இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2006 இதழ் 80 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கணித்தமிழ் அறிவியல்!
உமர் தம்பி வாழ்க்கைக் குறிப்பு!
(தோற்றம்
:15.06.1953  மறைவு : 12.07.2006 )


ஆல்பர்ட் ·பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
[உமர் அவர்களின் திடீர் மறைவு கணித்தமிழ்த் தொழிநுட்பத் துறைக்கோர் மிகப்பெரிய இழப்பு.  அவரது ஞாபகார்த்தமாக ஆல்பேர்ட் அவர்களின் இக்கட்டுரையினைப் பிரசுரிக்கின்றோம்..- ஆசிரியர்]

உமர்தம்பி; புகைப்பட உதவி: ஆல்பேர்ட், அமெரிக்கா.தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தில் அ..அப்துல் அமீது – ரொக்கையா தம்பதிகளுக்கு அருந்தவப் புதல்வராகப் பிறந்தவர்தான் சகோதரர் சனாப். உமர் அவர்கள்! மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் மூன்று மூத்த சகோதரிகள். குடும்பத்தில் கடைசியாக ஐந்தாவதாகப் பிறந்தார்கள் உமர்தம்பி. தனது துவக்கக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியையும் அதிராம்பட்டிணத்திலும், தனது Bsc (zoology) பட்ட படிப்பினை அதிராம்பட்டிணத்தில் உள்ள காதர் மொஹைதீன் கல்லூரியில் படித்தார்கள்.

அதன் பின்
Diploma in Electronics டிப்ளமா படிப்பினையும் முடித்த உமர் தனது ஊரிலேயே 1983 ஆம் ஆண்டு வானொலி, தொலைக்காட்சி பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்துள்ளார். மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர்மொய்தீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.

இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, 1984 ஆம் ஆண்டு துபாயில் உள்ள
Alfuttail Group of Companies ல் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களுக்கான (National Panasonic service engineer) பழுது நீக்கும் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.

துபாயில் தமிழர்கள் அதிகமாகக்கூடும் சிக்கத் அல்கைல் வீதியில் உமர் அவர்களும் அவரது சகோதரர் அவர்களும் நடந்து செல்வதைப் பார்த்தால் இரண்டு நண்பர்கள் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு நடப்பதைப் போலத்தான் இருக்குமாம்.

அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் 'என்ன இது அண்ணன் தம்பி உறவா, நட்பா' எனப் பலமுறை வியந்திருக்கிறார்கள். காரணம், உமருக்கும் அவரது அண்ணனுக்கும் ஏறக்குறைய பத்தாண்டுகள் வயது வித்தியாசம். உமர் அவர்களுக்கு கல்விபயிலும் காலகட்டத்திலேயே 1977 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றது அவரது மனைவியின் பெயர் பெளஷியா
(Fouzia) ஆகும்.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

முறையாக எந்த கல்லூரியிலும் கணினி தொழில் நுட்பத்தை பயிலாத உமர் அவர்கள், துபாயில் பணிபுரிந்த காலங்களில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தானாகவே தனக்கிருந்த ஆர்வத்தினாலும், முயற்சியாலுமே கணினி தொழில்நுட்பங்களை கற்றுவந்துள்ளார் என்பது ஆச்சரியப்படத்தக்க செய்தியாகும்.

துபாயில் தான் பணிபுரிந்துவந்த நிறுவனத்தில் சில நாட்களிலேயே கணினிநுட்பவல்லுனரானார்.
Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என கணினித் துறையில் திறம்பட பணியாற்றியிருக்கிறார்.

ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. பதினேழு ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், அவர் 2001 மாவது ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்று தாயகம் திரும்பினார்.

தாயகம் திரும்பிய அவர் தனது ஊரிலிருந்து கொண்டே தனது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்து பராமரித்துவந்துள்ளார்கள்.

