து
கலந்துரையாட ஆர்வமாயுள்ளார். இவருடன் தொடர்பு கொள்ள விரும்பினால்
omkarbharathi@gmail.com
என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
பதிவுகளில் வெளிவந்த கலாநிதி திருமதி பாரதி ஹரிசங்கரரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்!
என் காதல்
ஊட்ஜரூ நுநுக்கல் (Oodjeroo Noonuccal)
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
என்னை அடைவதா? இல்லையில்லை
மற்றவருக்குப் புரிந்த காதலை என்னால் தரமுடியாது.
ஏனெனில் நான் ஒரு இலட்சியத்தை மணந்துள்ளேன்.
மற்றதையெல்லாம் நான் துறக்க வேண்டும்.
நீ என்னை - என் உடல், ஆன்மா, மனம்
அனைத்தும் உனதாகக் கொள்கிறாய்.
என் முதல் அன்பு என் மக்களுக்கே.
அதன் பின். மனித குலத்திற்கு.
ஒரு பிரஜையாக என் தனித்துவத்தை
நான் இழந்து விட்டேன்.
அர்ப்பணிக்கப்பட்டது என் வாழ்க்கை.
ஒருவனால் கொள்ளவும் தனதாக்கவுமுடியாது.
பழைய இன வேற்றுமை என்னைச் சூழந்து கொள்கிறது.
வெறுப்பும் இகழ்ச்சியும் தாக்குகின்றன.
தோல்வியில்லாமல் சண்டையிட நான்
சுதந்திரமாக வேண்டும். நான் பலமடைய வேண்டும்.
சரி செய்ய பழைய தப்புகளுண்டு.
மனிதனின் குரோதத்தை சகிக்க வேண்டும்.
நீண்ட பாதை. தனிமையான பாதை.
ஆனால் இலக்கோ நிச்சயமானது.
வேடன்
ஆர்ச்சி வெல்லர் [Archie Weller]
தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
தனது இரத்தத்தால் பச்சைப் புல்லை சிவப்பாக்கிய
கங்காருவிற்காக ஒரு பாடல் பாடுகிறேன்.
அஸ்தமிக்கும் சூரியனுக்கெதிரில் கருப்பாக
கடைசி சோக நாட்டியம் டியவனுக்காக
பாடுகிறேன். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இன்றிரவு வேடனின் வயிறு நிறையும்.
வானத்தை நோக்கி எம்பும் தீப்பொறிப்போல
என் குழந்தைகளின் சிரிப்பொலி கேட்கும்.
சிறகசைக்கும் பற்வைகள் போல
குன்றுகள் மீது ஓடும் மழை
நீரோடை போல மகிழ்ச்சியாக
என் தமையனின் கண்ணீரில் நானிருக்கிறேன்.
ஐயோ! தமையனே!
விரிந்த பரந்த நிலத்தில் நடை பயில
தனிமையான வலிமையான மலைகள்
இந்நாட்டை ளுகின்றன.
தலைப்பிள்ளைகள்
ஜாக் டேவிச் [Jack Davis]
தமிழாக்கம் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
என் தலைப்பிள்ளைகள் எங்கே! பெருமூச்சுடன் கேட்டது அந்தப் பழுப்பு பூமி. வெகு
நாட்களுக்கு முன் என் கருப்பையிலிருந்து அவர்கள் வந்தனர். என் தூசிலிருந்து
உருவாக்கப்பட்டனர்- ஏன்? ஏன் அவர்கள் அழுகிறார்கள்? அந்த ஆன்மாக்களின் ஒலிகள் ஏன்
மயங்கிக் கிடக்கின்றன?
அவர்கள் சிரிப்பொலியைக் கேட்க என் காதுகளைத் தீட்டிக்கொள்கிறேன். நான் கொடுத்த
நீதிகளும் கதைகளும் எங்கே?
என் இளைய பிறப்புக்களே! என்னவாயிற்று சொல்லுங்கள்?
குகைகளில் அவர்களது ஆவிகளே வாழ்கின்றன.
மெளனம். - நீங்கள் பதில் சொல்லக் கூசுகின்றீர்கள்.
முகத்திலறைந்த அறை போல ஒரு கேள்வி உள்ளது.
என் கறுத்த பெருமைமிக்க இனம் – மடிந்து புறக்கணிக்கப்பட்டு இறந்து கொண்டிருப்பதைப்
பார்க்கும் போது அங்கே பதிலும் இருக்கிறது.
[ஆஸ்திரேலிய பூர்வீகக் கவிஞர்கள் மூவரின் கவிதைகளைப் 'பதிவுகள்' இதழிற்காகத்
தமிழாக்கம் செய்து தந்திருக்கின்றார் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்.] |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|