இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2010  இதழ் 126  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

நான் அவனல்லன்!
- வ.ந.கிரிதரன் -
சென்னையில் இயங்கும் மணிமேகலை பிரசுரம் 'முத்தமிழில் நல் முத்துக்கள்' என்றொரு நூலினை வெளியிட்டுள்ளார்கள். இதன் ஆசிரியர்களாக V.N.கிரிதரன், S.N.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். நீண்டகாலமாக வ.ந.கிரிதரன் (V.N.Giritharn) என்னும் பெயரில் எழுதிவருகின்றேன். மேற்படி நூலினை நான் எழுதவில்லை. ஏனென்றால் நான் அவர்களுக்கு எனது ஆக்கங்கள் எதனையும் வெளியிடுவதற்குக் கொடுக்கவில்லை. மேலும் மேற்படி நூலினை நான் இதுவரை வாசிக்கவில்லை. இணையத்தில் விருபா தளத்தில் கண்ட நண்பரொருவர் கூறித்தான் தெரிய வந்தது. நான் எனது ஆக்கங்கள் எதனையும் அவர்களுக்குப் பதிப்பிக்கக் கொடுக்காததனால் அந்த நூலிலுள்ள படைப்புகளை எழுதியவர் இன்னுமொரு கிரிதரனாக இருக்க வேண்டுமென நினைக்கின்றேன். அல்லது எனது ஆக்கங்கள் சிலவற்றை இணையத்திலிருந்து எடுத்து வெளியிட்டார்களோ என்பதும் எனக்குத் தெரியாது. மேற்படி நூலினை இதுவரையில் பார்க்காததனால் இரண்டிற்கும் சாத்தியங்களுள்ளதால், மேற்படி நூலினை வாசித்தவர்கள் யாராவதுதான் அறியத்தர வேண்டும். இங்கு நான் இந்த விடயத்தைத் தெளிவு படுத்துவதற்குக் காரணமுண்டு. அது பெயர்க் குழப்பம்தான். தமிழ் இலக்கிய உலகில் என்னை அறிந்தவர்கள் பெயரைப் பார்த்ததும் நான் எழுதியதாகக் கருதிவிடுவார்கள். மணிமேகலை பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் நூல்களை வெளியிடும்போது இவ்விதம் பெயர்க் குழப்பங்கள் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் பெயரை வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தேவையற்ற பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்கும். மேலும் மணிமேகலை பிரசுரத்தினர் மேற்படி பெயரில் மேலும் எத்தனை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. நான் எனது நூல் எதனையும் மணிமேகலை பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடவில்லை என்பதை அறியத்தருகின்றேன்.  ஒரு பதிவுக்காகவும், விளக்கத்திற்காகவும் இதனை அறிவிப்பது அவசியமானதென்று கருதுகின்றேன். சங்கர்லால், தமிழ்வாணன் எனத் துப்பறியும் நிபுணர்கள் நடமாடும் நாவல்களைப் படைத்த தமிழ்வாணனின் புதல்வர்கள் நடாத்தும் நிறுவனத்தால் ஏற்கனவே நீண்டகாலமாக எழுதும் என் பெயரைப் பாவித்து நூல் வெளியிடுவதில் விளையக் கூடிய தேவையற்ற குழப்பங்களை உணரமுடியாமலிருப்பது வியப்பிற்குரியது. தந்தையின் நாவல்களில் வருவதைப்போல் சிறிது துப்பறிந்திருந்தால் ஏற்கனவே மேற்படி பெயரில் ஒருவர் எழுதுவதைக் கண்டுபிடித்திருக்கலாம். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.

- வ.ந.கிரிதரன் -
ngiri2704@rogers.com


 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்