தானுண்டு, தன் தொழில் உண்டு என்று சகோதரர் உமர் இருந்தாரில்லை; தமிழ் உலகம் மடலாடற்குழுவில் உறுப்பினராகி எடுத்த எடுப்பிலேயே ,"காரியம் சிறிது, காரணம் பெரிது - பின்னோக்கிச் சுழலும் சக்கரம்" என்ற தலைப்பில் தன் அறிமுகம் இல்லாமலே எழுதி பலரின் கவனத்தை ஈர்த்தார்.இப்படித்தான் தன் முதல் மடலைத் துவங்குகிறார்:-

"நான் சிறுவயதில் திரைப்படம் பார்த்தபோது (இப்போது இல்லை) என் மனதில்சுற்றிக்கொண்டே இருந்த ஒரு வினா - வண்டி ஓடும்போது அதன் சக்கரங்கள் சிலசமயம் ஏன் பின்னோக்கி சுழல்கிறது? வெகுகாலம் வதைத்துக் கொண்டிருந்த இந்த வினா, என் பள்ளி இறுதிப் படிப்பைமுடிக்கும்வரை விலகவேயில்லை. காரணம் விளங்க வந்தபோது சக மாணவர்களில்ஒருவரையும் நான் விட்டு வைக்கவில்லை. இப்போது உங்களையும் விட்டுவைப்பேனா என்ன? ;-) ......" இப்படிப் போகிறது அந்த மடல்.

இணைய அகராதி...
http://www24.brinkster.com/umarthambi/Tamil/etamil_search.asp
கணினி,அறிவியல்,பொருளாதாரம்,கல்வி,வணிகம்...போன்ற துறைகளில்,இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்குஇணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்கமுடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் இந்தஅகராதியைக் கொண்டுவந்தார். இந்த அகராதியை தமிழ் உலக உறுப்பினரும்
talktamil.4t.com என்ற இணையத் தள நிர்வாகியான மஞ்சு அவர்களும் இணைந்து உருவாக்கினார்கள்; இதுபற்றிக் குறிப்பிடும்போது

" மேற்குறிப்பிட்ட தளத்தில் காணும் ஆங்கிலம் <-> தமிழ் சொல்லகராதியை "தட்டிப்" பார்க்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்.ஒரு படி மேலாக, வகைப் படுத்தப்பட்ட 600 சொற்கள் கொண்ட ஒரு தொகுதி, இத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறே இன்னும் சேர்க்கப்பட இருக்கின்றன. இம்முறையும் இந்த கூட்டு முயற்சியில் சகோதரி மஞ்சுவின் பங்குதான் பெரிது. நம்மவரில் சிலர் பயனடைந்தால், அதுவே இந்த கூட்டு முயற்சிக்குக் கிட்டும் பரிசு. அன்புடன், உமர் " என்று குறிப்பிடுகிறார்.

பத்து வரிகளில் பல ஆயிரக்கணக்கான / இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கொடுக்கும்மென்பொருள் துறையில் சிறிதும் ஆதாயம் எதிர்பார்க்காமல் அவர்கள் வெளியிட்ட தமிழ்எழுத்துரு தேனி இன்று தமிழ் இணைய உபயோகிப்பாளர்களிடம் 90 சதவீதம்பயன்படுத்தப்படுகிறது, என்றால் அது மிகையில்லை. அடுத்து HTML எழுதுவோம் வாருங்கள் என்று... இப்படியாக அவர் தமிழ் உலகில்அடுத்தடுத்து அவர் ஆற்றிய பணிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமூக சிந்தனையும், சமூக அக்கறையும் கொண்ட சகோதரர் உமர் அவர்கள் பைதுல்மால்
Baithulmal எனும் சமுதாய சேவை செய்யும் அறக்கட்டளையில் ( ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடனளிப்பது, படிக்க வசதியில்லா மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்க நிதியுதவி வழங்குவது, ஏழைப் பெண்களுக்கு திருமணங்கள் நடத்திவைப்பது போன்ற நற்காரியங்களை இந்த அறக்கட்டளை செய்து வருகிறது)முக்கிய நிர்வாகியாக இருந்து சேவை செய்துவந்துள்ளார்கள்.

மேலும்
IMMAM SHAFI Matriculation Schoolல் ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்தார்கள். புத்தகங்கள் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவர் திரு.உமர் அவர்கள் இலக்கியம், அறிவியல், பூகோளம், புகைப்படக்கலை, கணினி, மருத்துவம், என இவர் படிக்காத நூல்களே இல்லை எனலாம்.

சகோதரர் உமர் அவர்களுக்கு மூன்று மகன்கள். அதில் மூத்த மகனின் திருமணம் சென்ற வாரத்தில்தான் நடந்திருக்கின்றது. மற்ற இரண்டு மகன்களும் மாணவர்கள். கணிணித்துறை மட்டுமல்லாது பல்வேறு தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருந்தார்கள்.

அதேசமயம் எல்லா நுட்பங்களையும் தன் பிள்ளைகளுக்கும் கற்றுத் தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு அளித்த பயனுள்ள பலகாரியங்களுக்கு (தேனி எழுத்துரு, சொல் தேடும் அகராதி) பல்வேறு கட்டத்தில் அவர்களுடைய மூத்த மகன் மொய்னுதீனும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளான உமர் அவர்கள் சென்ற மூன்றாண்டுகளாக தொண்டைப் புண்ணாலும் தொல்லைக்குள்ளாகியிருக்கிறார். துபாயிலிருந்து மும்பைக்கு வரும் வழியில், விமானத்தில் உணவருந்தும்போது விழுங்குவதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு உணவு தொண்டையில் சிக்கியிருக்கிறது. தொடர்ந்த மூச்சுத்திணறல் விமானத்தைப் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. தரையிறங்கியதும் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. சில சமயங்களில் மிகுந்த சிரமத்துடன் தலையைச் சாய்த்தே வைப்பது முதலான பல அசௌகரியங்களுக்கு ஆளாகியும் தளர்ந்துவிடாமல் எழுத்துருக்களுக்கான தனது சேவையைத் தொடர்ந்து செய்திருக்கிறார்.

ஆனால் எந்தக் கட்டத்திலும் தனதுநோய்த் தன்மை குறித்து வீட்டிலும் நண்பர்கள் வட்டாரத்திலும் இணையத்திலும் சொன்னது கிடையாது. கடந்த மாதத்திலிருந்து மஞ்சள்காமாலை நோயின் தாக்கம் இருந்திருக்கிறது. அவராகவே சிகிச்சை எடுத்துக் கொண்டதும்
அது குறித்து வீட்டில் எவருக்கும் சொல்லிக்கொள்ளவும் இல்லையாம்; இறப்பதற்கு 15 தினங்களுக்கு முன்தனது மூத்தமகன் மொய்னுதீன் கணிணியில் உட்கார்ந்து மின்னஞ்சல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

"ஒரு 15 நிமிசம் எனக்கு குடுப்பா" என்று கேட்டுகணினியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் கொஞ்ச நேரம் கூட அவரால்
கணினியில் அமர்ந்து பார்க்க முடியவில்லையாம். "இல்லப்பா என்னால முடியலை.."என்று படுத்தவர்தானாம்," அதுதான் அவர் கடைசியாகக் கணினிபார்த்தது.. என்றுகண்கள் கசிந்திட அவரின் மகனார் என்னிடம் சொன்னபோது... என்ன தகவல் சொல்ல நினைத்தாரோ... யாருக்கும் கடைசியாக மடலிடலாம் என்று நினைத்தாரோ.... இயலாமல் போய்படுத்தாரே என்று எண்ணிய என்னாலும் என் கண்ணீரைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

albertgi@gmail.com

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner